Showing posts with label தன்னம்பிக்கை_confident. Show all posts
Showing posts with label தன்னம்பிக்கை_confident. Show all posts

Saturday, 20 July 2013

குருவின் அச்சமின்மை குரு

* அன்புணர்வு வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் இருந்தால் போதாது. சுயநலமற்ற சேவையால் அதை வெளிப்படுத்த வேண்டும்.

* தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தும்.

* உடலுக்கு உணவு, உயிருக்கு பிரார்த்தனை.

* உடல்சோர்வு ஒரு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் உண்மையில் பலவீனமாகும்.

* இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதை கடவுள் பார்த்துக் கொள்வார்.

* நல்ல நண்பனைப் பெற விரும்பினால் நீங்களும் நல்ல நண்பனாக இருங்கள்.

* நம் மனதில் எழும் எண்ணம் அனைத்தையும் கடவுள் நன்கு அறிவார் என்பதை நாம் உணர வேண்டும்.

* ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை. உண்மையைச் சொல்வதற்காகத் தூக்குமரம் ஏற வேண்டியிருந்தாலும் அஞ்சாமல் சொல்லுங்கள்.

* அன்பு எப்போதும் சகிப்புத்தன்மை கொண்டதாகவே இருக்கும்.
- காந்திஜி

குருவின் பாதை

* பணத்தை விட அறிவு உயர்ந்தது என்று அனைவரும் ஒப்புக்கொள்வர். ஆனால், அறிவை விட ஒழுக்கமே சிறந்தது.


* ஒருவன் கற்ற கல்வியை தராசின் ஒரு தட்டிலும், மனத்தூய்மை, உண்மையை இரண்டாவது தட்டிலும் வைத்துப் பார்த்தால், இரண்டாவது தட்டே தாழ்ந்து நிற்கும்.


* ஒழுக்கமில்லாமல் கற்கும் கல்வி, தீமை செய்வதற்கான தகுதியை ஒருவருக்கு வழங்கி விடும்.


* சட்டத்தால் மட்டுமே யாரையும் திருத்தி விட முடியாது. முழுமையான மனமாற்றமே திருந்துவதற்கான ஒரே வழி.


* சந்தேகப்படுவது கண்ணியமான பண்பு அல்ல. ஏமாற்றுகிறவர்கள் நீண்டநாள் உலகில் நிலைத்திருக்க முடியாது.

* குறிக்கோள் இல்லாத வாழ்வு, நங்கூரம் இல்லாத கப்பலைப் போன்றது. ஒழுக்கம் இல்லாத மனிதனால் எந்த ஒரு குறிக்கோளையும் எட்ட முடியாது.


* கடவுளிடம் அளவற்ற நம்பிக்கையும், பயபக்தியும் இருக்கும் ஒருவனே வாழ்வில் சபதம் மேற்கொள்ள தகுதி படைத்தவன்.
- காந்திஜி

Wednesday, 8 May 2013

தன்னம்பிக்கை கவிதைகள்

நான் ஒன்றும் வசதியானவன் அல்ல ..
மாற்று உடையின்றி மாறி மாறி ...
ஒரே உடையை மாறி மாறி ...
போடும் வசதியான குடும்பம் ...
கிழிந்த காட்சட்டையை ...
ஒழித்து ஒழித்து போட்டவன் நான் ...
என் அருமை தோழிகள் முன்னே வரும் போது ..
கிழிந்த பின்புறத்தை மறைக்க ...
ஸ்ரைல் மன்னன் போல் ...
சுவரோடு நிற்பேன் ...
கிழிந்தது என் ஆடைகளே அன்றி ..
தன்னம்பிக்கையல்ல ...!

அம்மாவுக்கு பொய் சொன்னதை தவிர ...
வீட்டு வேலைசெய்யாத போது ஆசிரியருக்கு ...
பொய் சொன்னதை தவிர ...!!!
நண்பர்களுக்கு காதலை மறைத்ததை தவிர ..
காதலிக்கு இடையிடையே ...
பொய் சொன்னதை தவிர ...!!!
நான் யாருக்குமே பொய் சொல்லேலங்க...
உண்மையா என்னை நம்புங்க ...
இப்படித்தான் அரிச்சந்திரனாக வாழுகிறேன் ..!!!!!

நீ சொல்லாவிட்டால் என்ன ...?
நான் அருகில் வரும் போது ஓடி ஒழிக்கிறாய் ..
கூட்டமாய் வரும் போது ஆட்கழுக்குள் மறைகிறாய்
தூரத்தில் நின்று திரும்பிப்பார்க்கிறாய் ....
முன்பைவிட இப்போது தனியாய் வருகிறாய் ..
அடிக்கடி இப்போ திரும்பி பார்க்கிறாய் ..
நீ என்ன செய்தாலும் நான் உன்னை ...
விரும்புகிறேன் என்று சொல்லமாட்டேன் ..!!!
இன்னும் இன்னும் தவிக்க
வேண்டும் நீயும் நானும்..!!!

விதியை மதியால் வெல்ல முடியுமா?


