Sunday 27 May 2012

என்னதான் இருக்கிறது சதுரகிரியில்....!

தற்காலத்தில் சித்தர்களைக் குறித்தான ஆக்கங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் மிகையாக புராணக் கதைகளுடன் பின்னப்பட்டே வெளியிடப் படுகிறது. இப்படியான ஆதாரஙகள் ஏதும் என்னிடத்தில் இருக்கும் புத்தகங்களில் இல்லை என்பது ஆச்சர்யமான ஒன்று. இதன் மூலம் எவரையும் குறை சொல்வது என் நோக்கமில்லை.

இன்றைய பதிவில் சதுரகிரி மலையில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை தனித்தனியே பார்ப்போம்.

கோவில்கள்

சதுரகிரியில் கருப்பண்ணசமி, இரட்டைலிங்கம், கருப்பன் கோவில், சந்தனமகாலிங்க சுவாமி கோவில், சுந்தரர் கோவில், மகாலிங்கர் கோவில், சுந்தரலிங்கர் கோவில், வெள்ளைப் பிள்ளையார் கோவில், கன்னிமார் கோவில் ஆகியவை முக்கியமான கோவில்களாக சித்தர்களின் பாடல்களில் குறிக்கப் பட்டிருக்கிறது.

சித்தர்கள்

இங்கே வாழ்ந்திருந்த சித்தர் பெருமக்களை பற்றி கணக்கிட்டால் அநேகமாய் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் இந்த மலையோடு தொடர்புடையவர்களாகவே இருந்திருக்கின்றன. பலர் இங்கே சமாதியடைந்திருக்கின்றனர்.இன்றும் பல சித்தர் பெருமக்கள் இங்கே வாழ்வதாகவும் நம்பப் படுகிறது.

தீர்த்தம்/ஆறுகள்

சந்திரதீர்த்தம், கவுண்டுண்யஆறு, சந்தனமாகாலிங்க தீர்த்தம், திருமஞ்சனப் பொய்கை, பொய்கை தீர்த்தம், பசுக்கிடைத்தீர்த்தம், குளிராட்டி பொய்கை, வற்றாப்பொய்கை, பாம்புக் கேணி, உதக சுனைகள் போன்றவை ஒன்றுக்கும் மேற்பட்ட சித்தர்களின் பாடல்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இவை தவிர வேறு பல தீர்த்தங்களைப் பற்றி குறிப்புகள் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன.

மரங்கள்/மூலிகைகள்

சதுரகிரி மலையில் மூங்கில், நாங்கில், கோங்கை, கொங்கு, சந்தனம், அகில், அசோக்கு, தேக்கு, வேங்கை, சுரபுன்னை போன்ற அனேக மரங்களும்,வேறெங்கும் இலகுவில் கிடைக்காத அழுகண்ணி, இருப்பவல் செடி, உதிரவேங்கை, உரோமவேங்கை, உரோமவிருட்சம், ஏறழிஞ்சி, கற்றாமரை, கணைஎருமைவிருட்சம், கருநொச்சி, கருநெல்லி, கருங்கொடிவேலி, செந்தாடுபாவை, கையாந்தகரை, கானற்பலா, சாயாவிருட்சம், செங்கொடி வேலி, செங்கடுக்காய், செந்நாயுருவி, செங்கற்றாளை, தில்லைவிருட்சம், சஞ்சீவிமூலிகை, சிவந்தஇலைக்கள்ளி, சுணங்கிவிருட்சம், சோதிவிருட்சம், முண்டகவிருட்சம், பஞ்சதரு, வெண்ணாவல், மஞ்சப்பூத்தவேளை, வெள்ளைப்புனல்முருங்கை, சோதிப்புல்லு, பவளத்துத்தி, பொற்றலைக்கரிப்பான், கருநாரத்தை, நாகதாளி, வனபிரம்மி, பேய்சுரை, தொழுகண்ணி, முப்பிரண்டை, நாகபடக்கற்றாளை, குருவரிக்கற்றாளை போன்ற பல காயகற்ப மூலிகைகளும், இவை தவிர விஷப் பூலாமரம், முகம் வீங்கிமரம், எரிமுகிமரம், விஷதேற்ராமரம், தும்புகச்செடி பேன்ற பல விஷ செடிகளும் இருக்கின்றனவாம். இவை மனிதர் உடலில் பட்டாலே உயிராபத்து விளைவிக்குமாம்.

பறவைகள்/விலங்குகள்

பறவைக் கீரி, பறவைப்பாம்பு, பறவைப்பூனை, பறவை ஓந்தி என்னும் விசித்திர வகை விலங்குகளும், அகண்ட பேரண்டமாகிய இருதலைப்பட்சிகளும், தீவிழுங்கும் பட்சியும், மதிபமிழ்தத்தையுண்ணும் சகோரப் பட்சியாகிய செம்போத்தும், இன்னும் பல பறவைகளும், கும்புகும்பாய் சஞ்சரிக்கும் அன்றியும், சிங்கம்,யாளி, புலி, கரடி கடுவாய் போன்ற மானிடர்க்கு துன்பம் விளைவிக்கும் மிருகங்களும், மான், மரை, மலைப்பசு, வரையாடு, காட்டெருமை போன்றசாந்த மிருகங்களும் மானிடர் கண்களுக்கு புலப்படாது மறைந்து ஒற்றுமையாய் வாழுமாம்.  SIVA SIVA    GURU...

No comments:

Post a Comment

THANK YOU