Wednesday, 30 May 2012

ஜீவசமாதியில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்





நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்திருக்கும் கிராமம் பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இந்த கிராமம் சங்கரன்கோவில்,புளியங்குடி,கடையநல்லூர் இந்த மூன்று ஊர்களுக்கும் நடுவே அமைந்திருக்கிறது.இந்த கிராமம் மதுரை டூ செங்கோட்டை ரயில் பாதையில் அமைந்திருக்கிறது.தினமும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி,காலை 11 மணி,மாலை 5 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது.சுமார் 2.45 மணி நேரத்துக்குள் அது பாம்புக்கோயில்சந்தையை வந்தடைகிறது.மதுரையிலிருந்து புறப்படும் அந்த பயணிகள் ரயில் திருமங்கலம்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்,சங்கரன்கோவில்,பாம்புக்கோவில்சந்தை என்று பயணிக்கிறது.பாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.


தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகளில் அளவற்ற சக்திவாய்ந்த ஜீவசமாதி இந்த மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.இந்த ஜீவசமாதியோடு மாதவானந்த சுவாமிகளின் ஆசிரமும் அமைந்திருக்கிறது.பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் தண்டவாளத்தின் வழியாக(செங்கோட்டை பாதையில்) சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு பயணிக்க வேண்டும்.பயணித்ததும்,ஒரு சிறிய சாலை குறுக்கே செல்லும்.அந்த சாலையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஆலமரமும்,அதன் எதிரே ஒரு குளமும் தென்படும்.அதுதான் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.


இங்கே குறைந்தது ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;அவ்வாறு ஜபிக்கத் தேவையான மஞ்சள் துண்டு.இரு ருத்ராட்சங்களுடன் வருவோம்;இந்த ஆசிரமத்தில் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் தனித்தனியே தங்கும் இடங்களும்,அன்னதான வசதியும் இருக்கின்றன.
யார் ஒவ்வொரு அமாவாசை அல்லது பவுர்ணமியன்றும் இங்கு இரவில் தங்கி இவரை தியானிக்கிறார்களோ,அவர்களுக்கு மாதவானந்த சுவாமிகளின் ஆசி கண்டிப்பாக கிடைக்கும்.இங்கு தங்குவோர் செய்ய வேண்டியது:


இரவு ஒரு மணி நேரமும்,அதிகாலை ஒரு  மணி நேரமும் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதியில் மஞ்சள்துண்டு விரித்து ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க வேண்டியது மட்டுமே!!


இந்த சனிக்கிழமை இரவில் அங்கே சந்திப்போம்;கூட்டாக ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிப்போம்;அளவற்ற அருளாற்றலைப் பெறுவோம்.

ஒரு கேள்வி பதிலும்;இந்த செல்யுகத்தில் நமது சிந்தனைக்கு!!!

பரதனாரே! எப்பேர்ப்பட்ட விசுவாமித்திரரே மேனகையின் அழகில் சறுக்கவில்லையா?

பதில்:எவ்வளவு பெரிய தவயோகியாக இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் உதாரணம் ஆகும்.(ஆண் என்பது பஞ்சும்,பெண் என்பது நெருப்பும் போன்றது)பொதுவாக கீழே வீழ்ந்த பலர் எழுந்ததே இல்லை;ஆனால்,விசுவாமித்ரர் எழுந்தது மட்டுமல்ல; மந்திரங்களுக்கெல்லாம் தாய் மந்திரமாகிய காயத்ரி மந்திரத்தை தனது தவ ஆற்றலால் இந்த உலகுக்கு வழங்கினார்;(நன்றி:விஜயபாரதம்,25.5.12)
நமது சிந்தனைக்கு

அது மட்டுமா? காயத்ரி மந்திரத்தின் சக்தியால் புதியபிரபஞ்சத்தையே உருவாக்கினார்; புதிய பிரம்மாவையும் படைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன;இந்த  புராணச் செய்தி உண்மை என்பதை இன்றைய நவீன வானியல் ஆராய்ச்சிகள் நிரூபித்துவிட்டன.பூமியின் தெற்குப்பகுதிக்கு நேர் மேலே இருக்கும் விண்மீன் கூட்டங்கள் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக உதயமாகியிருக்கின்றன என்பதே அந்த வானியல் ஆராய்ச்சியின் முடிவாகும்.

மனிதன் ஒவ்வொருவரும் தனது மன சக்தியை ப்ராணயாமம்,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் மூலமாக அதிகப்படுத்திக்கொண்டே சென்றால்,அடுத்த சில வருடங்களில் பிரபஞ்சத்தில் மறைந்திருக்கும் அஷ்ட கர்ம சக்திகளும் நமக்குக்கைகூடும்;அப்படிக்  கைகூடும்போது மனதில் காமகுரோதம்(வக்கிர அல்லது தீய எண்ணங்கள்) அதிகரிக்கும்;

அனுபவப்படி, சில மாதங்கள் நாம்  ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்தாலே தீய அல்லது வக்கிர எண்ணங்கள் தலைதூக்கவே செய்யும்.அந்த தீய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்குப்பதிலாக,மந்திர ஜபத்தில் கவனத்தைச் செலுத்தப் பழகுவது அவசியம்.ஏனெனில்,கலியுகத்தில் மாயை என்னும் சக்தி நம்மை ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கக்  கூடியது.இந்த ஒரே ஒரு படியைத் தாண்டிவிட்டால் போதும்;அப்புறம் ஆன்மீக வாழ்க்கையில் மள மளவென்று முன்னேற ஆரம்பித்துவிடுவோம்;

தவறு அல்லது சபலம் உண்டாவதற்கு நம்மிடம் இருக்கும் காரணிகள் எவைஎவையோ(சேமிக்கப்படும் மெமரிகார்டுகள்,தவறான வழிகாட்டி நமது சேமிப்பு/சம்பளம்/தயாளகுணத்தை காலிசெய்யும் நண்பன்/அலுவலக நட்பு,டிவிடிக்கள்,தேவையற்ற மின் அஞ்சல்கள்,சேகரிப்பட்ட மனதைக்கெடுக்கும் படைப்புகள்) அவை அனைத்தையும் நம்மிடமிருந்து நீக்கிவிடவேண்டும்;அப்படி நீக்கிவிட்டாலே நாம் மாயையின் சக்தியிடமிருந்து விலகிச் செல்ல முடியும்.
சித்தர்களின் தலைவராகிய அகத்தியரின் போதனைப்படி,நமக்கு ஒரு சிறந்த ஆன்மீக குரு அமைய நமது முந்தைய 3000 பிறவிகளை சீர்திருத்த வேண்டும்;அப்படி இல்லாமல்,விரைவாக நமது ஆத்ம சக்தியை சீர்திருத்தவேண்டுமெனில், நாம் இந்த ஜன்மத்தில் செய்ய வேண்டியது என்னென்ன தெரியுமா?


1.அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.ஏன் அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்? ஏன் எனில்,நாம் பலவிதமான ஆன்மீக சேவைகள் அடிக்கடி செய்து வருவோம்;உதாரணமாக நமது கஷ்டங்கள் நீங்கி,நமது லட்சியங்கள் நிறைவேற பிரதோஷம் தோறும் சிவாலயம் செல்வோம்; தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்துக்கொண்டு வருவோம்;அல்லது தினமும் அன்னதானம் செய்வோம்;
இவையெல்லாம் செய்தும் கூட,நமக்கு ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கிறது.அதற்கு நாம் மட்டுமெ காரணம் ஆவோம்.


ஆமாம்,ஆட்டுக்கறி,ஃப்பீF,சிக்கன் 66 என்று நோக்கம் போல சாப்பிட்டுக்கொண்டிருந்தால்,நமது ஆத்மபலம் தள்ளாடிக்கொண்டிருக்கும்;நாம் செய்த இறைவழிபாடுகள்,புண்ணிய காரியங்களுக்கான பலன்கள் சூட்சுமமாக நாம் வாழும் இடத்துக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வரத் துவங்கும்;அப்படி வரும்போதெல்லாம் நாம் அசைவம் சாப்பிடிருப்போம்;இதனால்,நமக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து நல்லவைகளும் நமது வீட்டு வாசலிலேயே நின்றுவிடும்.நாம் ஜோதிடரையும்,பரிகாரம் செய்தவரையும் திட்டிக்கொண்டே இருப்போம்;


தவிர,இன்னொரு குழுவினர் இருக்கிறார்கள்.எனது மகன்/ள் அசைவம் சாப்பிடாமல் இருக்கவே மாட்டான்/ள்.நாங்க என்ன செய்யுறது?

ஆமா மேடம்,உங்கள் குழந்தை பிறக்கும்போதே அசைவம் தான் சாப்பிடுவேன் என்ற கொள்கையோடுதான் பிறந்ததா? இல்லையே? நீங்கள் தான் குழந்தைப்பருவத்திலேயே அவர்களுக்குப் பழக்கப்படுத்திவிடுகிறீர்கள்.

ஒருவேளை அப்படி மீளமுடியாதவர்கள் தினமும் உணவுக்காளான் எடுத்துச் சாப்பிடவேண்டியதுதான்.வேறு வழியே இல்லை;
2.நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியபின்னர், தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.ஒரு நாளுக்கு 45 நிமிடம் வரை ஒதுக்க முடிந்தால் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யலாம்.இப்படி தொடர்ந்து  3 ஆண்டுகள் வரையாவது வழிபட்டு வந்தால்,இந்த பிறவியில் அல்லது அடுத்த பிறவியில் நமக்கு மிகச் சிறந்த ஆன்மீக குரு  கிடைத்துவிடுவார்;

எனக்குத்தெரிந்து,ஒருவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டுக்கொண்டு வருகிறார்.இப்போது அவர் சிவாலயத்துக்குச் சென்றால்,கால பைரவரின் சன்னிதியில் மணிக்கணக்காக உட்கார்ந்து மனப்பூர்வமாக வேண்டுகிறார்.அதுவும் ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் அவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து மனப்பூர்வாக ஸ்ரீகாலபைரவரிடம் முறையிட்டுக்கொண்டிருக்கிறார்.இப்படி இவர் 4 மாதங்கள் செய்து வந்ததும்,அவரது கோரிக்கைகள் நிறைவேறத் துவங்கியிருக்கின்றன.வீட்டிலோ ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடும் செய்து வருகிறார்.மாதம் ஒருமுறை குலதெய்வம் கோவிலுக்குச் செல்வதோடு சரி;எம்மிடம் அவர் வாங்கிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோவை குலதெய்வம் கோவிலில் வைத்து ,தனது பெயருக்கு குலதெய்வத்திடம் அர்ச்சனை செய்துவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யத் துவங்கியிருக்கிறார்.

3.சிலருக்கு பைரவர் வழிபாடு உகந்ததாக இருக்காது;அவர்கள் ஓம்சிவசிவஓம்அல்லது ஓம்ஹரிஹரிஓம் மந்திரத்தை ஒரு நாளுக்கு  ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது ஓராண்டு வரையிலும் ஜபித்துவர வேண்டும்.100 நாட்கள் மந்திரம் ஜபித்தபின்னர்,நமது வாழ்க்கையில்,சிந்தனையில்,செயல்பாட்டில் மகத்தான மாறுதல்கள் வெளிப்படும்;நமது கடந்த கால,முன் ஜன்ம,எதிர்கால பாவ வினைகள் சூட்சுமமாக வெளியேறுவதை மானசீகமாக உணருவோம்;அடுத்து வரும் வருடங்களில் நாம் செய்ய இருக்கும் பாவங்களையும்,கர்ம வினைகளையும் தடுத்து நம்மைக் காக்கும் சக்தி ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்துக்கு உண்டு என்பது இப்போது உணர்ந்திருக்கிறோம்.(ஓம்ஹரிஹரிஓம் ஜபிப்பவர்கள் தங்களுடைய அனுபவங்களை அவ்வளவாக பகிர்ந்து கொள்ளவில்லை;தயவு செய்து தெரிவிக்கவும்)


நமது மனதில் இருக்கும் வக்கிர எண்ணங்கள்,தீய எண்ணங்களை நீக்கும் சக்தி  ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்துக்கு உண்டு.நாம் நினைப்பதையெல்லாம் நடத்திக்காட்டும் சக்தி நாம் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஓராண்டு வரையிலும் அல்லது 1,00,000 தடவைக்குமேல் ஜபித்தப்பின்னர் நமக்குக் கிட்டும்.10,00,000 தடவைக்கு மேல் ஓம்சிவசிவஓம் ஜபித்தாலே இந்தப் பிறவியிலேயே நமக்குப் பொருத்தமான ஆன்மீக குருவை நாம் அடைவோம்;(எனது குருவின் வார்த்தையை மீறி இந்த ரகசியத்தை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்;என்ன செய்வாரே?) om siva siva om....guru

Tuesday, 29 May 2012

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்


அப்துல்கலாம் அவர்களின் வெளியுறவுக்கொள்கை

“பரிசுப் பொருளை ஏற்பதால் ஒருவர் தெய்வீக அருளை இழந்துவிடுகிறார் என்று மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது.எனவே,நான் பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை”

சொன்னவர் நமது மனமார்ந்தகுடியரசுத்தலைவர்
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள்

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்


சில பண மொழிகள்:அனுபவ உண்மைகள்

உனது வாயையும் பணப்பையையும் கவனமாகத் திற;அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.

