Showing posts with label சாதனைகள் guinnes. Show all posts
Showing posts with label சாதனைகள் guinnes. Show all posts

Friday, 26 July 2013

தேசியக் கொடி பிறந்த வரலாறு!

தேசியக் கொடி பிறந்த வரலாறு!
History of Indian National Flag
ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக விளங்குவது அந்த நாட்டின் தேசியக் கொடியாகும். அனேகமாக ஒவ்வொரு நாடுமே, அது பிறப்பதற்கு முன்பே தேசியக் கொடியை உருவாக்கியிருக்கும். அதேபோலத்தான் இந்தியாவும் தனது தேசியக் கொடியை சுதந்திரமடைவதற்கு முன்பே உருவாக்கியது. பல்வேறு உருவங்களில் வலம் வந்த நமது தேசியக் கொடி 1947ம் ஆண்டு ஜூலை மாதம் தற்போதைய வடிவத்தை அடைந்தது. சுதந்திரம் கிடைக்க ஒரு மாதத்திற்கு முன்புதான் நமது தேசியக் கொடி தற்போதைய வடிவத்தை எட்டியது.

தேசியக் கொடிதான் ஒவ்வொரு நாட்டுக் குடிமகனுக்கும் உயிர் மூச்சாகும். கொடிக்காக உயிர் துறந்த குமரன்கள் பலரைக் கண்ட நாடு நமது இந்தியா.

தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யா:

இந்தியாவின் தேசியக் கொடியை உருவாக்கி வடிவமைத்தவர் பிங்கலி வெங்கய்யா. ஆந்திராவைச் சேர்ந்தவர். தற்போதைய தேசியக் கொடிக்கு 1947ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி அப்போது உருவாக்கப்பட்டிருந்த நியமனச் சபையில் அங்கீகாரம் தரப்பட்டது. இதுதான் இந்தியாவின் தேசியக் கொடி என்று முடிவெடுக்கப்பட்டது அந்த நாளில்தான்.

மூன்று வண்ணங்களைக் கொண்டதாக கொடி இருந்ததால் இதற்கு மூவர்ணக் கொடி என்றும் பெயர் வந்தது. மேலே காவி நிறமும், நடுவில் வெண்மையும், கீழே பச்சை நிறமும் கொண்டதே இந்தியாவின் தேசியக் கொடி. நடுவில் அசோக சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. இந்த அசோக சக்கரம் கடல் நீல நிறத்தில் இருக்கும்.

முதல் கொடி பிறந்தது 1906ல்:

முதல் முதலில் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது 1906ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம்தேதி. கல்கத்தாவின் கிரீன் பார்க்கில் அந்தக் கொடியை ஏற்றினர். அந்தக் கொடி சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலான படுக்கை வச பட்டைகளுடன் கூடியதாக இருந்தது. இதுதான் முதல் கொடியாகும்.

அடுத்து 1907ம் ஆண்டு பாரீஸில் மேடம் காமா 2வது தேசியக் கொடியை ஏற்றினார். முதல் கொடியைப் போலவே கிட்டத்தட்ட இது இருந்தது. இருப்பினும் தாமரையும், சப்தரிஷிகளைக் குறிக்கும் வகையில் ஏழு நட்சத்திரங்களும் கொடியில் இடம் பெற்றிருந்தன. இந்தக் கொடி பெர்லினில் நடந்த சோசலிச மாநாட்டின்போது காட்சிக்கு வைக்கப்பட்டது.

அடுத்து 1917ம் ஆண்டு ஹோம்ரூல் இயக்கம் நடந்தபோது, டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், லோகமான்ய பாலகங்காதர திலகரும் இணைந்து ஒரு கொடியை ஏற்றினர். இதில் ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பச்சை நிற படுக்கை வச கோடுகளும் இடம் பெற்றிருந்தன. மேலும் ஏழு நட்சத்திரங்களும் இடம் பெற்றிருந்தன. கொடியின் இடதுபுற மூலையில் இங்கிலாந்தின் யூனியன் ஜாக்கும், வலது புறம் வெள்ளை நிற பிறையும், நட்சத்திரமும் இடம் பெற்றிருந்தன.

1921ல் இரு வண்ணக் கொடி:

1921ம் ஆண்டு பெஸ்வாடா (இப்போதைய விஜயவாடா) என்ற இடத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தின்போது ஆந்திர இளைஞர் ஒருவர் ஒரு கொடியை உருவாக்கி அதை காந்தியிடம் கொடுத்தார். அதில் இந்துக்களையும், முஸ்லீம்களையும் குறிக்கும் வகையில் கொடியில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் இடம் பெற்றிருந்தது. அதைப் பார்த்த காந்தி, கொடியில் வெள்ளை நிறத்தை சேர்க்க ஆலோசனை கூறினார். மேலும், சுழலும் சக்கரத்தை இணைக்குமாறும் அவர் ஆலோசனை கூறினார்.

31ல் பிறந்தது மூவண்ணக் கொடி:

1931ம் ஆண்டு நமது தேசியக் கொடியின் வரலாற்றில் முக்கியமான ஆண்டாகும். அந்த ஆண்டில்தான் மூவண்ணக் கொடியை நமது தேசியக் கொடியாக ஏற்கலாம் என்ற அங்கீகாரம் கொடுக்கப்பட்ட ஆண்டாகும். இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றினர். அந்தக் கொடியே தற்போதைய கொடியின் முன்னோடியாகும். காவி, வெண்மை மற்றும் பச்சை நிறத்துடன் கூடிய அந்தக் கொடியில் காந்தியின் ஆலோசனையை ஏற்று சுழலும் சக்கரமும் இணைக்கப்பட்டிருந்தது (அசோக சக்கரம் இல்லை).

1947ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி நடந்த நியமனச் சபையின் கூட்டத்தில் தற்போதைய சுதந்திரக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. சுழலும் சக்கரத்திற்குப் பதில் அசோக சக்கரம் இணைக்கப்பட்டு கொடி தற்போதைய வடிவத்தை அடைந்தது.

பலம்-அமைதி-வளர்ச்சி:

தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள மூவண்ணத்திற்கும் ஒரு தத்துவம் உண்டு. காவி நிறம் பலத்தையும், தைரியத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது. நடுவில் உள்ள வெண்மை நிறம், உண்மை மற்றும் அமைதியை காட்டுகிறது. பச்சை நிறம், வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாய செழிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

நடுவில் இடம் பெற்றுள்ள அசோக சக்கரம், வாழ்க்கை சுழற்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

எங்கும் ஏற்றி மகிழலாம்:

2002ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வரை தேசியக் கொடியை இஷ்டப்பட்ட இடத்தில் ஏற்ற முடியாது என்று கட்டுப்பாடு தடை இருந்தது. ஆனால் அந்த ஆண்டு குடியரசு தினம் முதல் பொதுமக்கள் எங்கு வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்றி மகிழலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த குடியரசு தினத்தன்று மக்கள் தங்களது வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் கொடியேற்றி மகிழ்ந்தனர்.

