Friday, 31 August 2012

ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய மிருகமான கங்கா

ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய மிருகமான கங்காரு பற்றியே பேச்சு இருந்தது.  
கங்காரு என்ற பெயர் முதன் முதலாக 1770 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி கப்டன் ஜேம்ஸ் குக் என்பவரால் பதியப்பட்டுள்ளது. கப்பலைத் திருத்துவதற்காக Endeavour river (தற்போது cook town) இல் தங்கியிருந்தபோது, அந்த அதிசய மிருகத்தைப் பார்த்து 'அதன் பெயர் என்ன?' என்று அங்குள்ள ஆதிவாசிகளிடம் கேட்டிருக்கின்றார்கள். ஆதிவாசிகள் 'Kangaroo' ('நீங்கள் கேட்பது புரியவில்லை') என்று தமது Guugu Yimithirr பாஷையில் சொல்லியிருக்கின்றார்கள். அதுவே ஆங்கிலத்தில் அந்த மிருகத்தின் பெயராயிற்று.  
ஏறக்குறைய 50 இனங்கள். சாதாரணமாக மணிக்கு 25 கி.மீ தூரம்வரை ஓடக்கூடியவை. பொதுவாக 6 தொடக்கம் 20 வருடங்கள் வாழக்கூடியவை. தாவர போஷனி. புல், இலைகள் சாப்பிடும். மாலை அல்லது இரவு நேரங்களில் சாப்பிடும் - nocturnal (இரவில் நடமாடும் வகை) சார்ந்தவை. இவற்றிற்கு நீண்ட பின்னங்கால்களும், முன்னங்கால்கள் கைகளைப்போல குட்டையாகவும் உள்ளன. வால் மிகவும் வலிமையானது. தாவிப் பாயும்போது சமநிலை பேணவும், மெதுவாக நடக்கும் போது இன்னொரு கால் போலவும் பயன்படுகின்றது.
பொதுவாக வருடம் முழுக்க குட்டி போடும் இவை, ஒரு நேரத்தில் ஒரு குட்டியைத்தான் போடுகின்றன. குட்டி (Joey) (2 கிராம் எடை, 3 cm நீளம் கொண்டது) பிறக்கும்போது பார்வையற்ற இவை, ஒரு சில நிடங்களில் தாயின் வயிற்றுப் பகுதியில் உள்ள பையிற்குள் ஊர்ந்து சென்று தங்கிவிடும். குட்டிகள் பால் அருந்துவதற்கான முலையும் இதற்குள்ளேயே உள்ளன. பையிற்குள் 8 - 9 மாதங்கள் வரையில் இருக்கும். அதன்பிறகு முற்றாக இறங்கி வெளியே வந்துவிடும்.
கங்காரு இறைச்சி அதிக புரதச்சத்தும், இரும்பும், மிகக்குறைந்தளவு கொழுப்பும் கொண்டது. நீர் அருந்தாமல் தொடர்ச்சியாக பல மாதங்கள் இவை இருக்கும். கங்காருவைப் பற்றிய கதையொன்றை தான் இன்ரநெற்றில் வாசித்ததாகச் சொன்னான் மகன். அது தாய்மையின் உச்சம்.
ஒருமுறை அவுஸ்திரேலியாவில் கடும் வரட்சி. காட்டு விலங்குகளும் பறவைகளும் நீரைத்தேடி நகரத்தை நோக்கி வரத் தொடங்கின. மழை பெய்யாததால், மக்களுக்கும் வீட்டில் வளர்க்கும் மிருகங்களுக்குமே நீர் போதாத நிலை. நகரத்தில் உள்ள தண்ணீர்த்தொட்டிகளைத் தேடி வரும் காட்டுவிலங்குகளைத் துரத்துவதற்காக துப்பாக்கியுடன் காத்திருந்தார்கள் மனிதர்கள்.
அது ஒரு மாலை நேரம். நகரத்தின் வெளிப்புறத்தில் வீடு கட்டி வசித்து வந்த ஒருவர், தூரத்தே மரமொன்றின் மறைவில் இருந்து தனது வீட்டை உற்று நோகிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மிருகத்தைக் கண்டார். அது சற்று நேரத்தில் மெதுவாக வெளிப்பட்டு தயங்கியபடியே அவர் வீடு நோக்கி வரத் தொடங்கியது.
சுடுவதற்கு ரெடி. உற்று நோக்குகின்றார். அது ஒரு கங்காரு. பையில் ஒரு குட்டி. அதைச் சுட்டால் சிலவேளை குட்டியும் சாகலாம். அவர் மனம் கலவரமடைகின்றது. செய்வதறியாது திகைத்து அவர் நிற்கையில் கங்காரு அவரைக் கண்டுவிட்டது. இருப்பினும் தயங்காமல் நேராக தோட்டத்திலுள்ள தொட்டியை நோக்கிச் சென்றது. தொட்டியை அண்மித்ததும் உடலைச் சரித்து நின்றது. பையிற்குள்ளிருந்து தலையை நீட்டி தண்ணீரைப் பருகியது குட்டி. குட்டி நீரைப் பருகி முடிந்ததும், அந்தத் தாய்க்கங்காரு தான் ஒரு துளி நீர் பருகாமல் அந்த மனிதனைத் திரும்பிப் திரும்பிப் பார்த்தபடி சென்று காட்டிற்குள் மறைந்தது. கண்கள் குளமாக மனிதர் நெகிழ்ந்துவிட்டார்.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க 

சிம்பிள் வழி



தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் 


பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் 


முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான 


கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சு


லபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே 


இருக்கும்பைல்களை பாதிக்கிறது.


இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் 


உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் 


பென்டிரைவை


ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. 


வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால்

 

பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் 


தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. 


பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை 


எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். 


ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் 


எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு 


வருவது என பார்ப்போம்.


இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் 


கணினியில் Instol செய்து உபயோகிக்க 


வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக 


செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக 


செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.



1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி 


கொள்ளுங்கள்.


2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.


3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என 


பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்


4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது 


எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து 


Enter அழுத்தவும்



5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் 


ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும். உதவிக்கு 


கீழே உள்ள படத்தை பார்க்கவும்



உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.



◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து 


கொண்டு Enter அழுத்துங்கள்.



◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் 


பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் 


அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

வர்மக்கலை: தமிழனின் தற்காப்பு கலை


வர்மக்கலை: தமிழனின் தற்காப்பு கலை

வர்மம் ஆதித்தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று. இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிகளில் பரவி இருந்தது. இக்கலை சிதமருதுவதையைத் துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.


இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்க்கு சாட்சி.


அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில் 
"அகத்தியர் வர்ம திறவுகோல்"
"அகத்தியர் வர்ம கண்டி"
"அகத்தியர் ஊசி முறை வர்மம்"
"அகத்தியர் வசி வர்மம்"
"அகத்தியர் வர்ம கண்ணாடி"
"அகத்தியர் வர்ம வரிசை"
"அகத்தியர் மெய் தீண்டா கலை" 
ஆகியவை குறிப்பிடத்தக்கவை 

" ஜடாவர்மன் பாண்டியன்" என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.

காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது.

இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் விளக்குகின்றன 

உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.

நமது வர்ம கலை பரவிய நாடுகள்:

வர்மமும் கிரேக்கமும்!

கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது. 
“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.


தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!


இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்). 

தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.


சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.


வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:

1. தொடு வர்மம்: இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும் 


2. தட்டு வர்மம்: இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்

3. நோக்கு வர்மம்: பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார் 


4. படு வர்மம் : நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும். 

உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்
நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும் 
முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்
கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்
கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்
கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்...

வர்மத்தின் அதிசயங்கள் !!

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன் ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.
ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.
ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.
நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும். மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.



Tuesday, 28 August 2012

வரலாறு கடந்து வந்த பாதையில் ALL IN 1


வணக்கம் நண்பர்களே இன்று பதிவில் நான் நண்பர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட சிலவற்றை உங்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன்.

நம் தாயும் நம் மொழியும் ஒன்றே அதை பேச மறுப்பது தன் தாயை வெறுப்பதற்க்கு சமம்.

வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கொரு குரு. அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும்…

வெற்றியின் போது கை தட்டும் அந்த பத்து விரல்களை விட, தோல்வியின் போது கண்ணீர் துடைக்கும் ஒரு விரலுக்கே மதிப்பு அதிகம்..

நீ நேசிக்கும் போது மட்டும் நேசிப்பவன் நண்பன் அல்ல, நீ வெறுக்கும் போதும் நேசிப்பவன் தான் உண்மையான நண்பன்.

நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே, உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழ விட மாட்டார்கள்.

நம் நட்பின் மீது பொறமைகொண்டது பிரிவு !! அதனால் தான் ...பிரிக்க துடிக்கிறது நம்மை, பாவம் அதற்கு எப்படி தெரியும் நம்மை பிரித்தாலும் என்றும் பிரியாத நினைவுகள் நம்மிடமே இருக்கிறது என்று !!!

வரலாறு கடந்து வந்த பாதையில்



Read more: http://urssimbu.blogspot.com/2011/02/blog-post.html#ixzz24pFTGzSG

மார்ட்டின் லூதர் கிங் - வரலாற்று நாயகர்!


  • மார்ட்டின் லூதர் கிங் - வரலாற்று நாயகர்!
  • மனுகுல நாகரிகத்திற்கு முரண்பாடான சில விசயங்கள் உலகின் ஏதாவது ஒரு மூலையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. விந்தை என்னவென்றால் எப்போது நாகரிகம் தோன்றியதோ அப்போதே அநாகரிகமும் தோன்றத் தொடங்கி விட்டன. தொன்று தொட்டே இருந்து வந்த அநாகரிகங்களில் ஒன்று கருப்பினத்தவரை கொத்தடிமைகளாக நடத்தியது.ஆபிரகாம் லிங்கன் என்ற உன்னத மனிதனின் முயற்சியால் கருப்பினத்தவரின் அடிமைத்தலை அறுத்தெரியப்பட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் அமெரிக்காவில் அடிமைத்தலை அகன்றதே தவிர அங்கு கருப்பினத்தவருக்கு சம உரிமை மறுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டிலும் நிலவிய அந்த அவலத்தைப் போக்க அரும்பாடுபட்ட ஒருவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் அன்னல் காந்தியடிகளின் அகிம்சை வழியைப் பின்பற்றி கருப்பினத்தவர்களின் சம உரிமைக்காகப் போராடி உயிர் துறந்த மார்ட்டின் லூதர் கிங்.  