கடன் என்பது கவனக்குறைவால் ஏற்படும் சுமை.

நல்லவர்கள் எப்போதும் ஏழைகளாக இருப்பார்கள்.

பணத்தின் குவியல் = கவலைகளின் குவியல்

ஏழ்மை பொல்லாதது,அது சிலரைப் பணிவுள்ள மனிதராக மாற்றுகிறது.ஆனால் பலரை தீதும் சூதும் கொண்ட மனிதராக வாழ்ந்து மடியக் காரணமாகின்றது.

எமனுக்கு அஞ்சாத நெஞ்சம் கடன்கொடுத்தவனை நினைத்து அஞ்சும்.

தயவு செய்து எவரிடமும் கடன்படாதீர்கள்.நாயிடம் கடன் பட்டிருந்தால் கூட அதை ‘ஐயா’ என அழைக்கவேண்டியிருக்கும்.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்;இல்லாதவனுக்குக் கவலை.

பணம் நம்மிடம் வரும்போது அதற்கு இரண்டுகால்கள்.நம்மை விட்டுப்போகும் போது அதற்கு பல கால்கள்.

பணத்தை வெறுப்பதாகக்கூறுபவர்கள் வெறுப்பது பிறரது பணத்தைத் தான்!

இன்று நாம் செய்யவேண்டிய காரியம் இரண்டு தான்.
ஒன்று. பணக்காரர்கள் எப்படி உழைக்கிறார்கள் என்பதை ஏழைகள் அறிய வேண்டும்.
இரண்டு. ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பணக்காரர்கள் அறிய வேண்டும்.

தனிமையும், தான் யாருக்கும் வேண்டப்படாதவராகிவிட்டோமோ என்ற உணர்வும் மிகக் கொடிய வறுமையாகும்.

எவனால் சிரிக்க முடிகிறதோ,அவன் கட்டாயம் ஏழையாக இருக்க மாட்டான்.


நீ பணக்காரனாக வேண்டுமா? நிறைய்ய்ய பணம் புழங்கும் இடத்திற்கு தினமும் ஒருமுறை போய்வருவது உனது கடமைகளில் முதன்மையானதாக இருக்கட்டும்.அடுத்தசில வருடங்களில் உனது இடத்தில் பணம் ஒரு ஊற்றாக பெருக்கெடுக்கும்.

குறிப்பிட்ட அளவுக்கு பணம் சேர்க்கும் வரைதான் அதை நாம் பாதுகாக்க வேண்டியிருக்கும்.அதன் பிறகு, அது நம்மையும், தன்னையும் பாதுகாத்துக்கொள்ளும்;கூடவே தன்னையே பல மடங்கு பெருக்கிக் கொண்டே செல்லும்.இது அனுபவ உண்மை.

பணம் நல்ல பணியாள்


பணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள்

தங்கத்தை விட்டெறிபவன், செம்பை பொறுக்கியெடுக்கும் படி ஆகும் நாள் விரைவில் வரும்.

ஒரு பொருளை அடகுவைப்பதை விட, விற்றுவிடு.

உடனே கொடுத்தவன், இரு மடங்கு கொடுத்தவனாகிறான்.

பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான்.

பொருளுக்கு மனிதன் அடிமை;பொருள் யாருக்கும் அடிமையில்லை.

அழகு வல்லமையுடையதுதான்.ஆனால்,அதைவிட சர்வ வல்லைமை யுடையது பணம்தான்.

செல்வச் செருக்குடையவர்கள், தங்களுடைய உடமைகளை மட்டுமல்ல;உள்ளத்தையும் அடமானம் வைக்கத் தயங்கமாட்டார்கள்.

உனது வாயையும்,பணத்தையும் கவனமாக திற!
அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.

செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்திறமையைப் பொறுத்தது.

செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குவதே அதிகச் செலவும்,ஊதாரித்தனமும் ஆகும்.

அனுபவிக்கிற வசதியில் சிறிது குறைந்தாலும், சிலர் தாங்கள் ஆண்டியாகிவிட்டதாகவே நினைக்கிறார்கள்.

ஊதாரி தன் வாரிசையே கொள்ளையடிக்கிறான்.கஞ்சன் தன்னையே கொள்ளையடிக்கிறான்.

தேவையானதை வாங்காதே.தவிர்க்கமுடியாததை வாங்கு.

இக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை (ஆளுமைத்திறனுடன்) வளர்ப்பதில்லை.அவர்கள் வளர பணம் மட்டுமே கொடுத்து உதவுகிறார்கள்.பணத்தின் குணம்,அதன் மதிப்பு,அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை சொல்லித்தருவதே இல்லை.அதனால்தான்,பொறுப்புள்ள குடும்பங்கள் இன்று உருவாகுவது இல்லை.(இந்த பழமொழிக்கு மார்வாடிகள்,சேட்டுகள் விதிவிலக்கு)

லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை.சேமிப்பதால் மட்டுமே !

ஒருமுறை சேமித்த பணம் , இருமுறை சம்பாதித்த பணத்திற்குச் சமம்.

முதுமைக்காலத்தில் அடுத்தவர் கட்டுப்பாட்டில் உள்ள பணம், நமது ஆயுள்காலச்சிறைக்குச் சமம்.

செய்த பாவங்கள் தீர...

ரகசியமான 9 விஷயங்கள்

இந்து தர்மசாஸ்திரப் படி ஒருவர் 9 விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்:
அவை
1.தனது வயது
2.பணம் கொடுக்கல்-வாங்கல்
3.வீட்டுச் சண்டை மற்றும் சச்சரவு
4.மருந்துகளில் சேர்க்கப்படும் பொருட்கள்(மூலிகைகள்)
5.கணவன் மனைவியின் காம அனுபவங்கள்
6.செய்த தான தருமங்கள்
7.கிடைக்கும் புகழ்
8.சந்தித்த அவமானங்கள்
9.பயன்படுத்திய மந்திரம்

SHOCK NEWS WITH ONE SENTANCE


மனக் கவலை தீர-திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் கூறுவது:
தினமும் இரவு உணவிற்குப் பிறகு,ஒரு கரண்டி ரோஜா குல்கந்து சாப்பிட்டுவிட்டு,250 மி.லி.காய்ச்சிய பசும்பாலை சாப்பிட்டு வந்தால் மனக்கவலைகள் தீரும்.

எக்காரணம் கொண்டும் சூரிய அஸ்தமானம் ஆன பின்பு
தயிர் சேர்த்த உணவுகள் சேர்க்கக் கூடாது.அப்படிச் சேர்த்தால் லட்சுமி கடாட்சம் போய்விடும்.
நன்றி:மிஸ்டிக் செல்வம் அவர்கள்,ஜோதிடபூமி மே,2006

வீட்டில் துளசி செடியும்,மல்லிகைச் செடியும் வளர்ப்பது பணவரவை அதிகரிக்கும்.

உணவில் புளி சேர்த்தால் பொறாமை உணர்ச்சி அதிகரிக்கும்.பட்டை சோம்பு பிரிஞ்சா இலை சேர்த்தால் கட்டுக்கடங்காத காமம் கொந்தளிக்கும்.

உப்பு,வெங்காயம்,சிறுகீரையால் செய்த உணவுகள் காமத்தை கூட்டும்.
சிறுகீரைத்தண்டு, பெருங்கீரைத்தண்டு காமத்தைக் குறைக்கும்.

பெண்களின் மாங்கல்ய தோஷத்தைப் போக்குவதற்கு சக்திவாய்ந்த பரிகாரம் மகாலட்சுமி பூஜை செயவதே!

ஒரு கோடி பெண் பிறப்புகளில் ஒரு பெண்ணுக்கு
10 வயதிலேயே மாதத்தில் 20 நாட்கள் தீட்டு வரும்.அதை சரிசெய்யும் மூலிகை 24 வருடங்களுக்கு ஒருமுறை முளைக்கும். அதுவும் கொல்லிமலைக் காடுகளில் மட்டுமே விளையும்.
கருதோஷ நிவாரண மூலிகை என்று ஒரு மூலிகை உண்டு.இந்த மூலிகை 240 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே முளைக்கும்.இதன் இலையை உற்று நோக்கினால் அதன் நடுப் பகுதியில் ஒரு குழந்தை பெண்கருப்பையில் படுத்திருப்பது போல தோற்றமளிக்கும்.
இதை ஒரு பெண் பாலில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் அவள் மலட்டுத்தன்மை நீங்கும்.
ஆரோக்கியமான குழந்தைகள் 100 வரை பெறும் வலிமையடைவாள்.50 வருடங்களாக கருத்தரிக்காத பெண் கூட கருத்தரிக்கும் பாக்யம் பெறுவாள்.
ஆண் குழந்தை வேண்டும் என விரும்புபவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையிலும், பெண் குழந்தை வேண்டும் என விரும்புபவர்கள் பவுர்ணமி அன்றும் இம்மூலிகையை பால்/தேனில் கலந்து உண்டு உறவு கொண்டால் போதும்.
ஆண்மை இழந்தவர்கள் மீண்டும் ஆண்மை பெறவும்,அரவாணிகள் தாங்கள் விரும்பும் வகையில் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாற குறிப்பிட்ட திதி,நட்சத்திரம் உள்ள நாளில் இந்த் மூலிகையை சாப்பிடவேண்டும்.
நன்றி:அகத்தியர் ஜீவநாடி வழியே அகத்தியர் அவர்கள்

உடல் எடை குறைப்பு பற்றிய ரகசியங்கள்


உணவு மூலம் எடுத்துகொள்ளப்படும் கலோரி தான் நம் உடல் எடைக்கு காரணம்.தினமும் ஆயிரம் முதல் ஆயிரத்தி ஐநூறு கலோரீஸ் வரை எடுத்துக்கொண்டால் பதினைந்து கிலோ எடையை இரண்டு முதல் மூன்று மாதங்களில்

குறைத்துகொள்ளமுடியும். எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் கலோரி கட்டுப்பாடு இல்லாமல் உடல் எடை குறைப்பு சாத்தியம் இல்லை.

ஞாபக சக்தி பெருக -முருக மந்திரமும் தமிழ்ப் பாடலும்


ஞாபக சக்தி பெருக கூற வேண்டிய முருக மந்திரம்

முருகப் பெருமானது சடாச்சர மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை உருப் போட்டால் நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.இது அனுபவ உண்மை!
ஓம் ஐம்கிரிம் தோத் தஸ் ஸ்வாகா
தவிர,கந்தரனுபூதியில் உள்ள 15-வது பாடலாகிய “முருகன் குமரன் குகன் என்று மொழிந்து” என்று துவங்கும் பாடலை ஒருநாளுக்கு 108 முறை வீதம் ஜபித்து, 48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வந்தாலும் நினைவாற்றல் பெருகும்
.

