Friday 25 January 2013

. டுபாக்கூர்-கவிதைகள்

1

நகுலன் –பூனை –ஹவி
1
கவிதையைப் படித்து முடித்ததும்
பக்கத்தில் வந்து நின்றது பூனை
என்ன படித்தாய்
பூனையைப் பற்றிப் படித்தேன்
பூனையைப் பற்றி என்ன படித்தாய்…
— குருசாமி ரயில்வாகணன்

2. மனிதா-எப்போது-நீ-உணர்வாய்

மனிதா எப்போது நீ உணர்வாய்?
கருவாகி உருவாகி
ஐம்புலனும் உண்டாகி
தாயின் கருவறையில்
மனிதனாய் உயிர்ப்பெற்றாய்!
தாய் சொல், தகப்பன் சொல்
ஏனையோர் சொல் கேட்டாய்!
அனுபவத்தில் தவறுணர்ந்தாய்
தவறால் அறிவுணர்ந்தாய்! …
—புரட்சிகர ஜீவன்

3. என் கேள்விகள் தொடர்கின்றன

என்
கேள்விகள் தொடர்கின்றன.
சிறுவனாயிருந்த போது
கடவுள் எப்படியிருபாரென்று?
இளைஞனாயிருந்த போது
கடவுள் தண்டித்துவிடுவாரோயென்று?
கணவனாயிருந்தபோது
கடவுள் காப்பாற்றுரா என்று?
தகப்பனாயிருந்த போது ….
— கலை

4. தொடர்பில் மட்டும்

தோழர்! மது அருந்தாதீர்கள்….
நான்-
தொடர்பில் இருப்பவன்தானே தோழர்.
தோழர்! பெண்களை ஆபாசமாகப் பார்க்காதீர்கள்.
நான்-
தொடர்பில் இருப்பவன்தான் தோழர். …
— கலை

5. ஆணாதிக்கமே பெண்ணுரிமைகளாக

பெண்மையின்
நன்மைகள்
கருதியேயென்று
அசரீரியாக விழுந்த வசனங்கள்
ஆணாதிக்கமாக தெறித்த விளைநில உவமைகள்
நிம்மதிக்காக படைக்கப்பட்ட யோனிகள்
தகாத உறவுக்காக வளைக்கப்பட்ட அடிமைகள்
மிகுஆண்மைக்காக வாழ்க்கைப்பட்ட விதவைகள்
நுகர்வுக்காக மணக்கப்பட்ட பாலகி…
— கலை

No comments:

Post a Comment

THANK YOU