  • 1929-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் நாள் அமெரிக்காவின் அட்லாண்டா (Atlanta) நகரில் பிறந்தார் மார்ட்டின் லூதர் கிங். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் அவர் சமயக்கல்வி கற்றார். பின்னர் அவர் ஒரு ( Dexter Avenue Baptist Church) பாப்டிஸ்ட் பாதிரியானார். கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்ட அமெரிக்க சூழ்நிலை அவரது மனதை எப்போதுமே அரித்துக் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் முன்னேற்றத்தில் உலகுக்கே முன்மாதிரியாக விளங்கிய அமெரிக்காவில் அதன் குடிமக்களுக்கு சரிசமமாக வாழும் சூழ்நிலை இல்லை என்பதுதான் வேதனையான உண்மை. கருப்பினத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்த்தனர் வெள்ளையர்கள். உணவகங்கள், பேருந்துகள், பொழுதுபோக்கு இடங்கள் என எந்த பொது இடத்திலும் கருப்பர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடங்களை மட்டும்தான் கருப்பர்கள் பயன்படுத்த வேண்டும். 


  • ஒதுக்கப்பட்ட இடங்களை விட்டு வெள்ளையர்களின் இடங்களுக்கு அவர்கள் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? அந்த அநாகரிகமான விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை நிச்சயம். எவ்வுளவு காலம்தான் பொறுத்துக்கொள்வது. 1955-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி கருப்பர்களின் பொறுமை எல்லைக் கடக்கும்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்த தினம் ரோஸா பார்க்ஸ் (Rosa Parks) என்ற கருப்பின பெண் ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தார். ஒரு நிறுத்தத்தில் சில வெள்ளையர்கள் அதே பேருந்தில் ஏறினர். அப்போது அவர்கள் அமர இருக்கை இல்லாததால் ரோஸா பார்க்கை அந்த இருக்கையை விட்டு எழுந்திருக்குமாறு அதட்டினார் பேருந்து ஓட்டுனர். எழுந்திருக்க மறுத்ததால் ரோஸா பார்க் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகள் அவமானங்களைத் தாங்கிக்கொண்டிருந்த கருப்பினத்தவர்கள் இம்முறை விடுவதாக இல்லை. ரோஸா பார்க் சம்பவத்தைக் கண்டித்து சுமார் 50000 கருப்பர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடும் நடத்தினர். இருப்பினும் கருப்பினத்தவர்களின் கொந்தளிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தும் ஒரு ஆர்ப்பாட்டமாக அது அமைந்தது.

  • மார்ட்டின் லூதர் கிங்கிற்கு மகாத்மா காந்தியின் மீதும், அவரது அகிம்சைப் போராட்டத்தின் மீதும் அளவு கடந்த மரியாதை உண்டு. அன்னல் காந்தியின் உருவப்படத்தை அவர் வீட்டில் மாட்டி வைத்து வணங்கினார். காந்தியடிகளின் வழிகளில் அதிக நம்பிக்கை வைத்த அவர் தனது போராட்டங்களில் வன்முறை தலையெடுக்காமல் பார்த்துக் கொண்டார். சம உரிமைக்கோரும் இயக்கங்களில் அவர் மும்முரமாக ஈடுபட்டார். தனது இயக்கத்தை மிக கன்னியமாக அவர் நடத்திய முறையைப் பார்த்து சில வெள்ளையினத்தவரும்கூட அவரைப் பாரட்டினர். ஆனால் பல எதிரிகள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். அவரது வீட்டிற்கெதிரே குண்டுகள் வீசினர். அமெரிக்காவின் ரகசிய போலீசார் அவரை தற்கொலை செய்துகொள்ளுமாறு மிரட்டியதாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஆனால் தனது அமைதிப் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தார் லூதர் கிங்.

  • அறவழியில் போராடுவது பற்றி அறிந்து கொள்ள 1959-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார் லூதர் கிங். அங்கு ஒருமாத காலம் தங்கியிருந்து காந்தியடிகளோடு பழகிய தலைவர்களிடம் அகிம்சை போராட்டத்தைப் பற்றி கேட்டறிந்தார். மிகச்சிறப்பாகவும் உருக்கமாகவும் பேசக்கூடியவர் லூதர் கிங் அவரது பேச்சுகள் எழுச்சியூட்டியதே தவிர வன்முறையைக் கிளறியது இல்லை. 1963-ஆம் ஆண்டு வாஷிங்டெனில் மிகப்பெரிய அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்தார் லூதர் கிங். சுமார் இருநூற்றி ஐம்பதாயிரம் பேர் அங்கு திரண்டனர். அந்த அமைதிப் பேரணியில்தான் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவாற்றினார் மார்ட்டின் லூதர் கிங். உலகை மெய் சிலிர்க்க வைத்த பேச்சில் அவர் இவ்வாறு கூறினார்.....

  • "எனக்கு ஒரு கனவு உண்டு ஒருநாள் இந்த தேசத்தில் என்னுடைய நான்கு பிள்ளைகளும் அவர்களுடைய தோல் நிறத்தின் அடிப்படையில் அல்லாமல் அவர்களுடைய குணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். என்றாவது ஒருநாள் வெள்ளையின சிறுவர்களும், கருப்பின சிறுவர்களும் கையோடு கை கோர்த்து நடக்க வேண்டும்".


