Friday 20 July 2012

சிவா ஆகமக் குறிப்புகள்


சிவா ஆகமக் குறிப்புகள்


சிவ ஆகமகுறிப்புகள்!
 
temple
1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ... மேலும்
 
temple
2.1 ஆலயக் கிரியைகள் : ஆலயங்களில் செய்யப்பெறும் கிரியைகள் முப்பெரும் பிரிவினுள் அடங்கும்; 1. கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம், 2. ப்ரதிஷ்டாதி உற்சவாந்தம், 3. உற்சவாதி ... மேலும்
 
temple
3.1 ஆலயக் கிரியை வகைகள்: சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப் பட்டுள்ளன: 1. நித்தியக் கிரியைகள் 2. நைமித்திகக் கிரியைகள் 3. காமியக் கிரியைகள். தினந்தோறும் (குறைந்தது ... மேலும்
 
temple
4.1 முத்ரா என்ற சொல்லுக்கு இறைவழிபாட்டின்போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை என்ற பொருள் ஸம்ஸக்ருத அகராதிகளில் காணக்கிடைக்கிறது. முத்ரா என்ற சொல் ஒரு ... மேலும்
 
temple
திருக்கோவில் நித்தியக் கிரியைகள் : ஆலயங்களில் நிகழ்வுறும் நித்தியக் கிரியைகள் நித்தியம், ஆகந்துக நித்தியம் என இரு வகைப்படும். நித்தியம் என்பது தினம் தினம் செய்யும் ... மேலும்
 
temple
உஷத்கால பூஜை : சிவாச்சாரியார், சூர்ய உதயத்துக்குக் குறைந்தது 5 நாழிகைகள் (2 மணி நேரம்) முன்பு எழுந்து வாக்கினால் தோத்திரமும் மனத்தினால் இறைவனது தியானமும் செய்துகொண்டு, ... மேலும்
 
temple
7.1 அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன.
7.2 அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, ... மேலும்
 
temple

மலர்கள்மே 20,2011

8.1 காலங்களுக்கேற்ற புஷ்பங்கள் : காலை : தாமரை, பொரசு, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம், தாழை, நண்பகல் : வெண்தாமரை, அரளி, பொரசு, துளசி, நெய்தல், வில்வம், ...மேலும்
 
temple
9.1 ஆவுடையாருக்கு வஸ்த்ரம் : காலஸந்தி பூஜையிலே வெள்ளை வஸ்த்ரமும், உச்சிகால பூஜையின்போது சிவப்பு வஸ்த்திரமும், சாயரøக்ஷ பூஜை காலத்தில் மஞ்சள் வண்ண வஸ்த்ரமும், அர்த்யாம ... மேலும்
 
temple
10.1 உபசாரங்கள் மூன்று விதம் : ஸாங்கம், உபாங்கம், ப்ரத்யங்கம். (1) ஸாங்கம் : ஸ்நானம் (அபிஷேகம்), பாத்யம், ஆசமனம், வஸ்திரம், ஆபரணம், வாஸனை, சந்தணம் பூசுதல், அர்க்யம், புஷ்பம் சாத்துதல் (2) ... மேலும்
 
temple
11.1 வண்டு மலரை முகர்ந்து தேனைப் பருகி, அந்தத் தேனை திருப்பித் தருகிறது;  மலரின் மணமோ சுவையோ தண்மையோ நீரோட்டமோ கெடுவதில்தல. அதுபோல இறைவர்க்கு நிவேதித்த பிரசாதங்களின் ரஸம் ...மேலும்
 
temple
12.1 அபிஷேகத்தில் ஆரம்பம், அபிஷேகத்தில் முடிவு, அர்ச்சனையின் முடிவு, நைவேத்யத்தின் ஆரம்பம், உத்ஸவத்தில் ஆரம்பம், உத்ஸவத்தின் முடிவு, நர்த்தனத்தின் முடிவு - இக்காலங்களில் மட்டுமே ... மேலும்
 
temple
13.1 அபிஷேகம், நைவேத்யம், தூப-தீபம் ஆகிய காலங்களில் வேத கோஷம் செய்யவேண்டும்.
13.2 அபிஷேகம், நைவேத்யம், தூப-தீபம் பூஜையின் முடிவு ஆகிய காலங்களில் பக்தர்கள் ஸ்தோத்ரங்கள் ... மேலும்
 
temple
14.1 எவன் பூஜையைச் செய்துவிட்டு, நிறைவாக ப்ரதக்ஷிணம் செய்யவில்லையோ அவனுக்கு அந்தப் பூஜையயின் பலன் கிடைக்காது; அவன் விளம்பரத்திற்காகவே பூஜை செய்தவனாகிறான். எனவே பூஜை நிறைவாக ... மேலும்
 
temple
15.1. பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன; 1. படைத்தல் - அபிஷேகம். 2. காத்தல் - நைவேத்யம் 3. ஸம்ஹாரம் - பலி போதல் 4. திரோபாவம் - ...மேலும்
 





சிவ ஆகமகுறிப்புகள்!
 
temple
1. பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில், இறைவனை ஆலயத்தில் வந்து தரிசிப்பது.
2. பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்வது
3. வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை ... மேலும்
 
temple
17.1 கோவிலுக்குள் சிவாச்சாரியாரிடம் இருந்துதான் விபூதி வாங்கிக் கொள்ள வேண்டும்; அது சிவனிடமிருந்தே பெற்றுக் கொள்வதற்குச் சமம். மற்றவரிடமிருந்து பெற்றுக் கொள்வதும், தானே ... மேலும்
 















சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்



1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன. இறைவனுக்கு நன்றி செலுத்துவதைத்தான் பரார்த்த பூஜையாக, நிஷ்காம்ய வழிபாடாக, ஆலயங்களில் செய்கிறோம்.
1.2 அரணிக்கட்டையுள் நெருப்பு மறைந்துள்ளது போல, மலரில் மணம் மறைந்துள்ளது போல ஈச்வரன் பிம்பத்தில் (லிங்கத்தில்) உள்ளார். பாலை விட, தயிரிலிருக்கும் நெய்யைக் கண்டெடுப்பது எளிது. உலகெங்கிலும் பாலில் மறைந்துள்ள நெய் போல் உறையும் இறைவன், ஆலயத்தில் தயிரினுள் மறைந்திருக்கும் நெய் போல எளிதில் நமக்கு முன் வந்து அருளக் காத்திருக்கிறான்.
1.3 ஆகமங்களில் விதித்துள்ள சிற்ப சாஸ்திரங்களுக்கொப்ப அமைந்துள்ள திருக்கோவில்களே பரம்பொருள் வீற்றிருக்கும் தேவாலயங்கள். ஆகம விதிப்படி அமையாத ஆலயங்கள் மடாலயங்கள் எனப்படும்.
1.4 சிவலிங்கம் இருக்கும் இடத்திலிருந்து நான்கு புறமும் 150 முழ தூரம் சிவ÷க்ஷத்ரம் ஆகும். இங்கு வசிப்பதுமச் சிவலோகவாசத்திற்கு காரணமாகும் என்று சுப்ரபேத ஆகமம் கூறுகிறது
1.5 முன் ஜன்மாவில் சிவ கைங்கர்ய உபகாரிகளாக வாழ்ந்தவர்கள், இந்த ஜன்மாவில், நல்ல உருவமும், தன ப்ராப்தியும் உடையவர்களாக காணப்படுவார்கள். சிவ தர்மத்தில் - பக்தியுடன், தன் சொத்துக்குத் தகுந்தபடி, ஆலயங்களை ஒவ்வொருவரும் செய்விக்க வேண்டும். அப்படிச் செய்தால், சிறிதாக அல்லது பெரிதாக செய்தாலும், தனவானுக்கும் ஏழ்மையானவர்களுக்கும், சமமான புண்யமே. பணக்காரராயினும், லோபமான மனஸுடன் பணத்தைக் குறைத்து சிவதர்மங்களைச் செய்பவர், அப்புண்ய பலனை அடைய மாட்டார். வாழ்வு நிலையற்றது; எனவே, ஒவ்வொருவரும் தன் சொத்தில் இரு பங்கு தர்மத்திற்கும், தனது வாழ்விற்கு ஒரு பங்குமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்கிறது ஜீர்ணோத்தார தசகம்.
1.6 மனத்தை ஒருவழிப் படுத்தவும், கீழ்ப்படிவு, நீதி வழி நிற்றல், தன்னலம் மறுப்பு, பணிவு, இரக்கம் ஆகிய பல சிறந்த பண்படுகளை உண்டாக்கி வளர்க்கவும், இறுதியாக மோக்ஷ ஸாம்ராஜ்யம் அடைந்திட வழி வகுக்கவும் திருக்கோயில் வழிபாட்டைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.
1.7 சாதாரணமாக, நம் கைகள் இரண்டு விரிந்து, வளைந்து, பற்பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவனுடைய ஸந்நிதானத்தில் கும்பிடும்போது, அத்தகைய செய்கைகள் எல்லாம் ஒழிந்து, கைகள் ஒன்று சேர்ந்து குவிகின்றன. அவ்வாறு குவிந்திடும் கைகள் ஆண்டவனே ! இனி என் செயல் என்று ஏதும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எல்லாம் உன் அருட் செயலே என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்துகின்றது.
1.8 ஆலயங்களில் விக்ரஹ ஆராதனை முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தில் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவது விக்ரஹம் என்ற சொல் (விஸேஷேண க்ருஹ்யதே ஸக்திஸமூஹ: அஸ்மின் இதி விக்ரஹ:) வி என்றால் விசேஷமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். க்ரஹிப்பது என்றால் ஈர்த்துக்கொள்வது. பல்வேறு மந்த்ர தந்த்ர யந்த்ர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும்போது, இறையருளை முன்வைத்து, இறைத்தன்மையை ஈர்த்துத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்குவோருக்கு அருள் புரியும் வல்லமை உள்ள பொருள்தான் விக்ரஹம்.
1.9 விக்ரஹங்கள் பல திறத்தன: பொருள் பொதிந்து விளங்குவன. எடுத்துக்காட்டாக, இறைவன் உருவமற்றவன்: அருவமானவன். அவனுக்கு அருவுருவமாகிய லிங்க ப்ரதிஷ்டை கருவறையிலே. அவனுக்கே, மாகேச்வர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படும் 25 உருவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. (அவையாவன: 1. லிங்கோத்பவர் 2. சுகாசனர் 3. சந்திதர மூர்த்தி 4. கல்யாண சுந்தரர் 5. அர்த்த நாரீச்வரர் 6. ஸோமாஸ்கந்தர் 7. சக்ரவரதர் 8. திரிமூர்த்தி 9. ஹரிமர்த்தனம் 10. சலந்தராரி 16. திரிபுராரி 17. சரப மூர்த்தி 18. நீலகண்டர் 19. திரிபாதர் 20. ஏகபாதர் 21. பைரவர் 22. இடபாரூடர் 23. சந்திரசேகரர் 24. நடராஜர் 25. கங்காதரர்). இவை 25 விக்ரஹங்களுள் ஒவ்வொன்றும், பற்பல தத்துவங்களை உள்ளடக்கியவை. மீண்டும் எடுத்துக்காட்டாக, சோமாஸ்கந்த மூர்த்தியை எடுத்துக் கொண்டால், ஸச்சிதானந்தமே சோமாஸ்கந்தம் என்கிறார் காஞ்சிப் பரமாச்சாரியார். அவர் கூற்றுவது: ஸத்-சித்-ஆனந்தம் என்று சொல்வார்களே அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேச்வரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிறது சித் அம்பாள்: இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப்ரமண்யர். சிவம் என்கிற மங்களமும், அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த மரம் பரம உத்க்ருஷ்டமான (உயர்வான) ஸ்தானம் அவர் (ஸுப்ரஹ்மண்யர்); ஸச்சிதானந்தத்தையே சோமாஸ்கந்தர் என்று தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம்.
1.10 இறைவனை அடையும் வழிகள் ஒன்பது என்பர்: (1) ச்ரவணம் - கேட்டல், இறைவன் புகழ் கேட்டல் - உதாரணம்: ஹனுமான், (2) கீர்த்தனம் - பாடுதல், நாதோபாஸனை - உதாரணம்: வால்மீகி, தியாகராஜ ஸ்வாமிகள். (3) ஸ்மரணம் - நினைத்தல், நின்றும் இருந்தும் கிடந்தும் அவனையே நினைப்பது - உதாரணம்; ஸீதாதேவி, (4) பாதசேவனம் - சேவித்தல் - உதாரணம்: பரதன், (5) அர்ச்சனம் - பூஜித்தல் - உதாரணம்: சபரி, கண்ணப்ப நாயனார், சாக்கிய நாயனார், (6) வந்தனம் - நமஸ்கரித்தல், வந்தித்தல் - உதாரணம்: விபீஷணன். (7) தாஸ்யம் - தொண்டு புரிதல் - உதாரணம்: லக்ஷ்மணன், திருநாவுக்கரசர். (8) ஸக்யம் - சிநேக பாவம் - உதாரணம்: சுக்ரீவன், அர்ஜுனன், சுந்தரர். (9) ஆத்ம நிவேதநம் - தன்னையே அர்ப்பணித்தல் - உதாரணம்: ஜடாயு. இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றை உறுதியாகப் பற்றுவதே இறைவனை அடைவதற்கு  போதுமானது. இவற்றுள் கடைசி இரண்டைத் தவிர, ஏழு முறைகளில் வழிபட ஆலயங்களே வகை செய்வது குறிப்பிடத்தக்கது.
1.11 இவ்வாறு ஆலய வழிபாட்டை மையமாக வைத்து அமைக்கப்பட்ட வாழ்க்கை முறையே சிவதன்மம் ஆகிறது. சிவதன்மம் என்றால் சைவ ஒழுக்கம் என்று பொருள். சிதம்பரம் மறைஞானதேசிகர் (கி.பி.1560) சிவாகம பரிபாஷா மஞ்சரி என்ற வடமொழி நூலில் சிவதன்மம் பத்துக் கோட்காடுகளைக் கொண்ட நெறி என்கிறார்: 1. அஹிம்சை. 2. தயை, 3. சத்யம், 4. அடக்கம் 5. வளம், 6. புலனடக்கம் 7. எளியோர்க்கு வழங்குதல், 8. தியாகம், 9. ஜபம், 10. தியானம் - அல்லது 1. அஹிம்சை, 2. சத்யம், 3. பிறர் பொருள் விழையாமை, 4. சிற்றின்பம் துறத்தல், 5. அவா ஒழித்தல், 6. க்ரோதம் தவிர்த்தல், 7. பெரியோரைப் போற்றுதல், 8. தூய்மை, 9. துயறுற்றலும் மகிழ்வுடன் இருத்தல், 10. நேர்மை என்றபடி. இக்கோட்பாடுகள் அனைத்தும் ஆலய வழிபாட்டு நெறிக்கும் இன்றியமையாததாக இருப்பது கவனிக்கத் தக்கது.
1.12 எனவே, ஆலயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையில், நீறு இல்லா நெற்றி பாழ்; சிவாலயம் இல்லா ஊர் பாழ்; சிவபூஜை இல்லா ஜன்மம் பாழ்; சிவனை அடையா வித்யை பாழ் என்று ஆகமங்கள் வலியுறுத்துகின்றன.