                 விதியை மதியால் வெல்ல முடியுமா? எனக்கு நீண்ட நாளாக இந்த கேள்வி உள்ளது. எல்லோரும் பிறக்கிறோம், இறக்கிறோம். அது நம் கையில் இல்லை . ஆனால் வாழ்வது நம் கையிலே உள்ளது என நிறைய பேர் சொல்கின்றனர். அப்படி என்றால் அனைவரும் சந்தோசமாக தானே வாழ விரும்புவர். யாரேனும் துன்பத்துடன் வாழ விரும்புபவர் உண்டா இந்த உலகத்தில்?  ஆனால் உண்மையில் யாரும் சந்தோசமாக இருப்பதாக தெரியவில்லையே.அப்படி இருக்க விதியை மதியால் வெல்லலாம் என எப்படி கூறுவது. அந்த மதியும் ஒவ்வொருவருக்கும் எழுதப்பட்ட விதியினாலேயே தரப்பட்டு இருக்கிறது என்பது என் வாதம். தனக்கு கொடுக்கப்பட்ட சிறிது நம்பிக்கையை வைத்து  விதியை வென்று விட்டேன்  என கூறுவது எப்படி பொருந்தும்.
                அது சரி.. முதலில் விதி எது என்பதை எப்படி கண்டு பிடிப்பது. அதை வெல்வதாக கூறுவதற்கு. விதியாக ஒன்றை  நினைத்து அதை மாற்றி வென்றதாக கூறுவது உண்மையில் விதி அல்ல.அப்படி நினைப்பது எல்லாம் கடவுள் அமைத்த மென்பொருளால் என்றே எனக்கு தோன்றுகிறது. அவ்வாறு  நினைத்து வெல்ல வேண்டும் என்பதே விதியாக கடவுள் எழுதியது. இது எல்லாம் அகங்காரத்தின் விளையாட்டு. அதுதான் ஆட்டுவிக்கிறது. நான் என்பதை தோற்றுவிப்பதே அதுதான். விதியை வென்று விட்டதாக கூரவைப்பது கூட அதுதான். அதற்காக விதியே என சும்மா உட்கார்ந்து விட்டால் எல்லாம் நடந்து விடுமா என கேட்பீர்கள். சரி என உட்கார்ந்து பாருங்கள் அப்படி உங்கள் விதி விட்டால். ஆனால் சிறிது நேரத்தில் பசி எடுக்க ஆரம்பித்தால் அட போ பா பசிக்கிறது என எழுந்து ஓடி விடுவீர்கள். இறைவன் முன் கூட்டியே அவரவர் தலை எழுத்தை எழுதி விட்டான் என்பதே என் நம்பிக்கை என் விதியும் கூட. 
          சரி இதில் இருந்து என்னதான் கூற  வருகிறாய் என்பது உங்களுடைய அடுத்த கேள்வி..என் பதில் விதி வலியது.  இது மட்டுமே.
வள்ளலார் பாட்டு ஒன்று நியாபகம் வருகிறது.
         "  ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே
ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ வாட்டுகின்ற 
அஞ்சு புல வேடற்கு அறிவை பறிகொடுத்து 
என் நெஞ்சு புலர்ந்தோங்கு நிலை.  "
 ரமணரின் திரு வாய்மொழியும் கூட, 
"நடப்பது என்செயினும் நில்லாது 
நடவாதது என் செய்யினும் நடவாது 
அதனால் அமைதியாய் இருப்பது நன்று. "

நான் இதை எழுதிய பின் தற்செயலாக படித்த விதி பற்றிய கட்டுரை. இதையும் படிக்கவும் தமிழர்கள் விதியை நம்பாதவர்களா ?
                                                                                                                        GURU

