தரணி செழிக்க பாடு பட்டார்
தான் கற்றது சிறிதே ஆனாலும்
ஏணியாய் பலரை ஏற்றி விட்டார்
ஏழை எளியோர் கற்றிடவே
இலவசக் கல்வி அறிவித்தார்
கல்வி கற்கும் மாணவரின்
பசியைப் போக்க உணவளித்தார்
கட்டிய அணைகள் பலவாகும்
கிட்டிய பலனோ நிறைவாகும்
பேச்சும் மூச்சும் தேச நலன்
சிந்தையும் செயலும் மக்கள் நலன்
அனுபவ அறிவே ஆயுதமாம்
எளிமையும் திறமையும் கூர்வாளாம்
படிக்காத மேதையின் போர்வாளாம்
No comments:
Post a Comment
THANK YOU