  • அந்தப் பேரணி நடந்த அடுத்த ஆண்டே 1964-ஆம் ஆண்டு சம உரிமைக்காகப் பாடுபட்ட லூதர் கிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வேறு வழியில்லாமல் 1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம் அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடணப்படுத்தும் மனித உரிமை சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை பெற்றுத்தரும் இயக்கத்தில் கருப்பினத்தவர்கள் மட்டுமே இடம்பெற்றால் பலன் இருக்காது என்று நம்பிய லூதர் கிங் மற்ற இனத்தவரையும் தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார். எல்லோரின் மனங்களும் மாறினால்தான் சம உரிமைக்கு வாய்ப்பு உண்டு என்று அவர் நம்பினார். ஆனால் மற்ற இனத்தவரும் அவரது இனத்தில் சேர்ந்தது குறித்து இன ஒதுக்கல் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். அந்த ஆத்திரம்தான் லூதர் கிங்கின் உயிருக்கு உலை வைத்தது. 

  • டென்னசியில் (Tennessee) 1968-ஆம் ஆண்டு ஏப்ரம் 4-ஆம் நாள் ஒரு வெள்ளையினத் தீவிரவாதி லூதர் கிங்கை துப்பாக்கியால் சுட்டான். அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது அப்போது அவருக்கு வயது 39. இந்தியாவில் வென்ற அகிம்சை அமெரிக்காவிலும் வென்றது. ஆனால் காந்தியடிகளுக்கு கிடைத்தது போலவே மார்ட்டின் லூதர் கிங்கிற்கும் துப்பாக்கி குண்டுதான் வெகுமதியாக கிடைத்தது. லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவரை கருப்பு காந்தி என்றும் அழைத்தது. மார்ட்டின் லூதர் கிங் என்ற அந்த மாமனிதனின் நினைவாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை 'மார்ட்டின் லூதர் கிங் தினம்' என்று அனுசரிக்கப்படுகிறது. அன்று அமெரிக்கா முழுவதும் விடுமுறை நாள். 


  • சமூக அநீதிகளை எதிர்த்து தைரியமாக போராடியவர்களின் உயிர்களை சில நாச சக்திகள் அழித்தாலும் வரலாற்றில் அவர்களுக்கென்று உள்ள இடத்தை யாராலும் அழிக்க முடியாது. அகிம்சை வெல்லும் என்பதை இந்தியாவில் நிரூபித்தார் காந்தியடிகள். மார்ட்டின் லூதர் கிங் அதே உண்மையை அமெரிக்காவில் நிகழ்த்திக் காட்டினார். லூதர் கிங்கைப் போல் அகிம்சை என்ற அறவழியில் சமூக அநீதிகளை அழிக்க முனைவோருக்கு நிச்சயம் வரலாறும், அந்த வானமும் வசப்படும். 



சுவாமி விவேகானந்தர்-(வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே


39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் விவேகானந்தர் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஓர் உதாரணமான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். சுவாமி கூறியதுபோல் உடல்வலிமை, மனவலிமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தொடர்கல்வி ஆகியவற்றில் சில பண்புகளை நாம் கடைபிடித்தால்கூட நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.


1893 ஆம் ஆண்டு செப்டம்பர்  11-ஆம் தேதி இடம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலம் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  பல்வேறு நாடுகளிலிருந்து பல சமயங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். மிடுக்காக உடையணிந்த மேற்கத்திய மத போதகர்கள் லேடீஸ் & ஜெண்டில்மேன் என்று தொடங்கி தங்கள் சொற்பொழிவை ஆற்றினர். 

இந்தியாவை பிரதிநிதித்து ஒருவர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார் அவரது முறை வந்ததும் பேசுவதற்கு மேடை ஏறினார். தனக்கு முன் பேசியவர்கள் போல மிடுக்கான கோட் சூட் உடைகளைப்போல் அல்லாமல் காவி உடையும் தலைப்பாகையும் அணிந்திருந்த அவரை பார்த்தவுடன் அரங்கத்தில் லேசான சலசலப்பும் சிரிப்பும் பரவியது. சிலர் கேலியுடன் பார்த்தனர், வேறு சிலர் இவர் என்ன பேசப் போகிறார் என்று கொட்டாவி விட்டனர். இன்னும் சிலர் அருகில் அமர்ந்திருந்தவரிடம் பேசத் தொடங்கினர்.

அந்த அலட்சியத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக சிறிது நேரம் அனைவரையும் பார்த்த பிறகு சகோதர சகோதரிகளே என்று தனது சொற்பொழிவை தொடங்கினார். அவர் கூட்டத்தினரை அவ்வாறு அழைத்த விதத்திலேயே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவனமும் அவர்மீது திரும்பியது சிறிது மவுனம் காத்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசி முடித்தபோது அரங்கம் வியப்போடு கைதட்டி அவருக்கு மரியாதை செய்தது. அவரது ஆடையிலிருந்த வித்தியாசத்தை மறந்து அவரின் பேச்சிலிருந்த உயர்ந்த கருத்துக்களை நினைத்து மகிழ்ந்தது.

