Thursday, 7 February 2013

பொய்யும் உண்மையும்


ஒரு பொய்யை ஒருவர் சொன்னால்,அது பத்தாயிரம் உண்மைகளாக மாறி வெளி வரும் என்கிறார் கோக்கி என்ற ஜென் ஞானி .பொதுவாகப் பொய்க்குக் கவர்ச்சி அதிகம்.நீங்கள் காலையில் ஒரு பொய் சொன்னால் மாலைக்குள் அது பல விதங்களில் பரவி திரும்ப உங்களிடமே வந்துவிடும்.அப்போது அது  உண்மையா,பொய்யா என்று நீங்களே சந்தேகப்பட ஆரம்பித்து விடுவீர்கள்.நீங்கள் அதை உண்மை என்று நம்ப அனேக சாத்தியக் கூறுகள் உள்ளன.அதே சமயம் நீங்கள் ஒரு உண்மையைச் சொன்னால் அதை யாரும் எளிதில் நம்பமாட்டார்கள்.உனக்கு அது எப்படித் தெரியும் என்று சந்தேகத்தோடு கேட்பார்கள்.இதற்கு வாயை மூடிக் கொண்டிருப்பதே நலம்.'இந்த உலகம் பொய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.பொய் மிகவும் மேம்போக்கானது.அது உங்களிடம் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.அதைப்பற்றிப் பேசுவது ஒரு பொழுதுபோக்கு.ஆனால் உண்மை அப்படி அல்ல.பல அபாயங்களைச் சந்திக்க நேரிடும்.பொய்மை வெகுமதியைக் கொடுக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------
தன்னோடு வளரும் தனித்தன்மை உடையவரை இந்த உலகம் எளிதில் புகழாது.அங்கீகரிக்காது.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களை வேண்டுமானால் பல கட்டுக் கதைகளைக் கட்டி,அற்புதங்களைக் கூட்டிப் புகழலாம்.அந்த மனிதன் ஒரு அவதாரப் புருசனாகக் கருதப்படலாம்.
--------------------------------------------------------------------------------------------------------
மக்களுக்கு ஆறுதல் தேவைப்படுகிறது.தன்னை யாரோ ஒரு கடவுளின் தூதன் வந்து காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் ஆறுதல் அடைகிறார்கள்.இது ஒரு நாகரீகமற்ற அடிமைத்தனம்.

No comments:

Post a Comment

THANK YOU