சித்தர்களை நேரில் தரிசிக்கும் ரகசியம்


சித்தர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமா?இதோ சுலப வழி

இது 90 நாட்கள் தொடர்பயிற்சி...
தேவையானவை:
குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை
ஒரு குத்துவிளக்கு அல்லது சிறிய தீபம் எரியும் கிண்ணம் அதாவது கிளிஞ்சட்டி
தாமரை நூல் திரி மற்றும் சுத்தமான பசு நெய்(பாக்கெட் நெய் வேண்டாம்).ஒரு காசி சொம்பு,சுத்தமான நீர்.(வீட்டில் நிறைகுடத்திலிருந்து தினமும் தண்ணீர் முதலில் எடுக்கவும்).தினமும் சில பழங்கள்.
அமாவாசையன்று ஆரம்பிக்கவும்.இரவு சரியாக 8 மணிக்கு மந்திர ஜபம் ஆரம்பிக்க வேண்டும்.இரவு 9 மணிக்கு முடித்துவிட வேண்டும்.
அகத்தியர் சித்தர்களின் தலைவர்.நந்தீசர்,திருமூலர்,கொங்கணர்,கோரக்கர்,புலிப்பாணி, காகபுஜீண்டர் என பல ஆயிரம் சித்தர்கள் உள்ளனர்.உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அந்த சித்தரை-அவர் உருவம் நமக்கு தெரியாதல்லவா? எனவே அவரது பெயரை நினைத்துக் கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தை ஒரு மணி நேரம் தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.
ஒம் சிங் ரங் அங் சிங்
இது தான் சித்தர்களை நேரில் வரவைக்கும் மந்திரம்.ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இந்த மந்திரம் கூறப்பட்டுள்ளது.
ஜபம் செய்யும் முறை:
அமாவாசையன்று இரவு 8 மணிக்குள் 10 சதுர அடி உள்ள அறையில் ஒரு விரிப்பு அல்லது பலகையை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்கவும்.அதிலிருந்து 8 அடி தூரத்தில் நமது கண்களுக்கு நேராக வருமாறு நெய்தீபம் தாமரைநூலில் எரியவேண்டும்.அந்த தீபத்தின் முன்பக்கம் காசிச்சொம்பில் சுத்தமான நீர் நிரப்ப வேண்டும்.அந்த காசிச்சொம்பின் முன்பக்கமாக பழங்களை நிவேதனமாக வைக்க வேண்டும்.
இரவு 8 மணியானதும் அந்த தீபத்தைப் பார்த்தவாறு நாம் விரும்பும் சித்தர் பெயரை நினைத்துக்கொண்டு மேலேக் கூறிய மந்திரத்தை உதடு அசையாமல் ஒருமணிநேரம் வரை ஜபித்துவரவேண்டும்.இப்படி தினமும் ஒருமணிநேரம் வீதம் 90 நாட்கள் ஜபித்துவர நமது சித்தர் நேரில் வருவார்.அவரை குருவாக ஏற்றுக்கொண்டு நிம்மதியாக வாழவும்.
9 மணியானதும் காசிச்சொம்பில் உள்ள நீரைப்பருகவும்.படையல் செய்த கனிகளைச் சாப்பிடவும்.இரவில் பால்சாதம் சாப்பிடவும்.
இந்த 90 நாட்களில் அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவும்.உணவில் உப்பு,காரம்,புளி குறைத்துக்கொண்டால் நல்லது.
இந்த முறையால் பல ஆயிரம் மனிதர்கள் பூமியில் சித்தர்களை தரிசித்துள்ளனர்.இன்றும் தரிசித்து வருகின்றனர்.
ஜாதி,மதம்,மொழி கடந்து யாரும் சித்தர்களை தரிசிக்கலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட யாரும் முயற்சிக்கலாம்.
வாழ்க வளமுடன்! உயர்க சித்தர்கள் அருளால்!!!
குறிப்பு: இந்த முயற்சி,சித்தர் சந்திப்பை ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியம்.தம்பட்டம் அடிக்கக் கூடாது.
உலகில எந்தப்பகுதியில் இருந்தாலும் ,வாழ்ந்தாலும் அந்தந்தப்பகுதியில் இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும்.

கோடீஸ்வரராவது எப்படி?சில ஆன்மீக யோசனைகள்

கோடீஸ்வரராவது எப்படி?சில ஆன்மீக யோசனைகள்

1.ஒவ்வொரு தமிழ்மாதத்திலும் ஏதாவது ஒரு திங்கள் கிழமையன்று திருப்பதி சென்று ஸ்ரீவெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும்.அங்கு எப்போது கூட்டமாக இருக்கும் இல்லையா? நீங்கள் திங்கட்கிழமையன்று பெருமாளை தரிசித்துவிட வேண்டும்.இப்படி 12 திங்கட்கிழமைகள் அதாவது ஒருவருடம் வரை ஸ்ரீபாலாஜியை தரிசிக்க வேண்டும்.இப்படி செய்தால் நீங்கள் கோடீஸ்வரராவது உறுதி.
உங்களது பிறந்த ஜாதகத்தில் கோடீஸ்வரயோகம் இல்லாவிட்டாலும் கோடீஸ்வரர் ஆவது நிச்சயம் என்பது அனுபவ உண்மை.நீங்களும் ஒருமுறை டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

2.அமிதிஸ்டு என்ற ரத்தினம் அதாங்க ஜெம் நகைக்கடைகளில் கிடைக்கிறது.இந்த ரத்தினத்தின் பூர்வீகம் அமெரிக்கா.இந்தக்கல் இருக்கும் இடத்தில் வீண் செலவுகள் குறையும்.பணம் சேமிக்கும் காந்த அலைகளை இது வெளியிடுகிறது. இது ஒரு காரட் ரூ.100 அல்லது அதைவிடக் குறைவாகத்தான் இருக்கும்.குறைந்தது 10 காரட் வாங்கி பணம் வைக்குமிடத்தில் வைக்கவும்.உங்களது மணிபர்ஸிலும் வைக்கலாம்.நிறைய பணம் மிச்சமாகும்.

3.ஒவ்வொரு வருடமும் கார்த்திகைமாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று (14.12.2009)மாலை 4.00 மணிக்கு திருஅண்ணாமலையில் உள்ள குபேரலிங்கம் சன்னதிக்கு வருக!!!
4.வீட்டில் மாதம் தோறும் குபேரபூஜை அல்லது மகாலட்சுமி பூஜை செய்து வருக!

நம் நாடு வல்லரசாகுமா? எப்படி?இந்தபுத்தகங்களே ஆதாரம்

நமது நாடு வல்லரசாகுமா? எப்படி?

கீழ்க்கண்ட புத்தகங்கள் எந்த அரசியல் கலப்புமின்றி நமது இந்துயா முழுக்க பயணம் செய்து ஏராளமாக சர்வே செய்து எழுதப்பட்டுள்ளன. நிச்சயமாக நமது நாடு வலிமைமிக்கதாக மாறும்.அதற்கான அடையாளங்களே இந்த புத்தகம் முழுக்க நிரம்பியுள்ளன.
சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்:தனி மனிதனின் தனித்தன்மை உயர்த்தப்பட்டால், அவன் பணிபுரியும் நிறுவனத்தின் தனித்தன்மை நிச்சயம் உயரும்.இவ்வாறு ஏராளமான நிறுவனங்களின் தனித்தன்மை உயர்ந்தால் அந்த நிறுவனங்களின் நாடு உயரும் என்றார்.(எனக்குத் தெரிந்து இந்த 2009 இல் ஒரு 45 வயது மனிதர் இருக்கிறார்.அவரது படிப்பு அந்தக்கால 3 ஆம் வகுப்பு.அவர் சுமார் 1000 செல் போன் மற்றும் போன் எண்களை தப்பின்றி கூறுகிறார்.வெறும் 200 ரூபாயில் துவங்கிய அவரது நிறுவனம் இன்று ஒரு நிமிடத்துக்கு ரூ.5000 சம்பாதித்துக்கொண்டிருக்கிறது).இந்த புத்தகங்களை ஆடிட்டர் குருமூர்த்தி என்பவர் எழுதியுள்ளார்.இவர் சென்னையில் உள்ளார்.பல வருடங்களாக இவர் தினமணி, துக்ளக்,சுதேசிச் செய்தி இவற்றில் பல பொருளாதார விழிப்புணர்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.இவரது கட்டுரைகளை வாசிப்போர் நமது நாட்டின் மீது இன்னும் அதிக நேசத்தை கொட்டுவர்.நமது அரசியலவாதிகளின் வடிகட்டின அயோக்கியத்தனத்தினை உணர்ந்து கொள்ளுவர்.
1.பொருளாதாரம் புதிரல்ல! விலை ரூ.25/-
இந்த புத்தகம் பொருளாதாரத்துறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் தருகிறது.பல கடினமான பொருளாதாரக் கோட்பாடுகளை எளிமையாகப் புரிய வைக்கிறது.
2.பெண்மையைப் போற்றுதும்,பெண்மையைப் போற்றுதும் விலை ரூ.40/-
நமது நாட்டில் பெண்களைப் போற்றி மதிக்கும் தன்மையைக் குறித்தும்,பெண்ணுரிமை இயக்கங்கள் பெண்கள் முன்னேறுகிறார்களா அல்லது சீரழிக்கிறார்களா(பம்மல் கே சம்மந்தம் படம் ஞாபகத்திற்கு வருகிறதா?)என்பதைப்பற்றியும் விளக்குகிறது.வெளிநாடுகளில் விடுதலை பெற்ற பெண்கள்(பெண் விடுதலை பெற்றவர்கள்)படும் அவதிகளைப்பற்றியும் விளக்குகிறது.
3.நம்பிக்கை விதைக்கும் நல்லுள்ளங்கள் விலை ரூ.25/-
நாட்டில் நல்லவர்களே இல்லையே என புலம்புகிறீர்களா?இந்த நூல் இப்படியெல்லாம் இந்தக்காலத்தில் வாழ்ந்து வருகிறார்களா? என ஆச்சரியப்படும் மனிதர்களை நீங்கள் சந்திக்கலாம்.இவர்களல்லவா தன்னலமற்ற ஆத்மாக்கள்!!!
4.சீட்டுக்கட்டு மாளிகை விலை ரூ.25/-
அமெரிக்காவின் வண்டவாளங்களை புட்டு புட்டு வைக்கிறது.அந்த நாட்டின் பொருளாதார கலாச்சார(அவர்களுக்கு ஏது கலாச்சாரம்?) சீரழிவுகளை விவரிக்கிறது.
5.விவசாயத்தை விட்டு ஓடும் விவசாயிகள் விலை ரூ.20/-
இப்புத்தகம் விவசாயிகளைப் பற்றியும் அவர்கள் படும் அவஸ்தைகளைப்பற்றியும் ஆழமாக அலசுகிறது.
6.நம்மை நாமே எப்போது உணர்வோம் விலை ரூ.25/-
நம்மை நாம் ஏன் தாழ்வாக நினைக்கிறோம்? எப்படி இந்த சிந்தனை நாடு முழுக்கப்பரவியது.
நமது புராதனப்பெருமைகள் என்ன? ஏன் நாம் நம்மை உயர்வாக நினைக்கவேண்டும்? (இந்த இரு கேள்விகள் தான் இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூ தோன்றக்காரணமே)என்பதை விரிவாக கூறியுள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள்
7.ஆயிரம் உண்டிங்கு ஜாதி! விலை ரூ.25/-
ஜாதி அமைப்புகளின் வலிமை பற்றியும் அவை நமது இந்துயாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு உந்துசக்தியாக இருக்கின்றன என்பதைப்பற்றியும் ஆழமாக அலசுகின்றன.
(நல்ல வேளை அரசியல்வாதிகள் இதில் மூக்கை நுழைக்கவில்லை)
8.வான சாஸ்திரம் விலை ரூ.தெரியவில்லை.எழுதியவர் டாக்டர் எம்.எல்.ராஜா.
நமது பாரதநாட்டின் வானசாஸ்திர ஆராய்ச்சியில் நீண்ட நெடிய இடையீடற்ற பாரம்பரியம் கொண்ட இந்துயா நாட்டின் கூறுகளை எடுத்துக்கூறுகிறது.

இந்த 8 புத்தகங்களும் கிடைக்குமிடங்கள்:
சுதேசி விழிப்புணர்வு இயக்கம்
K-75 14 வது தெரு
அண்ணாநகர் கிழக்கு
சென்னை-102.
போன்:94431 40930

சுதேசி விழிப்புணர்வு இயக்கம்
401,துருவதாரா அபார்ட்மெண்ட்ஸ்
241,டாக்டர் ராஜேந்திரபிரசாத் ரோடு
டாடாபாட்,கோயம்புத்தூர்-12.
போன்:94863 12732

இணையதளம்:www.swadeshitn.org

புத்தகம் வெளியிடுவது எப்படி?

புத்தகம் வெளியிடுவது எப்படி?

Monday, 28 May 2012

எதிரியை செயலிழக்க வைக்கும் வர்ம முறைகள்!

தவிர்க்க இயலாத சூழலில் தன்னை காத்துக் கொள்ளும் பொருட்டு எதிரியை செயலிழக்க வைக்கும் சில வர்ம முறைகளை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். முறையாக கற்றவர்களால் மட்டுமே இவற்றைப் பயன் படுத்த முடியும், எனவே யாரும் இவற்றை முயற்சிக்கவோ, பரிட்சிக்கவோ வேண்டாம். நமது முன்னோர்களின் அருமை, பெருமைகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியாக, தகவலாக மட்டுமே எடுத்துக் கொண்டிட வேண்டுகிறேன்.