ஆலயங்கள் அமைத்தல்



2.1 ஆலயக் கிரியைகள் : ஆலயங்களில் செய்யப்பெறும் கிரியைகள் முப்பெரும் பிரிவினுள் அடங்கும்; 1. கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம், 2. ப்ரதிஷ்டாதி உற்சவாந்தம், 3. உற்சவாதி ப்ராயச்சித்தாந்தம்.
2.2. கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம் : புது இடத்தை உழுதல் (கர்ஷணம்) முதலான கிரியைகளுடன் தொடங்கி, திருக்கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்யும் வரை.
2.3 ப்ரதிஷ்டாதி உற்சவாந்தம்: நித்திய, நைமித்திய, காமிக கிரியைகளும், உற்சவங்களும்.
2.4 உற்சவாதி ப்ராயச்சித்தாந்தம்: மஹோத்ஸவங்களும், அவற்றின் நிறைவாக நிகழும் ப்ராயச்சித்த (மஞ்சள் நீராட்டு வைபவங்களும்)
2.5 பாலாலயம் : தற்காலிகமாக அமைக்கப்பெறும் இறைவனின் இருப்பிடங்கள் இளங்கோயில் அல்லது பாலாலயம் என்று அழைக்கப்பெறும். புதிதாக ஆலயம் எழுப்புவதாயினுங்கூட, முதலில் பாலாலயம் அமைத்தே அதில் இறைவரை எழுந்தருளச் செய்திடல் வேண்டும். ப்ரதானாலயம் கட்ட இடம் சதுரித்த பின், பால லிங்கத்தை பாலாலயத்தில் பிரதிஷ்டை செய்து, பூஜித்து வரவேண்டும்; இதற்காகக் கட்டப்படுவது முதலாவது பாலாலய வகை. பின் மூலாலயத்தில் மூல லிங்கத்தை பிரதிஷ்டை செய்தபின், இறைவரை பாலலிங்கத்திலிருந்து மூல லிங்கத்திற்குச் சென்று எழுந்தருளச் செய்து, பிறகு பாலாலயத்தை நீக்க வேண்டும். பிற்காலத்தில், மூலாலயம், பீடம், சிவலிங்கம், பிம்பங்கள் இவை ஜீர்ணம், பின்னம், அங்கக் குறைவு, வெடிப்பு முதலியவற்றால் தோஷமுற்றபோது, இவைகளை கும்பத்தில் ஆவாஹனம் செய்து, பின்னர் பாலபிம்பத்தில் சேர்க்க வேண்டும்; இத்தகு தருணங்களில் அமைக்கப்பெறும் பாலாலயங்கள் இரண்டாவது வகைத்து. இவை தருணாலயம் என்றும் கூறப்படும்.
2.6 உற்சவங்கள்: ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஒரு நாள் நிகழ்ச்சிகளாகவும், 3 முதல் 36 நாட்கள் வரை தொடர் விழாக்களாகவும் நடைபெறுவது உண்டு. அவ்வாறு 1,3,5 நாட்கள் நடைபெறும் உற்சவங்களுக்குக் கொடியேற்றம் தேவையில்லை. அதற்கு மேற்பட்ட நாட்களாக செய்யப்படும் உற்சவங்கள் கொடியேற்றத்துடன் செய்ய வேண்டுமென ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய உற்சவங்கள் மஹோற்சவங்கள் எனவும் கூறப்படும். பாலாலயம் செய்துள்ளபோது, கும்பாபிஷேகம் ஆகும் வரை, மத்தியில் மஹோத்சவம் (கொடி ஏற்றி உற்சவங்கள்) செய்யலாகாது. அப்படி அவசியம் உற்சவம் செய்யவேண்டுமாயின், மூலாலயத்திற்கு ஈசானம் முதலிய குறிப்பிட்ட திசைகளில், மூலாலயம் போலவே விமானம், கர்ப்பக்ருஹம், பரிவார தேவதைகள், கொடிமரம், பலிபீடம் யாவும் உள்ள பாலாலயம் அமைத்து, பிரதிஷ்டைகள் செய்து, அந்தக் கொடிமரத்தில் கொடி ஏற்றி உற்சவம் செய்யலாம்
2.7 யாகசாலை : உற்சவத்திற்கான யாகசாலை மேற்கு முகமாக இருத்தல் வேண்டும். ஆனால், பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், சம்ப்ரோக்ஷணம் யாவற்றிற்கும் யாகசாலை கிழக்கு முகமாய் இருத்தலே உத்தமம் என்று காரணாகமம் கூறுகிறது.
2.8 நந்திதேவர் பிரதிஷ்டை: சிவாலயங்களி, குறைந்த பக்ஷமாக ஒரு நந்தியும், அதிக பக்ஷமாக ஐந்து நந்திகளும் ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டும். ஐந்து வித நந்திகள்: 1. லிங்கத்துக்கு மிக அருகிலுள்ள (முதல்) நந்தி கைலாஸ நந்தி (பொற் பிரம்பும், வீர வாளும் தாங்கியவர்; தன் மூச்சுக் காற்றால் இறைவனைக் குளிர வைத்துக் கொண்டு இருப்பவர். ஆலயத்தினுள் ஒரே ஒரு நந்தி அமைப்பதனால் இவர் மட்டுமே ப்ரதிஷ்டை ஆவார்) 2. இரண்டாவது நந்தி மஹாவிஷ்ணு அவதார நந்தி (திருமால் இறைவனைத் தான் தாங்குவதற்காக நந்தி உருக் கொண்டு அமர்ந்துள்ளமை - நான்கு நந்திகளுக்குக் குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த ப்ரதிஷ்டை இல்லை) 3. மூன்றாவதான நந்தி பக்தர்களை உள்ளே விடவும், தடுப்பதற்கும் அதிகாரம் பெற்றவர். சில நூல்களில் இவரை அதிகார நந்தி என்றும் பெயரிட்டு குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுவர் (துவஜஸ்தம்பம் அருகே உள்ளவர். இரண்டு நந்திகள் மட்டுமே அமைப்பதனால், இரண்டாவதாக இவர் ப்ரதிஷ்டை ஆவார்) 4. நான்காவதான நந்தி சாதாரண நந்தி (ஐந்து நந்திகளுக்குக் குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த ப்ரதிஷ்டை ஆவார்) 4. நான்காவதான நந்தி சாதாரண நந்தி (ஐந்து நந்திகளுக்குக் குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த பிரதிஷ்டை இல்லை) 5. ஐந்தாவதான் நந்தி உருவில் மிகப் பெரியவர். விச்வரூபம் கொண்டு போருக்கு ஆயத்தமாயுள்ளவர். ஆலயங்களின் நுழைவாயிலில் அமைக்கப்பெறுபவர் இவரே. புகழ்பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் பெரிய நந்தி இதற்கு உதாரணம். இவர் பெரிய நந்தி, அல்லது மஹா நந்தி என்றும் அழைக்கப்படுவார் (மூன்று நந்திகளுக்கு குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த ப்ரதிஷ்டை இல்லை)