Saturday, 6 April 2013

கன்பூசியஸ்

சீனாவின் புகழ்பெற்ற தத்துவ ஞானியான கன்பூசியஸின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கபட்ட கன்பூசியஸ் என்ற திரைப்படத்தைப் பார்த்தேன்
ஆழமற்ற, மேலோட்டமான திரைப்படம், கன்பூசியஸின் அரசியல் வாழ்க்கையைப் பிரதானப்படுத்தி அவரது ஞானத்தேடுதலை அதிகம் கண்டுகொள்ளாமல் நகர்ந்து போய்விட்டது திரைப்படம்
சாக்ரடீஸ் போலவே கன்பூசியஸ் இளைஞர்களிடம் போதனை செய்திருக்கிறார், கல்விநிலையத்தை உருவாக்கி அங்கே சமகாலப் பிரச்சனைகள் குறித்த வாதபிரதிவாதங்களை நிகழ்த்தியிருக்கிறார், அதிகாரத்துடன் மோதி தனது கருத்துகளில் உறுதியாக நின்றிருக்கிறார்.
கன்பூசியஸ்க்குப் பன்முகங்களிருக்கின்றன, அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி, போர்வீரன், இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர், சீனமரபினை வளர்த்து எடுத்தவர், அரிய தத்துவ ஞானி, இப்படி அவரது ஆளுமை பன்முகப்பட்டது,  வாழ்வியல் அனுபவங்களில் இருந்து உருவான ஞானத்தைக் கொண்டே அவர் தனது அறக்கருத்துகளை உருவாக்கியிருக்கிறார், கன்பூசியஸின் சிந்தனைகளை மாபெரும் கற்றல் என்று கூறுகிறார்கள்,
கன்பூசியஸின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கையில் சாணக்கியரின் வாழ்க்கை மனதில் வந்து போகின்றது, அர்த்தசாஸ்திரத்திற்கும் கன்பூசியஸ் சிந்தனைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் காணப்ப்படுகின்றன,
கி.மு. 551. சீனாவில் ஷாண்டோங் மாநிலத்தில் உள்ள குபூ நகரில் கன்பூசியஸ் பிறந்தார். அவரது உண்மையான பெயர் கொங் சியூ. கொங் என்பது குடும்பப் பெயர். இவரை மாஸ்டர் கொங் என்றே அழைத்தார்கள்.
கன்பூசியஸின் தந்தை 70வது வயதில் ஒரு நடனக்காரியை மறுமணம் செய்து கொண்டார், அவர்களது மூத்த மகனாகப் பிறந்தவர் தான் கன்பூசியஸ். அவருக்கு நான்கு வயதானபோது தந்தை காலமானார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது, பசியின் கொடுமையை சிறுவயதிலே அனுபவித்த காரணத்தால் தனது அறக்கருத்துகளில் பசியைப் போக்குதலை முக்கியமான அறமாக முன்வைத்தார் கன்பூசியஸ்
கன்பூசியஸ் பிறந்த லூ மாநிலம் பண்பாட்டு சிறப்புமிக்க ஒன்றாகும், ஆனால் அங்கே அதிகார போட்டி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது, அதற்குக் காரணம் மூன்று செல்வச்செழிப்பு மிக்க குடும்பங்கள், அவர்கள் ஒருவருக்கொருவர் ஆட்சியை பிடிப்பதற்காக சண்டையிட்டுக் கொண்டனர், அண்டை மாநிலமான க்யூ இதனை தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது
கன்பூசியஸ் வாழ்ந்த காலத்தில் தொடர்ந்த உள்நாட்டுப்போர்கள், மற்றும் வறுமை காரணமாக சீன தேசம் சிதறுண்டு கிடந்தது, இது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருந்தது, வலிமையான ஒற்றை மைய அரசு என்ற கோட்பாடு அப்போது வரை சாத்தியமாகவில்லை,
மிதமிஞ்சிய லஞ்சம், ஊழல், வேசைகளின் களியாட்டம், எதிர்பாராத போர் என்று லூ மாநிலம் தத்தளித்துக கொண்டிருந்த சூழலில் அதிகாரப்போட்டியில் அதிகம் பாதிக்கபட்டது அறிவார்ந்த குடும்பங்களே, இவர்கள் பிறப்பில் உயர்குடியாக இருந்த போதும் போதுமான செல்வம் இல்லாத காரணத்தால் கூலிவிவசாயிகளைப் போலவே நடத்தப்பட்டார்கள், கன்பூசியஸின் குடும்பமும் அத்தகையதே.
சிறுவயதில் இசையிலும் விளையாட்டிலும் கன்பூசியஸ் அதிக ஆர்வம் கொண்டிருந்தார், மீன்பிடித்தல், மற்றும வில்வித்தை இரண்டும் அவரது முக்கிய ஆர்வமாக இருந்தன,
அந்த காலங்களில் புத்தகங்கள் அச்சுவடிவம் பெறவில்லை, ஒலைச்சுவடிகளில் உள்ள கவிதைகளை, நீதிநூல்களைத் தேடித்தேடி படித்திருக்கிறார், கல்வியின் முக்கியத்துவம் குறித்து இவரளவு பேசியவர் எவருமில்லை,  இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகள் வாழக்கை அதிகமாகக் கிடைத்தால்  மரபுக் கவிதைகள் முழுவதையும் ஆழமாகப் பயின்று கொள்வேன் என்று ஆதங்கப்படுகிறார் கன்பூசியஸ்
ஒரு முறை கன்பூசியஸ் தனது பயணத்தின் போது கிராமப்புற இசை ஒன்றினைக் கேட்டு மயங்கி அந்த கிராமத்திலே மூன்று மாத காலம் தங்கிவிட்டார், கிராமப்புற இசையில் உள்ள துள்ளலான தாளம், இனிமை போல வேறு எதிலும் இசையின் உச்சநிலை வெளிப்படுவதில்லை, அது மனதைக் கொந்தளிக்கச் செய்கிறது எனறு கன்பூசியஸ் குறிப்பிடுகிறார்
முந்தைய காலங்களில் அறிஞர்கள் தன்னை மேம்படுத்திக் கொள்ள கற்றார்கள், ஆய்வு செய்தார்கள், இந்தக் காலங்களிலோ மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்பதற்காகவே ஆய்வுகள், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபடுகின்றன, அடுத்தவரின் பாராட்டிற்காக அறிஞராக இருப்பது அவமானத்திற்குரியது என்று கன்பூசியஸ் குறிப்பிடுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சுட்டிக்காட்டப்பட்ட உண்மை இன்றளவும் மாறிவிடவில்லை
