Sunday 19 August 2012


அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை:
அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார். உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார். 
ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா! 


ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with because because ‘Because’ is a conjunction.” 
அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’) பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா? 
"ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ."(“I know UNO. I know – you know UNO. But you don’t know I know UNO” )
இதற்கும் மேல் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ் தேசியவாதி , தமிழ் அறிஞர். ஆகவே தாய்மொழி தமிழைத் தவிர்த்து/சிதைத்து ஆங்கிலப் புலமையுள்ளவராக வர முடியும் என்பது ஒரு கனவே என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.
நன்றி: தமிழ் - Tami

No comments:

Post a Comment

THANK YOU