Wednesday 23 January 2013

பவர் ஸ்டார் ஜோக்ஸ் | Power Star Jokes



*பவர் ஸ்டார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்ததால், மழை கேன்சல் செய்யப்பட்டது.

*பவர் ஸ்டார் மெயில் ஐ.டி. gmail@POWERSTAR. com

* ஒரு நாள் பவர் ஸ்டார் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது.

* 2012-ல் உலகம் நிச்சயம் அழியாது. ஏனெனில் பவர் ஸ்டார் 3 வருட வாரன்டியோடு ஒரு லேப்டாப் வாங்கியிருக்கிறார்.

* And, the POWERSTAR award goes to oscar....

*பவர் ஸ்டார், ஒரே நாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றார் - ப்ளூடூத் வழியாக.

* பவர் ஸ்டார் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி பவர் ஸ்டாரிடம் மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது.

* பவர் ஸ்டார், இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டார். என்ன நடந்தது என்று யூகிக்க முடி கிறதா? அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.

* கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோது, ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் பவர் ஸ்டாரிடம் இருந்து வந்திருந்தன.

* பவர் ஸ்டார், தனது தோட்டத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கிணறுகள் வெட்டினார். கேரம் விளையாடுவதற்காக!

* நோக்கியா விளம்பரத்தில் கை குலுக்கிக்கொள்ளும் இரண்டு கரங் கள் யாருடையவை என்பது பவர் ஸ்டாருக்கு மட்டுமே தெரியும்.

* ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோது, அதை முதன்முதலில் பவர் ஸ்டாரிடம் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவரைத் தேடி வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக பவர் ஸ்டார்குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டார் - தன் ஹெலிகாப்டரில்.

* ரொனால்டினோ: என் காலால் ஒரு முறை பந்தை உதைத்தால், 3 நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்...

பவர் ஸ்டார்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா?
கடவுள் பவர் ஸ்டார் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார், 'ஓ மை பவர் ஸ்டார்.’

* பவர் ஸ்டார்ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து 'ஓவர் ஸ்பீடு’ என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.

* ஒருமுறை பவர் ஸ்டார் விமானத்தில் சுவிட்சர்லாந்து மீது பறந்துகொண்டிருக்கும்போது தவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது. சுவிஸ் பேங்க் உருவானது.

* பவர் ஸ்டார் சிறுவனாக இருந்தபோது எழுதிய டைரிக்குப் பிற்காலத்தில் 'கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்’ என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

* சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: பவர் ஸ்டார் வால்பேப்பரை டவுண்லோடு செய்ய.

* பவர் ஸ்டார் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமான கதை இதுதான்.

பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் '200 கேள்விகளில் ஏதேனும் 150-க்குப் பதில் அளிக்கவும்’ என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான பவர்ஸ்டார் 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், 'இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்.

No comments:

Post a Comment

THANK YOU