Thursday 19 July 2012



பஸ் ஆல்ட்ரின்
Buzz Aldrin
எட்வின் ஆல்ட்ரின்
விண்வெளி வீரர்
தேசியம்அமெரிக்கர்
தற்போதைய நிலைஇளைப்பாறியவர்
பிறப்புசனவரி 20, 1930(அகவை 82)
கிளென் ரிட்ஜ்,நியூ ஜேர்சிFlag of the United States ஐக்கிய அமெரிக்கா
வேறு தொழில்போர் விமானி
படிநிலைகேணல், ஐக்கிய அமெரிக்க விமானப் படை
விண்பயண நேரம்12 நாட்கள், 1 மணி, 52 நிமி
தெரிவு1963 நாசா பிரிவு
பயணங்கள்ஜெமினி 12,அப்பல்லோ 11
பயண
சின்னம்
Gemini 12 insignia.png Apollo 11 insignia.png
பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin (இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின்Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 201930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

[தொகு]வாழ்க்கைக் குறிப்பு

விஞ்ஞானப் பட்டதாரியான ஆல்ட்றின் 1951 இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். கொரியப் போரில் போர் விமானியாகப் பங்கு பற்றினார். பின்னர்மசாசுசெட்ஸ் தொழிநுட்பக் கல்லூரியில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் அமெரிக்க வான்படையில் இணைந்து பணியாற்றினார்.
அப்பலோ-11 பயணத்தின் போது அல்ட்ரின் சந்திரத் தரையில் நடக்கிறார்.
அக்டோபர் 1963 இல் நாசாவினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜூலை 161969 இல் அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் சந்திரனை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். சரியாக 02:56 UTC ஜூலை 21 (இரவு 10:56 EDT, ஜூலை 20), 1969இல், ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார்.
அல்ட்ரினால் எடுக்கப்பட்ட சந்திரத்தரையில் அவரது காலடியின் புகைப்படம்., ஜூலை 20, 1969.
"பஸ்" (Buzz) என்ற பெயரிலேயே அவர் பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். 1988இல் இவர் தனது பெயரை "பஸ் ஆல்ட்ரின்" என அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டார்[1][2].

[தொகு]மேற்கோள்கள்

[தொகு]வெளி இணைப்புகள்

No comments:

Post a Comment

THANK YOU