Thursday, 7 February 2013

அதிசய இடம்

 


அன்பு.........
அது கருவறை சுகம்,
ஒருமையின் ஆனந்தம்,
நிறைவின் வெளிப்பாடு,
இதயத்தின் வாழ்க்கை.
ஆம்..........அது அதிசய இடம்............
அங்கு உன் சோகங்களை கொட்டலாம்,
சுகங்களாக மாறும்,
அங்கு உன் புண்களைக் காட்டலாம்,
தழும்பற்ற நலம் கிடைக்கும்,
அங்கு உன் கோபம் வெளிப்படலாம்,
சாந்தம் பின்தொடரும்,
அங்கு உன் பொறாமை பேராசை வெறுப்பு இப்படி....
எல்லா அழுக்குகளும் அதிசயமாய் அனுமதிக்கபடும்,
ஆச்சரியமாய் தீர்ந்துபோகும்,
அங்கு உன் தவறுகள் தவறுகளல்ல
நடைபழகும் குளறுபடிகள்,
ஆகவே ஆனந்த ரசிப்பாய் இருக்கும்.
அங்கு.......நீ கடலுக்கடியில் இருக்கும் மனிதன்.....
அன்புக் கடலுக்கடியில்................................
இந்த வெளிஉலகம் உன்னை பாதிப்பதில்லை,
வெளிக்காற்று உன்மீது படுவதில்லை,
பார்ப்பதெல்லாம்.......அழகு பரவசம் சத்தியம்.

அச்சத்தின் இறப்பு

இறப்பு என்பது அழகானதுதான்.ஏனெனில்அப்போது ஒரு ஆழ்ந்த அமைதியும் மிகுந்த ஓய்வும் ஏற்படுகிறது.ஆனால் இறப்பைக் கண்டு நாம் பொதுவாகவே பயப்படுகிறோம்.நீங்கள் தொடர்ந்து வாழ விரும்புகிறீர்கள்.நீங்கள் வாழ்வை இதுவரை முழுமையாக வாழவில்லை.இவ்வளவுதான் வாழ்வு என்று புரிந்தவனுக்கு இறப்பு ஒரு கொண்டாட்டம்.உங்கள் சக்தியை பணம் ,அந்தஸ்து,பதவி,சொத்து,சுகம்,மனைவி,மக்கள் என்ற உலகப் பொருள்களுக்கு செலவழித்து,அதுதான் நிரந்தரம் என்ற கருத்தை உங்கள் மனதில் ஆழமாக செலுத்தி விட்டீர்கள்.அது எப்போதும் வேலை செய்து கொண்டேயிருக்கும்.அதிலிருந்து உங்களால் மீள முடியவில்லை.இறப்பைக் கண்டு பயப்பட இது ஒரு காரண

No comments:

Post a Comment

THANK YOU