2.9 ப்ரதிஷ்டா கிரியைகள்: கும்பாபிஷேகத்தை ஒட்டி நிகழ்விக்க வேண்டிய கிரியைகள் - அதாவது கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்த கிரியைகள் - பற்பல. அவற்றின் பெயர்களைத் தொகுத்து ஒரு (ஏறத்தாழ, அனைத்து கிரியைகளின்) பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இவற்றுள் சிலவற்றின் விளக்கமும் மேற்கொண்டு காணலாம்: 1. மஹூர்த்த நிர்ணயம் 2. ஸ்தம்ப ஸ்தாபனம் 3. அனுக்ஞை 4. தன பூஜை 5. ஆசார்ய வரணம் 6. ப்ஸன்ன கணபதி பூஜை. 7. க்ராம சாந்தி 8. ப்ரவேச பலி. 9. ர÷க்ஷõக்ன ஹோமம் 10. ஆசார்ய தசவித ஸ்நானம் 11. வாஸ்து சாந்தி 12. க்ரஹ மகம் 13. திசா ஹோமம் 14. கோ பூஜை, 15. விப்ர போஜனம், 16. ம்ருத் ஸங்க்ரஹணம் 17. ரத்ன ந்யாஸம் 18. நயனோன் மீலனம், 19. தான்யாதி வாசனம், 20. ஜலாதி வாசம் 21. சாந்தி ஹோமம், 22. மூர்த்தி ஹோமம், 23. சம்மிதா ஹோமம், 24. அங்குரார்ப்பணம், 25. ரக்ஷõ பந்தனம் 26. சயனாதி வாசம், 27. யாகசாலை தான்ய ஸ்தாபனம் - ஸூர்யகாந்தாக்நி ஸங்க்ரஹணம் 28. ருத்விக் சாதஹாதி வரணம் 29. ப்ரஸன்னாபிஷேகம் 30. கும்ப ஸ்தாபனம் 31. கலா கர்ஷணம் 32. மூர்த்தி ஹோமம் 33. யாத்ரா ஹோமம் 34. யாத்ரா தானம் 35. கடோத்வாஸனம், 36. யாகசாலா ப்ரவேசம் 37. யாக பூஜை ன த்ரவ்யாஹுதிகள், 38. யாக பூஜை - பூர்ணாஹுதிகள் 39. ஜம் ரத்ன ந்யாஸம், யந்த்ர ஸ்தாபனம், 40. தேவதா ஸ்தாபனம் 41. அஷ்ட பந்தனம், ஸ்வர்ண பந்தனம் 42. க்ருத சிரோர்ப்பணம் 43. தைலாபிஷேகம் 44. பிம்ப சுத்தி 45. பிம்ப ரக்ஷõ பந்தனம் 46. தீப ஸ்தாபனம், தீபலக்ஷ்மீ பூஜை. 47. லக்ஷ்மீ பூஜை.  48. கந்தலோபனம் 49. மஸ்தக ஜபம் 50. ந்யாஸார்ச்சனம் 51. சாந்தி கும்பம் 52. ஸ்பர்சாஹுதி 53. மஹா பூர்ணாஹுதி 54. யாத்ரா தானம் 55. கடோத்வாஸனம் 56. மூலாலய ப்ரவேசம் 57. ஸ்தூபி கும்பாபிஷேகம் 58. ஸ்வாமி கும்பாபிஷேகம் 59. பரிவார கும்பாபிஷேகங்கள் 60. யஜமான உற்சவம் 61. சண்ட ஹோமம் 62. மஹாபிஷேகம் 63. திருக்கல்யாணம் 64. திருநீதி உலா 65. அவப்ருத ஸ்நானம் 66. ஆசார்ய உற்சவம் 67. மண்டல பூஜாரம்பம் 68. மண்டலாபிஷேக பூர்த்தி 69. சண்டிகேசர் உற்சவம் 70. யஜமானஸ்ய பல ஸமர்ப்பணம்.
2.10 சங்கற்பம், அனுக்ஞை: ஆலய நிர்மாணம் தொடங்கி, எந்தக் காரியம் செய்தாலும், முதலாவதாக சங்கற்பமும், அனுக்ஞையும் செய்திடல் வேண்டும். எடுத்துக் கொண்ட காரியத்தை குருவின் உதவியுடன் செய்து முடிப்பதாக உறுதி பூணுதல் சங்கல்பம். விநாயகர், இறைவன், மூலமூர்த்தி முதலாக சண்டேச்வரர் ஈறாகவுள்ள அனைத்துத் தெய்வங்கள், குருமார்கள், பெரியோர்கள், முதியோர்கள் ஆகியோரது அனுமதியைக் கோரிப் பெறும் உத்தரவு பெறுதல் என்னும் நிகழ்ச்சியே அனுக்ஞை.
2.11 ப்ரவேச பலி: பூத, பிசாச, ப்ரம்மராக்ஷஸர்களுக்கு பலி (நைவேத்யம் முதலாய உபசாரப் பொருட்கள்) கொடுத்து, அவற்றை ஏற்றுக் கொண்டு வேறிடம் செல்லுமாறு அவர்களை வேண்டி, இடையூறுகளை நீக்கிக் கொள்ளும் கிரியையே ப்ரவேச பலி. இது கீழ்க்கண்ட காலங்களில் செய்திடல் வேண்டும். 1. புதுஆலய நிர்மாணம் தொடங்கும் போது 2. நெடுங்காலமாக நித்திய நைமித்திய பூஜைகள் இன்றிக் கிடந்த ஆலயங்களில் மீண்டும் வழிபாடுகள் தொடங்கும்போது 3. கும்பாபிஷேகங்களுக்கு முன்னதாக 4. மஹோத்சவங்களுக்கு முன்னதாக
2.12 ர÷க்ஷõக்ன ஹோமம்: புறத்தேயிருக்கும் தேவதைகளை அகற்ற ப்ரவேச பலி செய்யப்படுவதைப் போல, ஆலயத்தில் உள்ளிருக்கக்கூடிய துர்தேவதைகளை சாந்தி செய்து அகற்றிட ர÷க்ஷõக்ன ஹோமம் செய்யப்படும்.
2.13 வாஸ்து சாந்தி: ஆலயம் சமைப்பதற்கு முன்னாலும், பின்னர் நடைபெறும் சம்ப்ரோக்ஷணம்-பிரதிஷ்டை-கும்பாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு முன்பாகவும், சங்காபிஷேகம், மஹோற்சவம் போன்ற பெருவிழாக்கள் துவங்குவதற்கு முன்னும் - ஆகிய காலகட்டங்களிலே, இடத்திற்கு தேவதையாக உள்ள வாஸ்து புருஷனையும், அவரது அதிவேதையான ப்ரம்ம தேவரையும், சக்திகளையும் பூஜித்து, ஏனைய தெய்வங்களையும் வழிபட்டு திருப்தி செய்வதே வாஸ்து சாந்தி. மகிழ்வித்த வாஸ்து புருஷனை, ஹோமாக்னியால் எரியூட்டி, ஆலயம் முழுதும் இழுத்துச் சென்று சுத்திகரித்து, இறுதியாக புண்யாஹவாசன கலச நீரினால் அவ்விடங்களை சுத்த செய்வதே வாஸ்து சாந்தியின் நிறைவு.
2.14 அங்குரார்ப்பணம்: அங்குரார்ப்பணம் என்பது முளை இடுதல் (பாலிகை). மஹோற்சவம், ப்ரதிஷ்டை ஆகிய காலங்களில் இந்நிகழ்ச்சி செய்யப்பெறும். சிவாச்சார்யார், 5 அல்லது 9 நாள் முன்னதாக, மங்கள முறைப்படி, 40, 24, 16 (அல்லது வைதீக முறைப்படி 5) பாலிகைகளில் நன்முளையிட்டு காலை - மாலை  பஞ்சகவ்ய நீர் வார்த்து, அவற்றின் முளைகளை நன்கு கவனித்து, பயன்களை அறிந்து கொண்டு, அவற்றின் சூசகத்தை எஜமானருக்கு உணர்த்திடல் வேண்டும்
2.15 ம்ருத்ஸங்க்ரஹணம்: அங்குரார்ப்பணத்துக்காக சிவாச்சார்யார், ஆற்றங்கரை, மலையடிவாரம், நந்தவனம் போன்ற பரிசுத்தமான இடத்திலிருந்து புது மண் எடுத்து வரும் நிகழ்ச்சி ம்ருத்ஸங்க்ரஹணம் எனப்படும்.
2.16 ரக்ஷõபந்தனம் : ரக்ஷõபந்தனம் என்பது காப்புக் கட்டுதல். விழாவின் தொடக்கம் முதன், நிறைவு வரை, வெளி உலக உபாதைகள் ஒன்றும் தீண்டக்கூடாது என்பதற்காக, சிவாச்சாரியார், தமக்கும், யாகத்தில் பங்கு பற்றும் ஏனைய சிவாச்சாரியாருக்கும் காப்பு கட்டுவதுடன், மூல மூர்த்திக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் அவரவர்க்குரிய ஸ்தானத்தில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்
2.17 ஸ்நபநம்: இறைவரை, தேவர்களை தற்காலிகமாக உருவேற்றிப் பூஜிப்பதற்கென, கும்பங்களைக் கலாகர்ஷணப் பொருளாக ஸ்தாபிப்பதே கடஸ்தாபனம் அல்லது ஸ்நபநம் எனப்படும். அப்படி ஸ்தாபிக்கப்பட்ட கும்பம் மூர்த்தியாகவே பாவிக்கப்படுகிறது. கும்பத்தோடு சகஜமாக இருக்கும் மண் உடலுக்கு உரிய அம்சம்; அதில் சுற்றப்படும் நூல் எழுபத்து இரண்டு ஆயிரம் நாடி நரம்புகள்; அதில் சுற்றப்படும் வஸ்த்ரம் தோல்; கும்பத்துள் இடப்படும் நீர் இரத்தம் மற்றும் மேதை எனப்படும் ஏழு தாதுக்கள்; கும்பத்துள் இடப்படும் நவரத்தினம், வெள்ளி, பொன் முதலியவை சுக்கிலம்; உள்ளே இடப்படும் கூர்ச்சம் முள்ளந்தண்டு எனப்படும் முதுகெலும்பு; மாவிலை சடை; தேங்காய் கபாலம்; வெளியே இடப்படும் கூர்ச்சம் குடுமி; நியாஸங்கள், ப்ராண ப்ரதிஷ்டை முதலான மந்திரங்கள் ஜீவன். கீழே பரப்பப்படும் தானியங்கள் மூர்த்திக்கு உரிய ஆஸனம்; உத்தரீய மாலைகள், மலர்கள் முதலிய அலங்காரப் பொருள்கள்.