தேசியக் கொடியை ஏற்றுவதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. தேசியக் கொடிக்கு எந்த வகையிலும் அவதூறு, அவமதிப்பு ஏற்படாத வகையில் கையாள வேண்டும், கொடியேற்ற வேண்டும்.

மத நோக்கத்திற்கான காரியங்களில் தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது. சட்டை உள்ளிட்ட துணிகளில் தேசியக் கொடியை அச்சிடக் கூடாது. சூரிய உதயத்தின்போது கொடியை ஏற்றி, சூரிய அஸ்தமனத்தின்போது இறக்கி விட வேண்டும்.

கொடி கிழிந்த நிலையிலோ அலலது கசங்கிய நிலையிலோ அல்லது நிறம் மங்கிய நிலையிலோ ஏற்றப்படக் கூடாது. தரையைத் தொடும் வகையிலோ அல்லது தண்ணீரில் மிதக்கும் நிலையிலோ கொடியை பறக்க விடக் கூடாது.

தேசியக் கொடி பறக்கும் போது அதற்கு மேல் வேறு எந்தக் கொடி அல்லது துணி பறக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொடி மீது மாலை உள்ளிட்ட வேறு எந்தப் பொருளும் இடம் பெறக் கூடாது.

இந்திய மக்களின் இறையாண்மை, சுதந்திரம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் தேசியச் சின்னமே நமது தேசியக் கொடி. நமது தேசியப் பெருமையின் அடையாளம் தேசியக் கொடி. கம்பீரமாக பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடிக்கு வீர வணக்கம் செலுத்தி நாம் பெற்ற சுதந்திரத்தை கெளரவிப்போம்.

தேசிய கொடியை வடிவமைத்த பெண்



இன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதிவு. 
நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக... 1947 ஜூலை 17 அன்று  பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..!
வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரியா தியாப்ஜி. 
ஐடியா தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி. 
( பலரும்  தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல... அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..! )

இந்த பத்ருதீன் தியாப்ஜிதான்... இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்களில் முக்கியமான முதல் ஐவரில் ஒருவரின் பேரன்..!
அந்த ஐவரில் மீதி நான்கு பேரை பள்ளி வரலாற்றில் படித்து இருப்பீர்கள். ஆலன் அக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பன், ஒமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி ஆகிய நால்வரை அடுத்த பெயர்தான்... முல்லா தியாப் அலியின் மகன் பாரிஸ்டர்.பத்ருதீன் தியாப்ஜி..! (காலம் : 1844 – 1906)
சர். ஆலன் அக்டேவியன் ஹியூம்,  சர்.வில்லியம் வெட்டர்பன் போன்ற ஆங்கிலேயர்களால், மெத்தப்படித்த இந்தியர்களை அழைத்து, 1885 இல், INC துவக்கப்பட்டது. நோக்கம், பிரிட்டிஷ் அரசுடன் எந்த பிரச்சினை ஆனாலும் சுமுக பேச்சுவார்த்தைக்காக வேண்டி. அதன் முதல் தலைவர்...W.C.பானர்ஜி. 
1886 இல், இ.தே.கா.-இன் இரண்டாம் தலைவர்,  பாரிஸ்டர். D. நவ்ரோஜி.

அடுத்த வருடம், 1887 இல் மூன்றாம் தலைவரானவர்தான் பாரிஸ்டர். பத்ருதீன் தியாப்ஜி. 
இவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய பாரிஸ்டர். (1867)
பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய சீஃப் ஜஸ்டிஸ். (1902)
இவரின் மகன்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் முஸ்லிம் பொறியாளர்.
இவரின் மகளோ முதலில் வெளிநாடு சென்று படித்து வந்த டாக்டர். 
இவரின் பேரன்தான்.... நாம் முதலில் பார்த்தவர்... அவரின் பெயரும் தாத்தாவின் பெயரேதான்..! பத்ருதீன் தியாப்ஜி..!
பிப்ரவரி - 20, 1947 : ஆளும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு விட்டுவிடப் போவதாக இங்கிலாந்து பிரதமர் கிளிமென்ட் அட்லீ அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.
ஜூன் 3, 1947 : வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், பாகிஸ்தான் - இந்தியா என்று இரு நாடுகளாக பிரிப்பது பற்றிய தனது திட்டத்தை காங்கிரஸ் & முஸ்லிம் லீக் கட்சிகளிடம் சொல்கிறார். ஆகஸ்ட் 15 ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும் குறித்து தெரிவிக்கிறார்.
அத்துடன், வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், இந்தியா & பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டின் கொடிகளிலும், தங்கள் பிரிட்டிஷ் நாட்டின் சின்னமான யூனியன் ஜாக்கை (நீள பின்புலத்தில் சிகப்பு வெள்ளையில், ஒரு பெருக்கல் குறி மீது ஒரு கூட்டல் குறி)  தத்தம் கொடியின் மூலையில், பத்தில் ஒரு பங்கு அளவில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். ( ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கொடிகளில் தற்போது உள்ளது போல...! )
இதனால், கடுப்பாகிப்போன இருவரும், தங்களுக்கான தனித்துவ கொடி வடிவமைப்பில் முழுமூச்சாக இறங்குகின்றனர். முக்கியமாக அந்த பிரிட்டிஷ் கொடியின்  'யூனியன் ஜாக்' இருக்கவே கூடாது என்று முடிவெடுத்தவர்களாக..!
ஜூன் 23 1947 : கொடி வடிவமைக்க ஒரு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்படுகிறது. ( Ad-hoc Committee; Dr. Rajendra Prasad (Chairman), Abul Kalam Azad, C. Rajagopalachari, Sarojini Naidu, K. M. Pannikkar, K. M. Munshi, B. R. Ambedkar, S. N. Gupta, Frank Anthony and Sardar Ujjal Singh)
முன்னர், 1916 இல் பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்ட, சுதந்திரம் வாங்க போராடிய "இந்திய  தேசிய காங்கிரஸ் கொடியே நம் நாட்டின் தேசிய கொடி" என்ற வாதம் வலுப்பெறுகிறது..! 

