Sunday 30 September 2012

எச்சரிக்கை மணி (ஹாரன்) உருவான வரலாறு




இன்று நம் காது ஜவ்வுகளைக் கிழிக்கும் அளவில் ஒலிக்கப்படும் எச்சரிக்கை மணி (ஹாரன்) முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது 1927 ஆம் ஆண்டு தான். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா ? எச்சரிக்கை மணியைக் கண்டுபிடித்தது ஒரு சிறுவன் என்றால் உண்மையில் ஆச்சர்யம் தானே. ஆம் 1927 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையை சிறுவன் ஒருவன் கடந்து கொண்டிருந்தான். அப்போது திடீரென்று ஒரு குதிரை வண்டி அதிவேகமாக அவனை கடந்து சென்றது. சிறுவன் மயிரிழையில் உயிர் தப்பினான். 
      
          ஆனால் அந்த சிறுவன் வீட்டிற்கு சென்ற பிறகு அந்த சம்பவத்தை நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளானான்.  மோட்டார் வண்டிகள் இல்லாத அந்த காலத்திலும் குதிரை வண்டிகள் அதிகமாக இருந்ததால் அந்த பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும். இதனால் அந்த சாலையில் நடந்து செல்லும் பயணிகள் வேகமாக செல்லும் குதிரை வண்டிகளால் அடிக்கடி 
விபத்திர்க்குள்ளாகினர். இதனால் இந்த விபத்துகளை தடுக்க ஒரு எச்சரிக்கை கருவி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அந்த சிறுவன் நினைத்தான். 

         உடனே கடினமாக உழைத்து மணி போல ஒரு கருவியை உருவாகினான். அந்த கருவியிலிருந்து கணீரென்று ஒலி வந்தது. இது தான் அவனின் முதல் கண்டுபிடிப்பு. அதை குதிரை வண்டிகளில் எச்சரிக்கை மணி போல பொருத்தினான். இது அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. எச்சரிக்கை மணியைக் கண்டுபிடித்ததன் மூலம் அவனுக்கு ஓரளவு வருவாய் கிடைத்தது. இதனால் தன் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்தான். 

   சிறுவனின் தொடர் ஆராய்ச்சியால் உருவானது தான் பாதுகாப்புக் குண்டூசியும் (Safty Pin), ஊற்றுப் பேனாவும் (Fountain Pen). அந்த சிறுவன்தான் பிற்காலத்தில் மிகப் பெரிய கண்டுபிடிப்பாளரான வால்டர் ஹண்ட் (1796–1859). சிறு வயதிலேயே எச்சரிக்கை மணியை கண்டுபிடித்த வால்டர் ஹண்டின் வரலாறு உண்மையிலேயே சுவாரஸ்யமானது தான்.

No comments:

Post a Comment

THANK YOU