Friday, 1 February 2013

கிரியேட்டிவிட்டி (Creativity)



                                                       போட்டி நிறைந்த இந்த உலகில்  ஆளுக்கொரு லட்சியம் இருக்கிறது. ஜெயிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஜெயிக்க வேண்டுமென்றால் அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். வாய்ப்பு என்பது, ரோட்டுக் கடையில் கிடைக்கும் வடையைப்போல எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.

வாய்ப்புகளை தட்டிப்பறிக்க லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.

                                      சினிமா தியேட்டர்களில் நீண்ட க்யூவில் மணிக்கணக்கில் நின்று நாம் டிக்கெட் கவுன்டரின் அருகில் செல்லும் போது, 'ஹவுஸ் புல்' போர்டு போட்டு கவுன்டரை மூடினால் எப்படி இருக்கும்? இம்மாதிரியான சம்பவங்கள், தோல்விகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன.


எப்படித்தான் நமக்கான டிக்கெட்டைப் பெறுவது? நமக்கான வாய்ப்பைப் பெறுவது?

                               போட்டிகளின் மத்தியில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் நமக்கு, இங்கு தான் கிரியேட்டிவிட்டி(Creativity) என்னும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

கிரியேட்டிவிட்டி (Creativity) :

                         
                                 கிரியேட்டிவிட்டி என்பது, முற்றிலும் புதிய யோசனைகளை, திட்டங்களை உருவாக்குவது அல்லது ஏற்கனவே இருக்கும் யோசனைகளை, திட்டங்களை முற்றிலும் புதிதாக மேம்படுத்துவது.

                               அந்த புதிய யோசனை அல்லது திட்டம் முற்றிலும் உங்களுடையதாகவும், வேறு யாரும் இதுவரை யோசித்திராத ஒன்றாகவும் இருக்க வேண்டும், அவ்வளவுதான்.
                             
                       
                        
                                                      நமக்கான லட்சியம் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைவது என்றால், எல்லோரும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் பாதையை தவிர்த்து, மற்றொரு பாதையைக் கண்டுபிடிப்பதுதான் கிரியேட்டிவிட்டி. எல்லோரும் யோசிக்கும் திசையில் யோசிக்காமல், வேறு திசையில் யோசிப்பவனே வாய்ப்புகளை பெறுகிறான்.

                            வித்தியாசமாக சிந்திப்பது சிந்தனை அளவில் மட்டுமே இருந்து விடக்கூடாது. அதனைச் செயல்படுத்துவதுதான் முக்கியம்.

கிரியேட்டிவாகச் சிந்தித்து செயல்படுவது எப்படி?

1. கூட்டத்தில் இருந்து விலகு.

2. ஆராய்ச்சியாளனாக மாறு.

3. சிந்தனை மட்டும் செய்யாதே. செயல்படு


No comments:

Post a Comment

THANK YOU