Sunday 16 December 2012

குதிரைகளின் மனோதத்துவம் பற்றி அநுபந்தம் கூறுகிறது.

 சாலிஹோத்திர வைசம்பாயனீயம் என்ற ஸாரஸிந்து என்ற நூலிலிருந்து தொகுத்துத் தந்திருக்கிறார்கள். சில விஷயங்கள் மிக சுவாரசியமானவை.

-- குதிரையில் ஏறியவன் ஒருவித ஆபத்தும் நேராத பொழுது கீழே விழுந்தால் குதிரை சிரிக்கும்.

அரசன் முடிசூடும் பொழுதும், கொள்ளு தின்னும் பொழுதும், மாலை கொள்ளு தின்னும் பொழுதும், மணி ஓசை கேட்கும் பொழுதும், நல்ல மனதுடையோன் ஏறும் பொழுதும் குதிரை சந்தோஷமடையும்.

கலவி, ருதுகாலம், யுத்தம், வெற்றி, யாகம், தீனி, திறமையுள்ளவனின் ஏற்றம், கூட்டத்தை விட்டுப் பிரியும் காலம், புதுக்குதிரையைக் காணும் சமயம் இவைகளில் குதிரை கனைக்கும்.

தனக்குச் சமமான வேகமற்ற குதிரையுடன் ஓட நேரும் போது வெட்கம் கொண்டு புழுதியை வாரி இறைக்கும்.

-- இவை சில மாதிரிக்கு.

குதிரைகளின் வயது பற்றி சாலிஹோத்திரர் கூறுவது --

மனிதனுக்கு நூறு, யானைக்கு நூற்றி இருபது, பசுவிற்கு 24, கழுதை ஒட்டை - 25, நாய் - 16, நரி - 25, புழு - 7 நாள், ஈ - 14 நாள், குதிரை -- 32 வருஷங்கள்.

மத்தம், அவி, காச்யம், அச்மகேயம், மாலிகம், சுவேதவாகனம், மேசகம், சுவேதகிரிஜம், வைதர்பம் ஆகிய ஒன்பது ஜாதிக் குதிரைகளும் ‘கோடகம்’ என்னும் வகையில் அடங்கும்.
நன்றி திரு. மோகனரங்கன் ஶ்ரீனிவாசன்.

No comments:

Post a Comment

THANK YOU