Published in
வரலாற்றாளர் ஆக்கங்கள்
Friday, 27 May 2011 09:58
முசோலினி உலகை பயமுறுத்திய
சர்வாதிகாரிகளில் ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர்.1922 முதல் 21
ஆண்டுகாலம் இத்தாலியின் பயங்கரமான சர்வதிகாரியாக விளங்கிய இவர் ஹிட்லரின்
நண்பர்.
ஹிட்லர் தற்கொலை செய்வதற்கு இரு
நாட்களுக்கு முன்னர் முசோலி புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டார்.இந்த கொலை
நடந்த முறை சாதரணமானது அல்ல எல்லோருக்கும் சிம்மசொப்பனமாக இருந்த இந்த
சர்வதிகாரியையும்,அவருடைய காதலியையும் சுட்டுக்கொன்று,பிணங்களை விளக்கு
கம்பம் ஒன்றில் தலை கீழாக தொங்கவிட்டார்கள்.
தொழிலாளியின் மகன்
இத்தாலியில் இரும்புப்படறை நடத்திய
கொல்லர் ஒருவரின் மகனாக 1883 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி
பிறந்தார்.முசோலினியின் தாயார் பாடசாலை ஆசிரியை.அப்போது இத்தாலியில் மன்னர்
ஆட்சி நடந்து வந்தது.முசோலியின் தந்தை மன்னராட்சி ஒழித்து மக்களாட்சி மலர
வேண்டும் என்ற கருத்துடையவர் .
தன் இரும்பு பட்டறைக்கு வருகின்றவர்களிடம்
எல்லாம் அரசியல் பேசுவார்.அதனால் முசோலினிக்கு இளமையிலேயே அரசியலில்
ஈடுபாடு ஏற்பட்டது.பாடசாலை படிப்பை முடித்ததும் சில காலம் ஆசிரியராக
பணியாற்றினார்.இலத்தீன், பிரெஞ்சு,ஜெர்மன் ,ஸ்பானிஷ் ,ஆங்கிலம் ஆகிய
மொழிகளையும் கற்றறிந்த அவர் பேச்சாற்றலும் எழுத்து ஆற்றலும் மிக்கவர்.
ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு சிறிது
காலம் இராணுவத்தில் பணியாற்றினார்.பிறகு கம்யூனிஸ்ட் பத்திரிகை ஒன்றில்
ஆசிரியரானார்.பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபரப்பை
உண்டாக்கின .ஒரு கட்டுரைக்காக அவருக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை
விதிக்கப்பட்டது.சிறையிலிருந்து விடுதலையான போது பல்லாயிரக்கணக்கான
இளைஞர்கள் அவரை சிறை வாசலில் வரவேற்றனர் .மறுநாளே அவந்தி என்ற புரட்சி
பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றார் .
முதலாம் உலகப்போர்
இந்த நிலையில் 1914 ஆம் ஆண்டு முதலாம்
உலகப்போர் நடந்தது.முசோலினி இராணுவத்தில் சேர்ந்தார் .அதே ஆண்டில் தான்
ஜேர்மனியில் ஹிட்லரும் இராணுவத்தில் சேர்ந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.போரில் முசோலினி படுகாயமடைந்து ஊருக்கு திரும்பினார்.
1919 இல் உலகப்போர் முடிவடைந்தது.போரில்
இத்தாலியில் மட்டும் 650,000 பேர் பலியானார்கள்,மேலும் 1,000,௦௦௦ பேர்
படுகாயமடைந்திருந்தார்கள்.இத்தாலியின் பொருளாதாரமே சீரழிந்தது.எங்கு
பார்த்தாலும் பசியும் பட்டினியும் .நாட்டில் கலகங்கள் மூண்டன.