சிவாச்சாரியார்



3.1 ஆலயக் கிரியை வகைகள்: சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப் பட்டுள்ளன: 1. நித்தியக் கிரியைகள் 2. நைமித்திகக் கிரியைகள் 3. காமியக் கிரியைகள். தினந்தோறும் (குறைந்தது ஒரு காலம், அதிகபக்ஷம் 12 காலம்) நிகழும் பூஜைகள் நித்தியக் கிரியைகள்.  ஏதாவது காரணங் கொண்டு நிகழ்வன நைமித்திகக் கிரியைகள் (நிமித்தம் என்றால் காரணம்). இவை நித்தியக் கிரியைகளை அன்னியில், செய்யப்பெறும் விசேஷக் கிரியைகள், அதாவது, சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, ப்ரதோஷம், பௌர்ணமி, நடராஜர் அபிஷேகம், ஆவணி மூலம், பெரிய கார்த்திகை, மாசி மகம், ஆருத்ரா, விஷு, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம், ப்ரஹ்மோத்ஸவம், மகாமகம், அர்த்தோதயம், மஹோதயம், கும்பாபிஷேகம் போன்ற நாட்களில், அல்லது காலங்களில், அல்லது முஹூர்த்தங்களில் விசேஷமாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பெறும் நிகழ்ச்சிகள். ஒரு குறிப்பிட்ட பேறு பெற விழைந்து, ஒருவராலோ அல்லது பலர் ஒரு குழுவாகச் சேர்ந்தோ, செய்யப்படும் கிரியைகள் காமியக் கிரியைகள். (காமிகாகமம்). திருக்கோவில் பூஜைகள் பெரும்பாலும் பொது ஜனங்கள் அனைவரது நன்மையயும் வேண்டிப் பொதுவாகச் செய்யப்படும் நிஷ்காம்யக் கிரியைகளே. ஒரு அன்பரோ அல்லது குழுவோ தமக்கென்று ஒரு பேற்றினை வேண்டி பூஜைகள் நிகழ்வித்தாலும், அவை திருக்கோவிலில் நிகழ்ந்தால், மஹா ஸங்கல்பமாக, பூஜையின் ஆரம்பத்தில் அனைவருக்கும் பொதுவாக அனைத்து நன்மைகளையும் வேண்டி, நிஷ்காம்யக் கிரியையாக வழிபாடுகளை நிகழத்துதலே முறை.
3.2 சிவபூஜை வகைகள்: சிவபூஜை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகைப்படும். இவ்விரு பூஜைகளுள்,சிவதீøக்ஷ பெற்ற யாவரும் ஆத்மார்த்த பூஜை செய்யலாம், பரார்த்த பூஜைகளே திருக்கோவிலில் நிகழ்வன. சிவதீøக்ஷ பெற்ற ஆதிசைவர்கள் (சிவாச்சாரியார், குருக்கள்), குருமுகமாகப் பயிற்சி பெற்று, ஆசார்யராக இருக்கத் தகுதி பெற்றபின்னரே பரார்த்த பூஜை செய்ய உரிமை பெறுவர்.
3.3. சிவாச்சாரியார்: சிவாலயங்களில் பூஜை செய்யும் அருகதை உள்ள சிவாச்சாரியார்கள் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், எழுபது வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று காமிகாமம் கூறிகின்றது.
3.4 சிவாச்சாரியாருக்கு விதிக்கப்பட்ட கிரியைகள்: சிவாச்சாரியார் (அல்லது சிவ தீøக்ஷ செய்து கொண்ட எவரும்) தினமும் செய்ய வேண்டி விதிக்கப்பட்டுள்ள ஸ்நானம், பூஜை, ஜபம், த்யானம், ஹோமம் போன்றவற்றிற்கும், சிவாச்சாரியாருக்கு உருடய நித்தியக் கிரியைகள் என்றே பெயர். தீøக்ஷ செய்துகொள்ளுதல் ப்ரதிஷ்டை செய்தல் போன்றவை அவருக்கான நைமித்திகக் கிரியைகள் எனப்படும்
3.5 சிவ த்யானம்: நம்முடைய ஹ்ருதய கமலத்திலாவது, துவாதசாந்தத்திலேயாவது சிவனை நிறுத்தி தியானம் செய்ய வேண்டும். நிஷ்களமான சிவனை, குரு உபதேசித்தபடி த்யானம் செய்து மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் சிவாய நம: அல்லது ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவாய நம:) ஜபம் செய்யவேண்டும். அப்படி நிஷ்களமான சிவனை த்யானம் செய்யும் சாமர்த்தியம் இல்லாதவர் சிவபெருமானுடைய விக்ரஹங்களில் தனக்குப் பிடித்தமான ஒருவரை மனதில் நிலைக்கச் செய்து, த்யானம், ஜபம் செய்தல் வேண்டும்
3.6 சைவக் கிரியைகளின் அங்கங்கள்: பாவனை, கிரியை, மந்திரம் என்னும் மூன்றும் சேர்ந்து பரிமளிப்பனவே சைவக் கிரியைகள். பாவனை என்றால் எண்ணுவது என்று பொருள். கிரியைகள் என்பதை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். மந்திரங்கள் என்பவை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். மந்திரங்கள் என்பதை எண்ணங்களுக்கு ஏற்ற கிரியைகளின் பயன்களைத் தர வல்ல சொற்றொடர்கள். ஒவ்வொரு கிரியையும், அதற்கேற்ற பாவனை, மற்றும் மந்திரங்களுடனேதான் செய்யப்படுதல் வேண்டும். பாவனை இல்லாது மந்திரங்களுடன் மட்டும் கரியைகளைச் செய்தால் அவை பயனற்றவையாகும். பாவனையும் இல்லாது, மந்திரங்களையும் மொழியாது, கிரியைகளைச் செய்தால், அச்செய்கைகள் தேவர்களை மகிழ்விக்காது; அசுரர்களையே மகிழ்விக்கும்; அதனால் புண்ணியம் தேய்ந்து பாவமே வளரும். எனவே, பூஜைகளில் முழுப்பயனும் மக்களைச் சென்றடைய, பாவனை, கிரியை, மந்திரம் ஆகிய மூன்றிலுமே லோபம் (குறைகள்) இல்லாமல் அனுஷ்டானத்தைச் செய்யுமாறு சிவாச்சாரியார்கள் குருமுகமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.
3.7 பக்தியில்லாத சிவாச்சாரியார்: தீக்ஷிதனாகிய ஆச்சாரியார், பக்தி இல்லாதவனாக பூஜித்தால், ராஜா. ராஜ்யம் இவர்களுக்கு கெடுதல்; அது எவ்விதம் எனில், காட்டில் இருக்கிற துஷ்ட மிருகமாகிற ஸிம்ஹத்தைக் கண்ட யானையானது எப்படி பயம் அடையுமோ, அதுபோல் பக்தியில்லாத ஆச்சாரியனைப் பார்த்த உடனே சிவபெருமான் பயம் அடைந்து (விலகி விடுவார்) மந்திரம் இல்லாமல் அர்ச்சனை செய்தால், அந்த ஈச்வரன் பயம் அடைவார்.
3.8 சிவாச்சாரியாருக்கு உரிய சில அனுஷ்டான மந்திரங்கள்:
ஆசன மந்திரம் :
1. ஓம் ஹாம் ஆத்ம தத்வாய ஸ்வதா
2. ஓம் ஹீம் வித்யா தத்வாய ஸ்வதா
3. ஓம் ஹூம் ஸிவ தத்வாய ஸ்வதா
பஞ்சகலா மந்திரம் :
1. ஓம் ஹ்லாம் நிவ்ர்த்தி கலாயை நம:
2. ஓம் ஹ்லீம் ப்ரதிஷ்டா கலாயை நம:
3. ஓம் ஹ்ரூம் வித்யா-கலாயை நம:
4. ஓம் ஹ்யைம் ஸாந்தி கலாயை நம:
5. ஓம் ஹ: ஸாந்த்யாதீத கலாயை நம:
ஸம்ஹிதா மந்திரம் :
1. பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களும்
2. ஷடங்க மந்திரங்களும் ஒன்று சேர்ந்தது.
பஞ்ச ப்ரஹ்ம மந்திரம் :
1. ஈசானம்  : ஓம் ஹோம் ஈஸாந மூர்த்தயே நம:
2. தத்புருஷம்: : ஓம் ஹேம் தத்புருஷ வக்த்ராய நம:
3. அகோரம் : ஓம் ஹும் அகோர ஹ்ருதயாய நம:
4. வாமதேவம் : ஓம் ஹிம் வாமதேவ குஹ்யாய நம:
5. ஸத்யோஜாதம்: ஓம்ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம:
ஷடங்க மந்திரங்கள் :
1. ஹ்ருதயம் : ஓம் ஹாம் ஹ்ருதயாய நம:
2. சிரஸ் : ஓம் ஹீம் ஸிரஸே நம:
3. சிகை : ஓம் ஹூம் ஸிகாயை நம:
4. கவசம் : ஓம் ஹைம் கவசாய நம:
5. நேத்ரம் : ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம:
6. அஸ்த்ரம் : ஓம் ஹ: அஸ்த்ராய நம:
மூல மந்திரங்கள் :
1. கணபதி : ஓம் கம் கணபதயே நம:
2. குரு : ஓம் கும் குருப்யோ நம:
3. சிவன் : ஓம்
4. தேவீ : ஓம் ஹ்ரீம் தேவ்யை நம:
5. கந்தன் : ஓம் ஹாம் ஸ்கந்தாய நம:
6. ஸூர்யன்  : ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஸ: ஸிவஸூர்யாயை நம:
காயத்ரீ :
1. அஸ்த்ர காயத்ரீ :
ஓம் ஸிவாஸ்த்ராய வித்மஹே காலாநலாய தீமஹி
தந்நோ அஸ்த்ர ப்ரசோதயாத்.
2. சிவ காயத்ரீ :
ஓம் தன் மஹேஸாய வித்மஹே வாக்விஸுத்தாய தீமஹி
தந்ந: ஸிவ: ப்ரசோதயாத்
ஸப்தகோடி மஹாமந்திரம் :
1. நம:  2. ஸ்வாஹா 3. ஸ்வதா
4. வஷட் 5. வெளஷட் 6. ஹும் 7. பட்
3.9 கர ந்யாஸம் :
3.9.1 ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற சிவ அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே, சாண முத்திரையால், இடது, வலது கைகளால், மேலும் கிழுமாக இடது வலது கைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டும். இடது கையை இரு முறையும், வலது கையை ஒரு முறையும் அவ்வாறு செய்ய வேண்டும். கரங்களில் உள்ள அசுத்தங்களை எல்லாம், சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன முத்திரையாகக் கூட்டி, நெற்றியில் புருவங்களின் இடை வரை உயர்த்தி, அங்குள்ள சக்தி அம்ருதத்தால் கைகள் நனைந்து புனிதமானதாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.
