Thursday, 7 February 2013

தியான யுக்திகள்


தியான யுக்தி – 1
சோகம் மிக சிறந்த தருணம்
சோகம் வரும் கணம் ஒரு ஆழ்ந்த புரிதலுக்கான கணமாக மாறக்கூடும் ஏனெனில் ஏதோ ஒன்று உன் இதய ஆழத்தை தொட்டுள்ளது. இப்போது நேரத்தை வீணாக்காதே. அதன் மேல் தியானம் செய். அதை ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு மூலையிலிருந்தும் பார். வெறுமனே கோபமாக இருக்காதே. வெறுமனே சோகமாக இருக்காதே. அது தியானம் செய்வதற்கான மிக அற்புதமான தருணமாகும்.
தியான யுக்தி - 2
திரைபடமாக அனுபவி
நீ மனதின் திரைபடத்தை முழுமையாக அனுபவிக்கலாம். பல்வேறு அற்புதமான திரைபடங்கள் திரையில் ஓடும், நீ வெறுமனே பார்க்கலாம். எந்த படமும் இவ்வளவு அற்புதமான நாடகமாகவோ, ஆர்வமூட்டுவதாகவோ இருக்காது. ஆனால் நீ ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்கவேண்டியது மிகவும் முக்கியம்.
தியான யுக்தி - 3
இரண்டுபட்டவனல்ல
எப்போதெல்லாம் நீ கோபமடைகிறாயோ, உனது நண்பன் அல்லது உனது மனைவி அல்லது கணவன் என யார்மீது கோபம் வந்தாலும் - அது மிகச் சிறிய விஷயமாக இருக்கும், ஒரு தினகாலண்டரில் இருந்து தேதியை கிழிக்கும் விஷயமாக கூட இருக்கலாம் சேர்ந்து வைத்திருக்கும் கோபம் வெறுப்பு வெளிவரும் இதை நீ எப்போதாவது நினைத்து பார்த்திருக்கிறாயா எப்போதெல்லாம் இப்படி நிகழ்கிறதோ அப்போதெல்லாம் இயந்திரதனமாக இல்லாமல் தன்னுணர்வோடு இரண்டுபட்டவனல்ல என்று சொல். உடனடியாக நீ உன் இதயத்தின் உள்ளே தீடீரென ஒரு தளர்வு நிலையை உணர்வாய்.
இரண்டுபட்டவனல்ல என்று சொல், அப்போது அங்கே தேர்ந்தெடுக்க எதுவுமில்லை, தேர்வு என்பதே இல்லை, விரும்பவோ, வெறுக்கவோ எதுவுமில்லை. பின் எல்லாமும் சரியாகிவிடும், நீ எல்லாவற்றையும் அரவணைக்கலாம். பின் வாழ்க்கை உன்னை எங்கே கொண்டு சென்றாலும் சரி, நீ செல்லலாம். வாழ்விடம் நீ இணைப்புணர்வு கொள்வாய்.
தியான யுக்தி - 4
ஆனந்தத்தை ஈர்த்துக் கொள்
நீ என்ன செய்தாலும் அது ஆனந்தத்தை உனக்குத் தருமா என்பதில் தெளிவோடு இரு. அது ஆனந்தத்தை கொண்டு வராது என்றால் அதை விட்டுவிடு, அதை செய்யாதே. அது உனக்கு துன்பத்தை தரும் என்பதை உன்னால் பார்க்க முடிந்தால் அதை மறந்து விடு. நேரத்தை வீணடிக்காதே. கடந்த காலத்தில் அதன் மூலம் நீ துன்பப்பட்டாய் என்பது உனக்கு தெரிந்தால், என்றாவது ஒருநாள் அது சந்தோஷத்தை கொண்டுவரும் என்று நம்பிக்கை கொள்ளாதே. அது கொண்டு வராது.
ஒரு சிறிதளவு சந்தோஷத்தை அது கொடுத்தால் கூட அதை அறிகுறியாக எடுத்துக் கொள். அதனுள் ஆழமாக செல், அதை மறுபடி மறுபடி செய், அதை மேலும் மேலும் அதிகமான அளவில் செய், அதன் ஓட்டத்துடன் செல். எந்த வாய்ப்பையும் தவற விடாதே. ஒவ்வொருவருக்கும் சிறிய அளவிலான சந்தோஷம் நிகழும், அதை கொண்டாடு. பின் அது மேலும் மேலும் அதிக அளவில் நிகழ ஆரம்பிக்கும். நீ உன்னுள் சந்தோஷத்தை ஈர்க்கக்கூடிய மின்காந்த சக்தியை உருவாக்கிக் கொள். நீ ஒரு நேர்மறை சக்தி கொண்ட காந்தமாக மாறு.
தியான யுக்தி - 5
பேச்சை நிறுத்து.....உனது அன்பை வெளிப்படுத்து
எப்போதெல்லாம் நன்றாக உணர்கிறாயோ, உணரு. அங்கு மனதையோ, மொழியையோ கொண்டுவந்து அதை ஆராய்ச்சி செய்யாதே. செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு எந்த அடையாளமும் தேவையில்லை. ஏனெனில் எந்த அடையாளமும் உண்மையில்லை. நன்றாக இருப்பதாக உணரும் அந்த உணர்வு அழிவற்றது. நீ அதை நல்லது என குறிப்பிடும்போது நீ அதை சாதாரணமானதாக மாற்றி விட்டாய். யாரிடமாவது நீ நேசத்தை உணர்ந்தால் நான் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்லும்போது அதன் புனிதத்தை குறைத்து விட்டாய். நீ அதை ஏற்கனவே கெடுத்து விட்டாய், புரிகிறதா? இந்த வார்த்தை குலைத்துவிடுகிறது. நீ உனது முழு இருப்பின் மூலம் அதை காட்டு. அதை அனுபவி. மற்றவர் அதை உணரட்டும்..... ஆனால் அதைப்பற்றி எதுவும் சொல்லாதே.

No comments:

Post a Comment

THANK YOU