தட வர்மம்

"மைந்தா அங்குலம் நாலின்கீழே
செயலான பெருவிரல் இடையில்தானே
பய்யவே தடவர்மம் அதற்க்குப் பேரு
பாங்காய்ச் சுவடது பதித்த வலுவுடனே
அல்லது களியாலோ குத்தினிக்கால்
தடவர்மம் தட்டென உயர்ந்து
பாங்காய் ரத்தமது கட்டிக் கொண்டு
உய்யவே உளைச்சலது காணும்"

- அகத்தியர் -

நமது கால் பெருவிரலுக்கும் அதற்க்கு அடுத்த விரலுக்கும் நடுவில் இருக்கும் சதைப் பிடிப்பான பகுதியில்தான் தட வர்மப் புள்ளி இருக்கிறது. இந்த வர்ம இடத்தில் காலின் பின் குதியாலொ அல்லது சிலம்பின் முனையாலோ தாக்குவதால் அந்த இடம் வீங்கி, இரத்தம் கட்டிக்கொள்வதுடன் உடல் முலுதும் பயங்கர உளைச்சலைக் கொடுக்கும். இதனால் பதில் தாக்குதல் தாக்க எதிரியால் முடியாது போய்விடும்.


முடக்கு வர்மம்

"பாரப்பா முட்டியது பின் நேர் பற்றிய
வர்மமடா முடக்கு இதன்
பெயர்தானே இதனில் தாக்கம்
கண்டால் காலது மடங்காதடா
சக்தி இழந்து திமிர் போலாகி
விறைக்குமடா மைந்தா
மாத்திரையது மீறினாக்கால்
நிரந்தர முடவனாவான் பாரே"

- அகத்தியர் -

இந்த வர்மப் புள்ளியானது காலின் முட்டிக்கு நேரே பின்புறத்தில், அதாவது கால் மடக்குமிடத்தில் உள்ளது. இந்த இடத்தில் அடிபட்டால் அடிபட்ட இடம் வீங்குவதுடன், அந்த இடத்தில் அதிக வலியும் ஏற்படும், இந்த வர்மா புள்ளியில் அடிபடுவதால் அந்த இடத்தின் தசை விறைப்படையும் அதனால் காலை மடக்க முடியாத நிலை ஏற்படும். அந்த வர்மத்தில் முழு மாத்திரை அளவு அடி பட்டால் அடிபட்டவன் வாழ்நாள் முழுதும் அந்தக் காலால் நடக்க முடியாத முடவன் ஆகிவிடுவான் என்கிறார்.

முக்கிய வர்மங்கள்

உடலில் உள்ள சில முக்கிய வர்மப் புள்ளிகள்...

தலைப்பகுதியில் உள்ள வர்மங்கள்...37

திலர்த வர்மம்
கண்ணாடி கால வர்மம்
மூர்த்தி கால வர்மம்
அந்தம் வர்மம்
தும்மிக் கால வர்மம்
பின் சுவாதி வர்மம்
கும்பிடு கால வர்மம்
நட்சத்திர வர்மம்
பால வர்மம்
மேல் கரடி வர்மம்
முன் சுவாதி வர்மம்
நெம வர்மம்
மந்திர கால வர்மம்
பின் வட்டிக் கால வர்மம்
காம்பூதி கால வர்மம்
உள்நாக்கு கால வர்மம்
ஓட்டு வர்மம்
சென்னி வர்மம்
பொய்கைக் கால வர்மம்
அலவாடி வர்மம்
மூக்கடைக்கி கால வர்மம்
கும்பேரிக் கால வர்மம்
நாசிக் கால வர்மம்
வெட்டு வர்மம்
அண்ணாங்கு கால வர்மம்
உறக்க கால வர்மம்
கொக்கி வர்மம்
சங்குதிரி கால வர்மம்
செவிக்குத்தி கால வர்மம்
கொம்பு வர்மம்
சுமைக்கால வர்மம்
தலைப்பாகை வர்மம்
பூட்டெல்லு வர்மம்
மூர்த்தி அடக்க வர்மம்
பிடரி கால வர்மம்
பொச்சை வர்மம்
சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதியில் உள்ள வர்மங்கள்...13

தள்ளல் நடுக்குழி வர்மம்
திவளைக் கால வர்மம்
கைபுஜ மூன்றாவது வரி வர்மம்
சுழி ஆடி வர்மம்
அடப்பக்கால வர்மம்
முண்டெல்லு வர்மம்
பெரிய அஸ்தி சுருக்கி வர்மம்
சிறிய அஸ்தி சுருக்கி வர்மம்
ஆனந்த வாசு கால வர்மம்
கதிர் வர்மம்
கதிர் காம வர்மம்
கூம்பு வர்மம்
ஹனுமார் வர்மம்

உடலின் முன் பகுதியில் உள்ள வர்மங்கள்..15

உதிர்க் கால வர்மம்
பள்ளை வர்மம்
மூத்திர கால வர்மம்
குத்து வர்மம்
நேர் வர்மம்
உறுமி கால வர்மம்
ஆமென்ற வர்மம்
தண்டு வர்மம்
லிங்க வர்மம்
ஆண்ட கால வர்மம்
தாலிக வர்மம்
கல்லடைக் கால வர்மம்
காக்கடை கால வர்மம்
புஜ வர்மம்
விதனு மான் வர்மம்

முதுக்குப் பகுதியில் உள்ள வர்மங்கள்...10

மேல் சுருக்கி வர்மம்
கைக்குழி காந்தாரி வர்மம்
மேல்க்கைப் பூட்டு வர்மம்
கைச் சிப்பு எலும்பு வர்மம்
பூணூல் கால வர்மம்
வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
கச்சை வர்மம்
கூச்ச பிரம்ம வர்மம்
சங்கு திரி கால வர்மம்
வலம்புரி இடம்புரி வர்மம்

கைகளில் முன் பக்கம் உள்ள வர்மங்கள்...9

வலம்புரி இடம்புரி வர்மம்
தல்லை அடக்க வர்மம்
துதிக்கை வர்மம்
தட்சணக் கால வர்மம்
சுழுக்கு வர்மம்
மூட்டு வர்மம்
மொளியின் வர்மம்
கைக்குசத்திட வர்மம்
உள்ளங்கை வெள்ளை வர்மம்

கைகளில் பின் பக்கம் உள்ள வர்மங்கள்...8

தொங்கு சதை வர்மம்
மணி பந்த வர்மம்
திண்டோதரி வர்மம்
நடுக்கவளி வர்மம்
சுண்டு விரல் கவளி வர்மம்
மேல் மணிக்கட்டு வர்மம்
விஷ மணி பந்த வர்மம்
கவளி வர்மம்

கால்களில் முன் பக்கம் உள்ள வர்மங்கள்...19

முதிர கால வர்மம்
பத்தக்களை வர்மம்
ஆமைக்கால வர்மம்
பக்க வர்மம்
குழச்சி முடிச்சி வர்மம்
சிறுவிரல் கவளி வர்மம்
சிரட்டை வர்மம்
கால் மூட்டு வர்மம்
காலக் கண்ணு வர்மம்
நாய்த் தலை வர்மம்
குதிரை முக வர்மம்
கும்பேறி வர்மம்
கண்ணு வர்மம்
கோணச்சன்னி வர்மம்
கால வர்மம்
தட வர்மம்
கண் புகழ் வர்மம்
அனகால வர்மம்
பூமிக் கால வர்மம்

கால்களில் பின் பக்கம் உள்ள வர்மங்கள்...13

இடுப்பு வர்மம்
கிழிமேக வர்மம்
இழிப் பிழை வர்மம்
அணி வர்மம்
கோச்சு வர்மம்
முடக்கு வர்மம்
குளிர்ச்சை வர்மம்
குசத்திட வர்மம்
உப்புக் குத்தி வர்மம்
பாதச் சக்கர வர்மம்
கீழ் சுழி வர்மம்
பதக்கல வர்மம்
முண்டக வர்மம்

பின் முதுகுப் பகுதியில் உள்ள வர்மங்கள்...8

மேல் சுருக்கு வர்மம்
மேலாக கால வர்மம்
கீழாக கால வர்மம்
தட்டேல்லு வர்மம்
மேலஅண்ட வர்மம்
நாயிருப்பு வர்மம்
கீழ் அண்ட வர்மம்
குத்திக் கால வர்மம்

இவையே உடலின் முக்கிய வர்மப் புள்ளிகள் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர்..

வர்மங்களின் வகைகள்..!

வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார்.உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார்.இவை “படு வர்மம்”,”தொடு வர்மம்”,”தட்டு வர்மம்”,”நோக்கு வர்மம்”

படுவர்மம்

நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார்.

தொடு வர்மம்

இதுவும் படுவர்மத்தைப் போலவே பலமாக தாக்கப்படுவதன் மூலமே ஏற்படுகின்றது. ஆயினும் இது படுவர்மம் போல அத்தனை ஆபத்தானதாக இருக்காது என்கிறார். இந்த முறைகளை எளிதில் குணப்படுத்த இயலும் என்றும் கூறுகிறார்.

தட்டு வர்மம்

ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தில் தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாதவாறு மிகமிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புக்களை ஏற்படுத்துவதே தட்டுவர்மம் ஆகும்.

நோக்கு வர்மம்

பார்வையை ஒரே இடத்தில் பாய்ச்சி அதன் மூலம் விளைவுகளை உண்டாக்குவதே நோக்கு வர்மம் எனப்படும். இந்த வர்ம முறையும் ஆபத்தானது என்று குறிப்பிடும் அகத்தியர், நோக்கு வர்ம முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகரானவர்கள் எவரும் உலகில் இருக்கமாட்டார்கள் என்கிறார்.

இவை தவிர, உடம்பிலுள்ள முக்கியமான வர்மப் புள்ளிகளையும் விரிவாக பட்டியலிட்டிருக்கிறார், அதன் படி...

தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும்,
நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,
உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும்,
முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,
கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்

இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

யார் வர்மம் பழகலாம்...!

வர்மக் கலையினை குருமுகமாய் பயில்வதே சிறப்பு, நமக்குக் கிடைத்திருக்கும் நூல்கள் எல்லாமே ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருக்கும். அவை ஒருபோதும் முழுமையான கல்வியாகாது. மரபு வழிசார்ந்த இந்த கலையில் அனுபவமும், விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சி மட்டுமே ஒருவனை வித்தகனாக ஆக்கும்.

வர்மக் கலையில் தேர்ந்த வைத்தியர்கள் மிகச் சிலரே நம்மிடையே இருக்கின்றனர். இவர்களும் பெரிதான அளவில் வெளியில் தெரியாமல் தங்களை நாடி வருவோருக்கு மட்டும் வைத்தியம் செய்திடும் இயல்பினர்.குருமுகமாக வித்தையை கைகொண்ட எவரும் விளமப்ர வெளிச்சத்திற்கு ஆசைப் படுவதில்லை. அகத்தியர் கூறியுள்ள தகுதியின் படி வர்மம் பழகிட சில அடிப்படையான குண இயல்புகளும், மனோ ரீதியான கட்டுப் பாடுகளும் தேவை.

எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் நுண்ணறிவும், சேவை மனப்பாங்கும்,ஆகக் கூடிய நிதானமும், பதட்டமோ, கோபப் படும் தன்மை அற்றவனாக இருத்தலே அடிப்படை தகுதியாகும் என்கிறார் அகத்தியர்.மேலும் இத்தகையவர்கள் எதிரிகளை தாக்கும் நோக்குடன் கற்றுக் கொள்ளாமல் மக்களின் நோய் நொடிகளைக் குணப்படுத்துவதையே முதன்மையாகக் கொண்டு பயிலவேண்டும்.

இவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரும் தருணம் அன்றி வேறு எந்த நேரத்திலும் மற்றவர்கள் மீது இதை பிரயோகிக்காது இருத்தல் வேண்டும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் கூட, எதிரியின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாதவண்ணம் எதிரியை தாக்கி வீழ்த்தவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

தேர்ந்த வர்மக் கலை நிபுனன் ஒருவன் எத்தகைய பலசாலியையும் ஒன்றிரண்டு தாக்குதலில் நிலை குலையவைத்து வீழ்த்திட் முடியும். குறிப்பிட்ட சில வர்ம புள்ளிகளை தாக்குவதன் மூலம், எதிரியின் மரண தினத்தைக் கூட நிர்ணயிக்க முடியும். அத்தகைய மரணம் மிகவும் கொடியதும், வலி மிகுந்ததுமாக இருக்குமாம்.

இத்தகைய மகத்துவம் வாய்ந்த வர்மக் கலையினை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாக பிரித்திருக்கிறார். அவையாவன...