இந்த சூழ்நிலையில் 1920 இல் பாசிஸ்ட்
கட்சியை முசோலினி தொடங்கினார்.1921 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில்
முசோலினி கட்சி ஆட்சியை பிடிக்க முடியாது விட்டாலும் 30 இடங்களை
கைபற்றியது. முசோலினி பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எதிர்க்கட்சி தலைவரான முசோலினி
பாராளுமன்றத்தில் நிகழ்த்திய வீராவேச சொற்பொழிவுகள் ஆளும் கட்ச்சியினருக்கு
அச்சமூட்டின.பாராளுமன்றத்தை அமைதியாக நடத்தவிடாமல் குழப்பம் விளைவித்து
கொண்டிருந்தார் முசோலினி.அது மட்டுமல்ல,ஊர் ஊராக சென்று பொது கூட்டங்கள்
நடத்தி உணர்ச்சி ததும்ப பேசி ஆளும் கட்சிக்கு எதிராக மக்களை
தூண்டிவிட்டார்.
மக்கள் தன் பேச்சில் மயங்கி
கிடக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட முசோலினி ஒவ்வொரு ஊரிலும் அராஜகம்
நடத்தி ,அரச அலுவகங்களை கைப்பற்றும் படி தன் கட்சியினருக்கு
கட்டளையிட்டான்.அதன் படி அவர் கட்சியினர் கிளர்ச்சியாளர்களையும்
பொதுமக்களையும் அழைத்துக்கொண்டு பயங்கர ஆயுதங்களால் அரசு அலுவகங்களை
தாக்கினார்கள்.ஊழியர்களை விரட்டி அடித்து விட்டு அலுவலகங்களையும்
சொத்துக்களையும் கைப்பற்றி கொண்டனர் .
1922 ஒக்டோபரில் முசோலியின் கரும் சட்டை
படை இத்தாலியின் தலைநகரை பிடிக்க திரண்டு சென்றது. நிலைமை கட்டுக்கடங்காமல்
போனதால் அமைச்சரவையை இராஜினாமா செய்யுமாறு மன்னர் கட்டளையிட்டான்.மந்திரி
சபை பதவி விலகியதும் ஆட்சி பொறுப்பை முசோலினியிடம் ஒப்படைத்தனர் .
அடக்குமுறை ஆட்சிக்கு வந்த
முசோலி''இத்தாலியின் முன்னேறத்திற்காக நான் பல தீவிர நடவடிக்கைகளை எடுக்கப்
போகிறேன்.இதை எதிர்ப்பவர்களை அடியோடு அழித்து விடுவேன் ".என்று
அறிவித்தார்.
எதிர்க்கட்சிகளை தடை செய்தார்.
பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கினார்.தன்னை எதிர்த்தவர்களை நாடு
கடத்தினார்.தன் எதிரிகளை சிறைச்சேதம் செய்யும் படி உத்தரவிட்டார் .மூன்றே
ஆண்டுகளில் இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000,000 க்கு
மேல்.இவ்வளவு கொடுமைகள் செய்த முசோலினி மக்களை கவர பல திட்டங்களை கொண்டு
வந்தார். விவசாயிகளுக்கு இயந்திர கலப்பைகளை வழங்கினார்.அதனால் உணவு
உற்பத்தி பெருகியது.வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிக்க நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டன.வரிகள் குறைக்கபட்டன. மருத்துவ வசதிகள் பெருகின. இதனால்
முசோலினியை மக்கள் ஆதரித்தனர். நிலைமை தனக்கு சாதகமாக இருந்ததால் பொது
தேர்தலை நடாத்தினர்.அதில் அவருடைய கட்சி மகத்தான வெற்றி பெற்றது.அதன் பின்
பாராளுமன்றத்தின் அதிகாரங்களையும் தானே எடுத்துக்கொண்டார் .
1922 ஆம் ஆண்டு முதல் இத்தாலியின்
மாபெரும் சர்வாதிகாரியாக முசோலினி விளங்கினார்.1933 ஆம் ஆண்டில்
ஜெர்மனியின் ஆட்சியை கைப்பற்றிய ஹிட்லர் முசோலினியின் நண்பரானார். 1934 இல்
வெனிஸ் நகருக்கு சென்று முசோலினியை சந்திந்து பேசினார் ஹிட்லர் . அதனை
தொடர்ந்து இத்தாலி இராணுவத்தை பலப்படுத்தவும் யுத்த தொழிற்சாலைகளை
அமைக்கவும் ஹிட்லர் உதவினார்.