இந்தியா, இந்துமதம் பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்தும் கருத்துக்களை அந்த அந்நிய மேடையில் அழகாக முழங்கி மேற்கத்திய உலகில் மரியாதையைப் பெற்ற அந்த வரலாற்று நாயகர்தான் சுவாமி விவேகானந்தர். செல்வ செழிப்பில் பிறந்தும் துறவரம் பூண்டு நவீன இந்தியாவுக்கு நல்வழிகாட்டிய அந்த அரிய மாமனிதரின் கதையை தெரிந்துகொள்வோம்.

1863 ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி கல்கத்தாவில் புகழ்பெற்ற டார்டா குடும்பத்தில் உதித்தார் நரேந்திர நாதர் அதுதான் விவேகானந்தரின் இயற்பெயர். தந்தை விஸ்வநாதர் தாயார் புவனேஸ்வரி தேவி, செல்வந்தர்களாகவும் அதே நேரத்தில் மக்களின் மரியாதை பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆங்கிலம் மற்றும் பெர்ஸிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்த தந்தை  கல்காத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் அவர். தாய் புவனேஸ்வரி தேவி ராமாயணத்திலும் மகாபாரத்திலும் புலமைப் பெற்றிருந்தார்.

தினசரி நரேந்திர நாதருக்கு அவர் ராமாயண, மகாபாரத கதைகளை சொல்வார்.  ராமர் கதாபாத்திரின் மீது மரியாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார் நரேந்திர நாதர். சிறுவயதிலேயே தியானத்தில் மூழ்க தொடங்கினார். நரேந்திர நாதர் அவ்வாறு தியானத்தில் இருக்கும்போது சில நேரங்களில் உறவினர்கள் அவரது உடலை குலுக்கி அவரை சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியிருந்தது. சிறுவயதிலேயிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் அவருக்கு இருந்தது. பின்னாளில் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார்.

மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு 'விவேகானந்தர்' என்ற பெயரை சூட்டினார்  ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். யோகாசனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்களை கற்பிக்க தொடங்கினார் விவேகானந்தர். காசி, லக்னோ, ஆக்ரா. பிருந்தாவனம், ரிஷிகேஸ் என இந்தியாவின் எல்லா பகுதிக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் பசிக்கொடுமையை உணர்ந்து அடுத்த வேளை என்ன சாப்பிடுவது , எங்கு உறங்குவது என தெரியாமல்கூட கடுமையான துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
அவர் இராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டபோது அந்தக்கால கட்டத்தில் இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொற்பொழிவாற்றுவதில் வல்லவரான அவருக்கு சிக்காகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது.  விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மைவிட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிக்காகோ சென்றபோதுதான் அந்த புகழ்பெற்ற சொற்பொழிவை ஆற்றினார் விவேகானந்தர்.

செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு பிறகு மேலும் மூன்று நாட்கள் அவரது சொற்பொழிவுகளில் மயங்கினர் மேற்கத்தியர்கள். அளவுக்கு மீறிய மதபற்று மூடத்தனமான பக்தி இவற்றிலிருந்து தோன்றிய மத வெறியால் உலகம் வன்முறையிலும் ரத்தக்களரியிலும் மிதக்கிறது. அதனால் நாகரிகம் அழிந்து எத்தனையோ சமுதாயங்கள் நம்பிக்கை இழந்துவிட்டன என்று முழங்கினார் விவேகானந்தர். அவரது பேச்சையும், சொற்பொழிவையும் கேட்டு அதிசயித்த ஒரு பெண் விவேகானந்தர் சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்தார். அவரை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றார்.

அயோவா, சென்லுயி, டெட்ராயிட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் நியூ யார்க் ஆகிய இடங்களில் விவேகானந்தருக்கு பேச அழைப்பு வந்தது. அவரும் சென்று பேசினார் அந்த இடங்களிளெல்லாம் அந்த பெண் பின்தொடர்ந்தார், கடைசியாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அமெரிக்க இளையர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னை சுற்றுகிறார்கள் ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் நன்றாக இருக்குமே! நாம் திருமணம் செய்துகொண்டால் என் அழகோடும் உங்கள் அறிவோடும் சேர்ந்த குழந்தை பிறக்கும் என்று கூறினார் அந்த 20 வயது இளம்பெண். அப்போதுதான் 30 வயதைத் தொட்டிருந்த விவேகானந்தர் என்ன பதில் சொன்னார் தெரியுமா??

தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 வயது இருக்கும். நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார். சுவாமி விவேகானந்தரின் அந்த பதிலை கேட்டு ஸ்தம்பித்துபோனார் அந்தப் பெண். தன் கண் காண்கின்ற பெண்களையெல்லாம் தாயாக கருதியவர் சுவாமி விவேகானந்தர். சிக்காகோ சொற்பொழிவுகளை முடித்துகொண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விட்டு 1897 ஆம் ஆண்டு இராமேஸ்வரம் திரும்பினார் சுவாமி விவேகானந்தர்.

உலகம் முழுவதும் இந்தியாவின் சிறப்பையும், இந்துமதத்தின் கூறுகளையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ந்தேதி தமது 39 வயதில் இறைவனடி சேர்ந்தார். கண்ணியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம்  “விவேகானந்தர் பாறை” என்று அழைக்கப்படுகிறது. கிழக்கத்திய மேற்கத்திய கலாச்சாரங்கள் பற்றிய ஆழமான அறிவு, ஆன்மீக ஞானம், பேச்சாற்றல் இவைதான் விவேகானந்தரின் அடையாளங்கள். இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் நிலவிய வறுமையை கண்டு மனம் பதைத்தவர் சுவாமி விவேகானந்தர்.

