Sunday, 29 July 2012

செல்வி ஜெயலலிதா பற்றி சிறு குறிப்புகள்


செல்வி ஜெயலலிதா பற்றி சிறு குறிப்புகள்

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெயலலிதாவிக்குச் சூட்டப்பட்ட பெயர் அது.ஆனால் சில காலத்தில் `ஜெயலலிதா’ ஆனார்.ஜெயா,ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர்.அவரது அம்மாவுக்கு `அம்மு’. அ.தி.மு.க –வினர் அனைவருக்கும் `அம்மா’! சர்ச் பார்க் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார்.`எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்’ என்பதைத் தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.
போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, ஊட்டி கொடநாடு எஸ்டேட், ஹைதரபாத் திரட்சைத் தோட்டம் ஆகிய நான்கும் ஜெயலலிதா மாறி மாறித் தங்கும் இடங்கள். ஹைதரபாத் செல்வதைச் சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர் மாதக்கணக்கில் தங்க வேண்டுமானால்..கொடநாடு!


உடம்பை ஸ்லிம்மாகவைத்துக் கொள்வதில் ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தார். தினமும் வெந்நீரில் எலுமிச்சம்பழச்சாறும் தேனும் கலந்து குடித்தார்.இப்போது தினமும் 35 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட 13 கிலோ எடை குறைத்துள்ளார்!

ஜெயலலிதா நடித்த மொத்தப்படங்கள் 115. இதில் எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த் முதல் படம் `ஆயிரத்தில் ஒருவன்’.

'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா' என்ற `அரசிளங்குமரி’ படப் பாடல் தான் தனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாட்டு என்பார். அந்தப் பாடலை எழுதிய பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து, அவரது எழுத்துக்களை நாட்டுடைமை ஆக்கினார்.

`அரசியலில் நான் என்றுமே குதிக்க மாட்டேன்’ என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. `நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆகிவிடுவார்போல’ என்று அவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார்
முரசொலி மாறன்.

ஜெயலலிதா முதலில் குடியிருந்தது சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில் பிறகு, அடையாறு பகுதியில் குடி இருந்தார். படங்கள் குவிந்து,நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான், போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துக் கட்டியவர், அவரது அம்மா சந்தியா.

``வீட்டுக்குள்ளே என்ன மாற்றமும் செய்யலாம், ஆனா,எங்க அம்மா வைத்த வாசலை மட்டும் மாற்றக் கூடாது” என்று சொல்லி இருக்கிறாராம் ஜெயலலிதா.

எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே அப்பர் இறந்துபோனதால், அந்த நினைவுகள் இல்லை. போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் சந்தியா, எம்.ஜி.ஆர். ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்.

எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற விழாவில் ஆறு அடி உயரமுள்ள வெள்ளிச் செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அதுதான்.



பெருமாளை விரும்பி வணங்குகிறார். மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் இதில் முதன்மையானது. மயிலை கற்பகாம்பாளையும்,கும்பகோணம் ஐயாவாசி பிரத்தியங்கராதேவியையும் சமீப காலமாக வணங்கி வருகிறார்.

தினமும் காலையில் நிஷாகந்தி எனப்படும் இருவாட்சி மலரைப் பறித்து பூஜைக் கூடையில் தயாராக வைத்திருப்பார்கள் கார்டன் பணியாளர்கள்.அதை எடுத்தபடியே பூஜை அறைக்குள் நுழைவார்.சமீபமாக பூஜையில் தவறாமல் இடம்பெறும் துளசி.

யாகம் வளர்ப்பது, ஹோமத்தில் உட்காருவதில் ஜெயலலிதாவுக்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் ஆறு மணி நேரம் கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாகச் சொன்னாலோ, கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேத ஞானம் உண்டு.

இயற்கை உணவுக்குப் பழகி வருகிறார். பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி பசலை ஆகிய கீரை வகைகள் கொண்ட சூப் தினமும் இவருக்காகத் தயாராகின்றன கொடநாடு எஸ்டேட்டில் இந்த வகைக் கீரைகள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் 116 ஏக்கர். அங்கு புறா,கிளி,காடை,கெளதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார். இந்திரா,சந்திரா என்ற இரண்டு ஈமுக்களும் வளர்த்தார். இரண்டும் திடீரென இறந்துவிட... ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்.

`நான் அனுசரித்துப் போகிறவள்தான். ஆனால், எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன்” என்று தனது கேரக்டருக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

பரதநாட்டியம், ஓரியன்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதலமைச்சராக இருந்தபோது ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடியதும், கடந்த ஆண்டு படுகர்களுடன் இணைந்து ஆடியதும் அடக்க முடியாத நாட்டிய ஆர்வத்தின் வெளிப்பாடுகள்!.

ஜெயலலிதாவின் 100 –வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் `நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்று பாராட்டபட்டவர்!.

பழைய பாடல்களை மணிக்கணக்கில் கேட்டு லயிக்கிறார். ஜெயா டிவி-யில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் அம்மாவின் விருப்பங்கள்தான்.

ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.

போயஸ் வீட்டில் எப்போதும் ஏழு நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால், சில குட்டிகள் சிறுதாவூர், கொடநாடு எனப் பிரித்து அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களையும் தனது வாக் அண்ட் டாக் பேட்டிக்கு வரவழைத்து விட்ட என்.டி.டி.வி-யால், ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்ற முடியவில்லை. கடைசி வரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்!.

ஓஷோவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி ரசித்து வந்தார். ஜெயலலிதா இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார். ரமணர் தொடர்பான முக்கியப் புத்தகங்கள் அத்தனையும் கடந்த நான் கைந்து மாதங்களாக அவர் மேஜையில் உள்ளன.

ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில் தான்.அங்கு சசிகலா மற்றும் முக்கியப் பணியாளர்கள் தவிர, யாருக்கும் அனுமதி இல்லை!.
நன்றி நான் கண்ட உலகம் 


கொஞ்சம் யோசிப்போமாக....

.