படு வர்மம்

தொடு வர்மம்

தட்டு வர்மம்

நோக்கு வர்மம்

இவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இந்த வகைகளின் விளக்கங்களையும், அதன் பயன்களையும் நாளைய பதிவில் காண்போம்.

மருத்துவக் கலை!, மரணக் கலை!

சித்த மருத்துவ முறையொன்று நாள்போக்கில் தற்காப்பு கலையாகி, பின்னர் எதிரிகளை கொல்லும் போர்க் கலையாக மாறியது என்றால் அது வர்மம் என்ப்படும் வர்மக் கலைதான். வல்லமை, வன்மை என்கிற தமிழ் பதத்தில் மருவுதான் வர்மம்.இதனை மர்மம் என்றும் சிலர் அழைப்பது உண்டு.போர் க்கலையில் இந்த முறையினை “நரம்படி” என்று அழைக்கின்றனர்.

பஞ்ச பூதங்களின் கலவையான நமது உடலானது பேசிகள், நரம்புகள் ஆகியவற்றால் பின்னி பினைக்கப் பட்டிருக்கிறது.இப்படி இவை ஒன்றோடு ஒன்றாக பின்னிக் கிட்க்கும் இடங்களை ”உயிர் நிலைகள்” என்கிறார்கள்.இவ்வாறு மனித உடலில் 108 உயிர் நிலைகள் இருப்பதாகவும், அந்த உயிர் நிலைகளை முறையாக கையாளுவதன் மூலம் ஒருவரின் உடலை வலிமையாக்கவும், வலுவிழந்து செயலற்றுப் போகவும் வைக்கும் மிக் நுட்பமான கலைதான் வர்மக் கலை.

தமிழர்களின் கலையான வர்மக் கலை அகத்தியரால் உருவாக்கப் பட்டது.சித்த மருத்துவம் தவிர ஆயுர்வேத மருத்துவத்திலும் வர்மங்கள் பற்றிய நூல்கள் இருக்கிறது.இத்தகைய சிறப்புகளைக் கொண்ட வர்மக் கலை பற்றி அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"அண்ணலே உலகத்தில் வாழும் மாந்தர்
காயமுறு விழுதலாலும் விண்ணடியில்
பிணையற்று விழ்தலும் விழுந்தநீசி
சிதறி துண்டங்கே வையனாலும்
மண்ணதிலே வெகுநாளாய் துக்கமுற்று
மாளவே வர்மமது கொள்ளலாலும்
திண்ணமுடன் இவைகளிலே பலதுக்காக
செப்புகிற யெண்ணையொரு கியாய மாத்திரை"

- அகத்தியர் -

வர்மக் கலை பற்றி சித்தர்கள் பலர் கூறியிருந்தாலும், அகத்தியர் அருளிய “ஒடிவுமுறிவுசாரி” என்ற் நூலே மிக முக்கியமானதாக க்ருதப் படுகிறது. இந்த அரிய நூல் இன்று மிகச் சிலரிடதேதான் இருக்கிற்து. இன்றைய தேர்ந்த நரம்பியல் வைத்தியர்களுக்கே புரியாத அல்லது தெரியாத பல நுட்பங்களை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது நூலில் துல்லியமாகவும், விரிவாகவும் விளக்கியிருக்கிறார்.

உயிர் நிலைகளில் ஏற்படும் பிசகல், முறிவு, அடிகள் போன்றவை பற்றியும்,அவற்றால் அடையும் பாதிப்புகளையும், அவற்றின் அறிகுறிகளையும் இவற்றை நிவர்த்திக்க தேவையான சிகிச்சை பற்றியும் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். சில உயிர்நிலைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சைகள் இல்லையென்றும் குறிப்பிடுகிறார்.மேலும் இந்த சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளான கசாயம், தைலம், சூரணம், மெழுகு போன்றவற்றை தயாரிக்கும் முறைகளையும், பயன்படுத்தும் முறைகளும் இந்த நூலில் விளக்கப் பட்டிருக்கிற்து.

அஷ்ட கணபதியும், திரு நீற்று செபமும்!

அகத்தியர் தனது “அகத்திய வாத சௌமியம்” என்னும் நூலில் அஷ்ட கணபதி பற்றியும், அந்த கணபதியை வணங்கும் மூல மந்திரம் பற்றியும், அந்த மூல மந்திரத்தை பயன் படுத்தி பல்வேறு நோய்களை தீர்க்கும் முறையினையும் அருளியிருக்கிறார்.

ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகண பதிதானொன்று
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.

ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து ஓம்கிலி அங்உங்கெண்ணே

ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார்.

இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்” என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார்.

எண்ணமுடன் இடதுகையால் விபூதிவைத்து
ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி
சொன்னமொழி தவறாமற் சுழியைப்பார்த்து
சுத்தமுடன் ஓம்கிலி அங்உங்கென்று
தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத்
தான்செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே.

கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்மமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப்போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.

இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.

இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.

"ரூம் றீம் சிம்ரா" அகத்தியர் அருளிய திருநீற்றுப் பலன்!

சிவனை தங்களின் இறைவனாக கொண்ட சைவ மதத்தினரின் முதன்மையான அடையாளம் திருநீறு. இதனை இரட்சை, சாரம், விபூதி, பசுமம், பசிதம் என்றும் அழைப்பர். அருகம்புல்லை அதிக அளவில் உட்கொள்ளும் பசு மாட்டின் சாணத்தை சிறு உருண்டைகளாக்கி, வெயிலில் காய வைத்து, அதனை உமியினால் மூடி புடமிட்டு எடுத்தால் உருண்டைகளானது வெந்து நீறாகி இருக்கும். இதுவே தூய திருநீறு தயாரிக்கும் முறை என்கிறார் அகத்தியர்.
இதனை இரண்டு வகையாக அணிந்து கொள்ளலாமாம். இடைவெளி இல்லாது பூசிக் கொள்ளும் முறையை "உள்தூளனம்" என்கின்றனர். ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் திருநீற்றினை ஓன்றிற்கு ஒன்று இணையாக மூன்று கோடுகளாய் இட்டுக் கொள்ளும் முறைக்கு “திரிபுண்டரிகம்” என்பர். இப்படி அணிந்து கொள்வதன் பின்னனியில் இருக்கும் தத்துவார்த்தமான விளக்கங்கள் மிக விரிவானவை. 
முற்காலத்தில் அவரவர் தேவையைப் பொறுத்து தாங்களே திருநீறீனை தயாரித்துக் கொண்டனர். இப்படி தயாரிப்பதற்கு என சில நியமங்களை நமது முன்னோர் வகுத்திருக்கின்றனர். வெண்மையான நிறமுடைய திருநீறே சிறப்பானதாக கருதப் படுகிறது. தற்காலத்தில் வர்த்கரீதியாக உற்பத்தி செய்வோர் இத்தகைய நியமங்களின் படி தயாரிக்கும் வாய்ப்புகள் குறைவே.
சித்தரியலில் செபம், மந்திரித்தல், யந்திரங்கள், மருத்துவம் என பல்வேறு செயல்களில் திருநீறானது பயன்படுத்தப் பட்டமைக்கான குறிப்புகள் நமக்குக் காணக்கிடைக்கின்றன. திருநீறினை யாரிடம் இருந்து எப்படி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் அருளியிருக்கிறார். 

ஆமப்பா சூட்சம்வெகு சூட்சமான
     அருமையுள்ள மந்திரத்தைத் தியானம்பண்ணி
ஓமப்பா நல்லோர்க ளிடமாய்மைந்தா
     உத்தமனே விபூதியுட நெதுவானாலும்
தாமப்பா தனதாக வாங்கும்போது
     சங்கையுட நவர்கள்செய்யுந் தவமெல்லாந்தான்
வாமப்பால் பூரணத்தின் மகிமையாலே
     வந்துவிடும் மனதறிவால் மனதைப்பாரே.


மனதாக நல்லோர்க ளிடத்திலிந்த 
     மந்திரத்தைத் தானினைத்துப் பூரித்தாக்கால்
மனதாக அவர்கள்செய்யுந் தவப்பலந்தான்
     மந்திரங்கள் தன்னுடனே வந்துசேரும்
மனதாக மூடர்வெகு வஞ்சர்கிட்ட
     மணிமந்திர பூதியுட நெதுவானாலும்
மனதாக அவர்களிடம் வாங்கும்போது
     மக்களே அவர்கள்குணம் வருகும்பாரே.

திருநீறினை ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் போது கொடுக்கிறவர் செய்த தவப் பயன் மற்றும் குணநலன்கள் வாங்குவோருக்கு போய்ச் சேர்ந்திடுமாம். எனவே இதை உணர்ந்து தியானத்தில் சிறந்து நல்ல குண நலன்கள் உள்ளவர்களிடம் மட்டுமே திருநீற்றினை பெற வேண்டும் என்கிறார்.  மாறாக வஞ்சக எண்ணம் கொண்டோரிடம் இருந்து பெற்றால் அது தீய பலன்களையே கொண்டு தருமாம்.
இப்படி நல்லோரிடம் திருநீறு வாங்கிடும் போது அந்த பலனை முழுவதுமாக நாம் பெற்றிட ஒரு சூட்சும மந்திரம் இருப்பதாக அகத்தியர் கூறுகிறார்.
அது என்ன சூட்சும மந்திரம்?

சாற்றியதோ ருபதேசம் நன்றாய்கேளு
சங்கையுடன் ரூம்றீம் சிம்ராவென்று 
தேற்றியதோர் சித்தர்சிவ யோகிதானும்
திருநீறு தானெடுத்துக் கொடுக்கும்போது
பார்த்திபனே மந்திரத்தை நினைத்துவாங்க
பதிலாக அவர்பிலமும் வருகும்பாரே.

சித்தர்கள், சிவ யோகிகள், ஞானிகள் போன்றவர்களிடம் திருநீற்றை வாங்கும் போது "ரூம் றீம் சிம்ரா" என்கிற மந்திரத்தை மனதில் நினைத்து செபித்து வாங்கிட, அவர்கள் பெற்றிருக்கும் உயர் தவப் பயனும், குணநலன்களும் நம்மை வந்து சேரும் என்கிறார்.



“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பது டால்ஸ்டாயின் பிரபலமான வாசகம். அதாவது நம்மினும் வறிய ஏழைகளுக்குத் நம்மாலான உதவியை அன்புடன் செய்திடும் பொழுது அவர்கள் உள்ளம் நிறையும், அப்போது நன்றிப் பெருக்கினால் அவர்களின் முகத்தில் தெரியும் கபடமில்லாத புன்னகையில் இறைவன் தெரிவார் என்பதே பொருள். அந்த வகையில் அன்பின் பெருமையை உலகுக்குச் சொன்ன வாசகம் இது.
அன்பே கடவுள் என்று அனைத்து மதங்களும் வலியுறுத்துகிறது.  உலக பொதுமறையான நமது திருக்குறளில் கூட அன்புடைமைக்கு என தனி அதிகாரமே உள்ளது. இத்தகைய மாசற்ற அன்பின் பெருமையை, மகத்துவத்தினை அகிலத்துக்கு முதலில் சொன்னவர்கள் நம் சித்தர் பெருமக்கள் என்றால் மிகையில்லை.

அன்பின் மகத்துவத்தினை திருமூலர் பின்வருமாறு விவரிக்கிறார்.

’’அன்பு சிவம் இரெண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவதொரு மறிகிலார்’’              

- திருமந்திரம்.

அன்பும், சிவமும் வெவ்வேறு என பிரித்துப் பார்ப்பவர்களை அறிவே இல்லாதவர்கள் என்கிறார். அன்பையும், சிவமாகிய இறை நிலையையும் பிரிக்கவே முடியாது, அன்புதான் சிவம் என ஆணித்தரமாக கூறுகிறார் திருமூலர்.
பசி, தாகம் ஆகியவற்றை மறந்து பல காலம் தவம் இயற்றி, உடலை வருத்தினால்தான் இறைஅருளைப் பெறமுடியும் என பலரும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை திருமூலர் நிராகரிப்பதோடு இறைஅருளைப் பெற எளிய வழி ஒன்றினையும் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.
என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப்
பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க் கன்றி
என்போல் மணியினை எய்த ஒண்ணாதே 

-  திருமந்திரம்.

உடலை வருத்தி எதைச் செய்தாலும் இறைவனை அடைய இயலாது. மாறாக நெஞ்சம் உருகி அன்பு மயமாய் குழைந்தால் மட்டுமே இறை நிலையினை அடைவது சாத்தியம் என்கிறார் திருமூலர்.

மேலும் எத்தகையவர் மீது இறைவன் அன்பு செலுத்துவார் என்பதையும் திருமூலர் பின் வருமாறு கூறுகிறார்.