இந்தியாவின் சிறப்பு, மூடத்தனத்தின் ஒழிப்பு, பகுத்தறிவின் முக்கியத்துவம் கல்வியின் அவசியம், ஏழ்மையின் கொடுமை என பல்வேறு பொருள் பற்றி எண்ணிலடங்கா சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். 1897 ஆம் ஆண்டில் "இராமகிருஷ்ண மிஷன்" என்ற அமைப்பையும் உருவாக்கினார்.

எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்கும் வலிமை உங்களுக்கு உண்டா ?உங்கள் அன்புக்குரியவர்கள் எதிர்த்தாலும் உங்கள் இலக்குகளை அடையும் விடாமுயற்சி உண்டா? தன்னம்பிக்கை இருந்தால்தான் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும். உடலை திடமாக வைத்திருக்க வேண்டும் அதோடு கற்பதன் மூலமும் தியானத்தின் மூலமும் நீங்க வெற்றியடையலாம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற பொன்மொழிகளில் சில:-
  • உன் லட்சியத்தை அடைய ஓராயிரம் முறை முயற்சி செய்!ஆயிரம் முறை தோல்வி வந்தாலும் ,மீண்டும் ஒரு முறைமுயற்சி செய்! 
  • பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. 
  • துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே சிறந்தது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு! 
  • கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது. 
  • எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை. 
  • எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று அஞ்சி கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
  • உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உனக்கு முன்னால் உள்ள எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அர்த்தம்.

    SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா


    • SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்)
    • இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.

    • அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made  in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.

    • சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.

    • 1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரிட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார் தந்தை அதனால் பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் அலாதி பிரியம் மொரிட்டாவுக்கு. பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன.

    • பள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தார் மொரிட்டா 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலையே செய்து சவுகரியமான பிரச்சினையில்லாத வாழ்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் பரம்பரை தொழில் என்றாலும் வளர்ச்சிக்கு இடமில்லாத தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.

    • 1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் தொலைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவணம் செலுத்தினார் மொரிட்டா.

    • அந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் என்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது. 

    • சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.
    • இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவணம் செலுத்தினார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.
    • அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அனுக்கமானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் எனவே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர். ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும். 

    • 1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரிட்டாவின் தலமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு ஆக பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.     

    • அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொருப்புகளிலிருந்தும் விலகினார்.   

    • மொரிட்டாவுக்கு அடுத்து சோனி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் யார் தெரியுமா? மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவர். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலமை நிறுவன பொருப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.   

    • தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் சஞ்சிகையில் உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான்.  

    • உலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன. அந்த தொழில் பிரம்மாவின் கதையை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமா? Made in japan என்ற அவரது சுயசரிதையை படித்துப்பாருங்கள்.  
    • 1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரிட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி. எதையுமே ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் தொலைநோக்குடனும் செய்ததால்தான் அக்யோ மொரிட்டாவுக்கு அந்த வானம் வசப்பட்டது.

    • மொரிட்டாவைப்போல நாமும் ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி தொலைநோக்கு ஆகியவற்றை காட்டினால் எந்த வானமும் நிச்சயம் நமக்கும் வசப்படும்.    


    பில்கேட்ஸ்[வாழும் வரலாறு]


    • வானம் வசப்படுமே - வரலாற்று நாயகர்-5 பில்கேட்ஸ்[வாழும் வரலாறு]
    • வணக்கம் நண்பர்களே, இன்று நாம் சந்திக்க இருக்கும் வரலாற்று நாயகர்...
    • கணினித்துறையைச்சார்ந்த ஒருவரைத்தான் ஆம்,  ஃமைக்ரோசாப்ட் எனும் மிகப்பெரும் நிறுவனத்தைத் தோற்றுவித்து உலக பணக்காரர்களில் நீண்ட நாட்களாக முதலிடத்தைப்பிடித்து வந்த இன்று நம்மிடையே வாழும் ஒரு உதாரணம் ஃபில்கேட்ஸ்..


    • ஃமைக்ரோசாப்ட் நிறுவனம் துவக்கப்பட்டு சரியாக இந்த வருடத்தோடு 35 வருடம் முடிகிறது.  விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்துதான் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.  இப்பொழுது விண்டோஸ் 7 வெளியிடப்பட்டு சக்கை போடு போடுகிறது. அத்துடன் இவர்கள் வெளியிட்ட விண்டோஸ் எம் இ மற்றும் விண்டோஸ் விஸ்டா மட்டுமே தோல்வியுற்றது.

