Tuesday 3 July 2012

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431) (ஆங்கிலம்: Saint Joan of Arc) பிரான்சு நாட்டு வீராங்கனையும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் கிழக்கு பிரான்சில் பிறந்த விவசாயப் பெண்.

http://tawp.in/r/dt8


புனித ஜோன் ஆஃப் ஆர்க்

கற்பனை ஓவியம், ca. 1485. (Centre Historique des Archives Nationales, பாரீஸ், AE II 2490)
கன்னியர்
பிறப்பு ca. 1412
டாம்ரேமி, பிரான்சு
இறப்பு 30 மே 1431 (அகவை 19)
ரோவன், பிரான்சு
(அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது)
ஏற்கும் சபை உரோமன் கத்தோலிக்கம்
ஆங்கிலிக்க ஒன்றியம்
அருளாளர் பட்டம் பத்தாம் பயஸ்-ஆல் ஏப்ரல் 18, 1909, நோட்ரே டேம் டி பாரிஸ்
புனிதர் பட்டம் பதினைந்தாம் பெனடிக்ட்-ஆல் மே 16, 1920, உரோம்
திருவிழா மே 30
பாதுகாவல் பிரான்சு; இரத்த சாட்சிகள்; கைதிகள்; இராணுவத்தினர்; நம்பிக்கையினால் நிந்திக்கப்படுவோர்; பெண் இராணுவத்தினர்

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431) (ஆங்கிலம்: Saint Joan of Arc) பிரான்சு நாட்டு வீராங்கனையும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் கிழக்கு பிரான்சில் பிறந்த விவசாயப் பெண். அந்நியரை ஓர்லியன்சை விட்டு விரட்ட தன்னைக் கடவுள் படைத்திருப்பதாக நம்பினார். பிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற பிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர் பிரெஞ்சு படையினர் நூறாண்டுப் போரின் போது பல முக்கிய வெற்றிகள் அடைய காரணமானார். இவையே பிரான்சின் ஏழாம் சார்லஸின் முடிசூடலுக்கு வழிவகுத்தது.
ஆயினும் பர்கண்டியர்களால் பிடிக்கப்பட்ட இவர், பிரான்சின் எதிரிகளாயிருந்த ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார். அவர்கள் பேயுவைஸின் ஆயர் பியேர் கெளசின் துணையோடு இவரை சூனியக்காரி எனவும் தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய் குற்றம் சாட்டி, இவரின் 19 ஆம் வயதில் இவரை உயிரோடு தீமூட்டிக் கொன்றனர். இவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப்பின் திருத்தந்தை மூன்றாம் கலிஸ்டஸிலால் இவரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
பின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான வேளைகள் துவங்கப்பட்டு, ஏப்ரல் 18, 1909 அன்று திருத்தந்தை பத்தாம் பயஸால், நோட்ரே டேம் டி பாரிஸ் கோவிலில் அருளாளர் பட்டமும், உரோமையில் மே 16, 1920, அன்று திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்டால் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் விழா நாள் மே 30 ஆகும்.
ஜோன் ஆஃப் ஆர்க் வாழ்க்கையின் காலக்கோடு
1412 —
1414 —
1416 —
1418 —
1420 —
1422 —
1424 —
1426 —
1428 —
1430 —
1432 —
1412 - பிறப்பு (ஏறத்தாழ)
1424 - இறைக் காட்சிள்
8 மே 1429 - ஒர்லயன்சு நகரின் முற்றுகையை நீக்கல்
30 மே 1431 - உயிருடன் தீயிடப்பட்டுக் கொல்லப்படல்

வெளி இணைப்புகள்

No comments:

Post a Comment

THANK YOU