3.9.2 இரு கைகளும் சக்தி சிவ வடிவம் என்றுணர்ந்து, கட்டை விரல் ஒழித்த எட்டு விரல்களும் எட்டிதழத் தாமரைகளாகப் பாவித்து, உள்ளே மடங்கி உள்ள விரல் தாமரையின் விதை உருவாகும் பிந்து (பொகுட்டு) ஸ்தானத்தைத் தொடுவதாகக் கொண்டு, உள்ளங்கைகளில் கண்டு விரலுக்குக் கீழே, புதன் மேட்டில், கட்டை விரலால் தொட்டு, ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று நியஸித்து, சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று நியாஸித்து, சிவாஸனத்தில் சிவமூத்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.
3.9.3 பிறகு ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களைத் தொடாமல் விலகி இருந்து, அதன் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (உஷ்ணீக முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத் புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களோடு சேர்ந்து இருக்கையில், அதன் நுனிகள் கட்டைவிரல் நுனிகளைக் தொட்டுக் கொண்டிருக்குமாறு (சின் முத்திரை (அ) சின்மய முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம; என்று உச்சரித்துக் கொண்டே, நடு விரல் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (யோக முத்திரை (அ) மோக முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் ஹிம் வாம தேவ குஹ்யாய நம: என்று உச்சரித்துக் கொண்டிருக்குமாறு (திவ்ய முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்ட, சுண்டு விரல் நுனிகள்  கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (ஆக்ர முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இந்த பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களைக் கூறி நியாஸித்ததன் மூலம் தன் கரங்களின் விரல் நுனிகளில் எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும்.
3.9.4 பிறகு உள்ளங்கைகளிலே, பெரு விரல்களால் தொட்டு (அதிஷ்டான முத்திரை) ஓம் ஹாம் ஹெளம் வித்யா தேஹாய நம: என்று நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேகம் கற்பிக்க வேண்டும். ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என்ற மூன்று விரல்களால் உள்ளங் கைகளைத் தொட்டு (கடா முத்திரை), பின் கூப்பி, ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று நியஸித்து, ஐயனின் த்ரிநேத்திரஙகளை த்யானிக்க வேண்டும். ஓம் ஹாம் ஹெளம் சிவாய நம: என்ற மூல மந்திரத்தை உச்சரித்தவாறே,சகல ஹஸ்த வ்யாப்த சக்தியினாலே, கைகளுக்குள்ளே, பெரு விரல்களால் நியஸித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.
3.9.5 பின்னர், ஓம் ஹாம் ஹ்ருதயாய நம; என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தான்தில் ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் சீரஸே ஸ்வாஹா என்று உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்) தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு ஓம் சிகாயை வெளஷட் என்று உச்சரித்து, யோக முத்திரையால், (குடுமி) சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்று உச்சரித்து, கவச முத்திரையால், உடலில் ந்யாஸம் செய்ய வேண்டும். பின்னர், ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்று உச்சரித்து, அஸ்த்ர முத்திரையால், கைகளில் ந்யாஸம் செய்ய வேண்டும். இந்த ந்யாஸத்தின் மூலமாக, கரங்களில், எழுந்தருளியுள்ள சிவபிரானுக்கு உரிய உரு உண்டானதாகக் கொண்டு த்யானிக்க வேண்டும்.
3.9.6 பின்னர், அவகுண்டனம் செய்ய வேண்டும். அவகுண்டனம் செய்வது, சிவ-சக்தி எழுந்தருளியுள்ள தலத்தைச் சுற்றி மூன்று மதில்களும், மூன்று அகழிகளும் உண்டாவதாக எண்ணி அவகுண்டன முத்திரையால் ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்ற கவச மந்திரத்தை உச்சரித்தவாறே அந்த ஸ்தானத்தைச் சூழ வளைத்து மும் முறை சுற்றுவதாகும்.
3.9.7 நிறைவாக, ஓம் ஹாம் ஹெளம் சிவாய வெளஷட் என்று உச்சரித்தவாறே பரமீகரணம் செய்தல் வேண்டும். பரமீகரணம் என்பது, கைகளைக் கூப்பி வந்தனி என்றும் பெயருள்ள நமஸ்கார முத்திரை செய்து, கரங்களைத் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கி, பின் இதயத்திற்கு எதிரே கொண்டு வந்து முடிப்பது.
3.9.8 இதுவே சிவாச்சாரியார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கரநியாஸம் செய்யும் முறையாகும்.
3.10 அங்க ந்யாஸம் :
3.10.1 கர ந்யாஸம் செய்து கொண்ட பின்னரே அங்க ந்யாஸம் செய்ய வேண்டும்.
3.10.2. ஓம் ஹ: அஸ்த்ராய ஹூம்பட் என்ற சிவ அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்ட, சாண முத்திரை கொண்ட கைகளால், பாதம் முதல் சிரஸ்வரை துடைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அசுத்தங்களை எல்லாம், சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன முத்திரையாக கூட்டி, நெற்றியில் புருவங்களின் இடை வரை உயர்த்தி, அங்குள்ள சக்தி அம்ருதத்தால் உடல் முழுதும் நனைந்து புனிதமானதாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.
3.10.3 திவ்ய முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று நியஸித்து, சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். மீண்டும் திவ்ய முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று நியாஸித்து, சிவாஸனத்தில் சிவமூர்த்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.
3.10.4 பிறகு, ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, உஷ்ணீக முத்திரையால் தலை உச்சியில் நியாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத் புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக் கொண்டே சின் முத்திரையால் நெற்றியில் நியாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம: என்று உச்சரித்துக் கொண்டே, யோக முத்திரையால் மார்பில் நியாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் ஹிம் வாம தேவ குஹ்யாய நம: என்று உச்சரித்துக் கொண்டே, திவ்ய முத்திரையால் நாபியில் நியாஸம் செய்ய வேண்டும். இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆக்ர முத்திரையால் வலது-இடது முழங்கால்களில் நியாஸம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இம்மந்திரங்களைக் கூறி நியாஸித்ததன் மூலம் தன் அங்கங்களில் எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும்.
3.10.5 பிறகு திவ்ய முத்திரையால் ஓம் ஹாம் ஹெளம் வித்யா தேஹாய நம: என்று மார்பில் நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேஹம் கற்பிக்க வேண்டும். ஆக்ர கண்ட முத்திரை என்று கூறப்படும் நேத்ர முத்திரையால் ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று கண்களில் நியஸித்து, ஐயனின் த்ரிநேத்திரங்களை த்யானிக்க வேண்டும்.
3.10.6. பிறகு, ஓம் ஹாம் ஹெளம் சிவாய நம: என்ற மூல மந்திரத்தை உச்சரித்தவாறே, ஹ்ருதயஸ்தானத்திலே நியாஸித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.
3.10.7 பின்னர், ஓம் ஹாம் ஹ்ருதயாய நம: என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தானத்தில் ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் சிரஸே ஸ்வாஹா என்று உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்) தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் சிகாயை வெளஷட் என்று உச்சரித்து, யோக முத்திரையால் (குடுமி) சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்று உச்சரித்து, கவச முத்திரையால், கண்டத்திலிருந்து நடு மார்பு வரை உடலில் ந்யாஸம் செய்ய வேண்டும்.