தமது 20-ஆவது வயதில் கன்பூசியஸ் திருமணம் செய்து கொண்டார். அவரது திருமண வாழ்க்கை இனிமையானதாக அமையவில்லை ஆரம்ப காலங்களில் அரசாங்க உணவுப்பொருள் கிடங்கை பராமரிக்கும் அதிகாரியாக பணியாற்றினார், அந்த நாட்களில், உணவைப் பகிர்ந்து அளிப்பது தான் சிறந்த நிர்வாகத்தின் ஆதாரப்புள்ளி என்பதை தனது புதிய நடைமுறைகளின் வழியே சாதித்துக் காட்டினார்
வறுமையைப் போக்கிக் கொள்ள பொய், சூது, களவு இல்லாத ஏதாவது ஒரு நல்ல வேலை கிடைத்தால் போதும், உடனடியாக ஏற்றுக் கொள்வேன் என்று கன்பூசியஸ் தனது வேலையில்லாத நாட்களை பற்றிய குறிப்பு ஒன்றில் கூறுகிறார்,
இப்படி வேலைக்காக அலைந்து திரிந்த அவர் சின்னஞ்சிறு அரசாங்கவேலைகளை செய்து அதில் தனது கடுமையான பணியின் சிறப்பு காரணமாக பதவி உயர்வினை அடையத்துவங்கினார்
எது உங்களின் உயர்விற்கான முக்கிய காரணம் என்ற கேள்விக்கு கன்பூசியஸ் வாழ்வியல் அனுபவங்களே என்னை மேலோங்க செய்தன, ஆனால் அனுபவம் பெற்ற அத்தனை பேரும் வாழ்வில் உயர்ந்துவிடுவதில்லை, வாழ்க்கை அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்பவனே உயர்நிலையை அடைகிறான், அதற்கு அறிவை விருத்தி செய்து கொள்வதும், கடின உழைப்பும், தெளிந்த சிந்தனையும், தூய வாக்கும் அவசியமானது என்கிறார்
ஒரு அரசாங்கம் சிறப்பாக செயல்படத் தேவையான நிர்வாகக் கொள்கைகளை அவர் உருவாக்கித் தந்தார். கல்வியே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு என்று நம்பிய கன்பூசியஸ் அரசாங்கத்தின் துணையோடு பெரிய கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.
தனது  ஐம்பதாவது  வயதில் நீதிபதியாக பதவி உயர்ந்தார். அதன்பின்பு லூ மாநிலத்தின் முதல்வரானார். அவர் ஆட்சியில் குற்றச் செயல்கள்  ஒடுக்கபட்டன, மக்களுக்கு நலன் பயக்கும் பல்வேறு  சமூக சீர்திருத்தங்களை கன்பூசியஸ் நடைமுறைப்படுத்தினார்
இவரது ஆட்சியின் சிறப்பை கண்டு அண்டை மாநில அரசுகள் அவருக்கு எதிராக சதி செய்தன, அதன் காரணமாக தொடர்ந்த இடையூகளை சந்தித்து வந்த கன்பூசியஸ் முடிவில் அரசியலை விட்டு ஒதுங்கி ஊர் ஊராக சுற்றியலைந்து தனது அறக்கருத்துகளை பரப்பி வந்தார், . தனது 72 வது வயதில் கன்பூசியஸ் மரணம் அடைந்தார். இவரது தத்துவங்களை அரச நியதியாக ஏற்றுக் கொண்ட மாமன்னர் அதன்படியே சீனமக்கள் நடக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்
சீனாவின் முதல் தத்துவப் பேராசான் கன்பூசியஸே, இவரது Analects எனப்படும் அறக்கருத்துகளை வாசிக்கையில் சீன சமூகத்தின் அன்றைய நிலையும் அரசின் தெளிவற்ற செயல்பாடுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது
ஒரு மனிதன் எவ்வளவு குதிரைகளை வைத்திருக்கிறான் என்பதை வைத்தே அந்த காலத்தில் அவனது செல்வாக்கு மதிப்பிடப்பட்டிருக்கிறது,  நாற்பது குதிரைகளின் உரிமையாளனே என்று கன்பூசியஸ் ஒருவனை அழைக்கும் போது அவன் எவ்வளவு வசதியானவன் என்பதைப்புரிந்து கொள்ள முடிகிறது
உள்நாட்டு போர் முற்றிய சூழல் என்பதால் கன்பூசியஸ் விசுவாசம் மற்றும் கடமை பற்றி அதிகம் பேசியிருக்கிறார், ஒருவன் தனது எஜமானுக்காக எவ்வளவு விசுவாசமாக இருப்பது என்ற கேள்வி பலமுறை அவர் முன் கேட்டப்பட்டிருக்கிறது, கன்பூசியஸ் மதம் சாராத ஒழுக்கமுறை ஒன்றினை அறிமுகப்படுத்துகிறார், இது எளிய மனிதன் தன் வாழ்வின் தவறுகளைத் தானே திருத்திக் கொள்ள வழிவகை செய்வதாகும்
மனிதன் இயல்பிலே தவறினை நோக்கி வசீகரப்படுகின்றவன், அவனை நல்வழிபடுத்த தொடர்ந்த நடவடிக்கைகள் தேவை, அதில் சிலவற்றை சமூகம் மேற்கோள்ளும், பெரும்பான்மை மாற்றங்களை தனிநபரே மேற்கொள்ள வேண்டும், நன்மையை ஏற்றுக் கொண்டு அதன் நெறிகளுக்கு ஏற்ப வாழ்வது என்பது ஒரு தொடர் போராட்டம் என்பதை கன்பூசியஸ் வலியுறுத்துகிறார்
பஞ்சம் பசி பட்டினி என்று அடித்தட்டு மக்கள் வறுமையில் வாழ்க்கையில் அவர்களை ஆள்பவர்கள் மேலும் மேலும் வரிகளை போட்டு, கடுமையான வேலைகளை செய்ய வைத்து மக்களை வதைக்க கூடாது. சிறந்த நிர்வாகம் என்பது மக்கள் பிரச்சனையை சரியாக கையாண்டு உடனடியாக தீர்த்து வைப்பதில் தானிருக்கிறது, எல்லா அரசியல் பிரச்சனைகளுக்கும் தாய் பசி தான் என்கிறார் கன்பூசியஸ்.
ஒரு வில்லாளி அம்பை எய்கிறான், அது இலக்கைத் தாக்கவில்லை என்றால் அவன் தனது அம்பை குற்றம் சொல்வதில்லை, தவறு தன்னுடையது என்று ஒத்துக் கொள்கிறான், அரசும் அதன் நலத்திட்டங்கள் உரியவருக்குச் சென்று அடையவில்லை என்றால் தனது குற்றத்தைத் தானே ஒத்துக் கொள்ள வேண்டும், மாறாக தவறு மக்களுடையது என்றால் அது மோசமான நிர்வாகம் செய்கிற அரசாங்கமாக கருதப்படும் என்கிறார் கன்பூசியஸ்
நீதிநூல்கள் எதை வாசிக்கையிலும் அது தனிமனிதனை எப்படிக் கருதுகிறது, தனிமனிதனின் இருப்பிற்கான ஆதாரங்களாக எதை முன்வைக்கிறது, தனிமனிதன் மேற்கொள்ள வேண்டிய அறங்கள், கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள், பின்பற்றவேண்டிய நெறிகள் எவை என்பதையும், அதே நேரம் அரசின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் எந்த அறத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையே வரையறை செய்கின்றன ,
