Tuesday 29 January 2013

பொன்மொழிகள்

பசி ருசி அறியாது.
வறுமை வட்டி அறியாது.
******
பல பெரிய செயல்கள் வல்லமையினால் நிறைவேறுவதில்லை.
விடா முயற்சியினாலேயே நிறைவேறுகின்றன.
******
பிறரை விடத்தான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன்
எளிதில் பிறரிடம் ஏமாந்து போவான்.
******
மற்றவர்களுக்கு நன்மை என்று நினைப்பவன்
தனக்கான நன்மையை ஏற்கனவே சம்பாதித்து விட்டான்.
******
எல்லா மக்களும் தாங்கள் ஒருவரைப் பற்றிஒருவர் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால்,உலகில் நான்கு நண்பர்கள் கூட சேர்ந்திருக்க மாட்டார்கள்.
******
ஏராளமான வாய்ப்புகள் வரும்போதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கடைசியில் மோசமான ஒன்று கிடைத்துவிடும்.
******
கொடுக்கும்போது தயங்காதே.
இழக்கும்போது வருந்தாதே.
சம்பாதிக்கும்போது பேராசைப் படாதே.
******
முழுவதும் பொய்யான பொய்யோடு முழு பலத்தோடு போர் புரிய முடியும். ஆனால் மெய் கலந்த பொய்யோடு போர் புரிதல் மிகவும் கடினமான செயல்.
******
ஒருவன் பொய் சொல்லும்போது அவனைப் பற்றிய மதிப்பு பத்து சதம் உயரலாம்.ஆனால் உண்மை வெளிப்படும்போது ஐம்பது சதம் மதிப்பு குறைந்து விடும்.
******
ஓயாது சொட்டும் நீர்
ஓட்டையாக்கிவிடும் கல்லை.
******
அவரவர் அருகதைக்கேற்ப அனைவரையும் நடத்தினால்,கசையடியிலிருந்து தப்புவோர் எவரும் இருக்க முடியாது .
******
புகழும்போது வெட்கப்பட்டும்,அவமானப்படுத்தப் படும்போது அமைதியாகவும் இருந்து பழக்கப் பட்டவன் எவனோ அவனே  மேம்பட்டவன்.
******
பணம் தலை குனிந்து பணியாற்றும்:அல்லது
தலை குப்புறத் தள்ளிவிடும்.
******
நம்பிக்கைவாதி  ரோஜாவைப் பார்க்கிறான்,முட்களை அல்ல.
அவ நம்பிக்கையாளன் முட்களைப் பார்க்கிறான்,ரோஜாவை அல்ல.
******
சொற்கள் வெறும் நீர்க்குமிழிகள்.
செயல்கள் தங்கத் துளிகள்.
******
செல்வத்தை மதிப்பு மிக்க பொருளாய் இறைவன்  நினைத்திருந்தால், திருத்தவே முடியாதபடி  வாழ்ந்து வரும் தரங்கெட்ட கயவர்களிடம் அச்செல்வத்தை சேர்த்திருப்பாரா?
******
நீதியானது அரக்கனைக்கூட தவறாகத் தண்டித்து விடக்கூடாது.
******
மனிதன் குறையுடையவன் மட்டும் அல்ல,குறை காண்பவனும் ஆவான்.பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன்.தன்  குறையைக் காண்பவன் முழு மனிதன்.
******
உலகில் அடக்க முடியாத  அசுரன் அலட்சியம்.
******
பண்போடு பொருந்தாத அனுதாபம் எல்லாம் மறைமுகமான சுயநலமே ஆகும்.
******
காரணம் இல்லாமல் யாரும் கோபப் படுவதில்லை.ஆனால் அது சரியான காரணமா என்பதுதான் கேள்வி
******
ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன் என்பதை அறியலாம்.
******
எவனிடம் வீரமில்லாத ஒழுக்கமோ,ஒழுக்கம் இல்லாத வீரமோ உள்ளதோ அவனே கோழை.
******
ஒரு நல்ல நூலைப்போல சிறந்த நண்பன் வேறில்லை.
******
பொருளற்றவனைக் காட்டிலும் பொருளுடையவனே மிகவும் துன்புறுகிறான்.
******
மற்றவருக்கு ஆறுதல் சொல்லும்போது இருக்கும் தைரியம் தனக்கு தேவைப்படும்போது இருப்பதில்லை.
******
திருட்டுப் பொருளை விலை கொடுத்து வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.
******
சிக்கனமாக இல்லாதவன் மகிழ்ச்சியாக வாழ முடியாது.
******
புகழ் என்பது ஒருவன் தன்னோடு வைத்து வளர்க்கும் சொந்த ஆபத்து.
******
உலகிற்கு மனிதன் தனியாக வருவதுபோல உலகிலிருந்து தனியாகவே போகிறான்.
******
எதிரி ஓடிவிட்டால் எவனும் வீரன்தான்.
******
வறுமையில் கசந்தால்தான் செல்வத்தின் இனிமை தெரியும்.
******
செயலே புகழ் பரப்பும்;வாய் அல்ல.
******
சிரிப்பு,குழந்தை உலகின் இசை.
******
சோம்பல் மிக மெதுவாக நடப்பதால்
வறுமை அவனை எளிதில் பிடித்து விடுகிறது.
********
நன்றியும் கோதுமையும் நல்ல இடத்தில்தான் விளையும்.
********
குற்றம் என்ற புற்றுக்குள் கை வைத்தால்
சட்டம் என்னும் பாம்பு கடிக்கத்தான் செய்யும்.
********
  உணர்ச்சி வேகத்தில் அறிவாளியும் மடையன் ஆகிறான்.
********
வெளியே  காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும்.
உள்ளே அடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும்.
********
ஒரு பூனை திருட்டுப் போயிற்று என்று சட்டத்தின் உதவியை நாடினால்
ஒரு பசுவை விற்கே வேண்டிய நிலை வந்துவிடும்.
********
எக்காரியத்தையும் தயங்கித் தயங்கிச் செய்பவன்
ஒரு காரியத்தையும் செய்து முடிக்க மாட்டான்.
********
தவறாக புரிந்து கொள்கிற உண்மையைக் காட்டிலும் பெரிய பொய் வேறு எதுவும் இல்லை.
********
ஆனால் என்ற வெறுக்கத்தக்க வார்த்தை வந்துவிட்டால், முன்னால்  சொன்னது எல்லாம் வீணாகிவிடும்.அதற்கு இல்லை என்று மறுப்பதோ அவமானப் படுத்துவதோ மேல்.
********
சில சமயங்களில் நமக்குப் பதிலாக நம் உணர்ச்சிகளே பேசுகின்றன.முடிவு செய்கின்றன.நாம் அருகில் நின்று பயந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
********
துயரங்களை எதிர்பார்ப்பவன் இரண்டு முறை துயரம் அடைகிறான்.
********
புறாவைப்போல பறந்துவிடும் பேச்சை
நாலு குதிரைகள் சேர்ந்தாலும் இழுக்க முடியாது.
********

No comments:

Post a Comment

THANK YOU