மேலே  உள்ள இந்திய அரசின் தபால் தலையில் இவர் வடிமைத்த கொடி எவை எவை என்று மிகவும் தெளிவாகவே உள்ளது..!கவனியுங்கள் சாகோஸ்..!
இந்நிலையில், மும்பையில் இருந்து டெல்லிக்கு ஆர்.எஸ்.எஸ். இன் சாவர்கர், முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்படி ஒரு அவரசர தந்தி அடிக்கிறார். அதில், கொடி முழுக்க காவி நிறம் இருக்க வேண்டும் என்றும்(?!) இராட்டை இடம்பெறவே கூடாது என்றும்(?) வேறு எந்த சின்னமும் இருக்கலாம்(!) என்றும் கூறி..!
வேறு சிலர், புலிச்சின்னம் உள்ள நேதாஜி ஏற்றிய கொடிதான் வேண்டும் என்கின்றனர். இப்படியாக ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டு இருக்க, அனைத்து கருத்துக்களையும் அமைதியாக கேட்டு வைக்கிறது அட்ஹாக் கமிட்டி.
இப்போதுதான், முதல் பத்தியில் நாம் பார்த்த பத்ருதீன் தியாப்ஜி, சீனில் என்ட்ரி ஆகிறார்..! அவர், கமிட்டி தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத்தை சந்தித்து, அவரின் தேசிய கொடியின் மாதிரியை சொல்கிறார். தலைவருக்கு இது பிடித்து விடவே, அதற்கு காந்திஜியின் ஒப்புதலையும் பெற்று வருமாறு அனுப்பி வைக்கிகிறார். காந்திஜியிடம், ராட்டைக்கு பதில் அசோக சக்கரம் மாற்றப்படுவதற்கு காரணத்தை இப்படி சொல்கிறார், பத்ருதீன் தியாப்ஜி.
அதாவது, "கிடைமட்டமான சம அளவு மூவர்ணம் கொண்ட இந்திய தேசிய கொடியின் இருபக்கத்தில் இருந்து அதை பார்த்தாலும், இடம் வலம் மாறாமல் கொடி அதே போலவே தெரியவேண்டும். இதற்கு அசோக சக்கரம்தான் சரியாக வரும். இந்திய தேசிய கொடியின் 'இராட்டை' சரியாக வராது" என்றார்..! 
கூர்ந்து கேட்டுவிட்டு இதனை, ஏற்றுக்கொண்ட காந்திஜி, அவரையே உடனே ஒரு 'மாதிரி கொடி' தயார் செய்து கொண்டு வந்து காட்டுமாறு கூறுகிறார்.
மூன்று அளவு நீளமும், இரண்டு அளவு அகலமும் கொண்ட காதி கைத்தறி துணி ஒன்றை வாங்கிக்கொண்டு போய், தனது மனைவி ஸுரியாவிடம் தருகிறார். அவர் ஒரு கைதேர்த்த வண்ணத்தூரிகையாளர்.
கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அந்த அம்மையார், சிகப்பு+மஞ்சள் கலந்து காவி மேலேயும், கரும்பச்சையை கீழேயும், நடுவில் வெள்ளையில் கரு நீல வண்ணத்தில் 24 கால்கள் கொண்ட அசோக சக்கரமும் மிக எழிலாக வரைந்து தருகிறார்.
தியாப்ஜி அதை கொண்டு போய் காந்திஜியிடம் காண்பிக்க, அதற்கு காந்திஜி இன்முகத்துடன் ஒப்புதல் தந்து அட்ஹாக் கமிட்டிக்கு அனுப்ப, அந்த 'கொடி வடிவமைப்பு கமிட்டி' அதையே சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியாக அறிவிக்கிறது... ஜூலை 17, 1947 அன்று அதிகாரபூர்வமாக..!
உலக மகளிர் தினத்தில் மட்டுமின்றி, இந்திய தேசிய கொடி பறந்து கொண்டிருக்கும் 365 தினங்களிலும் தேசிய கொடியை வடிவமைத்த அப்பெண்மணிக்கு, கோடி கரங்கள் தடுத்து மறைத்தாலும் வரலாற்றில் தக்க  இடம் நிச்சயமாக உண்டு..!
ஆதார ஆவணங்கள்
Who designed National Flag : Mrs. Badruddin Tyabji
http://www.flagfoundationofindia.in/tiranga-quiz.html  (official site for national flag)
http://muslims4india.com/contribution/freedom/national-flag.html (The wheel of truth, by Mr.K.Natwar Singh)

Wednesday, 24 July 2013

photos different

எனது அன்புத் தம்பி இலயராஜா அவர்களிடம் இருந்து  பின் வரும் கடிதமும் புகைப்படமும் வந்தது.




இந்த புகைப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு கீழ்க்கண்ட வரிகளை படிக்கவும்.












நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனில் , கறுப்பு உருவங்கள் ஒட்டகங்களின் நிழல்தான் ; அவற்றை ஒட்டிய கோடு போன்ற (வெள்ளை) வடிவங்கள்தான் நிஜ ஒட்டகங்கள். இந்தப் படம் ஒட்டகங்களுக்கு நேர்மேலாக இருந்து சூரிய அஸ்தமனத்தின் போது எடுக்கப்பட்டது.





தொடர்ந்து உலக அளவிலான விருதுகளை வென்றுவரும் George Steinmetz என்ற கலைஞன் எடுத்த படம்தான் இது. ஆப்பிரிக்கக் காடுகள் , பாலைவனங்கள் , அன்டார்டிக் பனிப்பிரதேசங்கள் போன்ற இன்னும் முழுதாக கண்டறியப்படாத இயற்கையின் மர்மங்களை புகைப்படங்களில் பதிவு செய்து வருபவர். இவரைப் பற்றிய விவரங்கள் மற்றும் இன்னும் உங்களை வியப்பில் ஆழ்த்தத பல அதிசய உண்மை நிகழ்வுகளுடன் விரைவில் ...........
                                    

