Sunday 30 September 2012

fb posted blog ப்ளாக் பதிவுகள் பேஸ்புக்கில் தானாக அப்டேட் செய்யும்


பேஸ்புக் என்பது மிக முக்கியமான சமூக வளைத்தளம். இதன் மூலம் நமக்கு நிறைய வாசகர்கள் வருவார்கள் மேலும் நம்முடைய நண்பர்கள் எளிதாக நம் பதிவை பற்றி அறிந்து கொள்ள உதவுவது பேஸ் புக் ரசிகர் பக்கம்.

அனைவரும் ரசிகர் பக்கம் வைத்திருப்பீர்கள் ஆனால் நாம் பதிவு எழுதிவிட்டு அதை நமுடைய ரசிகர் பக்கத்திலும் ஷேர் செய்வது என்பது கடினமான வேலை ஆகும். சில நேரங்களில் நம்முடைய பதிவை பகிராமல் கூட விட்டு விடுவோம்.

இப்பொழுது அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் எளிமையாக தானாகவே பதிவை ஷேர் செய்வது எப்படி என்று பார்போம்.

1. முதலில் எப்படி தொடங்குவது 
பேஸ்புக் கில் உங்களுடைய அக்கௌண்டில் உள்ளே நுழைந்து கொள்ளுங்கள். உள்ளே சென்றதும் கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்யவும்.

http://apps.facebook.com/rssgraffiti/ இதை கிளிக் செய்ததும் உங்களுடைய பேஸ்புக் அக்கௌன்ட் டை rss graffiti 2.0 பயன்படுத்த அனுமதி கேட்கும். allow என்பதை கிளிக் செய்யவும்.


2. உங்களுடைய ப்ளாக் பெயர் கொடுத்து கிளிக் Create Publishing Plan என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது ஒரு pop up விண்டோ வரும்.



3. Sources என்ற இடத்தில உள்ள Add New என்பதை கிளிக் செய்யவும்.



4. enter URL என்ற இடத்தில் உங்களுடைய வலைப்பூவின் Feed URL ஐ கொடுக்கவும். கொடுத்து Add Source என்பதை கிளிக் செய்யவும்.





5. அதை கிளிக் செய்ததும் அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுடைய ப்ளாக் தலைப்பு Feed Title என்ற இடத்தில முதலில் வரும். Source URL Override என்ற இடத்தில் தேவை என்றால் ப்ளாக் வெப் அட்ரஸ் கொடுக்கவும். உங்களுக்கு தேவையான அளவு Scheduling செட்டிங்க்ஸ் செய்து save கொடுக்கவும்.


.

6. இப்பொழுது உங்கள் பக்கம் கீழே உள்ள வாறு தோன்றும். இதில் target Add New என்பதை கிளிக் செய்யவும்.





7. இதில் Choose Target கீழே உள்ள இடத்தில் உங்களுடைய ரசிகர் பக்கத்தை தேர்வு செய்து அடுத்து  Publish on Behalf of  என்ற இடத்தில் யாராக உங்களுடைய பதிவுகள் பகிர வேண்டும் என்பதை செலக்ட் செய்யவும். இறுதியாக Save changes என்பதை கிளிக் செய்யவும்.





8.இப்பொழுது இறுதியாக வரும் பக்கத்தில் off என்று உள்ளதை கீழே உள்ளது போல் on என்று வைக்கவும்.




இனிமேல் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அப்டேட் தானாகவே உங்களுடைய பேஸ்புக் ரசிகர் பக்கத்தில் ஆகிவிடும்.

No comments:

Post a Comment

THANK YOU