Friday 1 February 2013

அப்துல்கலாம் படிக்கச் சொன்ன 5 புத்தகங்கள்




"  எனது 17 - வது வயதில் எனக்கு ஒரு நண்பன் அறிமுகமானான். இன்று வரை அவன் எனக்கு உறுதுணையாக இருக்கின்றான். அது வேறு யாருமல்ல புத்தகங்கள் தான்."   - அப்துல் கலாம்.
                                                                                         
காலாமின் மனதை கவர்ந்த, அவரது வாழ்வை மாற்றிய குறிப்பிட்ட 5 புத்தகங்களை, நாமும் படித்து பயன்பெற வேண்டுமென அவர் கூறியுள்ளார். அந்த புத்தகங்களை இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.


1. விளக்குகள் பலதந்த ஒளி : ( LIGHT FROM MANY LAMPS - WATSON & LILLIAN EICHLER )

 


                   இந்த புத்தகத்தை நான் படித்து விட்டேன். பல நாட்டு அறிஞர்கள், தத்துவஞானிகள் சொன்ன அற்புதகருத்துக்கள் நிறைந்துள்ள புத்தகம் இது. நீங்களும் படித்து பயன்பெறுங்கள்.



2. மனத்தின் பேரரசர் ( EMPIRE OF MIND - DENIS WAITLEY )


அடுத்து  நாம் அனைவரும் நன்கு அறிந்த புத்தகம் தான்


 3. திருக்குறள்.


 4.ஒவ்வொரு நாளும்  மகத்துவம் ( EVERY DAY GREATNESS )


5.சத்திய சோதனை  ( மகாத்மா காந்தி  ).


இதில் நான் மூன்று புத்தகங்களை படித்து விட்டேன். 2 - வது மற்றும் 4 - வது புத்தகங்கள் எங்கள் பகுதியில் கிடைக்க வில்லை. உங்கள் ஊரில் கிடைத்தாலோ அல்லது இணையத்தில் கிடைத்தாலோ மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.




முக்கிய குறிப்பு :

                         இந்த புத்தகங்களின் வரிசையில் தனது சுயசரிதை      புத்தகமான " அக்கினிச் சிறகுகள் " புத்தகத்தை தன்னடக்கத்தின் காரணமாக அவர் சேர்க்கவில்லை. ஆனால் நாம் அனைவரும் முதலில் படிக்க வேண்டியது இதைத்தான் தவறாமல் படித்து புதிய இந்தியாவை உருவாக்க முயற்சியுங்கள்.
                                                                                         
          உங்களது பொன்னான கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.( பொன்னான கருத்தாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை வெள்ளி, வெண்கலம், ஏன் பித்தாளையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ).
 

No comments:

Post a Comment

THANK YOU