Wednesday 27 February 2013

தோல்வியின் மூலம் வெற்றி !!!


தோல்வி என்பதற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற மாணவன் தேர்வில் தோல்வியுறுவதில் துவங்கி, வானவியல் விஞ்ஞானி ஏவுகனையை சரியான வட்டப் பாதையில் நிறுத்த தவறுவது வரை அனைவரும் தம்தம் தொழிலுக்கு ஏற்றவாறு தோல்வியுறுகிறோம். இங்கு ‘தோல்வியே’ வாழ்க்கை கிடையாது. தோல்வியுறுவதின் மூலம் புதியனவற்றைக் கற்றுக் கொள்கிறோம்.
தோல்வியின் மூலம் வெற்றியைய் பதித்தவர்கள்:

கணித மேதை ராமானுஜர் குடந்தைக் கல்லூரியில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியுற்றார். பின்னாலில் கணிதத்தில் உலகப் புகழ் மேதையாவதை அந்த தோல்வி தடைசெய்ய வில்லை.

சிக்காகோவில் மார்ஷல் என்பவரின் கடை தீக்கிரையாகி விட்டது. கடை எரிந்த மறுநாளே “இதைவிடப் பெரிய கடையாக இதே இடத்தில் திறப்பேன்” என்று கூறினார். மனிதர் இரண்டாடுகளில் மிகப்பெரிய கட்டிடம் எழுப்பினார் அதே இடத்தில்.

நாடகத்தில் மட்டுமே நடித்து வந்த சிவாஜி கணேசனைப் பார்த்து “பையனுக்கு குதிரை முகம்” என்று படத்தயாரிப்பாளர் ஒருவரால் புறக்கணிக்கப்பட்டவர் பின்னாளில் ‘நடிகர் திலகம் சிவாஜியாக’ மாறினார்.




ஆகவே நாம் பெறும் தோல்விகளே நமது வாழ்வின் வெற்றிப் படிகளாக அமைகின்றன. தோல்வி என்பது ஏதோ தாழ்வு என்று கருத வேண்டாம். அதுவே பின்நாளில் வெற்றி அடைவதற்கான வழி என்றே கொள்வோம், வெற்றி பெறுவோம்!!!


                                  நம் எல்லோருடைய வாழ்விலும்!.

No comments:

Post a Comment

THANK YOU