Monday, 22 July 2013

நான் யார் வீரனா என்னை கேட்டால் நான் கோழை இல்லை

தான் பெரிய வீரனென்று தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச் செல்வான் ஒருவன் — அவன்தான்
நாடகத்தை ஆட வைக்கும் இறைவன்.
> கண்ணதாசன்.
————————————————————————–
பொண்டாட்டியை அடிப்பவன் அவளுக்கு மூன்று நாட்கள்
ஓய்வுகொடுத்துத் தானும் மூன்று நாள்
பட்டினியாயிருப்பான்!
————————————————————————–
அண்டை வீட்டாருக்கு காற்று வராதபடி உங்கள் சுவரை
அவர்கள் அனுமதியில்லாமல் உயரமாக எழுப்பாதீர்கள்
>நபிகள் நாயகம் (ஸல்)
————————————————————————-
தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை
உண்டாக்காது!
———————————————————————–
உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன்
மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்!
—————————————————————————-
அறிவே தந்தை, மனநிறைவே தாய்.
உண்மையே உடன் பிறந்த சகோதரன் என ஏற்றுக்கொண்ட
எவரும் எவருக்காகவும் அஞ்சாமல் வெற்றி பெறுவர்
>சீக்கியப் பழமொழி

1. புத்திசாலி ,பெண்களிடம் ”நீ பேசாமல் இருக்கும் போதுதான் அழகாக இருக்கிறாய்”என்பான்
2. குடிப்பதை நிறுத்த
கல்யாணத்திற்கு முன் – சோகமாக இருக்கும் போது குடி
கல்யாணத்திற்கு பின் – சந்தோசமாக இருக்கும் போது குடி
3. நண்பர்களை நேசி அவர்கள் சகோதரிகளை அல்ல….. சகோதரியை நேசி அவர்கள் நண்பர்களை அல்ல…
4. எல்லா மனிதனையும் தவறு செய்யும் போது வாழ்த்துவது கல்யாணத்தின் போதுதான்

கண்ணன் vs ராதா but குரு..?????

ஒருநாள் ராதா துவாரகை நகருக்கு வந்தாள். ருக்மணி ராதாவை வரவேற்று பாலும் தேனும் கொடுத்தாள். இருவரும் கண்ணனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்னர் ராதா சென்று விட்டாள்.
அன்றிரவு கண்ணனுக்குப் பள்ளியறையில் ருக்மணி பாதபூஜை செய்தாள். அவன் பாதங்களில் சிறு கொப்புளங்கள் இருந்தன. இதைக் கண்ட ருக்மணி, கொப்புளங்கள் உண்டான காரணத்தைக் கேட்டாள்.
இன்று பகலில் ராதாவுக்குக் கொடுத்த பால் சூடாக இருந்தது. அதை பருகினாள். “”அவள் தன் இதயத்தில் பூஜிக்கும் என் பாதங்களில் பாலின்சூடு பட்டு இக்கொப்புளங்கள் உண்டாயின” என்றான் கண்ணன். ராதா பால் சூடாக இருந்ததாகச் சொல்லவில்லையே என்றாள் ருக்மணி. நீ பிரியமாகக் கொடுத்ததால் ராதா குடித்து விட்டாள். ஆனால், அவள் கொண்ட அன்பினால் நெஞ்சிலே குடியிருக்கும் என் பாதங்களில் சூடுபட்டு விட்டது.
உண்மையறிந்த ருக்மணி, “”உன் பாதங்கள் கோமளமானவை. அதைவிடக் கோமளமானது ராதையின் நெஞ்சம். என்னே! ராதாவின் பிரேமை!”என்று ருக்மணி வியந்தாள். சூடான பதார்த்தத்தை உண்பதில்லை என்பது காதலர் இலக்கணம். என்ன செய்வாள் ராதை! கொடுப்பவள் ருக்மணியாயிற்றே என்று பாலைக் குடித்து விட்டாள். ராதா தன் மீது கொண்டிருந்த ஈடு இணையற்ற அன்பை இதன் மூலம் கண்ணன் வெளிப்படுத்தினான்

ஜே.கிருஷ்ணமூர்த்தி guru

ஜே.கிருஷ்ணமூர்த்தி என்ற மாமனிதர்: க.சி.அகமுடை நம்பி; பக். 232; ரூ.120; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1; )0452 - 2345971.


ஜே.கே. என்று பரவலாக அறியப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் போதனைகள் திருவள்ளுவரின் சிந்தனைகளுடன் எங்கெங்கு கைகோர்த்து நிற்கின்றன என்பதை நூலாசிரியர் திறம்பட எடுத்துரைத்துள்ளார்.
கடவுள்கள், கோயில்கள், புனித நூல்கள், தேசியம், தேசப்பற்று போன்றவை யாவும் உலக ஒருமைக்கு எதிரானவை. இவற்றிலிருந்து மனித இனம் விடுபட வேண்டும். அமைப்புகள் உங்களைச் சுதந்திரமானவர்களாக ஆக்க முடியாது. அமைப்பு முறையில் நிகழும் வழிபாடோ, உங்களை நீங்களே வருத்திக் கொள்கின்ற செயல்பாடோ, உங்களைச் சுதந்திரமானவர்களாகச் செய்யாது. கோயில்கள், நியமங்கள், சடங்குகள் போன்ற அனைத்தும் உண்மையைக் காண்பதற்கு எதிராக உள்ள தடைக்கற்களே. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிக்கலும் மற்றச் சிக்கல்கள் ஒவ்வொன்றுடனும் தொடர்புடையது. ஆகவே ஒரு சிக்கலை அது எதுவாக இருப்பினும் அதனை முழுமையாக நம்மால் தீர்க்க முடிந்தால், மற்ற எல்லா சிக்கல்களையும் நம்மால் தீர்த்துக் கொள்ள முடியும் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
தனிமனிதனின் உள்ளத்தில் அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே அறிதல் வேண்டும். வேலை எதுவாயினும் அதனை விழிப்புணர்வோடு, முழு ஈடுபாட்டுடனும் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் மனித வாழ்க்கையே தியான வாழ்க்கையாக மலர்ந்துவிடும்.
தனி மனிதன் தன்னளவில் வன்முறையற்றவனாக இருந்தால், போட்டி மனப்பான்மையோ, பேராசையோ, பொறாமையோ சிறிதும் இல்லாமல் அமைதியுடன் வாழ்வானாயின் அவனால் இவ்வுலகில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கிருஷ்ணமூர்த்தி இந்நூலில் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

Saturday, 20 July 2013

குருவின் குணம்

* மனதில் மறைந்து கிடக்கும் நல்ல சக்திகளை மலரச் செய்பவனே நல்ல கலைஞன். புற அழகை விட அக அழகே கலைக்கு அடிப்படையானது.

* பிழையை உணர்ந்து கடவுளிடம் மன்னிப்பு கேட்டவுடனேயே, நம்முடைய பாவம் நீங்கி புதுவாழ்வுக்கு வழி பிறக்கும்.

* மற்றவர்களுடைய குறைகளை காண்பதை விட, தன்னுடைய குற்றம் குறைகளை கண்டு கொள்வதே சிறந்தது.

* அநீதியைச் செய்பவன் தான் குற்றவாளி என்பதல்ல. அதைக் கண்டும் காணாமல் பொறுப்பற்று ஒதுங்குபவனும் குற்றவாளியே.

* அன்புடையவரால் மட்டுமே கோபத்தைக் கட்டுப்படுத்த இயலும். இடைவிடாமல் ஒவ்வொருவரும் அன்பை வளர்க்க முயலவேண்டும்.