சர்தார்ஜி அடிக்கடி சமையலறைக்குள் நுழைவதும், சர்க்கரைப் பாட்டிலை எடுத்துப் பார்ப்பதுமாக இருந்தார். இதைக் கவனித்த அவரது மனைவி கேட்டார், “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”
“டாக்டர் அடிக்கடி சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்”.
**************************************************************
சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.
அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?
சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி 

**************************************************************
ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு ‘கொலஸ்ட்ரால் கொடுங்க’ என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.
‘சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை’ என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, ‘நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?’ என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், ‘இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது’ என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், “அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் “Colestrol FREE” ன்னு எழுதியிருக்கு..”
**************************************************************
நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.
எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..
லைசென்ஸா..? அப்படின்னா..?
அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..
ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )
அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?
**********************************************************
நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்
கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்
சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.
அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து
கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே
திரும்பினார்..

நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'

சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!
**************************************************************
பின்லேடனை பிடி‌ச்சா 5 லட்சம் பரிசு என்று போலி‌ஸ் அ‌றி‌வி‌த்தவுட‌ன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்று கேட்ட போலி‌ஸ் அதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னாரா‌ம், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு

************************************************************
ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது
அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!
*********************************************************
பப்பு (சான்டாவின் மகன்): ஒரு பாரம் நிரப்புகிறார் “மதர் டங்கு என்ற இடத்தில் என்ன எழுத”.சான்டா: 6 1/2 முழ‌ம் என்று எழுது.
.
************************************************************
சர்தார்ஜி கடைக்காரரிடம், “உங்களிடம் வாங்கிய ரேடியோ ஜப்பான் தயாரிப்பு இல்லை. நீங்கள் பொய் சொல்லி என்னிடம் அதை விற்றுவிட்டீர்கள்!” “
இல்லைங்க.. அது சோனி ரேடியோ, ஜப்பான் தயாரிப்புதான்”
“அப்ப ஏன், ஆன் பண்ணவுடனே ஆல் இந்தியா ரேடியோன்னு சொல்லுது?”

************************************************************
நண்பன்: சான்டா உன்னோட பொண்ணு இறந்துவிட்டாள்…
மனம் நொந்த சர்தார்ஜி சிறிதும் தாமதிக்காமல் நூறாவது மாடியில் இருந்து குதித்து விட்டார்!
ஐம்பதாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனுக்கு மகளே இல்லை என்பது!
இருபத்தைந்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையென்று!
பத்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனது பெயர் சான்டா இல்லே பான்டா என்று!
************************************************************
சர்தார்-1 :- நீயும் நானும் அமெரிக்காவ சுத்தி பாக்குற மாதிரி கனவு கண்டேன்..

சர்தார்-2 :- அப்படியா...எங்கே எல்லாம் போனோம்...

சர்தார்-1 :- அடங்கொய்யால..நீயும் தானே என்கூட வந்த..

சர்தார்-2 :- ???????????
************************************************************
சர்தார் ஒருத்தர் தற்கொலை பண்ணிக்க தண்ணிக்குள்ள குதிச்சார்.. குதிச்ச உடனே தண்ணிக்குள்ள இருந்த மீனை வெளிய தூக்கி போட்டுட்டு மீன் கிட்ட என்ன சொன்னார் தெரியுமா..?
"நான் தான் சாக போறேன்...நீயாவது பிழைச்சிக்கோ
************************************************************












டீச்சர்:-உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?








சர்தார்:- 96 பேர்.



டீச்சர்:- என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?













சர்தார்:- ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல பிறந்தேன்..








டீச்சர்:- ?????

************************************************************

 சர்தார்ஜி ஒருவர் நம்ம ஊர் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

ஒரு கோடியை வெல்ல அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவருடைய பதில்களும் . . . .

1) நூறு வருடப் போர் எவ்வளவு காலம் நடந்தது?
a)116 b)99 c)100 d)150 

முதல் ரவுண்டில் கேட்கப்பட்ட கேள்வியானதால், சர்தார்ஜி இதை choiceஇல் விட்டு விட்டார்.

2) பனாமா தொப்பிகள் எந்த நாட்டில் தயாரிக்கப் படுகின்றன?
a)பிரேசில் b)சிலி c)பனாமா d)இக்வேடார்

சர்தார்ஜி நண்பருக்கு போன் போட்டுக் கேட்டார்.

3) ரஷியர்கள் எந்த மாதத்தில் அக்டோபர் எழுச்சியைக் கொண்டாடுவர்?
a)ஜனவரி b)செப்டம்பர் c)அக்டோபர் d)நவம்பர்
சர்தார்ஜி மக்கள் கருத்தைக்கேட்டு விடையளித்தார்.

4) கீழ்கண்டவற்றில் எது ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர்(First Name)?
a)எடர் b)ஆல்பர்ட் c) ஜார்ஜ் d)மானுவேல்

சர்தார்ஜி 50-50 சான்ஸ் எடுத்தார்.

5)பசிபிக் சமுத்திரத்தில் இருக்கும் "கானெரித் தீவு", அந்தப் பெயரை எந்த விலங்கின் பெயரிலிருந்து பெற்றது?
a)கானெரிப் பறவை b)கங்காரு c)பப்பி d)எலி

சர்தார்ஜி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

சர்தார்ஜியின் முட்டாள்த்தனத்தை எண்ணி சிரிக்கிறீர்களா? அப்படியானால் கொஞ்சம் கீழே போங்கள்.

. .


. .


. .


. .


. .


. .
சரியான விடைகள் :
1) நூறு வருடப் போர் 116 வருடங்கள்(1337-1453) நடந்தது.
2) பனாமாத் தொப்பிகள் இக்வேடார் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
3) அக்டோபர் எழுச்சி நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.
4) ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர் ஆல்பர்ட். 1936ஆம் வருடம் தன் பெயரை மாற்றிக்கொண்டான்.
5) பப்பி. "இன்சுலாரியா கானெரி" என்றால் லத்தினில் 'பப்பிகளின் தீவு'(பப்பிக்கு சரியான தமிழ் வார்த்தை என்னப்பா?) என்று அர்த்தமாம்.


இப்பொழுது சொல்லுங்கள் யார் முட்டாள். இனிமேலாவது சர்தார்ஜிகளைப் பற்றி ஜோக் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசிப்போமாக.


 

தாஜ்மஹால் காதலின் சின்னமா.....?


