Friday 20 July 2012

மதுரையில் ருத்ராட்சமரம் வளரும் அதிசயம்: பொதுமக்கள் வழிபாடு!



மதுரையில் ருத்ராட்சமரம் வளரும் அதிசயம்: பொதுமக்கள் வழிபாடு!
ஜூன் 20,2012






மதுரை: கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரம் அடிக்கும் மேல் உள்ள நிலப்பகுதியில் மட்டுமே காணப்படும் ருத்ராட்ச மரம் ஒன்று மதுரையில் வளர்ந்திருக்கிறது. மதுரை கோச்சடை பகுதியில் உள்ள நடராஜ் நகரில் இப்படி ஒரு மரம் முளைத்து கடந்த 15 ஆண்டுகளாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மரத்தை யாரும் இனம் கண்டு கொள்ளாத நிலையில் தற்போது அது அடையாளம் காணப்பட்டு உள்ளது ஆச்சரிய நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது. இந்தியாவை பொறுத்த வரை நேபாளத்தில் விளையும் ருத்திராட்சம் தான் தரத்தில் உயர்ந்ததாக கருதப்படுகிறது. மதுரை போன்ற வெப்பம் நிறைந்த நகரங்களில் இவை வளர்வதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை என்கிறார்கள் அறிஞர்கள். ஆனாலும் அது இங்கே வளர்ந்து காணப்படுவது தான் விந்தை. இந்த நிலையில் ருத்ராட்சத்தின் சில குணங்களை தெரிந்து கொள்வது இது போன்ற அரிய மரங்களை பாதுகாப்பதற்கும், மதுரை மண்ணில் வாய்ப்பிருந்தால் மேலும் பல இடங்களில் வளர்த்தெடுப்பதற்கும் உதவும்.
இமயமலை, நேபாளம் மற்றும் மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய மரம் ருத்ராட்ச மரம். இந்த மரம் மிகவும் புனிதம் வாய்ந்தது. இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் ருத்ராட்ச கொட்டை இறைவன் மற்றும் அடுத்தபடியாக சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் மற்றும் புனிதமாக இருப்பவர்கள் அணியக்கூடியது. இந்த ருத்ராட்ச கொட்டை அணிந்தவர்கள் மிகவும் பக்தி மிக்கவர்கள் என்பர். அந்த அளவிற்கு தெய்வீக சிறப்பு உள்ளது. இந்த மரம் வளர்ந்திருப்பது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மரம் மதுரை கோச்சடை நடராஜ் நகர், சீதையம்மாள் வீதியில் தான் வளர்கிறது. தற்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், சிவனுக்கு உகந்த நாட்களிலும் இந்த மரத்திற்கு தீபமேற்றி, அபிஷேகம், ஆராதனைகள் அந்த பகுதி மக்களால் செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment

THANK YOU