* அடக்கம் இல்லாதவன் எவ்வளவு கற்றவனாக இருந்தாலும் கூட தற்குறிக்குச் சமம். தலைவனாக விரும்புவோருக்கு தலையாயது பணிவுடøமை.

* அஞ்சாமையே மனிதனுக்கு தேவையான குணம் என்று பகவத்கீதை கூறுகிறது.

- காந்திஜி

அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வெளி (Space)

விண்வெளியின் புதிர்களை அறிவதில் மனித குலத்துக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்துள்ளது. சுமார் 1825 ஆண்டுகட்கு முன்பு "உண்மை வரலாறுகள் (True Histories)" என்ற தலைப்பில் லூசியான் என்ற கிரேக்க நையாண்டி எழுத்தாளர் ஒரு கற்பனை நூலை எழுதினார். அக்காலத்தில் நிலவி வந்த குற்றங்குறைகளின் அடிப்படையில் முழுக்க முழுக்கப் பொய்யும் கற்பனையும் கலந்த நூலாக அது விளங்கியது. கதிரவனுக்கும், நிலவுக்கும் சென்று பயணம் செய்யும் கற்பனைக் கதை அது.

அடுத்து வந்த பல நூற்றாண்டுகளில், விண்வெளி பற்றிக் குறிப்பிடத் தகுந்த நூல் எதுவும் வெளி வரவில்லை. இருப்பினும், நிலவைப் பற்றியும், விண்மீன்களைப் பற்றியும், அவற்றின் புதிர்களைப் பற்றியும் விளங்கிக் கொள்ள மக்கள் முயன்றே வந்துள்ளனர்.

நிக்கலஸ் கோபர்நிகஸ் என்ற போலந்து நாட்டு வானியல் வல்லுநர் தன்னுடைய ஆய்வுகளின் முடிவில், இந்த அண்டத்தின் மையத்தில் சூரியன் இருப்பதாகவும், இப்புவி ஒரு கோள் என்றும் கூறினார். இத்தாலி நாட்டு வானியல் அறிஞர் கலிலியோ 1610-ல் ஒரு தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். இதன் வாயிலாக விண்வெளியையும், நிலவின் மேற்பரப்பையும் நெருக்கமாகப் பார்க்க முடிந்தது.

நிலவைப் பற்றியும், பிற கோள்களைப் பற்றியும் பல கண்டுபிடிப்புகளைக் கலிலியோ கண்டறிந்து வெளியிட்டார். அவரது கண்டுபிடிப்புகள் மக்களால் வரவேற்கப்படவில்லை. எனினும், ஒரு சில அறிஞர்கள் மட்டும் அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டனர். அப்போது முதலே விண்வெளிப் பயணம் பற்றிய முயற்சிகளில் அறிவியல் அறிஞர்கள் ஆர்வம் காட்டி வந்தனர் எனலாம்.

வில்கின்ஸ் என்னும் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் 1638-ல் ஒரு நூல் எழுதினார். அதில் நிலவுக்குப் பயணம் செய்ய 4 வழிகள் இருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார். முதலாவது வழியில், தெய்வீக சக்தி ஒன்று மனிதனை நிலவுக்கு அழைத்துச் செல்லக் கூடும். இரண்டாவது, ஆற்றல் மிக்க மிகப் பெரிய பறவைகள் துணையுடன் நிலவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும். அடுத்ததாக மிகப் பெரிய இறக்கைகளைக் கட்டிக் கொண்டு மனிதனே நிலவிற்குப் பறந்து செல்லலாம். நான்காவதாக, பறக்கும் எந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்து, அதில் அமர்ந்து நிலவுக்குச் செல்லலாம். இவையே அவர் கூறிய 4 வழிகள்.
பின்னர் ஐசக் நியூட்டன் விண்வெளி பற்றிப் பல அரிய உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார். அவரது இயக்க விதிகள் (laws of motion) புதியதோர் அறிவியல் சிந்தனையை உலகிற்கு அளித்தது. புவியை விட்டு உயரே செல்லச் செல்ல, புவியின் ஈர்ப்பு விசை குறைந்து கொண்டே போகும் என்பதை அவர் நிரூபித்தார். மேலும் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும், விண்மீன்கள் முதற்கொண்டு சின்னஞ் சிறு துகள்கள் வரை அனைத்தும் ஒன்றை ஒன்று கவர்ந்து இழுக்கும் ஆற்றல் உடையவை என்றும், அக்கவர்ச்சி விசையே ஈர்ப்பு விசை எனவும் நிரூபித்தார்.

விண்வெளிப் பயணத்தில் நியூட்டனின் ஈர்ப்புவிசை விதிக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்விதியின் அடிப்படையிலேயே, புவியின் கவர்ச்சி விசையிலிருந்து விண்வெளி ஓடத்தின் தப்பித்தல் திசை வேகம் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், நியூட்டன் கண்டுபிடித்த மூன்று இயக்க விதிகளும் விண்வெளிப் பயணத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

சுமார் 475 ஆண்டுகட்கு முன்பு வான்-ஹூ என்ற சீனர் நெருப்பு ஏவுகணை (fire rocket) ஒன்றைத் தயாரித்தார். நாற்காலி வடிவ ஊர்தி ஒன்றில் 47 ஏவுகணைகளில் வெடிப் பொருளை நிரப்பி அது உருவாக்கப்பட்டது. இதன் மீது அமர்ந்து கொண்டு விண்வெளியில் பறக்க இயலும் என அவர் நம்பினார். ஆனால் ஏவுகணைகளில் தீப்பற்றியவுடனே, அவர் உயரே தூக்கி எறியப்பட்டு, அதே வேகத்தில் தரையில் விழுந்து உயிர் இழந்தார்.

வான்-ஹூ அவர்களின் ஆய்வு தோல்வியில் முடிந்தாலும், அறிவியல் அறிஞர்கள் விண்வெளிப் பயணத்திற்குத் தகுதியான ஊர்தியைத் தயாரிக்கும் முயற்சியைக் கைவிடவில்லை. வில்லியம் காங்கிரேவ் என்ற இங்கிலாந்து நாட்டுப் போர்ப்படை அதிகாரி 1808ஆம் ஆண்டு துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளைத் தயாரிக்கத் துவங்கினார். இத்தகைய ஏவுகணைகள் கடற் சண்டையில் பெரும் வெற்றியை ஈட்டித்தரும் என்று அவர் நம்பினார். அவர் கண்டுபிடித்த இவ்வகை ஏவுகணைகள் 1812-ல் அமெரிக்காவுடன் நடந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டன.