இன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை நாம் அறிந்துவைத்திருப்பது என்பது மிக மிக குறைவாகவே இருக்கிறது.
இந்த வரலாற்று தகவல்களை நோக்கும் போது தாஜ்மஹால் காதலின் சின்னமாக இருப்பதற்கு தகுதியானதா..? என எம் உள்ளத்தினில் வினா எழுப்பத் தோன்றுகிறது. 
ஆகவே தான் தாஜ்மாஹால் தொடர்பாக நான் ரசித்த ஒரு சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

முதலில் இந்த தகவலை எனக்கு தந்துதவிய நண்பன் K R VIJAYAN அவர்களுக்கும் . அதே போன்று இந்த தகவலுக்கு சொந்தக்காரராக விளங்கும்  RAMAKIRISHNAN (TAFAREG) அவர்களுக்கும் இவ்விடத்தில்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மொகலாய வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட பெண் மும்தாஜ். உலகெங்கும் தாஜ்மகாலின் வழியாக நினைவுகொள்ளப்படுகிறார். ஆனால், பேசப்படப்படாமல் போன முக்கியமான இரண்டு பெண்கள் இருக்கின்றனர். ஒருவர்... ஷாஜகானின் மூத்த மகளும், திருமணம் செய்துகொள்ளாமல் அரசாட்சியில் மன்னருக்குத் துணை நின்றவளும், மிகச் சிறந்த படிப்பாளியும், சூபி ஞான நெறியைப் பின்பற்றியவளுமான ஜஹானாரா பேகம்.இன்னொருவர்... ஒளரங்கசீப்பின் மகளும் மெய்யியல் கவிஞருமான ஜெப்உன்நிசா. இந்த இரண்டு பெண்களும் சரித்திர வானில் தனித்து ஒளிரும் இரட்டை நட்சத்திரங்கள்.

இன்று, தாஜ்மகாலைப் பார்க்கப் போகிறவர்களில் அதிகமானவர்களுக்கு  மும்தாஜின் இயற்பெயர் அர்சுமந்த் பானு பேகம், அவள் 13 குழந்தைகளின் தாய், தனது 14-வது பிரசவத்தில் இறந்து போனாள் என்பது தெரியும்? 14 பிள்ளைகளைப் பெற்ற மும்தாஜின் நினைவாக, தாஜ்மகால் கட்டப்பட்டு இருக்கிறது என்றால், அதைத் தாய்மையின் சின்னம் என்றோ, சிறந்த மனைவியின் நினைவுச் சின்னம் என்றுதானே நியாயமாக அழைக்க வேண்டும்?

ஜஹானாரா பேகம், குரால்னிசா, தாரா ஷகோ, முகமது சுல்தான்ஷா, ரோஷனாரா, ஒளரங்கசீப், உமித்பக்ஷி, சுரையா பானு, சுல்தான் முராத், கௌஹரா எனும் மும்தாஜின் பிள்ளைகள் பெயர்கள்கூட தாஜ்மகாலுக்குள் போகிறவர்களுக்குத் தெரியாது என்பதுதானே நிஜம்.

காதலின் சின்னமாக திகலும் தாஜ்மஹாலை ஷாஜகான் தன் மூன்றாவது மனைவியான  மும்தாஜுக்கே கட்டினார் என்பது எம்மில் பலருக்குத் தெரியாது. 1612-ம் ஆண்டு மே 10-ம் தேதி இவர்களது திருமணம் நடந்தது. அப்போது, மும்தாஜுக்கு வயது 19. மும்தாஜ் இறந்துபோனது 1631 ஜுன் 17-ம் தேதி. அப்போது அவளுக்கு வயது 38. அதாவது, 19 வருஷ இல்லறத்தில் 14 குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள். தொடர் பிரசவங்களால் உடல்நலிவுற்றுத்தான் இறந்துபோனாள்.

பிரசவ வலியில் அவள் விட்ட கண்ணீரும் வேதனைக் குரலும் தாஜ்மகாலுக்குள் கேட்கக்கூடுமா என்ன? தனி மனிதர்களின் துயரமும் வலியும் காலத்தின் முன்பு பெரிதாகக் கருதப்படுவதே இல்லை. காலம் எல்லாவற்றையும் உருமாற்றிவிடுகிறது. அவளது மரணத்தின்போது ஜஹானாராவுக்கு வயது 17. மனைவியை இழந்து துக்கத்தில் வாடிய தந்தைக்கு உறுதுணையாக இருந்தாள் ஜஹானாரா. தனிமையிலும் வேதனையிலும் ஷாஜகான் வாடிய காரணத்தால், அரசு நிர்வாகம் செயலற்றுப் போயிருந்தது. அதைச் சரிசெய்யத் தானே அரசு ஆணைகளை பிறப்பிக்கவும், அரசரின் ஆலோசனையின் பெயரில்முக்கிய முடிவுகளை எடுக்கவும் துரிதமாகச் செயல்பட்டாள் ஜஹானாரா.

நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை ஜஹானாராவுக்கு வழங்கினார் ஷாஜஹான். அது அவரது மற்ற இரண்டு மனைவிகளுக்கும், ஜஹானாராவின் சொந்த சகோதரிகளுக்கும்கூடப் பொறாமையை ஏற்படுத்தியது.

தந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அவள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதுவும், ஒளரங்கசீப்பால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட தந்தைக்குத் தன்னைத் தவிர வேறு துணை இல்லை என்பதால், தன் வாழ்நாளை அப்பாவின் நலனுக்காகவே செலவழித்திருக்கிறாள்.

மும்தாஜ் இறந்த பிறகு ஜஹானாராவுக்கு ஒரு முக்கியக் கடமை இருந்தது. தனது சகோதரன் தாரா ஷகோவுக்கு நதிரா பானுவோடு நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நடத்தியாக வேண்டும். அது, அம்மாவின் இறுதி ஆசை. எனவே, அதைச் செயல்படுத்த தீவிரமாக முயன்றாள்.