அந்த வகையில் திருக்குறளும் கன்பூசியஸின் சிந்தனைகளும் மிக நெருக்கமானவை, வள்ளுவர் கூறுகின்ற அதே கருத்துகளை தான் கன்பூசியஸ தானும் எடுத்துக் கூறுகிறார்
Order  எனப்படும் சமூகவகைப்பாடு எப்படி உருவாக்கபடுகிறது, அதன் உள்கட்டுமானம் எந்த அறத்தை முதன்மைப்படுத்துகிறது, சமூகத்தின் உள்வெளி தளங்கள் எவ்வாறு பிளவுபடுகின்றன என்பதை கன்பூசியஸ் தெளிவாக ஆராய்கிறார்,  Polarity  எனப்படும் முரண் இயக்கதை கவனப்படுத்தி புதியதொரு தர்க்கவியலை கன்பூசியஸ் உருவாக்கியிருக்கிறார்.
Knowing  என்ற சொல் தத்துவப் பாடத்தில் மிக முக்கியமான ஒன்று, அதை எளிதாக வரையறுத்துவிட முடியாது, உள்வாங்கும் முறைகளின் தொகுப்பு என்று வேண்டுமானால் சொல்லாம், இந்த அறிதலின் பல்வேறு நிலைகளை, அதன் பின்னுள்ள சமூக்காரணிகளை கன்பூசியஸ் தீர்க்கமாகச் சுட்டிக்காட்டுவதை அவரது நீதிநூல்களை வாசிக்கையில் அறிந்து கொள்ள முடிகிறது
தவறு செய்தவர்களாக ஒதுக்கபட்ட குற்றவாளிகள், வேசைகள், திருடர்களை தேடிச்சென்று சந்தித்து அவர்களுடன் வாழ்க்கையின் நோக்கம் குறித்து விரிவாக உரையாற்றியிருக்கிறார் கன்பூசியஸ், நான்ஷி என்ற அழகான இளம்பெண்ணை தேடிச்சென்று அவளுடன் தங்கி போதனைகள் செய்திருக்கிறார் கன்பூசியஸ், இதை ஒரு குற்றமாக அவரது சீடர்களில் சிலரே சொல்லிய போது தான் மனிதர்களை அவர்களின் செயல்களைக் கொண்டு பேதம் பார்ப்பதில்லை, மனித இயல்பை அறிவதே எனது வேலை என்கிறார் கன்பூசியஸ்
தொடர்பயணத்தின் போது இவரை கொல்வதற்கான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன, ஒரு தாக்குதலில் இவரது சீடர் யென் யூ இறந்து போயிருக்கிறார், கிறுக்குதனம் பிடித்த முட்டாள் என்று இவரை பல மாநிலங்களில் உள்ளே வரவிடாமல் துரத்தியிருக்கிறார்கள், அதே நேரம் உள்நாட்டுக் கலகங்களை கட்டுபடுத்த விரும்பிய ஆட்சியாளர்கள் இவரை அழைத்து உரிய ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்கள்
தனது மகனின் எதிர்பாரத மரணம், நண்பர்களின் சாவு, தான் நேசித்த ஆட்சியாளர்கள் அதிகாரப்போட்டியில் படுகொலை செய்யப்பட்டது என்று தனது முதிய வயதில் தொடர்ந்த வேதனையில் வீழ்த்த கன்பூசியஸ் சில மாதங்கள் யாருடனும் ஒருவார்த்தை கூட பேசாமல் மௌனமாக வாழ்ந்திருக்கிறார், சீனாவில் இன்று கன்பூசியஸ் ஒரு கடவுளை போல வழிபடப்படுகிறார். இவரது நீதிநூல் சீனாவின் தேசிய அடையாளமாக கருதப்படுகிறது
கன்பூசியஸின் வாழ்க்கை வரலாற்ற படமாக்க போகிறார்கள் என்றதுமே சீனர்களிடம் பெரிய எழுச்சி உருவானது, முன்னதாக கன்பூசியஸ் வாழ்க்கைவரலாறு ஆவணப்படமாகவும், தொலைக்காட்சித் தொடராகவும், கறுப்பு வெள்ளை, மற்றும் கலர்படமாகவும் வெளியாகி உள்ள போதும் இன்றுள்ள சினிமா தொழில்நுட்பத்தை கொண்டு மிக சிறப்பான ஒரு படத்தை உருவாக்கப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு சீனமக்களிடம் இருந்தது, ஆனால் படம் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை,
வெற்றிகரமான குங்பூ படங்களில் நடித்த Chow Yun-fat கன்பூசியஸாக நடித்திருக்கிறார், போர்கலை படங்களில் தொடர்ந்து நடித்தவர் என்பதால் சௌ யுன் பேட்டின் உடல் இறுக்கமானதாகவே இருக்கிறது, அவரிடம் ஞானியின் உடல்மொழியைக் காணமுடியவில்லை,
படத்தின் துவக்கத்தில் வயதான கன்பூசியஸ் தனது கடந்த காலத்தினை நினைவுபடுத்திப் பார்க்கத் துவங்குகிறார், தனது சொந்த மாநிலமான லியூ பகுதியின் மேயர் பதவியில் இருந்து மந்திரி பதவிக்கு உயர்த்தபடுகிறார் கன்பூசியஸ்,
அப்போது ஒரு அடிமைச் சிறுவனை அவனது எஜமானன் இறந்து போன காரணத்தால் உயிருடன் புதைக்க முற்படுகிறார்கள், அது தான் அன்றைய மரபு, இந்தக் கொடூரத்தை கண்ட கன்பூசியஸ் மனம் கொதித்து சிறுவனைக் காப்பாற்றுகிறார், இது ஒரு தவறான செயல் என்று கன்பூசியஸ் குற்றம் சாட்டப்படுகிறார், ஆனால் அவர் தனது மனிதாபிமானம் மிக்க செயலை நியாயம் என்கிறார், இந்த பிரச்சனை புகையத் துவங்குகிறது
கன்பூசியஸ் சீனா முழுவதும் சுற்றியலைகிறார், அவர் தான் கன்பூசியஸ் என்று அறியாதபடி எளிய மனிதனைப்போல மக்களுடன் ஒன்று கலந்து வாழ்கிறார், நீதிக்கருத்துகளை முன்வைத்து உரையாற்றுவதுடன் பழமையான சீனமரபு இலக்கியங்களுக்கு உரை எழுதி அவற்றை பதிப்பிக்க முயற்சிக்கிறார் என்று அவரது முதுமையான நாட்களை படம் விவரிக்கிறது
வணிக நோக்கத்திற்காக படத்தில் நான்ஷியுடன் கன்பூசியஸிற்கு ஏற்படுகின்ற காதலும், ஏக்கமும், தவிப்பும் கவர்ச்சியாக காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றன
கன்பூசியஸின் வாழ்க்கை குறித்த பிபிசியின் டாகுமெண்டரிப் படம் இதைவிடவும் சிறப்பானது, அவதார் படத்துடன் போட்டியிடுவதற்காக பெரிய பொருட்செலவில் உருவாக்கபட்ட கன்பூசியஸ் வெறும் அலங்காரத் தோரணமாகவே வெளியாகியுள்ளது
கன்பூசியஸை பற்றி அறிந்து கொள்ள வாசிக்கபட வேண்டிய நூல் The Analects of Confucius, இது அவரது அறக்கருத்துகளின் தொகைநூல், அதில் எனக்கு பிடித்தமானதொரு மேற்கோள் இருக்கிறது
To study and not think is a waste. To think and not study is a danger           குரு
••••

