Wednesday 30 January 2013

இல்லை'என்று சொல்.



சோம்பேறி கையேந்தினால்,'இல்லை'என்று சொல்.
பெரியவர்களை அவமதிப்பவன்,கல்வி கேட்டால் ,'இல்லை'என்று சொல்.
காரணம் அந்தக் கல்வி அவனை மேலும் அகங்காரனாக்கும்.
அழகான பெண் வழிய வந்து காதல் கேட்டால் ,'இல்லை என்று சொல்.
அது பல ஆபத்துக்களை தவிர்க்கும்.
பணக்காரன் அறிவுரை கேட்டால் ,'இல்லை'என்று சொல்.
அவன் உன்னை அவமதிப்பதற்கே கேட்பான்.
ஏழை இலவச உதவி கேட்டாளல் ,'இல்லை'என்று சொல்.
அவன் தொடர்ந்து உதவி கிடைத்தால் பிச்சைக்காரன் ஆவான்.
கடவுள் உன்னிடம் பக்தியைக் கேட்டால் ,'இல்லை'என்று சொல்.
அப்படிக் கேட்பவர் கடவுளாக இருக்க மாட்டார்.
                                       --ஒரு சீனக் கவிதையின் கருத்து.

முட்டாளை நண்பனாக்கிக் கொள்ளாதே,அவன்
உனக்கு நல்லது செய்வதாக நினைத்து கெடுதல் செய்வான்.
கஞ்சனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உனக்குக் கடுமையான பண நெருக்கடியின் போது ஓடிவிடுவான்.
போக்கிரியை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உன்னையும்,உன் நட்பையும் மலிவுச்சரக்காக விற்று விடுவான்.
பொய்யனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
தொலைவில் இருப்பதைப் பக்கத்தில் இருப்பது போலவும்,
பக்கத்தில் இருப்பதைத் தொலைவில் இருப்பது போலவும்
தோற்றமளிக்கும்படி, கானல் நீர் பிரமையை ஏற்படுத்தி விடுவான்.

No comments:

Post a Comment

THANK YOU