தாராவுக்கும் அவளுக்குமான சகோதர பாசம் அளப்பறியது. அவள், தாரா ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினாள். அது, ஒளரங்கசீப்புக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அவளை, தனது நாட்குறிப்பில் 'வெள்ளைப் பாம்பு’ என்று குறிப்பிடுகிறார் ஒளரங்கசீப். அந்தக் கோபம் ஜஹானாராவைவிட மூன்று வயது இளைய அவளது தங்கை ரோஷனாவுக்கும் இருந்தது. அவள் நேரடியாக ஜஹானாராவிடமே தனது வெறுப்பைக் காட்டினாள். ஒளரங்கசீப்போடு சேர்ந்துகொண்டு ஜஹானாராவின் பதவியைப் பறிக்கச் சதி வலைகளைப் பின்னினாள்.

ஆனால் மன்னரின் விருப்பத்துக்குரிய மகள் என்பதால், ஜஹானாராவின் அதிகாரத்தை எவராலும் பறிக்க முடியவில்லை. ஷாஜஹான் காலகட்டத்தில் அரசின் ஆண்டு வருவாய் 60 லட்ச ரூபாய். ஆனால், செலவோ ஒரு கோடிக்கும் மேல்! ஆகவே, அந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக ஷாஜஹான் நிறையத் திட்டங்களைத் தீட்டி நாட்டின் வருவாயை ஒன்றரைக் கோடியாக உயர்த்திக் காட்டினார். செலவினத்தை மிகவும் குறைத்தார். இந்தச் செயல்பாடு காரணமாக அரண்மனையிலேயே அவருக்குக் கடுமையான எதிர்ப்பு உருவாகியிருந்தது. அதைச் சமாளிப்பதுதான் ஜஹானாராவின் முக்கியப் பணியாக இருந்தது.

இன்னொரு பக்கம், ஷாஜகானுக்குப் பிறகு அரியணைக்கு யார் வருவது என்பதில் தாராவுக்கும் ஒளரங்கசீப்புக்கும் கடுமையான பகை வளர்ந்திருந்தது. தாரா பலவீனமானவன். அவனால் ஆட்சி செய்ய முடியாது என்று ஒளரங்கசீப் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தனக்கான ஆட்களைத் திரட்டி ஆட்சியைப் பிடிக்கும் ஏற்பாட்டில் இருந்தான். ஆனால், தாராவுக்கே பதவி கிடைக்க வேண்டும் என்று ஜஹானாரா உறுதியாக இருந்தாள். பதவிச் சண்டை குடும்பத்தில் கடும் பூசல்களை உருவாக்கியது.

தாரா, லாகூரின் புகழ்பெற்ற சூபி ஞானியான மையன்மிரின் சீடன். இந்து மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் இடையே இணக்கத்தை உருவாக்க, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்காக உபநிஷத்துகளை, பாரசீக மொழியில் தாரா மொழி பெயர்த்து இருக்கிறார். அவரது சிறந்த நூலான மஜ்மஉல்பஹ்ரெயின் எனும் இரண்டு பெருங்கடல்களின் சங்கமம், சூஃபியிசத்துக்கும் இந்து மதக் கோட்பாடுகளுக்குமான பொதுத் தன்மையைப் பேசுகிறது.

ஸர்மத் என்ற ஞானியையும் பின்பற்றினார் தாரா. ஸர்மத் பிறப்பால் ஒரு யூதர். ஆனால், இஸ்லாம் மதத்தைத் தழுவியவர். அத்துடன் ராம லட்சுமணர்களின் பக்தர். அவரது சீடனாகத் தாரா இருப்பதை ஒளரங்கசீப் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை மத விரோதச் செயல் என்று கண்டித்தார். இந்தச் சகோதரச் சண்டைக்கு நடுவில் ஜஹானாரா மாட்டிக்கொண்டு தவித்தாள்.



இப்போது உள்ள 'பழைய தில்லி’ அன்று ஷாஜகானாபாத் என அழைக்கப்பட்டது. அந்த நகரை வடிவமைக்கும்போது ஜஹானாரா ஐந்து முக்கிய இடங்களை தானே முன்னின்று வடிவமைத்துத் தந்தார். அப்படி உருவாக்கப்பட்டதுதான் சாந்தினி சௌக்.



1644 மார்ச் 29-ம் தேதி தாராவின் திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டு இருந்தபோது ஜஹானாராவின் மெல்லிய பட்டு மேலாடையில் தீப்பற்றி அவளது தாடையிலும் பின் கழுத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவளது அழகான முகம் சிதைந்துபோனதை ஷாஜகானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிகிச்சை செய்யப் பல நாட்டு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். ஆனாலும், இளவரசியின் சிதைந்த முகத்தை முன்பு போல பொலிவுறச் செய்ய முடியவில்லை.



நான்கு மாதங்கள் தொடர் சிகிச்சை நடந்தது. இந்த நாட்களில், தனது மகள் நலம்பெற வேண்டும் என்பதற்காக தினமும் 1,000 வெள்ளி நாணயங்களை ஏழைகளுக்கு தானம் அளித்ததோடு, துறவிகளையும் ஞானிகளையும் வரவழைத்து பிரார்த்தனையும் செய்துவந்தார் ஷாஜகான். பல நாட்கள், மகளின் அருகில் அமர்ந்து வேதனையோடு கண்ணீர்விட்டார் என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.



எட்டு மாதத் தொடர் சிகிச்சை நடந்தது. ஈரானிய மருத்துவரின் முயற்சியால் அவள் குணம் அடைந்தாள் என்றும், ஆங்கில மருத்துவர் ஒருவரின் உதவியால் ஜஹானாரா நலமடைந்தாள் என்றும் இரண்டு விதத் தகவல்கள் கூறப்படுகின்றன. இரண்டையுமே உறுதி செய்யும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவள் நலமடைந்த சந்தோஷத்தில், 80,000 ரூபாய் தானத்துக்காகச் செலவிடப்பட்டது என்றும், மாமன்னர் தன் மகளுக்கு 139 அரிய வகை முத்துக்களையும் அரிய வைரம் ஒன்றையும் பரிசளித்தார் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களோடு சூரத் துறைமுகத்தின் வரி வசூல் முழுவதும் அவளது வருவாயின் கீழ் கொண்டு வரப்பட்டது என்றொரு துணைத் தகவலும் காணப் படுகிறது.

ஒரே விதியால் எழுதப்பட்ட இருவர் வாழ்க்கை!