இந்நிலையில் அரசாங்க விருந்து ஒன்றில்
கிலார என்ற அழகியை முசோலினி சந்தித்தார்.தனது வசீகர பேச்சாற்றலால் கிளாராவை
கவர்ந்த முசோலினி அவளை தன் காதலி ஆக்கிகொண்டான்.
இரண்டாம் உலகப்போர்
1939 இல் இரண்டாம் உலக போர்
ஆரம்பமானது.ஹிட்லரும் முசோலினியும் ஓரணியில் நின்று நேச நாடுகளை
எதிர்த்தனர்.முதலில் இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. பிறகு
போரின் போக்கு மாறி ஹிட்லருக்கும் முசோலினிக்கும் தோல்விகள் ஏற்பட்டன.
இதனால் இத்தாலி மக்களிடம் செல்வாக்கை
இழந்தான்.அவரை பாசிஸ்ட் கட்சி மேலிடம் பதவி நீக்கம் செய்து வீட்டு காவலில்
வைத்தனர்.முசோலினியை காப்பாற்ற விரும்பிய ஹிட்லர் தனது உளவுப்படையை
அனுப்பினார்.உளவுப்படையினர் முசோலினியை மீட்டனர் .
முசோலினியின் மரணம்
வடக்கு இத்தாலியில் முசோலினிக்கு ஓரளவு
ஆதரவு இருந்தது. தன் மனைவி உடனும் காதலி கிளாராவுடனும் அங்கு சென்ற
முசோலினி ஒரு அரசாங்கத்தை அமைத்துக்கொண்டார்.
அப்போது இத்தாலி விடுதலை இயக்கம் என்ற
புரட்சிகர இயக்கம் தோன்றியது.இத்தாலி முழுவதும் புரட்சிக்காரர்கள்
கலவரத்தில் ஈடுபட்டனர்.புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை
உணர்ந்த முசோலினி தன் மனைவியுடனும் காதலியுடனும் அண்டை நாடான
சுவிசலாந்துக்கு தப்பியோட முயற்சி செய்தான்.இரண்டு இராணுவ லொறிகளில் தனது
இரண்டு குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
ஆனால் வழியிலேயே அந்த லொறிகள்
புரட்சிகாரர்களினால் மடக்கப்பட்டது.முசோலினியையும் கிளாராவையும்
புரட்சிக்காரர்கள் பிடித்தனர்.முசோலினியின் மனைவி லொறிக்குள் பதுங்கி
கொண்டதால் அவள் புரட்சிகார் கண்ணில் படவில்லை.
இச்சம்பவம் 1945 ஏப்ரில் 27 ஆம் திகதி
இடம் பெற்றது.அன்று டாங்கோ நகரில் ஒரு அறையில் முசோலினியும் கிளாராவும்
அடைத்து வைக்கப்பட்டனர் .
மறுநாள் வந்து இயந்திர துப்பாக்கியால்
இருவரையும் புரட்சிக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள் .முசோலினிக்கு
உதவியாக இருந்த வேறு சிலரையும் சுட்டு கொண்டனர். அவர்களது உடல்கள் மிலான்
நகருக்கு கொண்டு செல்லப்பட்டு மின் கம்பத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டது.
அன்று மாலை உடல்கள் கீழே இறக்கப்பட்டு
அடையாளம் தெரியாத இடத்திற்கு கொண்டு சென்று புதைக்கப்பட்டன.புதைப்பதற்கு
முன் குற்றவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் முசோலியின் மூளையை எடுத்து சென்றனர்.
உசாத்துணை நூல்
உலக சரித்திரம்
ஜவஹர்லால் நேரு
No comments:
Post a Comment
THANK YOU