3.10.8 உஷ: முத்திரை எனப்படும் மோதிர விரல்களால் அங்கங்களைத் தொடும் முறையினால், ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற அஸ்த்ர மந்திரத்தை உச்சரித்து, இரு கைகளிலும் ந்யாஸம் செய்து சிவபிரானுக்கு அஸ்திரங்கள் அறிவத்ததாகப் பாவிக்க வேண்டும்.
3.10.9 தாளத்ரயம்: கோவிடாண முத்திரை என்று அழைக்கப்பெறும் கட்க முத்திரையால், ஓம் ஹூம் ஹ: அஸ்த்ராய பட் என்ற ஹூம்-படந்த (ஹூம்-ஐ முதலிலும், பட்- ஐ ஈறாகவும் கொண்டுள்ள) அஸ்திர மந்திரத்தை உச்சரித்தவாறே தாளத்ரயம் செய்ய வேண்டும். தாளத்ரயம் என்பது இடது உள்ளங்கையில் வலது கை கட்க முத்திரை விரல்களால் மும்முறை தட்டுதல், சிவசக்தி ப்ரகாசங்களுக்குக் கேடு செய்ய வரும் அசுரர் முதலியோரை விரட்டு பொருட்டுச் செய்வதே தாளத்ரயம்.
3.10.10. திக்பந்தனம் : விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரல் மத்தியில் விரல் துடிக்கத் தெறிக்கும் சோடிகா முத்திரையால் ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற அஸ்திர மந்திரத்தை உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ மேலே எண்மருங்கிலும் திக்பந்தனம் செய்து அக்நி ப்ரகாசம் உண்டாக்கி அக்நி தேவரைக் காவல் வைப்பதாகப் பாவிக்க வேண்டும்.
3.10.11 அவகுண்டனம் : ந்யாஸ முத்திரையால் ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்ற கவச மந்திரத்தை உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ கீழ்நோக்கி மேலே அவகுண்டனம் செய்து மூன்று மதில்களும் அகழ்களும் அமைப்பதாகக் கொள்ளவேண்டும்.
3.10.12 பரமீகரணம் : நிறைவாக, ஓம ஹாம் ஹெளம் சிவாய வெளஷட் என்று உச்சரித்தவாறே கைவிரல்கள் சாதாரணமாக நீண்டிருப்பதான மஹா முத்திரையால் பாதம் முதல் சிகை வரை தடவ வேண்டும். பாதம் முதல் கேசம் வரை துடைக்கும் இந்த கிரியைக்கு பரமீகரணம் என்று பெயர்.
3.10.13 இந்த ந்யாஸத்தின் மூலமாக, சிவபெருமானை மந்திராஸனத்தில் எழுந்தருளச் செய்து, அவயவங்களைப் பாவித்து, ப்ரகாசமும், அக்நி கோஷ்டமும், அகழும் உண்டானதாகப் பாவித்து, பரமாமிர்தாபிஷேகம் செய்து, பின் தான் அவருடன் இரண்டறக் கலந்ததாக (ஏக பாவம் ஆனதாக) பாவித்தல் வேண்டும்.
3.10.14. இதுவே சிவாச்சாரியார்க்கு விதிக்கப்பட்டுள்ள அங்க ந்யாஸம் செய்யும் முறையாகும்
3.11. ஆத்மபூஜா த்யாநம்: நாதம் லிங்கம் என்றும், அதுவே ஸ்ரேஷ்டமான சிவம் என்றும், பிந்து பீடம் என்றும், அதுவே சக்தியாகிய ஆதார ஆஸநம் (அல்லது ஆவுடையார்) என்றும், ஆதேயமாகிய சிவம் பாணமென்றும் சொல்லப்படுகின்றது. சிவம் அன்னியில் சக்தி இல்லை; சக்தி அன்னியில் சிவம் இல்லை; இவை, புஷ்பத்தில் வாஸனை போலும், எள்ளில் என்னை போலும் அபேதமாக இருப்பதாக அறியவும். எனவே, (மாநஸீகமாக) ஸிம்ஹாஸநம் செய்து, அதிலே சிவாஸநம் செய்து, சாஸ்ரோக்தமான க்ரியைகளினாலே தேவதேவேச்வரனை சிவாச்சாரியார் பூஜை பண்ணவேண்டியது.
3.12 சகளீகரணம்: கர ந்யாஸமும், அங்க ந்யாஸமும், சேர்ந்து செய்வதற்கு சகளீகரணம் என்று பெயர்.
3.13. விசேஷ அர்க்யம்:
3.13.1 சகளீகரணம் செய்த பிறகு, த்ரவ்ய சுத்தி செய்வதற்கும், மற்றபடி விதித்துள்ள விசேஷ நிகழச்சிகளுக்கும் சிவாச்சாரியார் (பஞ்ச பாத்திரத்தில்) புனித நீர் தயாரித்துக் கொள்வதே விசேஷார்க்யம்.
3.13.2 பொன், தாமிரம், வெள்ளி, பஞ்சலோகம், வெண்கலம், பித்தளை (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், இரும்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்) இவற்றுள் ஏதாவதொன்றால் செய்யப்பட்டுள்ள பஞ்சபாத்ரம்-உத்தரிணி அல்லது கெண்டி-கமண்டலம் போன்ற பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி எடுத்து வைத்துக் கொண்டு, அஸ்த்ர மந்திரத்தைக் கூறி அவற்றை மந்த்ர பூர்வகமாக மீண்டும் அலம்ப வேண்டும்.
3.13.3 நீரீக்ஷணம்: நிரீக்ஷணம் என்றால் பார்த்தல் என்று பொருள்படும். ஓம் ஹாம் சிவாய நம: என்று மூல மந்திரம் உச்சரித்து, நீரீக்ஷண முத்திரையால், பாத்திரத்தில் நிரப்பப்படும் சுத்தமான நீரைப் பார்க்க வேண்டும். அப்போது, அந்த நீரிலுள்ள குற்றங்களை ஸூர்யனாகிய வலக்கண்ணால் காய வைத்து, அக்நியாகிய நெற்றிக் கண்ணால் தகித்தெறிந்து விட்டு, சந்திரனாகிய இடது கண்ணில் ஊறும் அமுதத்தை அதனோடு கலப்பதாகப் பாவிப்பதே நிரீக்ஷணம் செய்தல் எனப்படும்.
3.13.4 ப்ரோக்ஷணம் : பிந்து ஸ்தானமாகிற புருவ மத்தியிலிருந்து பெறுகின்ற அம்ருத தாரா மயமாக சுத்த ஜலத்தை பாவித்துக் கொண்டு, ஹ்ருதய மந்திரத்தைக் கூறி, அதன்மூலமாக அந்த அம்ருத தாரா பாத்திரத்தினுள் சென்று நிரம்புவதாகப் பாவிக்கும் கிரியைக்கு ப்ரோக்ஷணம் என்று பெயர் கூறுவர்.
3.13.5 பிறகு, அந்த நீரிலே சந்தனம், புஷ்பம், அருகு, அக்ஷதை, ஆகியவற்றை இட்டு அலங்கரிக்க வேண்டும், தொடர்ந்து, ஆசமன, பஞ்ச ப்ரஹ்ம, வித்யாதேஹ, நேத்ர, மூல, ஹ்ருதய மந்திரங்களால் பூஜை செய் வேண்டும். ஸம்ஹிதா மந்திரத்தால் (பஞ்ச ப்ரஹ்ம + ஷடங்க மந்திரங்கள்) அபிமந்திரிக்க வேண்டும்.
3.13.6 தாடனம்: அஸ்திர மந்திரத்தால் அர்க்ய நீரை ரக்ஷõ பந்தனம் செய்வதற்குத் தாடனம் என்று பெயர். தூயதான நீரில் வியாபித்திருக்கும் சிவசக்தியரின் அருளை ப்ரகாசிக்கச் செய்யும் பொருட்டு, அஸ்த்ர மந்திரம் கூறி ஒரு முறை தட்டுதலே தாடனம்.
3.13.7 அப்யுக்ஷணம் : கவிழ்ந்த பதாகை முத்திரையால் அந்த நீரை சூடி, கவச மந்திரத்தை உச்சரித்து, அதிலுள்ள ப்ரகாசம் நீங்காது இருக்குமாறு செய்வதாக பாவித்தலே அப்யுதக்ஷணம்.
3.13.8 அடுத்து, அர்க்ய நீரில் நிரம்பியுள்ள சிவ-சக்தி ப்ரகாசத்திற்கு ஊறு செய்ய வரும் துர்தேவதைகளை விரட்ட தாளத்ரயம் சாய்ய வேண்டும்.
3.13.9 தொடர்ந்து, கவச மந்திரத்தால் திக்பந்தனுமும், கவச மந்திரத்தால் அவகுண்டனமும் செய்தல் வேண்டும்.
3.13.10 நிறைவாக, வெளஷடந்த மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவமூர்த்தாய வெளஷட்) தேனு முத்திரை கொடுத்து, சிறப்பாக அர்க்ய பாத்தி நீரைப் புனிதமாக்கிக் கொள்ளல் வேண்டும்.
3.13.11. மேற்சொன்ன கிரியையே விசேஷார்க்யம். இந்நிகழ்ச்சியின் மூலம் அர்க்ய நீரில் சிவசக்தி ப்ரகாசம் நிறைகின்றது.
3.14 சாமான்யார்க்யம் : சகளீகரணம் செய்த பிறகு, இரும்பு சம்பந்தப்படாத பாத்திரத்தில் வெளஷடந்த ஹ்ருதய மந்திரத்தை உச்சரித்தவாறு சுத்த ஜலத்தை நிரப்பி, அதில் ஏழு தடவை ப்ரணவ மந்திரத்தால் அபிமந்திரித்து, திக்பந்தனம், அவகுண்டனம் செய்ய வேண்டும். பிறகு,தேனு முத்திரை கொடுத்து செய்து கொள்ளும் தீர்த்தத்திற்கு சாமான்யார்க்யம் என்று பெயர்
3.15 ஐவகை சுத்தி: பூஜை செய்யும் ஆச்சாரியார், பூஜை செய்யும் பொருட்டு, தூய்மை செய்து கொள்ளும் கிரியைகளுக்கு பஞ்ச சுத்தி என்று பெயர். அவையாவன (1) ஆத்ம சுத்தி (2) ஸ்தான சுத்தி (3) த்ரவ்ய சுத்தி (4) மந்த்ர சுத்தி (5) லிங்க சுத்தி.
3.16 ஆத்ம சுத்தி: சிவாச்சாரியார், தனக்குள் இறைவனை எழுந்தருளச் செய்வதே ஆத்ம சுத்தி. அதற்காக அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளும், அவரது உள்ளத்தளவிலே செய்யப்படுகின்றன; அதாவது, பாவனையாக செய்யப்படுகின்றன. அச்செயல்களாவன: 1. சரீரத்தில் உள்ள மலம், மாயை, கர்மா சம்பந்தமான புற அழுக்குகளை நீக்குதல் 2. பஞ்ச பூத தன்மாத்திரைகளால் ஏற்படும் அக அழுக்குகளாம் சப்தாதி குணங்களை நிக்குதல் 3. வலக்கால் பெரு விரலிலிருந்து உண்டாகும் காலாக்னியால் கர்ம சரீரத்தைப் பொசுக்குதல் 4. ப்ரம்மாந்திரத்தில் உள்ள அமிர்தத்தால் உள்ளும் புறமும் நனைத்துக் கொள்ளுதல் 5. நித்யத்வ, வியாபகத்வ, சுத்த தத்வ, யுக்த, பரமாகாஸாபிபூத்த, சுத்த சைதன்ய திவ்ய சரீரமாகத் தன் உடலை பாவித்துக் கொள்ளுதல் 6. ஹ்ருதய கமலத்தில் ஈச்வரனை மனோபாவனையால் பூஜித்தல் 7. நாபியில் உள்ள அக்னியில் ஹோமம் செய்து, ஹ்ருதய கமலத்தில் உள்ள இறைவனிடத்தில் சமர்ப்பணம் செய்து, உள்பூஜையை நிறைவு செய்வதாகப் பாவித்தல் 8. பிந்து ஸ்தானத்தில் ஈச்வரனை த்யானம் செய்து, புற பூஜையின் பொருட்டு ப்ரார்த்தனை செய்து, அதனைத் தொடங்க உத்தரவு கேட்டுப் பெற்றுக் கொள்ளுதல்.