இதைத்தான் பெர்னர் போன்ற ஆய்வாளர்கள் வேறு விதமாகக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, தன் மகளைக் குணப்படுத்திய ஆங்கிலேய மருத்துவருக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக, சூரத் துறைமுகத்தில் வரி இல்லாமல் பொருட்களை வணிகம் செய்துகொள்ளலாம் என்று ஆங்கிலேயர்களுக்கு அனுமதி அளித்தார் மன்னர் ஷாஜஹான். அப்படித்தான் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் தனது வணிகத்தை ஸ்தாபிக்கத் தொடங்கியது என்கிறார்கள். 



ஜஹானாரா, தனது தாய் இறந்த பிறகு, அவளது சொத்தில் பாதியை உரிமையாகப் பெற்றிருந்தாள். அந்தப் பணத்தை, டச்சு வணிகர்களுடன் சேர்ந்து கப்பல் வணிகம் செய்தாள் என்றும் மகாஜன் வித்யாதரின் குறிப்பு கூறுகிறது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஆங்கிலேயருக்கு அவள் வணிகம் செய்ய உதவி இருக்கக்கூடும். மன்னரோடு மாளிகையில் வாழாமல் தனியே தனக்கென ஓர் அரண்மனை அமைத்துக்கொண்டு வாழ்ந்தவர் ஜஹானாரா. தனிமையில் வாழ்ந்த அழகியான ஜஹானாராவை, யூசுப் என்ற கவிஞன் காதலித்தான். அவளும் அவன் மீது மிகுந்த காதலுடன் இருந்தாள். தந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தால், அந்தக் காதல் முறிந்துபோனது என்றொரு கதையும் வரலாற்றில் உலவுகிறது.

1658-ம் ஆண்டில் ஷாஜகான் உடல் நலமற்றுப்போனார். பதவியைக் கைப்பற்ற நான்கு புதல்வர்கள் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. 1659-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி ஒளரங்கசீப்பின் ஆட்கள், தலை வேறு உடல் வேறாக தாராவை வெட்டிக் கொன்றார்கள். வயோதிகத்தைக் காரணம் காட்டி ஷாஜகானைச் சிறையில் அடைத்தான் ஒளரங்கசீப். 


தனிமையும் நோயுமாக தனது வயோதிகக் காலத்தைக் கழித்த ஷாஜகானுக்கு இருந்த ஒரே ஆறுதல் மகள் மட்டுமே. அவள், ஷாஜகானின் இறுதி நாள் வரை உடனிருந்து பராமரித்து வந்தாள். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு அவள் தனித்துவிடப்பட்டாள். ஒளரங்கசீப்பால் துரத்தப்பட்ட அப்பாவின் மற்ற மனைவிகளையும் அரண்மனைப் பெண்களையும் தனது பொறுப்பில் கவனித்தாள். ஒளரங்கசீப் அவள் மீது இரக்கம்கொண்டு மீண்டும் அவளுக்கு அரண் மனையின் உயரிய பதவியான முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை அளித்தார். அதைப் பெரிதாகக் கருதாமல் 16 ஆண்டுகள் அப்பாவின் நினைவில் வாழ்ந்த ஜஹானாரா, 1681-ம் ஆண்டு இறந்துபோனார். 

அவளுக்கு, நிஜாமுதீன் தர்காவில் கல்லறை அமைக்கப் பட்டது. 'என்னுடைய கல்லறையை அலங்காரமாக மூட வேண்டாம். அங்கே பசும்புற்கள் முளைத்து என்னை மூடட்டும்’ என்ற அவளது இறுதி வார்த் தைகள் அங்கே பொறிக்கப்பட்டுள்ளன.


ஜஹானாரா எழுதிய பெர்ஷியக் கவிதை களின் தொகுப்பு ஒன்று ஆன்ட்ரியா புடென்ஷோன் என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டு, 300 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளியிடப்பட்டு உள்ளது. 