Monday, 1 April 2013

எப்படி இருந்தாலும், அவர்களை மன்னித்து விடு.


மக்கள் பலசமயங்களில் நியாயமில்லதவர்களாக, 
தவறானவர்களாக, சுயநலம் கொண்டவர்களாக உள்ளனர்.
எப்படி இருந்தாலும், அவர்களை மன்னித்து விடு.

நீங்கள் இரக்க குணம் படைத்தவராக இருப்பின்,
மக்கள் உங்களை தன்னலம் கொண்டவர் என்றும்,
உள்நோக்கம் கொண்டவர் என்றும் குறை கூறுவார்;
எப்படி இருந்தாலும், இரக்கத்துடனே இரு.

நீங்கள் வெற்றிகரமானவராக இருப்பின்,
நீங்கள் சில தவறான நண்பர்களையும்,
சில சரியான நண்பர்களையும் வெற்றி காண்பீர்கள்; 
எப்படி இருந்தாலும், வெற்றி பெறு.

நீங்கள் நேர்மையானவராக,
வெளிப்படையானவராக இருப்பின், 
மக்கள் உங்களை ஏமாற்றக் கூடும்; 
எப்படி இருந்தாலும், நேர்மையானவராக, 
வெளிப்படையானவராக இரு.

நீங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கியதை, 
ஒருவன் ஒரே இரவில் அழித்து விடலாம்; 
எப்படி இருந்தாலும், உருவாக்கிக் கொண்டிரு.

நீங்கள் பிரச்சனையற்றவராக,
மகிழ்ச்சியானவராக இருப்பதாக தெரிந்தால்,
அது மற்றவர்களை பொறாமைப்பட வைக்கும்;
எப்படி இருந்தாலும், மகிழ்ச்சியாக இரு.

இன்று நீங்கள் செய்யும் நல்லதை,
மக்கள் நாளை மறந்து விடுவர்; 
எப்படி இருந்தாலும், நல்லது செய். 
எப்படி இருந்தாலும், உன்னால் முடிந்த சிறந்தது 
எதுவோ அதை உலகிற்கு கொடு.

இறுதி பகுப்பாய்வு முடிவு என்பது
உங்களுக்கும் கடவுளுக்கும் இடையேதான்  உள்ளது;
அது எப்படி இருந்தாலும் உங்களுக்கும் 
அந்த மற்றவர்களுக்கும் இடையே இல்லை 
என்பதை அறியுங்கள். 

- அன்னை தெரசா.

நான் இறக்கின்ற போது.... குரு


எனது கண்களை, 
சூரிய உதயத்தையே காணாதவருக்கு கொடுங்கள்;

எனது இதயத்தை, 
இதயத்தின் வலியை உணர்ந்தவருக்கு கொடுங்கள்;

எனது குருதியை, 
கொடும் விபத்தில் காயம்பட்ட இளைஞனுக்கு கொடுங்கள்;

எனது சிறுநீரகங்கள், 
மற்றொருவர் உடலிலிருந்து கழிவை வெளியேற்றட்டும்;

எனது எலும்புகள், 
முடமான குழந்தையை நடக்கச் செய்வதற்கு உதவட்டும்;

என்னில் என்ன மிச்சமிருக்கிறதோ அதை எரியுங்கள்; 
அந்தச் சாம்பலை மலர்ச்செடி வளர காற்றில் தூவுங்கள்;

என்னுடையது எதையாவது நீங்கள் புதைக்க வேண்டியிருந்தால், 
அது எனது தவறுகளாகவும், நான் எனது சக மனிதனுக்கு எதிராக செய்த குற்றங்களாகவும் இருக்கட்டும்;

எனது பாவங்களை பிசாசுகளுக்கு கொடுங்கள்;

எனது ஆன்மாவை ஆண்டவனுக்கு கொடுங்கள்;

நீங்கள் என்னை நினைக்க விளைந்தால், 
யாருக்குத் தேவையோ அவருக்காக கனிவான செயல் ஒன்றைச் செய்யுங்கள் அல்லது சொல் ஒன்றைக் கூறுங்கள். அதுவே என்னை நினைப்பதாகும்.

நான் கேட்டதை எல்லாம் நீங்கள் செய்வீர்களானால், 
நான் என்றும் வாழ்ந்திருப்பேன் !


- நானி ஏ. பல்கிவாலா.
சட்ட மேதை.

Friday, 22 March 2013

அம்பானிக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான், டாடாவிற்கும் 24 மணி நேரம்தான்

அத்தனைக்கும் ஆசைப்படு


ஆசை இல்லையெனில் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை. முதலில் ஆசைப்பட வேண்டும். பின்னர் அதனை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப்படுகிறோம். அவளிடம் விருப்பத்தைக்கூற வேண்டும். அவளோடு சேர்ந்து வாழ வேண்டும். அவளை சந்தோஷமாக வைத்துக் காப்பாற்ற வேண்டும். அதற்கு நிறைய சம்பாதிக்க வேண்டும். நன்றாக சம்பாதிக்க நல்ல வேலை வேண்டும். நல்ல வாழ்க்கை அமைய ஆசை.இந்த ஆசையை அடைய நிறைய பணம், முயற்சி எடுப்பதற்கு நேரம், இவை இரண்டும் முக்கியமானவை.

நேரம்
‘நேரம்’ என்பது நமது கையில் உள்ளது என்பதற்கு உதாரணங்களைப் பார்ப்போம். ஒரு ‘Software Engineer’-ஐ எடுத்துக் கொள்வோம்.
காலை 8 மணிக்கு அலாரம் வைத்து 9 மணிக்கு எழுவார். அவசரமாகக் குளித்து, அரைகுறையாகச் சாப்பிட்டும் சாப்பிடாமலும் 10.30 மணிக்கு ஆபீஸிற்குச் செல்வார். மதியம் 3 அல்லது 4 மணிக்கு வேண்டாத எதையாவது சாப்பிடுவார். இரவு 8 மணிக்கு வீடு திரும்புவார். 9 மணிக்கு சாப்பிடுவார் பிறகு 11 மணி வரை டி.வி. அல்லது படம் பார்ப்பார். பிறகு 1 மணிவரை இண்டர்நெட்.