’’கொழுந்து அன்பு செய்து கூரவல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் சாது ஆமே’’  

 - திருமந்திரம்.

எவர் ஒருவரால் சக உயிர்கள் மீது அன்பு செய்ய இயலுகிறதோ, அவர் மீதே இறைவன் அன்பு செலுத்துவார் என்கிறார். இறை அருளை உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்ள பிறர் மீது அன்பு செலுத்துவதை விட எளிய வழி வேறு எதுவுமே இல்லை என்கிறார் திருமூலர்.
டால்ஸ்டாய் சொன்னதை உலகம் முழுக்க கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இவருக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அன்பின் மகத்துவத்தை உலகத்தாருக்குச் சொல்லி வைத்த நம் முன்னோரின் பெருமையை நாம் எத்தனை தூரம் நினைவில் கொண்டிருக்கிறோம் அல்லது அதன் வழி நிற்கிறோம் என்ற கேள்விக்கான பதிலை உங்களின் தீர்மானத்துக்கே விட்டு இந்தப் பதிவினை நிறைவு செய்கிறேன்.

போகர் ஜாலவித்தை!


சித்தர்கள் என்றாலே அரிதான எட்டு விதமான சித்துக்களையும், வாய் பிளக்க வைக்கும் ஜாலங்களையும் நிகழ்த்திக் காட்டுகிறவர்கள் என்பதான பொதுக் கருத்து உண்டு. இந்தக் கருத்தினை முற்றாக நிராகரித்து விடவும் முடியாது. ஏனெனில் சித்தர்களின் பாடல்களின் ஊடே இம் மாதிரியான ஜாலங்களைப் பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன. இவை எதற்காக சொல்லப் பட்டது என்பதும், அதன் பின் புலத்தில் மறைந்திருக்கும் உட் கருத்துக்களும் ஆய்வுக்கு உட்பட்டவை.

இந்த வாரத்தின் நெடுகில் அப்படியான சில சித்துக்களை பார்க்க இருக்கிறோம். இன்றைய பதிவில் போகர் தனது “போகர் ஜாலவித்தை” என்னும் நூலில் அருளியிருக்கும் ஒரு ஜால வித்தை பற்றி பார்ப்போம். ஒரு குடத்தில் நீரை அள்ளி அந்தக் குடத்தினை தலைகுப்புற கவிழ்த்தாலும் பானையில் உள்ள நீர் கீழே சிந்தாதிருக்கும் ஜாலத்தை போகர் பின் வருமாறு கூறுகிறார்.

நடந்தபின்பு இன்னமொரு ஜாலங்கேளு
         நல்லமயி ரோசனையும் மத்தக்காசும்
அடர்ந்ததொரு நாற்கரந்தை வயன்றவேரும்
        அரசமர வேருடனே இந்த நான்கும்
குடத்துள்ளே சமனிடையாய் அறைத்துப்பூசி
         குளங்கிணற்றில் ஜலமதனை மொண்டுவந்து
அடைத்திருங்குஞ் சபைதனிலே கவிழ்த்துக்காட்டில்
         அணுவளவு ஜலங்கீழே வீழா தாமே.

கோரோசனை, மத்தக்காசு, கரந்தை வேர், அரசமர வேர் ஆகிய நான்கினையும் சம எடையில் எடுத்து தூய்மை செய்து, அவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டுமாம்.பின்னர் இந்த கலவையை குடத்தின் உட்புறத்தில் நன்றாக பூசி உலர வைக்க வேண்டும் என்கிறார். இந்த கலவை நன்கு காய்ந்த பின்னர் இந்த குடத்தில் நீர் எடுத்து அதனை கவிழ்த்தால் சிறிதளவு நீர் கூட கீழே விழாது என்கிறார் போகர்.

ஆச்சர்யமான தகவல்தானே.....

இன்றைய நவீன நீர்மவியலில் (Hydraulics) இம் மாதிரியான தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றை பயன்படுத்திட முடியுமானால் மனித குலத்துக்கு நல்லதுதானே...

உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்


உங்கள் சிந்தனைக்கு சில நிமிடங்கள்:ஆப்பிள் ஏன் கீழ் நோக்கி விழவேண்டும்? என ஒரு இளைஞன் சிந்தித்தான்.புவியீர்ப்பு விசையின் முக்கியத்துவம் இந்த அறிவியல் உலகம் அறிந்து கொண்டது.
“சுமார் 20,000 ஆண்டுகள் கொண்ட நீண்ட வரலாற்றைக் கொண்டது நமது நாடு.மிகவும் திறமையான வீரர்கள், மிகவும் நுண்ணறிவுடைய அரசியல் சாணக்கியர்கள்,அனுபவம் நிறைந்த ஆட்சியாளர்கள்(மன்னர்கள்),பஞ்சமே இல்லாத நாடு என எல்லாத்துறைகளிலும் உச்சத்தைத் தொட்ட ஒரேநாடு நமது நாடு மட்டுமே!
இருந்த போதிலும் ஏன் 18 கோடி மக்கள் வெறும் 300 ஆங்கிலேயர்களுக்கு அடிமையானோம்?”- இப்படி ஒருவர் சிந்தித்தார்.(நமது நாட்டின் பெருமைகளை ஓரளவு அறிய கார்டூனிஸ்ட் மதன் எழுதி,ஆனந்தவிகடன் குழுமம் வெளியிட்டுள்ள ‘வந்தார்கள்,வென்றார்கள்’என்ற புத்தகத்தைப்படிக்கவும்)அவர் கி.பி.1920-களில் எம்.பி.பி.எஸ்., படித்து முடித்தவர்.நாக்பூரில் பிறந்தவர்.இவரது சிந்தனையின் விளைவாக பிறந்ததே ஒரு மாபெரும் இயக்கம் !!!
அது தான் ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்.!!!
ஒரு மகாராஜா இருந்தார்.நமது நாட்டில் கோவாப்பகுதியில்.அவர் அப்பகுதி ஆங்கிலேயத்தளபதிக்கு நண்பராக இருந்தார்.இருவரும் ஒருநாள் கோவா கடலோரம் அமர்ந்திருந்தனர்.நமது மகாராஜா அந்த ஆங்கிலேயத்தளபதியிடம் கேட்டார்.
“ஏன் தளபதி? உங்களுக்கு எங்கள் பண்பாடு தெரியாது.எங்கள் மொழி தெரியாது.எங்கள் சுபாவம் தெரியாது.இருந்து எப்படி 6000 மைல்கள் கடந்துவந்து எங்கள் நாட்டைக்
கைப்பற்றினீர்கள்?”
ஆங்கிலேயத்தளபதி புன்னகைத்தான்.பிறகு கூறினான்.
“உங்கள் படைவீரர்கள் 10 பேரை கடலை நோக்கி அணிவகுத்து நிற்கச்சொல்லுங்கள்”என்றான்.அதே போல ஆங்கிலேயத்தளபதியும் தனது ஆங்கிலேயப்படைவீரர்கள் 10 பேரை நமது இந்துவீரர்களுக்குச் சமமாக கடலை நோக்கி நிற்க வைத்தான்.இரு அணியையும் கடலைநோக்கி ராணுவ மிடுக்குடன் ந்டக்க உத்தரவிட்டான்.
நமது வீரர்களில் முதல் வீரன் தனதுகணுக்காலில் கடல் அலைபட்டதும் மேலே நகரவில்லை.ஆனால்,ஆங்கிலேய வீரர்கள் கழுத்தளவுவரை(அதாவது தனது ஆங்கிலேயத்தளபதி ஸ்டாப் மார்ச் எனக்கூறும்வரை கவாத்து போய்க்கொண்டே)இருந்தனர்.
பிறகு சொன்னான் அந்த ஆங்கிலேயத்தளபதி,
‘இதுதான் காரணம்” என்று.
ஒரு முட்டாள் தனது தலைவனாக இருந்தாலும் அவனது உத்தரவுக்குக் கீழ்ப்படிவது ஆங்கிலேயனது குணம்.
ஒரு சர்வ வல்லமைதாங்கிய மகாராஜா சொன்னாலும் நமக்கு நம் உயிர் வெல்லக்கட்டி.

கவனச்சிதறலைத் தடுக்கும் ஓம்சிவசிவஓம் ...


தமிழ்நாட்டில் 7.5 கோடி தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர்.நாம் அனைவரும் வாழையடி வாழையாக சித்தர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்களே! இருந்தும்,நமது தவறுகளே நம்மை கஷ்டங்களாக,வறுமையாக,நோயாக,எதிரியாக,துயரமாக,காமரீதியான அவமானங்களாக கர்மவினைவடிவில் நம்மை இயக்குகின்றன.

கலியுகத்தில் அன்னதானமும்,தினசரி மந்திர ஜபமும் மட்டுமே கர்மவினைகளைத் தீர்க்கும்.வேறு எதுவும் தீர்க்காது.உதாரணமாக,ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் சுமார் 5 ஆண்டுகளுக்கு தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதாக வைத்துக்கொள்வோம்.5 ஆம் ஆண்டின் முடிவில் , சதுரகிரிக்கோ,திருஅண்ணாமலைக்கோ,பர்வதமலை(வேலூருக்கும் திருஅண்ணாமலைக்கும் நடுவில் இருப்பது)க்கோ செல்லும் சந்தர்ப்பம் உண்டாகும்.அப்படி செல்லும்போது,இரவு நேரத்தில் சித்தர்களில் யாராவது ஒருவரை சந்திக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;அப்படி நாம் சந்திக்கும் சித்தர் நமது பாட்டனாருக்கு பாட்டனார் என்பதை நாம் அறிய மாட்டோம்;ஆனால்,நாம் ஐந்து வருடங்களில் சுமார் 50,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்திருப்போம் இல்லையா? அதன் விளைவாக நமது முற்பிறவி கர்மவினைகள் அழிந்துபோயிருக்கும்;அதன் மூலமாக,நமது மூதாதையரில் இருக்கும் சித்தரை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கும்.அப்படி சந்தித்தது முதல், நமக்கு செல்வச்செழிப்பும்,மன நிம்மதியும்,குடும்ப ஒற்றுமையும்,அனைத்து யோகங்களும் நம்மை வந்து சேரும்.

அதே சமயம்,நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத்துவங்கிய ஆரம்ப காலங்களில் முதல் மூன்று மாதங்கள் வரையிலும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கமுடியாத அளவிற்கு கர்மாக்கள் தடுக்கத்தான் செய்யும்;சில நாட்களில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க முடியாத சூழ்நிலையும் உருவாகும்.இதற்காக  மனதில் குற்ற உணர்ச்சியுடன் வருத்தப்படத் தேவையில்லை;மூன்றாவது மாதத்தின் முடிவிலிருந்து நாம் யார்? என்ற கேள்விக்கான விடையை நெருங்கியிருப்போம்.மேலும், நமது லட்சியத்தை நேர்வழியில் அடைவதற்கான சிந்தனை படிப்படியாக நமது மனதில் உருவாகும்.

கடவுள் நம்பிக்கையில்லாதவர்களில் 99 பேர்கள் இந்து நாத்திகவாதிகளே! அவர்களை ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபித்து ஆராய்ச்சி செய்ய நான்

இராமர் பாலம் இருப்பது 101% உண்மை:ஆதாரத்துடன்




இராமர் பாலம் 101% நிஜம்:ஆதாரங்களுடன்

தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் அருகில் திருப்புல்லாணிக்கரை உள்ளது.இங்கு கடலுக்குள் நவக்கிரகங்கள் உள்ளன.இங்குள்ள 70 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களிடம் பேசிப்பார்த்தால் இராமர் பாலம் முழு நிஜம் என்பது தெரியவரும்.
மேலே அமெரிக்க விண்வெளி அமைப்பானநாசா எடுத்துள்ள சாட்டிலைட் புகைப்படத்தில் இருப்பது
ராமர் பாலம் தான்.
சுமார் 30 மைல் நீளமும் 3 மைல் அகலமும் கொண்டதாக இது கடலில் முழ்கிக்கிடக்கிறது.
இந்த பாலம் கடல் அலைகளால் உருவாக்கப்படவில்லை.இதன் முனைகள் உறுதியாக உள்ளன.இதன் வயது சுமார் 17,50,000 ஆண்டுகள் ஆகும்.
நமது இந்துக்காலக்கணக்குப்படி முதல் யுகமான திரேதாயுகத்தின் முடிவில் இராமாயணம் நடைபெற்றது.ராமாயணத்தின் இறுதிக்கட்டத்தில் கட்டப்பட்டதே இந்த ராமர் பாலம்.கி.பி.1450 வாக்கில் இலங்கையை ஆண்ட மன்னன் தினமும் குதிரைவீரர்களிடம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் கொடுத்து அனுப்பியுள்ளான்.அந்த குதிரைவீரர்கள் இந்த ராமர் பாலம் வழியாக இலங்கையிலிருந்து தினமும் இராமேஸ்வரத்திற்கு வந்து சென்றுள்ளனர்.
இன்று இந்த ராமர் பாலத்தின் வழியாக நடந்தே இலங்கைக்குச் செல்ல முடியும்.பாலத்தின் ஆழம் குறைந்த பட்சம் 5 அடி(ஒரு ஆளின் உயரம்), அதிக பட்சம் 25 அடி(ஐந்து ஆள்களின் உயரம்)என திருப்புல்லாணிக்கரைப்பெரியவர்கள் கூறுகின்றனர்.
நாம் நமது முன்னோர்களின் படைப்புகள், புராதனச்சொத்துக்களைப் போல உருவாக்காவிட்டாலும் பரவாயில்லை;பாதுகாக்கக்கூடச் செய்யவில்லை யெனில் வரலாறு நம்மை மன்னிக்குமா?//

மந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன?