மனு தர்மமும், மானிடமும்


மனு தர்மமும், மானிடமும்


இந்து சாஸ்திரங்களுக்காக போராடும் நம் நண்பர்களே சிறிது அடங்கிப் போகும் ஒரு விஷயம் மனு ஸ்மிருதி. ஏனெனில், இன்றுள்ள சாதிய முறைக்கும், இத்தனை ஆண்டு காலம் நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கும் மனு ஸ்மிருதியே காரணம் என்ற ஒரு கருத்து அனைவரது (இந்துக்கள், பிராமணர்கள் உட்பட) ஆழமாக விதைக்கப்பட்டு விட்டது.
பிராமண துவேஷம் எங்கெல்லாம் நடக்கிறதோ (தமிழகத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும்) அங்கெல்லாம் மேற்கோள் காட்டப்படுவது ‘ மனு ஸ்மிருதி’ எனப்படும் மனுவின் நீதி நூல். இது நீதி நூல் என்பதையே பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மனிதர்களால் உருவாக்கப்பட்டு, காலத்திற்கேற்ப மாறுவது ‘ஸ்மிருதி’ . அந்தந்த கால கட்டத்திற்கும் , மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப, பல்வேறு ஸ்மிருதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது அனைவராலும் தூற்றப்படும் மனு ஸ்மிருதி கிருதா யுகத்திற்க்கானது. இதை கலி யுகத்தில் பயன்படுத்தியது நம் முன்னோர்கள் செய்த முதல் தவறு. ஆயினும், மனு ஸ்மிருதியில் எவ்வித பிழையும் இல்லை, அதை உறுதி செய்யவே இந்தக் கட்டுரை.
முதலில் மனு ஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ள வர்ணாசிரம முறைகள் அதன் ஒரு மிகச் சிறிய பகுதி என்பதை அனைவரும் உணர வேண்டும். கல்வி, வாழ்க்கை முறை, பக்தி, குற்றங்கள், தண்டனைகள், போர் முறை, திருமணம், சாட்சி சொல்லும் முறை, ஒற்றர்கள் என பல சமுதாய, அரசியல் விஷயங்களும் மனு ஸ்மிருதியில் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி அனைத்து விஷயங்களையும் விவாதிக்கும் ஒரு நீதி நூல் உருவாக்கப்பட்டது ஆச்சர்யமே!
மனு ஸ்மிருதி மனிதர்களை வர்ண முறையில் நான்காகவும், ஆசிரம முறையில் நான்காகவும் பிரிக்கிறது. வர்ண முறையில் பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையிலும், ஆசிரம முறையில் சிறுவர் (வயது < 8), பிரமச்சாரி (8-16), சம்சாரி (16-48) மற்றும் சந்நியாசி (>48) எனவும் பிரிக்கிறது. ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமைகளையும், வாழ்க்கைமுறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது மனு தர்மம். இவை அனைத்தும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த உருவாக்கப் பட்டனவே அன்றி, பாழ்படுத்த அல்ல.
பிராமணர்கள் வேதம் ஒதுவதற்கும், பக்தி மார்க்கத்தைப் பரப்புவதற்கும், க்ஷத்ரியர்கள் ஆட்சி செய்து நீதி வழங்கவும், வைசியர்கள் நியாயமான வியாபாரம் செய்யவும், சூத்திரர்கள் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளை செய்வதற்கும் பணிக்கப்பட்டனர். இதில் பிராமண துவேஷர்களின் வாதம் யாதெனில், மனு ஸ்மிருதியில் பிராமணர்களுக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது, மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?
‘க்ஷத்ரியனை விட உயர்ந்தவன் இல்லை. ஆகையால் ராஜசூயம் நடக்கும்போது, பிராமணன் க்ஷத்ரியனை விட தாழ்வான இடத்திலேதான் அமர வேண்டும்’ – இது சதபத புராணம் கூறுவது. ‘சந்திரன், வாயு, அக்னி, சூரியன், இந்திரன், குபேரன், வருணன், யமன் ஆகிய எட்டு உலக நாயகர்களின் அம்சங்களைக் கொண்டவன் அரசன். ஆகையால் அவனுக்கு அசுத்தம் கிடையாது’ என்றும் சொல்கிறது. பிராமணன் அரசனாக முடியாது என்றும் கூறுகிறது மனு தர்மம். இதிலிருந்து, க்ஷத்ரியர்களே உயர்வானவர்களாக சொல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
மற்றொரு குற்றச்சாட்டு, பிராமணர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது. உதாரணமாக பிராமணனுக்கு வரி விலக்கு என்பது. இதை மனு தர்மம் யாருக்கு அளிக்கிறது? நன்கு கற்றறிந்து, வேதம் ஓதி, இரந்து உண்ணும் பிராமணனுக்கே இச்சலுகை. பிராமணனாகப் பிறந்து, வேறு தொழில் ஒருவன் செய்வானாயின் அவனுக்கு எவ்வித சலுகையும் வழங்கவில்லை மனு தர்மம். மாறாக, வன்மையாகக் கண்டிக்கிறது. எவ்வளவு வசதியாக இருந்தாலும், ஜாதியைப் பொறுத்து சலுகை வழங்கும் இன்றைய சட்டங்களைப் போற்றுவோருக்கு, மனு ஸ்மிருதி தவறாகத்தான் தெரியும்.
மனு ஸ்மிருதி பிராமணர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கிறது என்றால் வேதங்களை கற்றுணர்ந்து, தனக்கு வகுத்த முறைப்படி வாழும் எந்த பிராமணனும் மரண தண்டனை அளிக்கும் அளவுக்கு தவறு இழைக்க மாட்டான் என்ற நம்பிக்கையே காரணம். இதில் தவறேதும் இல்லையே. இன்று வரை மரண தண்டனை விதிக்கத் தகுந்ததாக கருதப்படும் குற்றங்களான கொலையிலும், கற்பழிப்பிலும், ராஜ த்ரோகத்திலும் எத்தனை பிராம்மணர்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றனர்? பார்ப்பன பயங்கரவாதம் என்று இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் பிதற்றிக் கொண்டிருப்பது தொடர்ந்த போதும் பிராமணர்கள் குற்றங்களிலோ, குற்றங்களைத் தூண்டுவதிலோ, வன்முறையை ஊக்குவிப்பதிலோ எந்த பங்கும் கொள்வதில்லை என்பதே உண்மை.
பிராமணனுக்கு மரண விலக்கு அளிக்கும் அதே மனு ஸ்மிருதிதான் இதையும் சொல்கிறது

                                       அஷ்டோபாத்யம் து சூத்ரச்ய
                                       ஸ்தேயே பவதி கில்பிஷம்.
                                       ஷோடசைவ து வைச்யச்ய
                                       த்வாத்ரிம்சத் க்ஷத்ரிச்ய  ச.
                                       ப்ராம்மனச்ய சது: ஷஷ்டி:
                                       பூர்ணம் வாபி சதம் பவேத்.
                                       த்விகுணா வா சது.
                                      ஷஷ்டி: தத் தொஷகுனா வித்தி: ஸ:
அதாவது, ‘அறிந்து திருட்டுக் குற்றத்தை செய்கின்ற சூத்திரனுக்கு, வழக்கமான தண்டனையை விட எட்டு மடங்கு அதிக தண்டனையை விதிக்க வேண்டும். வைச்யனுக்கு பதினாறு மடங்கு. க்ஷத்ரியனுக்கு முப்பத்திரண்டு மடங்கு. குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால் பிராமணனுக்கு 64 அல்லது 100 அல்லது 128 மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்’. பிராமணனுக்கு சலுகைகள் தரும் அதே மனு ஸ்மிருதிதான் இதனையும் கூறுகிறது.
இந்த சலுகைகள் பிராமணனுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. முதியோர், ஊனமுற்றோர், ஏழைகள், சிறு தொழில் செய்வோர் என அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிராமணன் மனு தர்மத்தின் படி வாழ்கையில் அவன் ஏழை என்ற பகுதிக்குக் கீழ் வந்து விடுகிறான். ஏனெனில், வேதங்களின் படியும், மனு தர்மத்தின் படியும், பிராமணன் அடுத்த நாள் உணவுக்காகக் கூட பொருள் சேர்த்து வைக்கக் கூடாது. பிராமணனுக்கு சலுகைகளைத் தரும் அதே மனு தர்மம்தான் அவன் மீது இத்தகைய சுமைகளையும் ஏற்றுகிறது. மற்ற எந்த தரப்பினருக்கும் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
பிராமணர்கள் மனு ச்மிரிதியை உருவாக்கி இருந்தால் தாங்களே தங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளை இட்டுக் கொண்டிருப்பார்களா? இன்று இந்திய சட்டத்தின்கீழ் சலுகை பெறுவோருக்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா? நீங்கள் சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.
தங்களை எதிர்த்து இவ்வளவு அவதூறுகள் பரப்பப்பட்டும், எத்தனையோ ஏழை மாணவர்களின் கல்வி ஜாதியின் பெயரால் கெடுக்கப்பட்டும் அழுவது மட்டுமே அறிந்து, அழிப்பது அறியாத அப்பாவி பிராமணர்களை என்றுதான் இந்த தேசம் புரிந்து கொள்ளப் போகிறதோ சர்வேஷ்வரா!
மனு தர்மம் பற்றி மேலும் விரிவாகப் பார்ப்போம், அடுத்த கட்டுரையில்…
ஸம்ஸமித்யுவஸே வ்ருஷன்னக்னேன விச்வான்யர்ய ஆ (ரிக்)
பொருள்: நன்மையை அள்ளிக் கொடுக்கின்ற தெய்வமான அக்னி தேவனே! எல்லா  உயிரினங்களையும் ஒற்றுமையாக இருக்கச் செய்வாயாக!’
——- வளரும், வழித்தடைகள் விலகும் வரை —