ஏவுகணையைப் பயன்படுத்தி அண்டவெளியை ஆய்வு செய்வது பற்றிய நூல் ஒன்றை கான்ஸ்டான்லின் சிலோவ்ஸ்கி என்ற இரஷ்ய நாட்டு அறிஞர் 1898-ல் எழுதி வெளியிட்டார். விண்வெளிப் பயணத்திற்குப் புதியதோர் துவக்கமாக இந்நூல் விளங்கியது.

அமெரிக்க-ஜெர்மன் நாடுகளின் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து திரவ எரிபொருளைப் பயன்படுத்திச் செலுத்தும் ஏவுகணைகளை 1920-ல் உருவாக்கினர். முன்பு சொல்லப்பட்ட இரஷ்ய விஞ்ஞானியும் திரவ எரிபொருளைப் பற்றிக் கூறி இருந்தார். ஆயினும் அப்போது அவர் கருத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை.ஏவுகணை வடிவமைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் கோடர்ட் என்பவரும் முக்கிய பங்காற்றினார். அவரது முயற்சியால் துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணை உருவாக்கப்பட்டது. மேலும் திரவ எரிபொருளால் இயங்கும் ஏவுகணையிலும் அவர் ஆர்வம் காட்டினார். திட எரிபொருளை விட, திரவ எரிபொருள் அதிக ஆற்றல் வழங்குவதாக அவர் கண்டறிந்தார்.

கோடர்ட் பயன்படுத்திய திரவ எரிபொருளானது, பெட்ரோலில் இருந்து வடித்தெடுக்கப்பட்ட கேசொலின் (Gasoline) ஆகும். இந்த கேசொலினை எரிக்கத் திரவ உயிர்வளி (oxygen) பயன் படுத்தப்பட்டது. வளிம நிலையிலுள்ள உயிர்வளியானது அழுத்தத்தினால் குளிர்விக்கப்பெற்று திரவ நிலைக்கு மாற்றப்பட்டது. இதனை "லாக்ஸ் (lox)" எனக் கூறினர்.

திரவ எரிபொருளைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட முதலாவது சோதனை ஏவுகணையை கோடர்ட் 1926-ல் செலுத்தினார். ஆனால் அந்த ஏவுகணை அதிக உயரம் செல்லவில்லை. எனினும் 1929-ல் மேலும் ஒரு ஏவுகணை அவரால் செலுத்தப்பட்டது. அது சுமார் 90 அடி உயரம் விண்ணில் சென்று, கட்டுப்பாடு குறைவு காரணமாகத் தரையில் விழுந்துவிட்டது. சுழலாழிக் கருவியைப் (gyroscope) பயன் படுத்தி இந்தப் பிரச்சினையையும் கோடர்ட் தீர்த்து வைத்தார். சுழலாழிக் கருவி என்பது விரைந்து சுழலும் ஒரு சக்கரம்; இச்சக்கரத்தின் அச்சு ஒரு குறிப்பிட்ட திசையில் எளிதாகத் திரும்பக் கூடியது.

கோடர்ட் செலுத்திய இறுதி ஏவுகணை, மணிக்கு 550 கி.மீ. வேகத்தில், விண்வெளியில் சுமார் 1.25 மைல் தூரம் சென்றது. இரண்டாம் உலகப் போரின் போது அவர் அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்தார். குண்டுகளைப் பொழியும் போர் விமானங்களை மிகச் சிறிய இடத்திலிருந்து விண்ணுக்குச் செலுத்தக் கூடிய துணை உந்து கலங்களையும் கோடர்ட் வடிவமைத்தார். மேலும் அவர் வி-1, வி-2 என்ற ஏவுகணைகளைப் போரில் பயன்படுத்துவதற்காக ஜெர்மனியில் உருவாக்கினார். இவற்றின் முன்னேறிய வடிவங்களே எதிர்காலத்தில் விண்வெளி ஓடங்களாக உருவெடுத்தன.

வார்னர் வான் பிரான் (Warner Von Braun) என்ற ஜெர்மன் நாட்டு ஏவுகணைப் பொறியாளர் இரண்டாம் உலகப் போரின் போது தமது நாட்டை விட்டு அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார். அங்கு அவர் விண்வெளி ஆய்வுக் குழுவுக்குப் பொறுப்பேற்றார். அவர் தலைமையில்தான் எக்ஸ்ப்ளோரர்-1 என்ற துணைக்கோள் (Satellite) வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. அடுத்து அவரது மேற்பார்வையில் சாட்டர்ன் (Saturn) ஏவுகணையும் தயாரிக்கப்பட்டது. முதல் முறையாக புவியிலிருந்து நிலவிற்கு மனிதர்களைக் கொண்டு செல்ல இதுவே பின்னர் பயன்படுத்தப்பட்டது. சிறு வயது முதலே வெர்னர் பிரான் விண்வெளியின் வியத்தகுக் காட்சிகளைக் காண்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அவரது தாயாரும் சிறு தொலைநோக்கி ஒன்றை மகனுக்கு அளித்து அவரது ஆர்வத்துக்கு ஊக்கம் அளித்தார். பின்னாளில் வெர்னர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக வளர்ந்தார்.

சோவியத் யூனியன் 1957 அக்டோபர் 4ஆம் நாள் ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைத் துணைக்கோளை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியது. உலகம் முழுதும் இச்செயலை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தது எனலாம். இச்செயற்கைத் துணைக்கோள் சிறியதொரு நிலவை ஒத்திருந்ததோடு, புவியை 90 நிமிடங்களில் சுற்றி வந்தது. புவியிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் இந்தச் செயற்கைத் துணைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது. அடுத்து 1958 ஜனவரி 31-ல் அமெரிக்கா எக்ஸ்ப்ளோரர்-1 என்ற தனது துணைக்கோளை விண்வெளியில் செலுத்தியது. அடுத்து வந்த சில ஆண்டுகளில் சோவியத் யூனியனும், அமெரிக்காவும் மாறி மாறி துணைக்கோள்களை விண்வெளியில் செலுத்தின. விண்வெளிக் கண்டுபிடிப்புகள் பலவற்றில் ஈடுபட்டு நிலவுக்குச் செல்லும் முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டன.

சோவியத் யூனியன் ஸ்புட்னிக்-1ஐத் தொடர்ந்து மற்றொரு விண்வெளிக்கலமான ஸ்புட்னிக்-II-ஐச் செலுத்தியது. அதில் லைகா என்ற பெயர் கொண்ட பெண் நாய் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு வாரம், பல இன்னல்கள் நிறைந்த விண்வெளிச் சூழ்நிலையில் அந்த நாய் இருந்து உயிர் வாழ்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனவே விண்வெளிக்குச் சென்று உயிருடன் திரும்பி வந்த முதலாவது உயிரினம் என்ற பெருமை லைகா என்ற அந்தப் பெண் நாய்க்குக் கிடைத்தது.

