Sunday 30 September 2012

தெரிந்து கொள்ளவேண்டிய இணையதள டிப்ஸ் (INTERNET TIPS)



தெரிந்து கொள்ளவேண்டிய இணையதள டிப்ஸ் 

01.உங்கள் இணைய தளத்தை 'முழுத்திரையில்' காண 
நாம் இணையத்தளத்தில் பிரவுஸ் செய்கையில் மேலும்,கீழும் சிஸ்டம் மெனு பார்கள் மற்றும் பிரவுசரின் மெனு பார்கள் அதிகம் இருக்கும். இவைகள் நாம் ஏற்படுத்திக்கொண்ட  ப்ளக் இன்  புரோகிராம்களுக்கு  ஏற்றவாறு  இவை அமைந்திருக்கும். இவ்வகையான இடைஞ்சல்கள்    இல்லாமல் பிரவுசர்(Browser ) மட்டும்  திரைமுழுவதும்  வந்தால்  எப்படி இருக்கும் கொண்டுவர முடியும். இதனை இன்டர்நெட்  எக்ஸ்புளோரரில்  எவ்வாறு  கொண்டுவருவது  என்பதினை  காணலாம். இதனை ஆங்கிலத்தில் Kiosk Mode என அழைகின்றனர்.

இவ்வாறு வர முதலில் Start Menu -வில் உள்ள Run என்பதை கிளிக் செய்யவேண்டும்.பின்பு அதில் iexplore  -k  page  என்று டைப் செய்து என்டர்(Enter ) தட்ட வேண்டும். இதில் Page  என்பது நாம் திறக்க விரும்பும் இணையதள முகவரியினை தரவேண்டும். எ.கா(example): iexplore  -k www.arivu-kadal.blogspot.in/2012/07/computer-tips.html என நான் எனது தள முகவரியினை தந்தவுடன் எனது தளம் முழு திரையிலும் காட்டப்பட்டது.


 இனைய தளம் மட்டுமல்ல நமது கணினியில் சேமித்து வைத்துள்ள இணையதலதினையும் இதுபோல் திறக்கலாம்.எடுத்து காட்டாக iexplore  -k c:\mydocuments\arivu-kadal.html  என டைப் செய்தால் நாம்  சேமித்து வைத்த வெப் பேஜ் முழு திரையில் தோன்றும்.இதில் டாஸ்க்பாரும் காட்டபடாததால். நாம் பிரவுசரை இயக்க கீகளை பயன்படுத்த வேண்டும். 

இதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூட Ctrl + W அல்லது Alt +F4 கீகளை அழுத்தலாம்.இது போன்று கீ தொகுப்புகளை அழுத்துவதன் மூலம் இதனை இயக்கலாம்,இந்த கீ தொகுப்பு http:/support.microsoft.com/kb/154780 என்ற இந்த இணையதளத்திலிருந்து பெறலாம்.அந்த முகவரியில் உள்ள கீகள் உங்களுக்காக;
 Keyboard Shortcuts for Kiosk Mode
   Key combination  Function
   -----------------------------------------------------------
   CTRL+A           Select all (editing)
   CTRL+B           Organize favorites
   CTRL+C           Copy (editing)
   CTRL+F           Find (on current page)
   CTRL+H           View History folder
   CTRL+L           Open Location dialog box
   CTRL+N           New window (opens in non-Kiosk mode)
   CTRL+O           Open Location dialog box (same as CTRL+L)
   CTRL+P           Print
   CTRL+R           Refresh
   CTRL+S           Save
   CTRL+V           Paste (editing)
   CTRL+W           Close (same as ALT+F4)
   CTRL+X           Cut (editing)
   ALT+F4           Close
   ALT+LEFT ARROW   Back
   ALT+RIGHT ARROW  Forward
   ESC              Stop
   F5               Refresh
இவை உங்களுக்கு பிடித்து போய்விட்டால் இதற்கென்று ஒரு ஷார்ட் கட் 
கீயினை உருவாக்கி Desktop-இல் வைத்துக்கொள்ளலாம்.அவ்வாறு shortcut
உருவாக்க டெஸ்க்டாப்பில் காலி இடத்தில மெசினை ரைட் கிளிக் செய்து 
New -> Shortcut-னை கிளிக் செய்தால் Create Shortcut என்ற விசார்ட் தோன்றும். அதில்C:\program files\internet Explorer\iexplore.exe -k என டைப் செய்திட வேண்டும்.பின்பு Next பட்டனை கிளிக் செய்து வரும் கட்டத்தில் இதற்கு உங்களுக்கு விருப்பமான பெயரை வைத்து Finish கிளிக் செய்து வெளியேறவும்.
 
இப்படி முழு திரையிலும் இணையதளத்தினை பார்ப்பது நமக்கு ஒரு மாறுதலை
தரும் . முயன்று பாருங்கள் சுவாரசியமாக இருக்கும்.மேலும் இணையத்தின் முக்கிய தகவலுடன் அடுத்த பதிவில் காண்போம்..

நண்பர்களே தயவு கூர்ந்து உங்களுடைய கருத்தினையும் மற்றும் உங்களுடைய ஓட்டையும் மறக்காமல் அளிக்கவும்.

No comments:

Post a Comment

THANK YOU