பொன்மொழிகள் :


பொன்மொழிகள் :குரு








நீ நடந்து போக பாதை இல்லையே
என்று கவலைப் படாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.

- அடோல்ப் ஹிட்லர்.


கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.
-A.P.J. அப்துல் கலாம்

நீ நடந்து போக பாதை இல்லையே
என்று கவலைப் படாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
- அடோல்ப் ஹிட்லர்.


உனக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும்
நேரம் இல்லையென்றால்,
நீ உன் வாழ்வில்
முன்னேறிக்கொண்டு இருக்கிறாய்
என்று அர்த்தம்.
- அலெக்சாண்டர்

உன் வேதனை பலரை
சிரிக்க வைக்கலாம்.
ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரைக் கூட
வேதனைப்படுத்த கூடாது.
- சார்லி சாப்ளின் .

தண்டனை கொடுப்பதற்கு
தாமதம் செய்.
ஆனால்,
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட
செய்யாதே.
- அன்னை தெரேசா.


யாருக்காகவும் உன்னை
மாற்றி கொள்ளாதே.
ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்.
- கவியரசு கண்ணதாசன்

உன் வேதனை பலரை
சிரிக்க வைக்கலாம்.
ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரைக் கூட
வேதனைப்படுத்த கூடாது.
- சார்லி சாப்ளின்.


என்றும் நினைவில் கொள். மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.
- கார்ல் மார்க்ஸ்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
- விவேகானந்தர்


நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச் சிரிப்போம்.
- விவேகானந்தர்


வாழ்க்கையின் சிந்தனை மிகுந்த நேரங்களையும், நோய்களையும் வேதனைகளையும் ஒதுங்கி நின்று பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். அவை எல்லாம் உருமாறி விடக்கூடிய ஒன்று என்பதை உணருங்கள்.
- ஸ்ரீ அன்னை


எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.
- ஹிட்ச்சாக்


ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.
- சார்லஸ்


இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன்


எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்புகொண்டவர்கள், நண்பர்கள்,
தன்னை எப்போதும் அலட்சியப்படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.
- பகவத் கீதை


எவரும் வேண்டும் என்றே தவறு செய்வதில்லை. எது உண்மையிலேயே சரி என்பதை அறியாது அவர் மனம் கருதுவதைச் செய்கிறார்.
- சாக்கரட்டீஸ்

ஆபிரகாம் லிங்கனும் கென்னடியும் எப்படி இறந்தனர்?


ஆபிரகாம் லிங்கனும் கென்னடியும் எப்படி இறந்தனர்?

>

அடுத்து நீங்கள் படிக்கவிருக்கும் விடயம் நிச்சயம் உங்கள் புருவங்களை உயர்த்தும். அமெரிக்க அதிபர்கள் ஆபிரகாம் லிங்கன்,கென்னடி ஆகிய இருவருக்கும் பலவிதங்களில் ஒற்றுமை இருக்கிறது.

எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு சுவாரசியமான மடலை தமிழாக்கம் செய்து உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். சிலர் இவ்விடயம் குறித்து ஏற்கனவே படித்திருக்கலாம், இருப்பினும் மீண்டும் ஒரு மீள்பார்வை..

ஒரு வரலாறு நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடைப்பெற்றக் கதையிது!





ஆபிரகாம் லிங்கன் 1846-ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சான் எஃப். கென்னடி 1946-ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.


ஆபிரகாம் லிங்கன் 1860-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சான் எஃப்.கென்னடி 1960-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.


இவர்களிருவரும் குடிமக்களின் உரிமைகளில் அதிக கவனம் செலுத்தியவர்கள்.


இவர்களிருவரின் மனைவிமார்களும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் வாசம் செய்த காலத்தில்தான் தங்கள் பிள்ளைகளை இழந்தனர்.


இவ்விரு அதிபர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நாள் வெள்ளிக் கிழமையாகும்.


இவ்விருவருமே தலையில் சுடப்பட்டு இறந்தனர்.


ஆச்சரியமாக இருக்கிறதா...?



லிங்கனின் செயலாளரின் பெயர் கென்னடி.

கென்னடியின் செயலாளரின் பெயர் லிங்கன்.


இவ்விரு அதிபர்களுமே தென் மாநிலங்களைச் சார்ந்த நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்விரு அதிபர்களைக் கொலைச் செய்த கொலையாளிகளின் பெயரும் சான்சன்.


லிங்கனுக்கு அடுத்து அதிபர் பதவியையேற்ற அண்ட்ரூ சான்சன் 1808-ஆம் ஆண்டில் பிறந்தவாராவார்.

கென்னடிக்கு அடுத்து அதிபர் பதவியையேற்ற லிண்டன் சான்சன் 1908-ஆம் ஆண்டில் பிறந்தவராவார்.



லிங்கனைக் கொலைச் செய்த சான் வில்க்ஸ் பூத் 1839-ஆம் ஆண்டு பிறந்தவராவார்.

