Saturday 8 December 2012

வேலன்:-டெக்ஸ்ட் பைலை MP 3 பைலாக மாற்ற




நம்மிடம் உள்ள டெக்ஸ்ட் பைல்களை எம்.பி.3 பைல்களாக மாற்றிக்கொள்ளவேண்டிய சந்தர்பம் அமையலாம்.பெரிய பெரிய கட்டுரைகளை நாம் செவிவழிகேட்பதால் சுலபமாக மனதில் படியும். அவ்வாறு நம்மிடம் உள்ள டெக்ஸ்ட் பைல்களை எம் பி 3 பைல்களாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய 
இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள Select File கிளிக் செய்து உங்கள் டெக்ஸ்ட் பைலை தேர்வு செய்யவும். பின்னர் சேமிக்கும் இடத்தை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள Start பட்டனை கிளிக் செய்யவும்.
இதில் நாம்  பைல்கள் ஒவ்வொன்றாகவோ அல்லது மொத்தமாகவோ தேர்வு செய்துகொள்ளலாம்.
இதில் உள்ள Settings கிளிக் செய்து இதில் ஒலியின் வேகம் குரலின் ஏற்றதாழ்வுகளை நாமே நிர்ணயித்துக்கொள்ளலாம். அதற்காக இதில ஸ்லைடர்கள் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக Save Settings கிளிக் செய்து உங்களது டெக்ஸ்ட் பைலை எம்பி3 ஆக மாற்றம் செய்துகொள்ளுங்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.

No comments:

Post a Comment

THANK YOU