மந்திரங்கள் எப்படி பலன் தருகின்றன?


இந்த வலைப்பூவை இப்போது நீங்கள் வீட்டில் உள்ள உங்களது மடிக்கணினியிலோ(லேப்டாப்),அல்லது இணையதள மையத்திலோ(பிரவுசிங் சென் டரிலோ)வாசிக்கிறீர்கள்.இந்த இடத்தில் செல்போன் அலைகள் இருப்பது நிஜம்தானே? அதுவும் இன்று 25.5.2009 10 செல்போன் நிறுவனங்கள் செல்போன் சேவை தருகின்றன.பி.எஸ்.என்.எல்., டாடா,ரிலையன்ஸ்,ஓடபோன்,ஏர்செல்,ஏர்டெல்,எம்.டி.எஸ்.,ஆரஞ்சு இவை அனைத்தின் செல்போன் அலைகள் 24 x 7 என்ற அளவில் பரவிக்கொண்டே இருக்கின்றன.அதற்குரிய செல்போன் நாம் வாங்கி இயக்கத்தில்(on செய்து) வைத்திருந்தால் நமக்கு மற்றவரின் அழைப்பு வருகிறது.அதே போலத்தான்.
நாம் குழந்தையாக பிறந்தது முதல் 9 கிரகங்களின் கதிர்வீச்சு நம் மூளையை விண்வெளியிலிருந்து வந்தடைந்து கொண்டே இருக்கின்றன.
இத்தனாம் வயதில் இது நிகழும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது.ஒரு எதிர்பாராத பிரச்னை அல்லது விபத்திலிருந்து தப்பிப்பதற்கு மந்திர ஜபம் அல்லது குறிப்பிட்ட சித்தர் வழிபாடு அல்லது மகான் வழிபாடு அவசியமாகிறது.
ஒரு மந்திரம் உள்ளது.ஓம் சர்வ சர நமச்சிவய நம(சிவாய அல்ல) :இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால் நமது வீண் செலவுகள் குறையும் என மகான்கள் கூறியுள்ளனர்.
நாம் தினமும் 30 நிமிடம் நமது வீடு/அலுவலகம்/மொட்டை மாடியில் காலையிலும் மாலையிலும் இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஜபித்துக்கொண்டே இருக்கிறோம்.என்னாகும்?
100 ஆம் நாளிலிருந்து நமது செலவுகள் குறையும்.வருமானம் மிச்சமாகும். எப்படி?
நமது மூளையில் இந்த மந்திர அதிர்வுகள் பதிவாகும்.அந்த பதிவுகள் நவக்கிரக அலைகளில் ஒரு பாதிப்பை உருவாக்கும்.நமது தலைக்குமேலே
சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள் உயரத்தில் மந்திர அலைகளுக்கான அடுக்கு உள்ளது.அங்கு நமது தினசரி ஜபம் 100ஆம் நாளில் போய் வேலை செய்து நமது நம்பிக்கையை நிஜமாக்கும்.
ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது:

கொலை, கொள்ளை, கற்பழிப்பு,ஏமாற்றுதல்,பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது.இதை நீக்க ஒரு சிவ மகாமந்திரம்:
ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்

இந்த மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம்- அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்.

Sunday, 27 May 2012

1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தபிறகு. . .


எந்த ஒரு மந்திரமும் 1,00,000 தடவை ஜபித்தபிறகே,அந்த மந்திரத்துக்கு உயிர் வந்து,அது செயல்படத்துவங்கும்.இதை பலர் அனுபவத்தில் உணர்ந்துள்ளனர்.ஆனால்,ஓம்சிவசிவஓம் மந்திரத்தை 10,000 தடவை ஜபித்ததுமே அது செயல்படத்துவங்கும்;அதே சமயம், 10,000 தடவை நாம் ஓம்சிவசிவஓம் ஜபித்தபின்னர்,தொடர்ந்து ஜபிக்க முடியாத அளவுக்கு நமக்கு சிற்சில சோதனைகள் வரும்;நம்மை நமது மனவலிமையை சோதிக்கவே செய்யும்.

ஏன் இந்த சோதனைகள்?

மிக எளிதாக நமது கர்மவினையை அழிக்கவும்,மிக விரைவாக நற்பலன்களை நமக்குத் தரவும் செய்யும் மந்திரம் ஓம்சிவசிவஓம் என்பது கடந்த ஓராண்டாக உணர்ந்த உண்மை!

சும்மாவா வந்தது சுதந்திரம்? என்பதைப் போல,நவக்கிரகங்களின் இயக்கத்தில் நமது தீமையை தடுக்க உதவும் சிவமந்திரமாக ஓம்சிவசிவஓம் இருப்பதால்,நவக்கிரகங்கள் நம்மை  தொடர்ந்து ஜபிக்க விடாமல் சூட்சுமமாக தடுக்கவே செய்யும்.இருப்பினும்,விடாப்பிடியாக ஜபிப்பது நமது மன வலிமையைப் பொறுத்தது.

அதனால்,ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் செய்பவர்கள்,ஒரு லட்சம் தடவை ஜபிப்பதே சாதனைதான்; அப்படி ஜபித்த பின்னர்,அவர்கள் செய்ய வேண்டியது என்னவெனில்,தினமும் வெறும் 30 நிமிடம் மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவேண்டும். இப்படி ஜபித்து வருவதன்மூலமாக,நமது நியாயமான ஆசைகள்,லட்சியங்கள்,இலக்குகள் நிறைவேறும்.

1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தபின்னர்,இந்த மந்திர சக்தி நமது உடல் மற்றும் மனதோடு இருக்கும்.கூடவே,அதற்குமேல் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவரும்போது அதன் சக்தியை அளவிடவே முடியாது.

 இப்போது ஒரு சந்தேகம் வருமே?

கடலோரக் கோயில்களில் ஏதாவது ஒரு கோவிலில் பவுர்ணமியன்று ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதாக வைத்துக்கொள்வோம்;கடலோரமாக ஒரு மந்திரத்தை ஒரு தடவை பவுர்ணமி/அமாவாசை/கிரகணம்/தமிழ் மாதப்பிறப்பு/தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் ஜபித்தாலே 2,00,00,000 தடவை ஜபித்ததற்குச் சமம்.அப்படிப் பார்த்தால்,பவுர்ணமியன்றோ/அமாவாசை/கிரகணம்/வருடப்பிறப்பு/மாதப்பிறப்பன்று ஒரு மணி நேரம் ஜபித்தாலே நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் 1,00,000 ஐ தாண்டி விட்டதாகத் தானே அர்த்தம்?


இது மிகச் சிறந்த சந்தேகம் தான்.ஆனால்,நாம் ஜபிக்கும் எண்ணிக்கை 1,00,000த் தொடவேண்டும்.அப்போதுதான் மந்திரம் உருப்பெறும்.(உயிர் பெறும்)!!!

ஓம்சிவசிவஓம்

Vetri Ennum16 Selvam

1.Kalvi
2.Arivu
3.Aayul
4.Aatral
5.Ilamai
6.Thunivu
7.Perumai
8.Pon
9.Porul
10.Pugazh
11.Nilam
12.Nanmakkal
13.Nallozhukkam
14.Noyinmai
15.Muyarchchi
16.VetriEnnum
16 Selvam
Petru Peru Vazhvu Vazhga...

அபூர்வமான வைகாசி அமாவாசையை ஓம்சிவசிவஓம் ஜபிக்கப் பயன்படுத்திக்கொள்வோம்!!!

இந்த வைகாசி மாத அமாவாசை 20.5.12 ஞாயிறு அன்றும்,சூரியக்கிரகணம் 21.5.12 திங்கட் கிழமை விடிகாலை(ஞாயிறு நள்ளிரவு) 2.26க்குத் துவங்குகிறது;அப்படித் துவங்கும் சூரியக்கிரகணம் காலை 8.19க்கு நிறைவடைகிறது.நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற நேரம்(முழு சூரியக்கிரகணம் உண்டாகும் நேரம்) திங்கட்கிழமை விடிகாலை 3.36 முதல் காலை 7.09 வரையிலான நேரம் ஆகும்.இந்த நேரத்தில் குறைந்த பட்சம் 30 நிமிடமும்,அதிகபட்சம் ஒரு மணி நேரமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.


அபூர்வமான சூரியக்கிரகண நேரத்தை நாம் பயன்படுத்தி,நமது கர்மவினைகளை போக்குவோம்;இப்படி குறிப்பிட்ட நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதால்,நமது கஷ்டங்கள் நீங்குவதோடு,நமது வருமான அளவு உயரும்;நமது நீண்டகால ஏக்கங்கள் தீரும்;நமது ஆத்ம பலம் அதிகரிக்கும்;நமது முன்னோர்களில் ஏழு தலைமுறை வரை(நமது அம்மா,அப்பா அவர்களின் அம்மா,அப்பாக்கள் என்று ஏழு தலைமுறை) கதிமோட்சம் உண்டாகும்.
நமது குழந்தைகளுக்கும்,அவர்களின் குழந்தைகளுக்கும் சேர்தே நாம் ஆத்ம பலத்தைச் சேமிக்கிறோம்.

ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்
"எந்த ஒரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." என்பது நவீன அறிவியல் நமக்குத் தந்த நியூட்டனின் மூன்றாம் விதி. நமது மரபியலில் இந்த ”வினையின் எதிர் வினை” ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பேசப் பட்டு வருகிறது.ஆனால் அவை மதம் சார்ந்த அல்லது ஒருவரின் எண்ணம்,செயல்,சிந்தனை சார்ந்த நம்பிக்கையின் அங்கமாக சொல்லப் பட்டிருக்கிறது.

ஒருவர் தனது முந்தைய பிறவிகளில் செய்த நல்வினை, தீவினை பலன்கள் அவர்களையே வந்து சேரும்.அதே போல பெற்றவர்கள் செய்த பாவ புண்ணியங்களின் பலன்கள் அவர்களின் சந்ததிகளுக்கு வந்து சேரும் என்கிற நம்பிக்கையும் உள்ளது.நம்மில் பலரும் இந்த கருதுகோளைத்தான் கொண்டிருக்கிறோம்.

ஆனால், குதம்பைச் சித்தர் வித்தியாசமான ஒரு கருத்தினை முன் வைக்கிறார். அதாவது பெற்றோர்கள் செய்த பாவ புண்ணிய பலன்கள் சந்ததியினருக்கு வந்து சேராது. அதே போல பிள்ளைகள் செய்த தரும பலன்கள் பெற்றோரைச் சென்றடையாது. அவரவர் செய்த, செய்கிற வினைகளின் பலன் அவரவரையே சாரும் என்கிறார்.

"தந்தைதாய் செய்தவினை சந்ததிக்குஆமென்பார்
சிந்தை தெளிந்திலரேகுதம்பாய்
சிந்தை அதளிந்திலரே."

- குதம்பைச் சித்தர் -

"பிள்ளைகள் செய்த தன்மம் பெற்றோர்ககு உறுமென்றால்
வெள்ளறிவு ஆகுமடிகுதம்பாய்
வெள்ளறிவு ஆகுமடி."

- குதம்பைச் சித்தர் -

“என்னுடைய பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்னைக் காக்கவில்லையே" என்று யாராவது புலம்பினால் அது அவர்கள் அறியாமைக் குறிக்கும்.

"என்னுடைய பெற்றோர் செய்த பாவத்தால் நான் துன்பங்களை அனுபவிக்கிறேன்" என்று யாரேனும் வருந்தினால் அதுவும் அவர்கள் அறியாமைக் குறிக்கும்.

