Saturday 20 July 2013

குருவின் குணம்

* மனதில் மறைந்து கிடக்கும் நல்ல சக்திகளை மலரச் செய்பவனே நல்ல கலைஞன். புற அழகை விட அக அழகே கலைக்கு அடிப்படையானது.

* பிழையை உணர்ந்து கடவுளிடம் மன்னிப்பு கேட்டவுடனேயே, நம்முடைய பாவம் நீங்கி புதுவாழ்வுக்கு வழி பிறக்கும்.

* மற்றவர்களுடைய குறைகளை காண்பதை விட, தன்னுடைய குற்றம் குறைகளை கண்டு கொள்வதே சிறந்தது.

* அநீதியைச் செய்பவன் தான் குற்றவாளி என்பதல்ல. அதைக் கண்டும் காணாமல் பொறுப்பற்று ஒதுங்குபவனும் குற்றவாளியே.

* அன்புடையவரால் மட்டுமே கோபத்தைக் கட்டுப்படுத்த இயலும். இடைவிடாமல் ஒவ்வொருவரும் அன்பை வளர்க்க முயலவேண்டும்.

* அடக்கம் இல்லாதவன் எவ்வளவு கற்றவனாக இருந்தாலும் கூட தற்குறிக்குச் சமம். தலைவனாக விரும்புவோருக்கு தலையாயது பணிவுடøமை.

* அஞ்சாமையே மனிதனுக்கு தேவையான குணம் என்று பகவத்கீதை கூறுகிறது.

- காந்திஜி

No comments:

Post a Comment

THANK YOU