கென்னடியைக் கொலைச் செய்த லீ ஆர்வீ ஓஸ்வெல்ட் 1939-ஆம் ஆண்டி பிறந்தவராவார்.



இவ்விரு கொலையாளிகளின் முழுப்பெயர்கள் ஒவ்வொன்றிலும் மூன்றுப் பெயர்கள் அடங்கியுள்ளன.

இவ்விரு கொலையாளிகளின் பெயர்களுமே 15 ஆங்கில எழுத்துகளால் அமைந்தவை.

(John Wilkes Booth , Lee Harvey Oswald)

என்ன, படிக்கப் படிக்க ஆச்சரியமாக உள்ளதா?

லிங்கன் - 'ஃபோர்டு' என்றழைக்கப்படும் ஒரு திரையரங்கில் கொல்லப்பட்டார்.

கென்னடி - 'ஃபோர்டு' நிறுவனம் தயாரித்த 'லிங்கன்' எனும் மகிழுந்தில் பயணம் செய்யும்போது கொல்லப்பட்டார்.

திரையரங்கில் லிங்கனைக் கொன்ற கொலையாளி ஒரு கிடங்கில் சென்று ஒளிந்துக் கொண்டான்.

கென்னடியைக் கொன்ற கொலையாளி ஒரு கிடங்கிலிருந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, பின் ஒரு திரையரங்கில் சென்று ஒளிந்துக் கொண்டான்.

இவ்விரு கொலையாளிகளும் (பூத், ஓஸ்வெல்ட்), நீதிமன்ற விசாரணைக்கு முன்பே கொல்லப்பட்டுவிட்டனர்.



இங்குதான் சுவாரசியமே உள்ளது... மேலும் தொடர்ந்துபடியுங்கள்..



லிங்கன் இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு மான்றோ, மேரிலாண்ட் எனுமிடத்தில் இருந்தார்.

கென்னடி இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு மர்லின் மன்றோ எனும் நடிகையுடன் இருந்திருக்கிறார்.



தகவல்களனைத்தும் எப்படி இருந்தன? ஆச்சரியமாக உள்ளதா...?

ஆபிரகாம் லிங்கன் எழுதிய கடிதம்


ஆபிரகாம் லிங்கன் எழுதிய கடிதம்

தனது மகனின் தலைமையாசிரியருக்கு
ஆபிரகாம் லிங்கன் எழுதிய கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு

மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களே,

எனது மகன், அனைத்து மனிதர் களும் நியாயமானவர்கள் அல்ல;அனைத்து மனிதர்களும் உண்மை யானவர்கள் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல ஒரு பின்பற்றத் தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று ஓர் அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு பகைவனைப் போல ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பின்வருவதை அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும்.

ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற ஐந்து டாலரைவிட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

அவனுக்குத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள்.

அவனுக்குப் பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் இரகசியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள்.

அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதைப் பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

மற்றவர்கள் தவறு என்று விமரிசித்தாலும், தனது சுய சிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டு குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

கும்பலோடு கும்பலாய்க் கரைந்து போய்விடாமல் எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவி சாய்க்க வேண்டும். எனி னும் உண்மை என்னும் சல்லடையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்து எடுக்க அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள். தனது செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் சாமர்த்தியம் அவனுக்கு வேண்டும்.

ஆனால், தனது இதயத்திற்கும், தனது ஆன்மா விற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒரு போதும் அனுமதிக்க கூடாது. பெருங் கும்பல் திரண்டு வந்து கூச்சலிட்டாலும், நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்டிப் போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை கொடுங்கள்.

அவனை அன்போடு நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம் காட்டி மற்றவர்களைச் சார்ந்திருக்க வைக்க வேண்டாம். ஏனென்றால் கடுமையான தீயில் காய்ச்சப்பட்ட இரும்பு மட்டும்தான் பயன்மிக்கதாக மாறுகிறது.

தவறு கண்டால் கொதித்து எழும் துணிச்சலை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள் அதே வேளை யில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

இது ஒருமிகப் பெரிய பட்டியல் தான். இதில் உங்களுக்குச் சாத்திய மானதையெல்லாம் நீங்கள் அவனுக் குக் கற்றுக் கொடுங்கள்.

அவன் மிக நல்லவன் , எனது அன்பு மகன்.

யூரி ககாரின் விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார்.


யூரி ககாரின்
Yuri Gagarin
Юрий Гагарин
யூரி ககாரின்
விண்வெளி வீரர்
தேசியம்ரஷ்யர்
தற்போதைய நிலைகாலமானார்
பிறப்புமார்ச்சு 91934
குளூஷினோ, Flag of the Soviet Union சோவியத் ஒன்றியம்
இறப்புமார்ச்சு 271968(அகவை 34)
கிர்ஷாக், Flag of the Soviet Union சோவியத் ஒன்றியம்
வேறு தொழில்விமானி
படிநிலைபல்கோவ்னிக், சோவியத் வான்படை
விண்பயண நேரம்1 மணி, 48 நிமி
தெரிவுவான்படை குழு 1
பயணங்கள்வஸ்தோக் 1
பயண
சின்னம்
Vostok1patch.png

யூரி அலெக்சியேவிச் ககாரின் (ரஷ்ய மொழி: Юрий Алексеевич Гагарин, மார்ச் 9, 1934 - மார்ச் 27, 1968) விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 121961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

பொருளடக்கம்

  [மறை

[தொகு]வாழ்க்கைக் குறிப்பு

யூரி ககாரின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 91934 இல் பிறந்தார். இப்பகுதி பின்னர் ககாரின்எனப் பெயரிடப்பட்டது. இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணை ஒன்றில் கடமையாற்றியவர்கள். சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமா ஓட்டுநர் பாடசாலையில் (Orenburg Pilot's School) இல் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார். அங்கு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957 இல் திருமணம் புரிந்தார். அவரது முதல் பணி நோர்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.

[தொகு]சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணைவு

1960 இல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி. இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.

[தொகு]விண்வெளிப் பயணம்

ககாரின் ஏப்ரல் 121961 இல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit], நெடுஆரம் [Apogee] 203 மைல், குறுஆரம் [Perigee] 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது

[தொகு]வெளி இணைப்புகள்