இவர் சரியாக சாப்பிடுவது இல்லை. யாருடனும் சரியாக பேசுவது இல்லை. ஆபிஸ் வேலையே கதி என்று இருப்பார். இதனால் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. நேரமின்மையால் தன்னுடைய மனைவியுடனும், குழந்தையுடனும் நேரம் செலவிட முடிவதில்லை.

இப்படி ஒரு வாழ்க்கை அவசியமா?

ஒரு வருடத்தின் பயனை, அந்த வருடம் தோல்வி அடைந்த மாணவனிடம் கேட்க வேண்டும்.
ஒரு மாதத்தின் பயனை குறை மாதக் குழந்தையைப் பெற்ற தாயிடம் கேட்க வேண்டும்.
ஒரு வாரத்தின் பயனை ஒரு வார இதழின் ஆசிரியரிடம் கேட்க வேண்டும்.
ஒரு மணி நேரத்தின் பயனை காத்திருந்த காதலியிடம் கேட்க வேண்டும்.
ஒரு நிமிடத்தின் பயனை விமானத்தைத் தவறவிட்டவனிடம் கேட்க வேண்டும்.
ஒரு நொடியின் பயனை விபத்தில் உயிர் பிழைத்தவனிடம் கேட்க வேண்டும்.
ஒரு மில்லி செகன்டின் பயனை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றவனிடம் கேட்க வேண்டும்.

அம்பானிக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான், டாடாவிற்கும் 24 மணி நேரம்தான், நாட்டின் பிரதமருக்கும் 24 மணிநேரம் தான். ஒரு சிலரால் மட்டும்தான் அவர்களது ஆசையை நிறைவேற்ற முடிகிறது.
அந்த ஒரு சிலர் நேரத்தை சரியாக பயன்படுத்துவதால் அவர்களால் வெற்றி அடைய முடிகிறது.

செந்திலும், அவருடைய மனைவி கீதாவும் இன்று இரவு அவர்களுடைய சொந்த ஊரான கோயமுத்தூருக்குக் கிளம்புகிறார்கள். காலையில் சாப்பிடும்போது கீதா கூறுகிறார், ‘டிக்கெட் இன்டெர்நெட்டில் இருக்கிறது, பிரிண்ட் அவுட் எடுத்துவரவும்’ என்று. அதே சமயம் மேனேஜர் தொலைபேசியில் அழைத்து ‘Promotion Recommendation List’-ஐ, மூன்று நாட்களாக கேட்கிறேன். இன்று கட்டாயம் அனுப்பு’ என்று கூறுகிறார்.

செந்தில் காரில் போகும்போதுதான் ஞாபகம் வருகிறது. Mobile Bill இன்றும் கட்டவில்லை என்று. காரில் சென்று கொண்டிருக்கும்போதே மனைவி கீதா அலைபேசியில் அழைத்துக் கூறுகிறார். குழந்தைக்கு School Fees கட்ட இன்று கடைசிநாள், நான்கு நாட்களுக்கு முன்பே கூறினேனே என்று சொல்கிறாள். இதற்கிடையில் நண்பன் அழைத்து மதியம் வெளியில் சாப்பிடப் போவோம் என்று சொல்கிறான்.
இவை அனைத்தையும் எப்படிச் செய்யப் போகிறோம் என்ற யோசனையில் காரை ஓட்டியதால் Accident நடக்கிறது. கையில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான் செந்தில்.
இவை அனைத்திற்கும் காரணம் என்ன? செந்தில் தனது நேரத்தைச் சரியான முறையில் கையாளத் தெரியாததால் நடந்தவை.
‘Time Management’ அதாவது நேரத்தை திட்டமிடுதல் என்பது மிகவும் முக்கியம்.

1. அவசியம், அவசரம்
2. அவசியம், அவசரம் இல்லை
3. அவசியம் இல்லை, அவசரம்
4. அவசியம் இல்லை, அவசரம் இல்லை

காரியங்களை மேற்கூரிய நான்கு பிரிவுகளுக்குள் கொண்டு வந்து அதை நிறைவேற்ற வேண்டும்.

உதாரணத்திற்கு, உடம்பு சரியில்லை ஆஸ்பத்திரி செல்ல வேண்டும். வெளியில் கிளம்பும்போது Car Repair, முதலாளி கூறும் அவசர வேலை போன்றவை அவசியமானது, அவசரமானது.

தினமும் உடற்பயிற்சி, குழந்தைகளோடு நேரம் செலவிடுவது, Health Checkup செய்வது, Passport போன்றவை எடுப்பது போன்றவை அவசியமானது, அவரசம் இல்லாதது.

நண்பனிடம் பேசுவது, டி.வி.யில் நல்ல படம் பார்ப்பது, நண்பன் படத்திற்கு டிக்கெட் எடுத்துவிட்டு அழைப்பது போன்றவை அவசரமானது, அவசியமில்லாதது.

டி.வி.யில் சீரியல் பார்ப்பது, ஒரு படத்தை பல தடவை பார்ப்பது, யாரென்றே தெரியாதவர்களிடம் வெட்டி அரட்டை அடிப்பது, பகல் தூக்கம் போன்றவை அவசியமும் இல்லை. அவசரமும் இல்லை.

இதுபோல நம் காரியங்களை அட்டவணைப்படுத்தி எதை முதலில் செய்ய வேண்டும். எதைக் கடைசியாக செய்ய வேண்டும் என்று தீர்மானித்துச் செய்தால் நாம் ஆசைப்பட்டதை சுலபமாக அடையலாம்.
செந்திலின் விசயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு Fees கட்டுவது, Mobile Bill கட்டுவது போன்றவை நான்கு நாட்களுக்கு முன்னால் அவசியம், அவசரம் இல்லை என்ற நிலையிலேயே செய்திருந்தால் அது அவசியம், அவசரம் என்ற நிலைக்கு வந்திருக்காது.

