..
நீங்கள்
 கிரெடிட் கார்டு வாங்க நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் 
விண்ணப்பிக்கும் போது இந்த விஷயங்களை ஞாபகத்தில் வையுங்கள்..
1. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நீங்களே நிரப்புங்கள். தேவையான போது 
மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட 
விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அதைத் தொடர்ந்து, கிரெடிட் கார்டுக்காக தனியே ஒரு பைல் போட்டு கிரெடிட் 
கார்டு தொடர்பான பில்கள் உள்பட அனைத்து கடிதத் தொடர்புகளையும், நீங்கள் 
கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் 
வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள்.
2. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ளதையும், 
கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறை கையேட்டையும் பொறுமையாக, 
முழுமையாகப் படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை 
மையத்தை அணுகி விளக்கம் பெறத் தயங்காதீர்கள்.
3. புதிய கிரெடிட் கார்டு வாங் கும் போது முடிந்தவரை புகைப்பட கிரெடிட் 
கார்டை வாங்குங்கள். அதற்காக கூடுதலாக மிகக் குறைந்த தொகைதான் 
வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக் கொண்ட உடனே மறக்காமல் 
பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் 
உபயோகிப்பதை ஓரளவாவது தடுக்கும்.
4. கிரெடிட் கார்டு தொலைந்து போனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் 
புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் தனியே வைத்திருக்க மறக்காதீர்கள். 
அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள்.
கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டதாக தோன்றினால் உடனடியாக வங்கிக்கு புகார் 
செய்யுங்கள். அப் போது பதிவெண் ஏதாவது வழங்கப்பட்டால், அதையும் 
குறிப்பிட்டு, எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment
THANK YOU