    • விண்டோஸ் முதல் பதிப்பின் படம் கீழே
    • ஃபில்கேட்சின் வரலாறு:
    • இந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தரப்போகிறது  ஒரு தேவதை என்று வைத்துக் கொள்வோம் ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமும் அந்த தேவதை உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தருகிறது அதுவும் ஒரு நாளுக்கு அல்ல ஒரு ஆண்டுக்கு அல்ல 21 ஆண்டுகளுக்கு அப்போது உங்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும்,

    • கொடுக்கும் தேவதைக்கே தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நிமிடத்திற்கு 2600 அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில் 21 ஆண்டுகள் எவ்வளவு நிதி சேருமோ அவ்வளவு நிதிக்கும் இப்போதே சொந்தக்காரராக இருக்கும் ஒருவரை அறிமுகம் செய்து வைக்கத்தான் ஆம் உலகின் ஆகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து 11 ஆண்டுகளாக பெற்று வந்த அவர்தான் கணினி உலகம் என்ற வானத்தை வசப்படுத்திய ஃபில்கேட்ஸ்...

    • 1955ஆம் ஆண்டு  அக்டோபர் 28ந்தேதி அமெரிக்காவிம் சியாட்டோ நகரில் பிறந்தார் வில்லியம் ஹென்றி கேட்ஸ் அவருக்கு 2 சகோதரிகள், தந்தை வழக்கறிஞர் தாயார் பள்ளி ஆசிரியை ஆரம்பித்தில் மிகவும் கூச்ச சுபாவம் உடைய பில்கேட்ஸ் தனிமையை அதிகம் விரும்புவார் எப்போதுமே ஏதாவது ஒரு சிந்தனையில் ஈடுபட்டிருப்பார் சக வயது மாணவர்கள் விரைவுக் கார்களையும் திரைப்படங்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருக்க பில்கேட்ஸ் மட்டும் எண்களைப் பற்றியும் அவற்றின் மந்திரம் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பார் வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு சிறு வயதிலேயே துளிர்விடத்துவங்கியது.

    • இரவு உணவுக்குப் பின் குடும்பமாக சேர்ந்து ஃபிரிட்ஜ் என்ற விளையாட்டை ஆடுவார்கள் எனவே ஒவ்வொரு இரவும் வெற்றிப் பெருவதைப் பற்றிய நினைப்பார் பில்கேட்ஸ் அவருக்கு 13 வயதானபோது அவரது நண்பரான ஃபால் எலனுடன் சேர்ந்து கணினிக்கான மென்பொருள் எழுதக் கற்றுக் கொண்டார் ரிஸ்க் என்ற கணினி விளையாட்டையும் உருவாக்கினார், தன் நண்பருடன் சேர்ந்து கணினியில் பல மணி நேரம்  செலவிட்டு மென்பொருளில் உள்ள குறைகளைக் கண்டறிவார் ஃபில்கேட்ஸ்.

    • 1973ல் ஹாபர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார் அங்கு இருந்த காலத்தில்தான் கணினிகளுக்கு மென்பொருள் எழுதப் பயன்படும் Basic என்ற மொழியை உருவாக்கினார் 2 ஆண்டுகள் கழித்து 1975ல் தன் நண்பன் ஃபால் எலனுடன் இணைந்து ஃமைக்ரோசாப்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

    • 1977ல் பட்டப்படிப்பை முடிக்காமலேயே ஹாபர்டை விட்டு வெளியேறி நிறவனத்தில் முழுக் கவணம் செலுத்தத் தொடங்கினார், இல்லக் கணினிகளுக்குத் தேவையான மென்பொருளை உருவாக்குவதில் இருவரும் கவணம் செலுத்தினர், 1981ல் IBM கணினிகளுக்கான MS-DOS என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம்  அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தார்,அதன் சிறப்பை எடுத்துக்கூறி மற்ற கணினி தயாரிப்பாளர்களையும் MS-DOS இயங்குதளத்தைப் பயன்படுத்துமாறு ஊக்கமூட்டினார் ஃபில்கேட்ஸ்...

    • அது ஏற்றுக்கொள்ளப்பட்டு 80களில் கணினிகள் பெருமளவில் விற்பனையாகத் தொடங்கின விற்பனையாகும் ஒவ்வோரு கணினிக்கும் அதன் இயங்குதளத்திற்கான லைசென்ஸ் கட்டணம் கிடைப்பதால் ஃமைக்ரோசாப்ட்டின் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.

    • மாறிவரும் உலகில் மாறாதிருப்பது மாற்றம் ஒன்று மட்டுமே என்ற சொற்றொடர் கணினி உலகத்திற்குதான் மிகவும் பொருந்தும் அதை உணர்ந்துதான் போட்டியை எதிர்பார்த்துதான்  ஃமைக்ரோசாப்ட் நிறுவனமும் புதிய புதிய மென்பொருள்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது 

    • IBM கணினிகளுக்கு போட்டியாக மவுஸ் கொண்டு இயக்கும் ஆப்பிள் கணினிகள் அறிமுகமானபோது அது மிகவும் பிரபலமடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்,உலகின் மொத்த கவணமும் ஆப்பிள் பக்கம் திரும்பியபோதும் அசரவில்லை பில்கேட்ஸ் அசுர வேகத்தில் ஃமைக்ரோசாப்ட் விண்டோஸ் என்ற இயங்குதளத்தை அறிமுகம் செய்தார் அது இமாலய வெற்றிப் பெற்றது .