3.17 ஸ்தான சுத்தி: சிவாச்சாரியார், பூஜை நடைபெறுகிற இடத்தில் விக்னங்கள் அணுகாமல் காப்பதாக பாவித்துச் செய்யும் கிரியைகளே ஸ்தான சுத்தி எனப்படும். அதற்காக அவர் செய்யும் கிரியைகளும், பாவனைகளும்: 1. அஸ்த்ர மந்திரத்தால் மூன்று தடவை தாளம் செய்து, சிட்டிகை போட்டு, ஸ்தலத்திலுள்ள தடைகளைப் போக்குதல் 2. அஸ்த்ர மந்த்ரத்தால் நான்கு மூலைகளிலும் அக்னி ப்ரகாசம் செய்தல் 3. கவச மந்த்ரத்தால் வலது ஆள் காட்டி விரலை மும்முறை சுழற்றி, மூன்று கோட்டைச் சுவர்களும், மூன்று அகழிகளும் உண்டாக்குதல் 4. வெளஷடந்த சக்தி மந்த்ரத்தைச் சொல்லி, தேனு முத்திரையை மேலும் கீழும் காண்பித்தி ரக்ஷõ பந்தனம் செய்தல்.
3.18 த்ரவ்ய சுத்தி: சிவாச்சாரியார், விசேஷ அர்க்யத்தால் புனித நீர் தயாரித்துக் கொண்டு, பிறகு அந்த நீரினால், தன்னையும், சுற்றி உள்ள மற்ற பூஜைக்கான  உதவியாளர்களையும், பூஜை செய்வதற்காக எடுத்துவைத்துள்ள சாதனங்கள், பொருட்கள் ஆகியவற்றையும் தூய்மை செய்வதாக பாவித்துச் செய்யும் கிரியைகளே த்ரவ்ய சுத்தி எனப்படும். அதற்காக அவர் செய்யும் கிரியைகளும், பாவனைகளும் 1. விசேஷ அர்க்யம் தயாரித்தல் 2. அஸ்திர மந்திரம் சொல்லித் தன் தலை மீது ப்ரோக்ஷணம் செய்து கொள்ளுதல் 3. பூஜா திரவியங்களை (அ) அஸ்திர மந்திரம் கூறி ப்ரோக்ஷணம் செய்தல் (ஆ) கவச மந்திரம் கூறி துடைத்து சுத்தம் செய்தல் (இ) ஹ்ருதய மந்திரம் சொல்லி அபிமந்திரித்தல் (ஈ) கவச மந்திரம் கூறி அவகுண்டனம் செய்தல் (உ தேனு முத்திரை கொடுத்து அனைத்தையும் அம்ருத மயாக்குதல் 4. அபிஷேகத்திற்கென வைத்திருக்கும் ஜலத்தின் மீது விசேஷார்க்ய ஜலத்திலிருந்து கொஞ்சம் புஷ்பத்தினால் எடுத்து விட்ட பிறகு, தேனு முத்திரை கொடுத்து அம்ருத மயமாக்குதல்.
3.19 மந்திர சுத்தி: சிவாச்சாரியார், தன்னுள் இறைவனை நிலைநிறுத்தித் தன்னை மந்திரங்கள் கூறுவதற்குத் தகுதி உடையவராகச் செய்து கொள்வதற்கு மேற்கொள்ளும் கிரியைகளே மந்திர சுத்தி எனப்படும். இது திரவிய சுத்தி செய்த பிறகே செய்யப்படும். முதலில் ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று ஆஸனம் கற்பித்து, தன்னுடைய ஹ்ருதயத்தில் ஓம் ஹாம் சிவ மூர்த்தயே நச: என்று பூஜை செய்ய வேண்டும், பின்னர், நெற்றியில் புருவ மத்தியில் சந்தனத்தால் திலகம் இட்டு, மூல மந்திரத்தால் சிரஸிலே புஷ்பத்தால் பூஜித்து ஆத்ம பூஜை செய்ய வேண்டும். அடுத்து சம்ஹிதா மந்திரத்தையும், மூல மந்திரத்தையும் (ப்ரணவத்தை முதலிலும், நம: என்ற பதத்தைக் கடைசியிலும் உடைத்தானதாக) பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களை ஹ்ரஸ்வமாகவும், ஷடங்க மந்திரங்களை தீர்க்கமாகவும், மூல மந்திரங்களை ப்லுதமாகவும் உச்சரிக்க வேண்டும். இதுவே மந்திர சுத்தி.
3.20 லிங்க சுத்தி : முதல் நாள் (அல்லது, முந்திய காலத்தில்) செய்த பூஜா திரவியங்களை லிங்கத்தில் மேலிருந்து களைந்து, பின்னர் அபிஷேகம் செய்து, நிறைவாக துடைத்தெடுத்து அலங்காரத்துக்கு ஆயத்தமாக்குவதே லிங்க சுத்தி எனப்படும். இது செய்ய வேண்டிய முறை : முதலில் சிவ காயத்ரியால் அர்ச்சனை : பூஜத்துடன் கூடிய ஹ்ருதய ஸ்வாஹந்தமான மூல மந்திரத்தால், ஸத்யோஜாதம் முதல் ஈசானம் வரையான ஐந்து சிரஸ்ஸிலும் சாமான்யார்க்யத்தைக் கொண்டு அர்க்யம்; தூப, தீபங்கள் காட்டுதல்; லிங்கத்தின் மேல் கையை வைத்து ஸத்யோஜாதாதி பஞ் பரஹ்ம மந்திரங்களை உச்சரித்தல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி நிர்மால்யங்களைக் களைந்து, ஈசான பாகத்தில் தயாராக வைத்துள்ள சுத்தமான பாத்திரத்தில், சண்டிகேச்வரரிடம் சமர்ப்பிப்பதற்காக, ஹ்ருதய மந்திரங்களைக் கூறியவாறே அந்நிர்மால்யங்களை வைத்தல்; அஸ்திர மந்திரத்தைச் சொல்லி லிங்கத்தையும் பீடத்தையும் அலம்புதல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி சாமான்யர்க்யத்தால் அபிஷேகம்; மூல மந்திரத்தால் ஐந்து தடவையும், சம்ஹிதா மந்திரம் - வ்யோம வ்யாபி மந்திரம் எண்பத்து ஒன்றினையும் சொல்லி அபிஷேக திரவியங்கள், பஞ்சாமிதாதி திரவியங்களால் அபிஷேகம்: குளிர்ந்த சுத்த நீரினால் ஸஹஸ்ர தாரா வழி அபிஷேகம்; ஹ்ருதய மந்திரம் கூறி அர்க்ய ஜலம், ஸ்நபன ஜலம் ஆகியவற்றால் அபிஷேகம்; நிறைவாக வெண்மையானதும், மெல்லியதானதும் சுத்தமானதுமான வஸ்த்ரத்தால் துடைத்து விடுதல். இதுவே லிங்க சுத்தி. இதன் பிறகே அலங்காரம்
3.21 கலாகர்ஷணம் : பாத்யாதி உபசாரங்களுக்குப் பிறகு, பஞ்ச ப்ரஹ்ம மந்த்ரங்கள், ஷடங்க மந்த்ரங்கள், வ்யோமவ்யாபி மந்த்ரங்கள் ஆகியவற்றை ஜபம் சொய்தவாறே, கிரீம் முதலாக வரிசையாக அஷ்ட த்ரிசத் கலா நியாஸம் செய்ய வேண்டும்; அதாவது, முப்பத்தெட்டு இடங்களில் முப்பத்தெட்டு கலைகளை வைக்க வேண்டும்.
3.22 அபிஷேகத்துக்குப் பிறகு, லிங்கம் ஆவுடையார் இவைகளை மெல்லிய, வெண்மையான, சுத்தமான வஸ்த்ரத்தினால் நன்றாகத் துடைத்து, சிவனுடைய சிரஸ்ஸிலே ஹ்ருதய மந்த்ரத்தைக் கூறி புஷ்பத்தை வைக்க வேண்டும்.
3.23 சிவோகம்பாவனை செய்யும் சிவாச்சாரியார் தன் வலக்கையில் சந்தனம் பூசிக்கொண்டு அதைச் சிவஹஸ்தமாகப் பாவிப்பர்; பின்னர் தன்னையே சிவமாகப் பாவனை செய்து கொள்வார்; தாம் புறத்தே பூஜிக்க இருக்கும் மந்திரங்களைக் கூறி, அந்தக் கையினால் தன் அகத்தையும் பூஜிப்பார்; இவ்வாறாக, காண்பானும் சிவம், காட்சியும் சிவம், காட்சிப் பொருளும் சிவம் என்ற முறையில் மூன்றும் ஒன்றித்த நிலையில் திரிகரண சுத்தியுடன், நிற்பதே சிவோகம்பாவனை.
3.24 நெற்றியில் குட்டு: விநாயகருக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார் இரண்டு கைகளினாலும் விரல்களை மூடிக்கொண்டு , முஷ்டி முத்திரையைச் செய்துகொள்ள வேண்டும். இரண்டு கைகளிலும் நடுவிலுள்ள மூன்று விரல்களின் நடுப்பாகங்களால் நெற்றியின் இரண்டு பாகத்தையும் நன்றாகக் குட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதனால், கபோலத்தில் உள்ள அம்ருதமானது, சமஸ்தான சரீரத்தையும் நன்றாக நனைத்து ஸ்நானம் செய்விக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தால் ஆணவம், கர்வம், மலம், மாயைகள் நீங்கி ஞானம் பிறக்க வழி கிடைக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தை விநாயகர் முன்பு செய்வதால் அவருக்கு நம்மிது தனிப்ரீதி உண்டாகும்.
3.25 பூஜை செய்யும் திசை : கிழக்கு அல்லது மேற்கு முகமாக ப்ரதிஷ்டை ஆகியுள்ள சுவாமியை, சிவாச்சாரியார் வடக்கு முகமாக நின்று பூஜிக்க வேண்டும். தெற்கு அல்லது வடக்கு முகமாக உள்ள ஸ்வாமியை கிழக்கு முகமாக நின்று பூஜை செய்ய வேண்டும்
3.26 கட்டை விரலால் மட்டும் எடுத்து விபூதி அளித்தால் வியாதி உண்டாகும்; சுட்டு விரலால் விபூதி அளித்தால் மரணம் உண்டாகும்; நடு விரலால் விபூதி அளித்தால் புத்ர சோகம் உண்டாகும்; கனிஷ்டிகையால் (சுண்டு விரலால்) விபூதி அளித்தால் தோஷம் உண்டாகும்; ஆதலால் பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்து விபூதி அளிக்க வேண்டும்.
3.27 அனைத்துக் கிரியைகளின்போதும், விதிக்கப்பட்ட மந்த்ரங்களையும் ச்லோகங்களையும் கூறுவதுடன், அந்தந்த இடத்துக்குரிய முத்திரைகளையும் தவறாது காட்ட வேண்டும். முத்திரைகள் கிரியைகளின் அங்கம்; அவை தேவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பன; அசுரர்களை விரட்டுவன.

No comments:

Post a Comment

THANK YOU