Monday 28 May 2012

உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்


உங்கள் சிந்தனைக்கு சில நிமிடங்கள்:ஆப்பிள் ஏன் கீழ் நோக்கி விழவேண்டும்? என ஒரு இளைஞன் சிந்தித்தான்.புவியீர்ப்பு விசையின் முக்கியத்துவம் இந்த அறிவியல் உலகம் அறிந்து கொண்டது.
“சுமார் 20,000 ஆண்டுகள் கொண்ட நீண்ட வரலாற்றைக் கொண்டது நமது நாடு.மிகவும் திறமையான வீரர்கள், மிகவும் நுண்ணறிவுடைய அரசியல் சாணக்கியர்கள்,அனுபவம் நிறைந்த ஆட்சியாளர்கள்(மன்னர்கள்),பஞ்சமே இல்லாத நாடு என எல்லாத்துறைகளிலும் உச்சத்தைத் தொட்ட ஒரேநாடு நமது நாடு மட்டுமே!
இருந்த போதிலும் ஏன் 18 கோடி மக்கள் வெறும் 300 ஆங்கிலேயர்களுக்கு அடிமையானோம்?”- இப்படி ஒருவர் சிந்தித்தார்.(நமது நாட்டின் பெருமைகளை ஓரளவு அறிய கார்டூனிஸ்ட் மதன் எழுதி,ஆனந்தவிகடன் குழுமம் வெளியிட்டுள்ள ‘வந்தார்கள்,வென்றார்கள்’என்ற புத்தகத்தைப்படிக்கவும்)அவர் கி.பி.1920-களில் எம்.பி.பி.எஸ்., படித்து முடித்தவர்.நாக்பூரில் பிறந்தவர்.இவரது சிந்தனையின் விளைவாக பிறந்ததே ஒரு மாபெரும் இயக்கம் !!!
அது தான் ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்.!!!
ஒரு மகாராஜா இருந்தார்.நமது நாட்டில் கோவாப்பகுதியில்.அவர் அப்பகுதி ஆங்கிலேயத்தளபதிக்கு நண்பராக இருந்தார்.இருவரும் ஒருநாள் கோவா கடலோரம் அமர்ந்திருந்தனர்.நமது மகாராஜா அந்த ஆங்கிலேயத்தளபதியிடம் கேட்டார்.
“ஏன் தளபதி? உங்களுக்கு எங்கள் பண்பாடு தெரியாது.எங்கள் மொழி தெரியாது.எங்கள் சுபாவம் தெரியாது.இருந்து எப்படி 6000 மைல்கள் கடந்துவந்து எங்கள் நாட்டைக்
கைப்பற்றினீர்கள்?”
ஆங்கிலேயத்தளபதி புன்னகைத்தான்.பிறகு கூறினான்.
“உங்கள் படைவீரர்கள் 10 பேரை கடலை நோக்கி அணிவகுத்து நிற்கச்சொல்லுங்கள்”என்றான்.அதே போல ஆங்கிலேயத்தளபதியும் தனது ஆங்கிலேயப்படைவீரர்கள் 10 பேரை நமது இந்துவீரர்களுக்குச் சமமாக கடலை நோக்கி நிற்க வைத்தான்.இரு அணியையும் கடலைநோக்கி ராணுவ மிடுக்குடன் ந்டக்க உத்தரவிட்டான்.
நமது வீரர்களில் முதல் வீரன் தனதுகணுக்காலில் கடல் அலைபட்டதும் மேலே நகரவில்லை.ஆனால்,ஆங்கிலேய வீரர்கள் கழுத்தளவுவரை(அதாவது தனது ஆங்கிலேயத்தளபதி ஸ்டாப் மார்ச் எனக்கூறும்வரை கவாத்து போய்க்கொண்டே)இருந்தனர்.
பிறகு சொன்னான் அந்த ஆங்கிலேயத்தளபதி,
‘இதுதான் காரணம்” என்று.
ஒரு முட்டாள் தனது தலைவனாக இருந்தாலும் அவனது உத்தரவுக்குக் கீழ்ப்படிவது ஆங்கிலேயனது குணம்.
ஒரு சர்வ வல்லமைதாங்கிய மகாராஜா சொன்னாலும் நமக்கு நம் உயிர் வெல்லக்கட்டி.

No comments:

Post a Comment

THANK YOU