    • அதுமட்டுமல்லாமல் 90களின் தொடக்கத்தில் பிரபலமாகத் தொடங்கியிருந்தது இணையம் அந்த இணையத்தில்  உலா வர உதவும் நெட்கேப்ஸ் என்ற மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்தார் மாக் ஆண்டர்சன் என்பவர் இணையத்தின் எதிர்காலத்தை நன்கு புரிந்து கொண்ட பில்கேட்ஸ் அந்த மென்பொருளை விலைக்கு வாங்க விரும்பினார், ஆனால் அதை விற்கவோ ஃமைக்ரோசாப்ட்டுடன் இணையவோ மாக் ஆண்டர்சன் மறுக்கவே  மீண்டும் தன் மந்திரத்தை நிகழ்த்திக் காட்டினார் ஃபில்கேட்ஸ்,

    •  நெட்கேப்ஸ்க்கு இணையான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற இணையச் செயலியை உருவாக்கி அதனை புதியக் கணினிகளுடன் இலவசமாக விநியோகம் செய்தார் அதனால் விலைக்கு விற்கபட்டு வந்த நெட்கேப்ஸின் இணைய ஆதிக்கம் மங்கத் தொடங்கியது அதுமாதிரியான விற்பனை தந்திரம் முறையற்றது என்று  ஃமைக்ரோசாப்ட்டின் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன ஆனால் ஃபில்கேட்ஸை அசைக்க முடியவில்லை.

    • என்ன வந்தாலும் பில்கேட்ஸுக்கே வெற்றி கிடைக்கும் ஏனென்றால் பில்கேட்ஸின் போட்டியாளர்கள் குறி வைப்பது பெரிய பெரிய நிறுவனங்களை ஆனால் பில்கேட்ஸ் குறி வைப்பதோ சாமானியர்களை என்று கூறுகிறது ஒரு குறிப்பு.

    • 1999ல்   Business at the speed of thought என்ற நூலை எழுதினார்  ஃபில்கேட்ஸ் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 60 நாடுகளில் விற்பனையாகிறது அந்த நூல், அதற்குமுன் அவர் எழுதிய The road a head என்ற நூலும்  அதிகமாக விற்பனையாகிறது 2 நூல்களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் முழு தொகையையும் அற நிதிக்கு வழங்கியிருக்கிறார் பில்கேட்ஸ், மெலிண்டா ஃபிரெஞ்சு கேட்ஸ் என்பவரை 1994 ஆம் ஆண்டு மணந்து கொண்டார் பில்கேட்ஸ், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பில்கேட்ஸும் மனைவியும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவி இதுவரை சுமார் 27 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிக்காக வழங்கியிருக்கின்றனர்.

    •  குறிப்பாக உலக சுகாதாரம், கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு அந்த நன்கொடைப் பயன்படுத்தப்படுகிறது இன்னும் சுமார் பத்து ஆண்டுகள் ஃமைக்ரோசாப்ட்டின் தலைமை பொருப்பில் இருந்துவிட்டு அதன்பிறகு தனது 95 சதவிகித சொத்தை அறப்பணிகளுக்கு கொடுக்கப்போவதாக  கூறியிருக்கிறார் உலகின் ஆகப் பெரிய பணக்காரரான ஃபில்கேட்ஸ்...



    • நாமும் வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்!

    • “பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
    • ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”



    சிந்தனைக்கு...சில


    • சிந்தனைக்கு...
    • வணக்கம் நண்பர்களே, ஒரு புதிய முயற்சியாக நான் படித்து கற்றுக்கொண்ட, நண்பர்கள் பகிர்ந்துகொண்ட பொன்மொழிகள்,தத்துவங்கள் மற்றும் சிந்தனையைத் தூண்டுகின்ற சின்ன சின்ன தகவல்களை உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்..இதோ எனது முதல் முயற்சியாக:

    • தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.

    • ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.

    • பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணிவை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்.

    • வாழ்க்கையில் சம்பாதிக்கக்கூடிய மிகப் பெரிய விசயம் பொறுமை.

    • எதை நீ இழந்தாலும் மனம் தளர்ந்துவிடாதே, உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறது.

    • நேரத்தை வீணாக தள்ளிப்போடாதே...தாமதங்கள் அபாயகரமான முடிவைக் கொண்டுள்ளன.

    • அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.

    • சோம்பலாய் இருப்பது, முட்டாள்கள் எடுத்துக்கொள்ளும் விடுமுறை.

    • உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.

    • நல்ல யோசனையை தோன்றும்போது உடனே செய்து விடுங்கள், ஏனென்றால் காலம் உங்களுக்காக காத்திருக்காது.

    • மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது.

    • அன்பு தன்னையே கொடுக்கிறது, வாங்கப்படுவதில்லை.

    • கடுமையான வார்த்தைகளை கையாள்வது, எப்போதும் பலவீனத்தின் அடையாளம்.

    • பலம் பொருந்திய உடலைவிட, சிந்திக்கக்கூடிய நல்ல மூளையே சிறந்தது.

    • எல்லா கெட்ட நடிவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை.

    • தோல்வி என்ற படி இருந்தால், அங்கே நிச்சயம் வெற்றி என்ற மாடி இருக்கும்.

    • பிறருடைய முதுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்.

    • சொற்கள் வெறும் நீர்க் குமிழிகள், ஆனால் செயல்கள்தான் தங்கத்துளிகள்.

    • அந்தஸ்தின் அடையாளம் வெறும் அடையாளம் மட்டுமே, அதுவே அந்தஸ்து அல்ல.

    1. வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.
    ######################################################