Thursday 31 January 2013

ஒரு தன்னம்பிக்கை நூலில்

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதைப் பழக்கமுள்ளவன் - எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை நையப்புடைத்து - மிரட்டி - பணம் வாங்கிக் குடித்துக் கொண்டே இருப்பான். பிறருக்குத் தொல்லைகொடுத்து இன்பம் பெறும் ஸாடிஸ்ட் அவன். மற்றவன் நல்லவனாக சமூகத்தில் மதிக்கப்படுபவனாக - நல்ல குடும்பத்தலைவனாக இருந்தான். அருமையாக குடும்பத்தைப் பராமரித்து வந்தான்.

ஊரில் உள்ளவர்களுக்கு வியப்பு. "ஒரே தகப்பனுக்குப் பிறந்த ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இரு குழந்தைகளில் ஒன்று ஊர்போற்றும் நல்லவனாகவும், மற்றொன்று ஊர் தூற்றும் கொடியவனாகவும் இருக்கக் காரணம் என்ன", என ஊரில் இருப்பவர்களுக்கு வியப்பு.

ஒரு பெரியவர் குடிகாரமகனையும், நல்லகுடும்பவானாகியவனையும் இப்படிக்கேட்டார். "உன் நடத்தைக்கு யாரப்பா காரணம்?". இருவரும் ஒரே பதில்தான் சொன்னார்கள், "என்னுடைய நடத்தைக்குக் காரணம் என்னுடைய அப்பாதான்". "உன் அப்பா என்ன செய்தார்", என்று குடிகாரனைக் கேட்டபோது சொன்னான். "அவர் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பகலிலும், இரவுகளிலும் குடித்துக் கொண்டே இருப்பார்.

குடும்பத்தினரைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பார். அடிகளுக்குப் பஞ்சமில்லை. அவரின் மகனாகிய நான் வேறு எப்படி இருப்பேன். அதனாலே நானும் குடிகாரனாகிவிட்டேன். மோசமான தகப்பனின் மகனான நான் மோசமாகிவிட்டேன். என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம்", என்றான். "உன் அப்பா என்ன செய்தார்", என்று நற்கணவானைக் கேட்டபோது சொன்னான். "அவர் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பகலிலும், இரவுகளிலும் குடித்துக் கொண்டே இருப்பார்.

குடும்பத்தினரைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பார். அடிகளுக்குப் பஞ்சமில்லை. அதனாலே நான் குடிக்ககூடாது, குடிகாரனாகிவிடக்கூடாது. மோசமான தகப்பனின் மகனான நான் மோசக்காரனாக இராமல் - என்னுடைய பிள்ளைகளுக்கு நல்லவனாக இருக்க எண்ணினேன். என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம்", என்றான்.

நீதி : எந்த ஒருவரின் நடத்தையிலும் நேர்மறை நிகழ்வுகளும் உண்டு. எதிர்மறை நிகழ்வுகளும் உண்டு. அன்னப்பறவை போல நேர்மறையான கருத்துக்களையே நாம் எதிர்நோக்குவோமாக.

ஒரு தன்னம்பிக்கை நூலில் (ஆங்கிலத்தில் வெளிவந்தது) இருந்து மொழிமாற்றப்பட்டது.

No comments:

Post a Comment

THANK YOU