விண்வெளிப் பயணத்தின் திருப்பு முனையாக, 1969 ஜூலையில், மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்ததைக் குறிப்பிடலாம். அமெரிக்கா அனுப்பிய விண்வெளிக்கலமான அப்பலோ-II, நெயில் ஆம்ஸ்ட்ராங்க், எட்வின் இ ஆல்ட்வின் ஆகிய இரு விண்வெளிப் பயணிகளுடன் 1969 ஜூலை 20-ல் நிலவில் சென்று இறங்கியது.

பின்னர் பல துணைக்கோள்கள் பல்வேறு நாடுகளால் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள பல்வேறு முக்கிய தகவல்களை ஒளிப்படங்களாக அனுப்பி வைத்தன. அப்படங்களின் அடிப்படையில்தான் உலகின் பல நாடுகளின் வரை படங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் வானொலி, தொலைக்காட்சி ஆகிய தகவல் தொடர்பு அமைப்புகளில் துணைக்கோள் தொழில்நுட்பம் பெரும் மாற்றங்களை விளைவித்தது. முக்கியமாக நான்கு வகையான துணைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை 1) கூர்ந்து நோக்கித் தகவல் திரட்டும் துணைக் கோள்கள், 2) தட்பவெப்பம் அறிவிக்கும் துணைக்கோள்கள், 3) தகவல் தொடர்புத் துணைக்கோள்கள், 4) பிறகோள்கள், விண்மீன்கள் பற்றிய தகவல்களைத் தந்து வழிகாட்டும் துணைக்கோள்கள் என்பனவாம்

புவியில் உள்ள பல இடங்களைப் பற்றிய சரியான தகவல்களையும், படங்களையும் அனுப்பி இதுவரை புரியாத புதிராக இருந்த பலவற்றிற்கு முதல் வகைத் துணைக்கோள்கள் விடையளித்தன. புவியிலுள்ள காடுகள், மலைகள், எரிமலைகள், கனிம வளங்கள், பனிப்பகுதிகள் ஆகியன பற்றிய பல விவரங்களை இவ்வகைத் துணைக்கோள்கள் அனுப்பி வைத்தன.

தட்பவெப்பத் துணைக்கோள்கள் அனுப்பும் தகவல்கள் வாயிலாகப் புயல், நிலநடுக்கம், பெருமழை, சூறாவளி பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிய முடிவதுடன், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிகிறது.

அடுத்த வகைத் துணைக்கோள்களால் தகவல் தொடர்பு அமைப்பில் பெரும் புரட்சியே விளைந்துள்ளது. ஒரே ஒரு துணைக்கோளின் வாயிலாக பல ஆயிரம் தொலை பேசிகளைச் செயற்படுத்த முடிகிறது. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உலகின் எந்த மூலையிலும் ஒலி/ஒளி பரப்பச் செய்ய முடியும். அடுத்து, சில சிறப்பு வகைத் துணைக்கோள்களைப் பயன்படுத்திப் பிற கோள்களின் விவரங்களைப் பெற இயலும்.

***

Friday, 15 February 2013

உங்களுக்கு தெரியுமா ?



(வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்)



நீங்கள் சீனாவில் ஒரு மில்லியனில் ஒருவராக இருந்தால் உங்கள் மாதிரி 1,300 மக்கள் இருப்பார்கள்.



இந்தியாவின் மொத்த சனத் தொகையின் 25% மக்கள் மிக்க அறிவுத்தகமை (IQ) உடையவராவர். இந்த தொகையானது அமெரிக்க மொத்த சனத் தொகையிலும் அதிகமாகும்.



அமெரிக்க சிறுவர்களை விடவும் இந்திய சிறுவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.



2010இல் அதிக முதலிடத்தில் (demand) என பேசப்பட இருக்கும் 10 தொழில்கள் 2004 ம் வருடத்தின் முன்னய கலங்களில் மனிதனால் செய்து பாத்திருக்காத அல்லது என்றுமே கேள்வி பட்டிருக்காத வேலைகளாக இருக்கும்.



மேலும் , வேலை செய்பவர்கள் தமது வேலையில் உபயோகிக்க இருக்கும் தொழில் நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. எதிகால வேலைகளில் அமுல்படுத்தவுள்ள தீர்வுகளுக்கான பிச்சினைகள் இன்னும் தோன்றவும் இல்லை.





அமெரிக்க தொழிலாளர் திணைக்களத்தின் கருத்துப்படி எதிர்காலத்தில் ஒருவர் 38 வயதை அடையும் முன்பதாக 10 தொடக்கம் 14 வேலைகளை செய்தவராக இருப்பர்.



இதே திணைக்களத்தின் தகவல் படி நிறுவனங்களில் வேலை செய்வோரில் 4 இல் ஒருவர் 1 வருடத்திலும் குறைவான கலத்திலேயே வேலைக்கு அமர்த்தப் பட்டிருப்பர். மேலும் இதே தரவில் 2 க்கு ஒருவர் 5 வருடத்திலும் குறைவான கலத்தில் நிறுவனங்களினால் வேலைக்கு அமர்த்தப்பட்டும் இருப்பார்களாம்.





கடந்த வருடம் அமெரிக்காவில் திருமணம் செய்யும் தம்பதிகளில் 8 இல் ஒருவர் இணையம் மூலமாக இணைந்தவராவர்.

மைஸ்பேஸ் (
My Space) இணையத்தில் பதிவுசெய்த அங்கத்தவர்கள் எண்ணிக்கை 200 மில்லியன்.


மைஸ்பேஸ (My Space) ஒரு நாடாக கருதுமிடத்தில் இது உலகின் 5வது அதிகம் சனத்தொகை கொண்ட இடத்தை தக்கவைக்கும். ( இது பட்டியலில் இந்தோனேசியா, பிரேசில் நாடுகளின் இடையில் இடம்பிடிக்கும்.)


உங்களுக்கு தெரியுமா ?


உலகின் பல பாகங்களிலுமுள்ள 50 மில்லியன் மக்களை சென்று அடைவதற்கு பின்வரும் சாதனங்கள் எடுத்துக்கொண்ட காலங்கள்.


வானொலி (Radio) 38 வருடங்கள்.


தொலைக்காட்சி (TV) 13 வருடங்கள்.
இணையம் (internet) 4 வருடங்கள்.


பேஸ்புக் (
facebook) 3 வருடங்கள்.
ஐபொட் (iPod) 2 வருடங்கள்.


