Saturday 2 February 2013

அறிய வேண்டிய தகவல் 18+ அறிய வேண்டிய தகவல்கள்

!

1)பிறக்கும்போது மனித உடலில் 300 எலும்புகள் உள்ளனவாம்;வளர்ந்த பின் 206 தான் உள்ளனவாம்!(94 ஐ யாரோ திருடிட்டுப் போயிட்டாங்க போல)

2)மனித இதயம் ஒரு நாளைக்கு 1,00,000 தடவைக்கு மேல் துடிக்கிறதாம்

3)தலை வெட்டுப்பட்டாலும் ஒரு கரப்பு பல நாட்கள் வாழுமாம்;கடைசியில் அது பட்டினியால் சாகிறதாம்!

4)பூமியின் எடை-6,600,000,000,000,000,000,000 டன்களாம்.

5)ஒரு சதுரக் காகித்த்தை ஏழு தடவைக்கு மேல் பாதியாக மடிக்க முடியாதாம்,

6)கிளினோஃபோபியா என்பது படுக்கையைக் கண்டு பயப்படுவதாம்

7)ஒரு வயலினில் கிட்டத்தட்ட 70 மரத்துண்டுகள் உள்ளனவாம்

8)மின்னலால் உண்டாகும் சூடு,சூரியனின் பரப்பில் உள்ள சூட்டை விட 5 மடங்கு அதிகமாம்.

9)சமாதானத்துக்கான நோபல் பரிசு மெடலில் தோள் மேல் கை போட்டு நிற்கும் மூன்று நிர்வாண ஆண்களின் உருவம் உள்ளதாம்

10)உலகில் மிக அதிகமாக உள்ள பெயர் முகமது என்பதுதானாம்

11)சீட்டுக் கட்டில் ஆட்டின் ராஜாவுக்கு மட்டும் மீசை இல்லையாம்.

12)மின்சார பல்ப் கண்டு பிடித்த எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயமாம்

13)உலகில் 10 லட்சம் விதமான மிருகங்கள் உள்ளனவாம்

14)ஒரு சராசரி மனிதன் ஒரு ஆண்டில் 1460க்கும் மேற்பட்ட கனவுகள் காண்கிறானாம்.

15)முள்ளம்பன்றிகள் தண்ணீரில் மிதக்குமாம்.

16)சூரியன் ,பூமியை விட 330330 மடங்கு பெரியதாம்.

17)காட்டுத்தீ,மலையில் கீழ் நோக்கிப் பரவுவதை விட,மேல் நோக்கி வேகமாகப் பரவுமாம்.

18) ஒரு 75 வயது மனிதன் வாழ்வில் 23 ஆண்டுகள் தூங்கியிருப்பானாம்!

(18+1)
1.ஆக்டோபஸ்ஸுக்கு 3 இதயங்கள் உள்ளனவாம்

மொத்தம் 18+ தகவல்கள்
சரிதானே!

No comments:

Post a Comment

THANK YOU