Friday 10 August 2012

உங்கள் கணினி வேகமாக அணைய (Shutdown) மறுக்கின்றதா? இதோ தீர்வு.


உங்கள் கணினி வேகமாக அணைய (Shutdown) மறுக்கின்றதா? இதோ தீர்வு.

shutting_down
பொதுவாக வீடுகளிலோ அல்லது அலுவலகங்களிலோ பயன்படுத்தப்படுகின்ற கணினிகள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பயன்படுத்துவதாகவே இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதனை பயன்படுத்துகின்ற ஒவ்வொருவரும் தத்தமது தேவைக்கேற்றால் போல மென்பொருள்களை நிறுவி (Install) பயன்படுத்துவர்.
இதன் காரணமாக இவ்வகையான கணினிகளின் இயக்கம் சற்று மெதுவாகவே காணப்படும். அதிலும் நீங்கள் உங்கள் கணினியை தொடங்குவதற்க்கு (StartUp) எடுக்கும் நேரத்தை விட அதிகளவான நேரத்தை கணினியை அணைப்பதற்க்கு (Shutdown) செலவிட வேண்டியிருக்கும். ஒரு அவசர வேலையாக நீங்கள் கணினியை அணைத்துவிட்டு வெளியே செல்ல வேண்டுமென்றால் அதுவரை காத்திருப்பதிலேயே உங்கள் நேரம் வீணாகிவிடும். எனவே இவ்வாறான தன்மைவாய்ந்த கணினிகளை பயன்படுத்துபவர் அல்லது உங்கள் கணினியும் இதே நிலைமையிலிருந்தால் அதனை உங்கள் கணினியின் இயங்கு தளத்தில் (Operating system) உள்ள ஒரு கட்டளையை கொண்டே சரி செய்யலாம். அதற்க்கான எளிமையான வழிமுறைகளை இந்தப் பதிவிலே தருகிறேன்.
முதலில் உங்கள் கணினி Windows7,XP,Vista நிறுவப்பட்டதாக (Install) இருந்தால் Start Menuவிற்க்கு சென்று All Programs–> Accessories–> Run என்பதை தேர்வு செய்யுங்கள். அல்லது Windows Key+R அழுத்துங்கள்.
இதன்போது உங்கள் கணினி திரையில் Run எனும் தலைப்பிலமைந்த சாளரம் (Window) தோன்றும். அதில் Open என்பதற்க்கு நேரே regedit என தட்டச்சு செய்து OK கட்டளையை அழுத்துங்கள்.
பின்னர் Registry Editor தோன்றும். இதில் இடதுபுறம் உள்ள Taskpane இல் HKEY_LOCAL_MACHINE என்பதை இரட்டை கிளிக் செய்யுங்கள். பின்னர் அதனுள் தோன்றும் folder களில் SYSTEM என்பதை இரட்டை கிளிக் செய்து திறங்கள்.

பின் அதனுள் உள்ள CurrentControlSet என்ற Folderஇனை திறங்கள். இறுதியாக அதிலுள்ள Control என்பதை கிளிக் செய்ய வலதுபுறம் உள்ள பகுதியில் அதன் உப பிரிவுகள் தோன்றும். அதில் இறுதியாக உள்ள WaitToKillServiceTimeout என்பதை வலது கிளிக் (Right click) செய்து Modify என்பதை தெரிவு செய்யுங்கள்.

பின்னர் தோன்றும் Menuவில் Value data என்பதற்க்கு நேரே 200 என வழங்கி Ok அழுத்தவும். இனியென்ன உங்கள் கணினி முன்னைவிட வேகமாகவே அணையும்.
 

No comments:

Post a Comment

THANK YOU