ஆங்கில மொழியில் 540,000 சொற்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இது ஷ்க்ஸ்பியர் காலத்தில் இருந்ததை விடவும் 5 மடங்கு அதிகமாகும்.

இணையதளம் 1984 இல் இருந்து மக்கள் பாவனைக்கு வந்ததன் பின்பான காலத்தில் அதன் பாவனையாளர் எண்ணிகை கீழ்வருமாறு.



1984 இல் 1,000 இணைய பாவனையாளர்


1992 இல் 1,000,000 இணைய பாவனையாளர்


2008 இல் 1,000,000,000 இணைய பாவனையாளர்


ஒருவாரத்தில் நியூயொர்க் டைம்ஸ் வெளியிடும் தகவல்கள் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் வாழ்நாளில் அறிந்திருக்கக் கூடிய தகவல்களுக்கு சமம்.


உலகம் முழுவதும் இந்த வருடம் மட்டும் உருவாக்கப் படக்கூடிய புதிய தகவல்களின் தொகை 4 எக்ஸாபைற் (4
exabyte=4 உடன் பெருக்கமாக 10 இன் 18ம் அடுக்குகள் ) என கணகிடப்படுகின்றது.

இது கடந்த 5,000 வருடகாலத்தில் உருவாக்கப்பட்ட மொத்த தகவல்களையும் விட அதிகமாகும்.


தகவல் தொழில்நுட்பம் ஒவ்வொரு 2 வருடம் ஒருமுறை புதியவடிவம் பெற்று இரட்டித்து செல்கின்றது. இவ்வாறு புதிய வடிவம் பெற்றுவருவதால் 4 வருடம் முன்பதாக கற்ற ஒருவிடையம் இன்று பலனற்று விடுகின்றது.


3வது தலைமுறை (
3rd generation) கண்ணாடி இழைகள் (fiber optics) பரீட்சிக்கப் பட்டுவிட்ட 3வது தலைமுறை கண்ணாடி இழை (fiber obtics) யப்பானின் NTTஇனால் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டு விட்டது.ன.

இதில் தகவல் ஒரு செக்கனுக்கு 10 ரில்லியன்(10,000 பில்லியன்) பிற் எனும் வேகத்தில் பயணிக்கும். இது 1,900 குறும் தட்டு(CDs) அல்லது 150 மில்லியன் தொலை பேசி தொடர்புகளை ஒரேநேரத்தில் தொடுப்பதற்கு சமானமாகும். மேலும் இந்த வேகமானது ஒவ்வொரு 6 மாதங்களுக்கு மூன்று மடங்காகி வருவதாகவும் இது அடுத்த 20 வருடங்களுக்கு தொடருமென சொல்லப்படுகின்றது.


2013 ம் ஆண்டில் மனித மூளையை மிஞ்சிய செய்திறனுள்ள அதிசக்திவாய்ந்த (
Supercomputer) தயாராகிவிடும்.


2049 ம் ஆண்டில் 1000 டொலருக்கு கொள்முதல் செய்யக்கூடிய அதிசக்திவாய்ந்த (Super Computer) கணனிகள் முழு மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த செய்திறனுக்கு சமமாக இருக்கும்.குறித்த வீடியோ பார்க்கும் கால அளவுக்குள்................



அமெரிக்காவில் 67 குளந்தைகள் பிரசவிக்கப் பட்டுவிடும்.


சீனாவில் 274 குளந்தைகள் பிரசவிக்கப் பட்டுவிடும்.


இந்தியாவில் 395 குளந்தைகள் பிரசவிக்கப் பட்டுவிடும்.


அத்துடன் இணையத்தில் 694,000 பாடல்கள் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்யப் பட்டுவிடும்.ஆகவே இவை எல்லாம் தரும் அர்த்தம் என்ன ?

Monday, 4 February 2013

சாதனைகள்




குமிழி உடைப்பில் புதிய உலக சாதனையொன்று அமெரிக்காவில் நிலைநாட்டப்பட்டுள்ளது. வீடீயோ இணைப்பு....

உயிர்களை காக்க உதவும் இரத்தத்தினை செயற்கையாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள். இந்த இரத்தம்...

புதிதாக தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு படகு (LIFEBOAT) ஒன்று 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.....

உலகின் மிகப்பெரிய உள்ளக கடற்கரை, ஜேர்மனிய கிராமமொன்றின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரையில், சுமார்...

12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட கருமுட்டை மூலம் கருத்தரித்த ஆர்ஜென்டினா பெண்ணொருவர் இரட்டைக் குழந்தைகளை

உலகிலேயே மிக நீளமான சொகுசு கார் ஒன்றை கலிபோர்னியாவில் உள்ள ஜே ஓபெர்க் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த காரின்...

ஒரே தடவையில் 51 வைன் குவளைகளை கைகளில் ஏந்தி நபர் ஒருவர் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.....

மார்பக புற்றுநோயினால் அவதிப்படுவர்களுக்கு உதவுவதற்கு நிதிசேகரிக்கும் மகத்தான நல்லெண்ண சேவைக்காக உலகில் மிக்பெரிய மார்பக...

பாகிஸ்தான், லாகூரில் தேசிய ஹொக்கி மைதானத்தில் உலக சாதனை படைக்கும் நோக்கில் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள்...

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 96 வயதான ராம்ஜித் ரகாவ் என்ற நபர், உலகின் மிகவும் வயதான தந்தையாக அறிவிக்க...

பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் இலங்கை பெற்றோர் பெறும் சிரமங்களை எதிர்கொள்கின்ற நிலையில் இந்தியாவில்...

ஒஸ்ட்ரியா நாட்டுப் பிரஜையான பீலிக்ஸ் பம்கட்னர் (43 வயது), அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ வான்பரப்பின் சுமார் 128,097 அடி...
2012ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் சமாதானம், நல்லிணக்கம்...

2012ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, சீன எழுத்தாளர் மோ யானுக்கு வழங்கப்படவுள்ளது. உணர்ச்சியைக் கிளறும்...

2012ஆம் ஆண்டின் இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளான ரொபர்ட் லெப்கோவிஸ், ப்ரையன் கோபில்கா...

இந்த ஆண்டின் பௌதிகவியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படவுள்ளது...

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 45.2 சென்றிமீற்றர் உயரமுடைய ஒரு காரானது உலகில் வீதி பாவனைக்கு   (வீடியோ இணைப்பு)...

டென்னிஸ் விளையாட்டை தொழில்முறையாக மேற்கொண்டு வரும் 95 வயதுடைய வயோதிபர் ஒருவர், உலகில் தரப்படுத்தப்பட்ட அதிக....

2013 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனை புத்தகம் பல்வேறு விநோத சாதனைப் பதிவுகளுடன் வெளியிடப்படவுள்ளது....