"இது எனது வினையின் பயனே" என உணந்து தெளிவடைவதே அறிவுடையவர் செயலாகும் என்கிறார் குதம்பைச் சித்தர்.  SIVA SIVA    GURU ...

அருகம்புல்லின் அருமை!




நாம் பெரும்பாலும் அருகம்புல்லை பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஆனால் அதன் மருத்துவ குணம் அறிந்து உடல் ஆரோக்கியம் காக்கப் பயன்படுத்துகிறோமா என்பது கேள்விக்குறி.
பல்வேறு ஊட்டச்சத்து பானங்களைப் பருகும் நமக்கு, அருகம்புல்லே அருமையான ஊட்டச்சத்து மூலிகை என்ற உண்மை தெரியவில்லை.
நல்ல தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, சுத்தமாக நீரில் கழுவி, நைய அரைத்து பசும் பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி, இரவில் படுக்கச் செல்லும்முன் சாப்பிட்டு வந்தால், பலவீனமான உடல் நன்கு தேறி, நல்ல பலம் பெறும். வளரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்துப் பெற இதே முறையைக் கையாளலாம்.
அருகம்புல்லை நீரில் இட்டு நன்கு காய்ச்சி, அந்த நீரைப் பதமான சூட்டில் பருகி வந்தால் இதயத்துக்கு நலம் அளிக்கும்.

என்னதான் இருக்கிறது சதுரகிரியில்....!

தற்காலத்தில் சித்தர்களைக் குறித்தான ஆக்கங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் மிகையாக புராணக் கதைகளுடன் பின்னப்பட்டே வெளியிடப் படுகிறது. இப்படியான ஆதாரஙகள் ஏதும் என்னிடத்தில் இருக்கும் புத்தகங்களில் இல்லை என்பது ஆச்சர்யமான ஒன்று. இதன் மூலம் எவரையும் குறை சொல்வது என் நோக்கமில்லை.

இன்றைய பதிவில் சதுரகிரி மலையில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை தனித்தனியே பார்ப்போம்.

கோவில்கள்

சதுரகிரியில் கருப்பண்ணசமி, இரட்டைலிங்கம், கருப்பன் கோவில், சந்தனமகாலிங்க சுவாமி கோவில், சுந்தரர் கோவில், மகாலிங்கர் கோவில், சுந்தரலிங்கர் கோவில், வெள்ளைப் பிள்ளையார் கோவில், கன்னிமார் கோவில் ஆகியவை முக்கியமான கோவில்களாக சித்தர்களின் பாடல்களில் குறிக்கப் பட்டிருக்கிறது.

சித்தர்கள்

இங்கே வாழ்ந்திருந்த சித்தர் பெருமக்களை பற்றி கணக்கிட்டால் அநேகமாய் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் இந்த மலையோடு தொடர்புடையவர்களாகவே இருந்திருக்கின்றன. பலர் இங்கே சமாதியடைந்திருக்கின்றனர்.இன்றும் பல சித்தர் பெருமக்கள் இங்கே வாழ்வதாகவும் நம்பப் படுகிறது.

தீர்த்தம்/ஆறுகள்

சந்திரதீர்த்தம், கவுண்டுண்யஆறு, சந்தனமாகாலிங்க தீர்த்தம், திருமஞ்சனப் பொய்கை, பொய்கை தீர்த்தம், பசுக்கிடைத்தீர்த்தம், குளிராட்டி பொய்கை, வற்றாப்பொய்கை, பாம்புக் கேணி, உதக சுனைகள் போன்றவை ஒன்றுக்கும் மேற்பட்ட சித்தர்களின் பாடல்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இவை தவிர வேறு பல தீர்த்தங்களைப் பற்றி குறிப்புகள் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன.

மரங்கள்/மூலிகைகள்

சதுரகிரி மலையில் மூங்கில், நாங்கில், கோங்கை, கொங்கு, சந்தனம், அகில், அசோக்கு, தேக்கு, வேங்கை, சுரபுன்னை போன்ற அனேக மரங்களும்,வேறெங்கும் இலகுவில் கிடைக்காத அழுகண்ணி, இருப்பவல் செடி, உதிரவேங்கை, உரோமவேங்கை, உரோமவிருட்சம், ஏறழிஞ்சி, கற்றாமரை, கணைஎருமைவிருட்சம், கருநொச்சி, கருநெல்லி, கருங்கொடிவேலி, செந்தாடுபாவை, கையாந்தகரை, கானற்பலா, சாயாவிருட்சம், செங்கொடி வேலி, செங்கடுக்காய், செந்நாயுருவி, செங்கற்றாளை, தில்லைவிருட்சம், சஞ்சீவிமூலிகை, சிவந்தஇலைக்கள்ளி, சுணங்கிவிருட்சம், சோதிவிருட்சம், முண்டகவிருட்சம், பஞ்சதரு, வெண்ணாவல், மஞ்சப்பூத்தவேளை, வெள்ளைப்புனல்முருங்கை, சோதிப்புல்லு, பவளத்துத்தி, பொற்றலைக்கரிப்பான், கருநாரத்தை, நாகதாளி, வனபிரம்மி, பேய்சுரை, தொழுகண்ணி, முப்பிரண்டை, நாகபடக்கற்றாளை, குருவரிக்கற்றாளை போன்ற பல காயகற்ப மூலிகைகளும், இவை தவிர விஷப் பூலாமரம், முகம் வீங்கிமரம், எரிமுகிமரம், விஷதேற்ராமரம், தும்புகச்செடி பேன்ற பல விஷ செடிகளும் இருக்கின்றனவாம். இவை மனிதர் உடலில் பட்டாலே உயிராபத்து விளைவிக்குமாம்.

பறவைகள்/விலங்குகள்

பறவைக் கீரி, பறவைப்பாம்பு, பறவைப்பூனை, பறவை ஓந்தி என்னும் விசித்திர வகை விலங்குகளும், அகண்ட பேரண்டமாகிய இருதலைப்பட்சிகளும், தீவிழுங்கும் பட்சியும், மதிபமிழ்தத்தையுண்ணும் சகோரப் பட்சியாகிய செம்போத்தும், இன்னும் பல பறவைகளும், கும்புகும்பாய் சஞ்சரிக்கும் அன்றியும், சிங்கம்,யாளி, புலி, கரடி கடுவாய் போன்ற மானிடர்க்கு துன்பம் விளைவிக்கும் மிருகங்களும், மான், மரை, மலைப்பசு, வரையாடு, காட்டெருமை போன்றசாந்த மிருகங்களும் மானிடர் கண்களுக்கு புலப்படாது மறைந்து ஒற்றுமையாய் வாழுமாம்.  SIVA SIVA    GURU...

சதுரகிரி மலையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷம்!

வாருங்கள்,சதுரகிரியில் மறைத்து வைக்கப் பட்டிருப்பதாக கூறப்படும் ஒன்றினைப் பற்றிய சுவாரசியமான ஒரு தகவலைப் ஒன்றினை இன்று பார்ப்போம். அகத்தியர் அருளிய “ஏம தத்துவம்” என்கிற நூலில் இருந்து எடுக்கப் பட்டது இந்த தகவல். மிகவும் பழமையான இந்த நூல் தற்போது பதிப்பில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.என்னிடமிருப்பது நூற்றாண்டுகளைத் தாண்டிய பதிப்பு.

அசுவினியார் என்கிற சித்தர் மூலிகைகள் மற்றும் அவற்றின் நுட்பங்கள், கோவில்கள் மற்றும் அதன் சூட்சுமங்கள் போன்ற தனது வாழ்நாள் அனுபவங்கள் முழுவதையும் ஒரு நூலாக எழுதினாராம். அந்த நூலின் பெயர் “கர்ம காண்டம்” என்பதாம். பன்னிரெண்டாயிரம் பாடல்களைக் கொண்ட இந்த நூல் அவரது மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டதென்பதை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"நூலான பெருநூலா மின்னூல்போல
நுணுக்கமுடன் கொள்ளவே வேறில்லை
பாலான நூலிது பெருநூலப்பா
பாலகனே அசுவினியார் யெந்தமக்கு
காலான பதிகண்டு தடமுங்கண்டு
மாலான பெருநூலாம் கர்மகாண்டம்
ஆமேதான் பன்னீரா யிரந்தானப்பா
அப்பனே கர்மகாண்டம் தாமுரைத்தார்
போமேதான் சத்த சாகரந்திரிந்து
பொங்கமுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
தாமேதான் பாடிவைத்தார் கர்மகாண்டம்"

- அகத்தியர் -

மிகவும் அரிதான சூட்சுமங்களை தன்னகத்தே கொண்ட இந்த நூலானது தனது மாணவர்கள் மட்டுமே பயன்படுத்திட வேண்டி, அதனை சதுரகிரி மலையில் மறைத்து வைத்திருக்கிறாராம் அசுவினியார். அத்தகைய சிறப்பான இந்த நூல் சதுரகிரி மலையில் எங்கே,எவ்வாறு மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது என்பதனையும் அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"தாரணியில் சதுரகிரி மேற்கேபாலா
நாமேதான் சொன்னபடி சுரங்கமப்பா
நாயகனே பாதாள வரையுண்டாமே
வளம்பெரிய காவணத்தின் சுரங்கமப்பா
திரையான மறைவுடனே திட்டுவாசல்
தீர்க்கமுள்ள வாஞ்சனேயர் காவலப்பா
குறைநீக்கி உட்சென்றால் சித்தர்காவல்
குறிப்புடனே யவர்மாத மஞ்சலித்து"

- அகத்தியர் -

"குறமான கர்மகாண்டம் பெருநூலப்பா
குருபரனே காண்பதர்க்கு வந்தேனென்று
நீடியதோர் நெடுங்கால அருள்காணவேண்டி
நிஷ்களங்க மாகவல்லோ விடையும்காண
தேடியே இவ்விடமும் வந்தேனென்று
சிரமுடனே அவர்பதத்தை தாள்பணிந்து
அறமதுவும் வழுவாமல் புண்ணியவானே
அங்ஙனமே நூல்கண்டு வாங்குவீரே

- அகத்தியர் -

சதிரகிரி மலையின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு திட்டான பகுதியில், மறைவாக ஒரு சுரங்கம் உள்ளதாம். அந்த சுரங்க வாசலில் ஆஞ்சனேயர் காவல் இருக்கிறதாம். அவரைத் தாண்டி உள்ளே செல்ல சித்தர் காவல் இருக்கிறதாம். அவரை வணங்கி.. அருள் கிடைக்கவேண்டியும், என் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளும் பொருட்டும் சிறப்பான கர்மகாண்டம் என்னும் பெரு நூலைக் காண்பதற்க்காக இங்கு வந்தேன் என்று கூறி, அவர் தாள் பணிந்து வணங்கி நூலை வாங்க வேண்டும் என்று சொல்கிறார்.

"வாங்குவாய் யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
வளமுடைய பஞ்சால்லிய புலத்தியாகேள்
திருவான கோவிந்தா கோபாலாகேள்
தீர்க்கமுடன் உந்தமக்கு யாவுமீர்ந்து
பெருமயுடன் நூல்கொடுத்து வழியுஞ்சொல்லி
பேரான வம்பலத்தை திறந்துகாட்டி
துரயான நூல் கொடுத்து வழியுங்கூறி
நுட்பமுடன் பொதிகைக்கு யேகென்பாரே"

- அகத்தியர் -

அந்த நூலை அங்கேயே தங்கி படிக்க வேண்டுமாம். சந்தேகங்கள் ஏதும் இருப்பின் அவற்றை அந்த சித்தர் விளக்கி, அதன் நுட்பங்களை உணர்த்தி, அங்கிருக்கும் அம்பலத்தை திறந்து காட்டி பொதிகை மலைக்கு செல்லும் வழியையும் கூறுவார் என்கிறார் அகத்தியர். ஆச்சர்யமான தகவல்தானே!

இந்த தகவல்களின் சாத்தியங்கள் குறித்தான சந்தேகங்கள் இருந்தாலும், அகத்தியர் கூறிய படி மலையின் மேற்குப் பகுதியில் திட்டும், அதனையொட்டி மறைந்திருக்கும் குகைகள் ஏதுமிருக்கிறதா என்பதை தேடிப் பார்க்கலாம். அநேகமாய் குரங்குகள் நிறைந்து வாழும் குகையாக கூட இருக்கலாம்.அதனையே ஆஞ்சநேயர் காவல் என்றும் அகத்தியர் குறிப்பிட்டிருக்கலாம்.ஆர்வமுள்ளவர்கள் குருவருளை வேண்டி முயற்சிக்கலாமே!  SIVA SIVA    GURU....