மேல் கூறிய அட்டவணைப்படி நம் காரியங்களை செயல்படுத்தினால்,
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்.
குரு 

Thursday, 14 March 2013

அறிய தகவல்கள்


கெட்டுப்போகாத‌ உண‌வுப்பொருள் ‍ தேன்
ந‌த்தை தொட‌ர்ந்து மூன்று வ‌ருட‌ங்க‌ள் தூங்க‌லாம்
ப‌ட்டாம்பூச்சிக‌ள் த‌ங்க‌ள் பாத‌ங்க‌ளினால் சுவைக்கின்ற‌ன‌.
கிளியும் முய‌லும் த‌ங்க‌ள் பின்னால் இருப்ப‌தை த‌லை திருப்பாம‌ல் காண‌முடியும்.
நீர் யானை ம‌னித‌னை விட‌ மிக‌ப்பெரிய‌து, ஆனால் அது ம‌னித‌னை விட‌ வேக‌மாக‌ ஓடும்.



க‌ண் இமைக‌ளில் ம‌னித‌னுக்கு 550 முடி இருக்கின்ற‌து.
அண்டார்டிகா க‌ண்ட‌த்தில் ம‌ட்டும் நிலங்கள் க‌ட‌ல் ம‌ட்ட‌த்திற்கு கீழே எங்கும் இல்லை.எல்லா இட‌மும் க‌ட‌ல் ம‌ட்ட‌த்திற்கு மேல் தான் உள்ள‌து.
வாத்தின் குவாக் குவாக் ச‌த்த‌த்தை கேட்டிருக்கின்றீர்க‌ள் அல்ல‌வா? அத‌ன் ஒலி ம‌ட்டும் எதிரொலிப்ப‌தே இல்லை. இதுவ‌ரை ஏன் என்று தெரிய‌வில்லை.
டைப் ரைட்ட‌ரில் முத‌ன் முத‌லாக‌ த‌ட்ட‌ச்ச‌ப்ப‌ட்ட‌ நாவ‌ல் ‍ டாம் சாய‌ர்
த‌ங்க‌ மீனை இருட்டு அறையில் வைத்திருந்தால் அது வெண்மையாக‌ மாறிவிடுமாம்.
ப‌னிக்க‌ர‌டிக‌ள் ஒரே அம‌ர்வில் 86 பென்குயின்க‌ளை விழுங்குமாம்.
டான்பின்க‌ள் ஒரு க‌ண்னை திற‌ந்து வைத்த‌ப‌டியே உற‌ங்குகின்ற‌ன‌.
மாடுக‌ளை மாடிப்ப‌டிக‌ள் ஏற‌வைக்க‌லாம், இற‌ங்க‌ வைக்க‌ முடியாது.
ம‌னித‌னின் மூக்கும் காதும் வ‌ள‌ர்ந்துகொண்டே போகும், ஆனால் க‌ண்க‌ள் வ‌ள‌ராது.
வ‌யிறு நிறைய‌ உண்ட‌ பிற‌கு, ச‌ற்று நேர‌ம் கேட்கும‌ திற‌ன் குறையுமாம்
*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.
......
*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.
வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..
குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..
புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)
சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.
8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.
இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.
திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.
கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.
எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.
40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.
சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.
பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.
வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.
நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.
லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.
15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable
குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.
எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.
வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.
சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.
கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.

Saturday, 2 February 2013

தன்னம்பிக்கை Practice

தன்னம்பிக்கை Practice
உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறதா? கண்டுபிடிக்க ஒரு சுய பரிசோதனை
வெற்றியின் ஆணிவேர் தன்னம்பிக்கை. உங்களிடம் தன்னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம். உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை இங்கே…
உங்கள் உடல்வாகு எப்படிப்பட்டது?
அ. எனது உடல் அழகான `ஸீரோ சைஸ்’ கொண்டது. அதில் எனக்கு திருப்திதான்!
ஆ. மேனியழகு பொலிவாகத்தான் இருக்கிறது. இன்னும் வசீகரிக்கும் தோற்றமுடன் எனது உடலை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
இ. மக்கள் நான் வசீகரிக்கும் வனப்புடன் தோன்றுவதாகக் கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைப்பதில்லை!
நீங்கள் வெகுநாள் விரும்பிய முக்கிய மனிதரை எதிர்பாராத விதமாக சந்திக்கிறீர்கள்? அப்போது…
அ. நானே முதலில் பேச்சைத் தொடங்கி அவருக்கும், எனக்கும் இடையே பரஸ்பர கருத்தொற்றுமை இருக்கிறதா? என்பதைக் கண்டறிவேன்.
ஆ. பார்த்ததும் ஏற்கனவே அறிமுகமானவர் மாதிரி அரட்டையடிக்கத் தொடங்கிவிடுவேன்..!
இ. அவர் என்னிடம் முதலில் பேச மாட்டாரா? என்று காத்திருப்பேன்!
சொந்தபந்தங்களுடன் உறவை பேணுவதில் நீங்கள் எப்படி?
அ. எப்போதாவது கருத்துவேறுபாடு ஏற்பட்டு உறவில் விரிசல் விழுவதுபோல தோன்றினால் நான் என் நிலையை ஆய்வு செய்து தவறுகள் இருந்தால் அதற்காக மன்னிப்புக் கோரி உறவு முறையை மேம்படுத்த முயற்சிப்பேன்.
ஆ. உறவுமுறை நன்றாகவே இருக்கிறது..! ஆனாலும் சில பிரச்சினைகள் வந்து போகின்றன.
இ. உறவுகள் என்றாலே தொல்லையும் துயரமும்தான்..! அவர்கள் என்னை புரிந்து நடந்து கொள்ளவே மாட்டார்கள்!
உங்கள் முகத்தில் திடீரென்று முகப்பரு தோன்றினால் என்ன செய்வீர்கள்..?
அ. முகப்பரு மருந்து தடவுவேன். இன்றைய முகப்பரு நாளைக்கு மறைந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு அடுத்த வேலையில் கவனம் செலுத்துவேன்.!
ஆ. முகப்பருவைக் கண்டதும் உடனே நல்ல டாக்டரை நாடி செல்வேன். டாக்டரிடம் செல்வதை தள்ளிப்போட மாட்டேன்.
இ. எனக்கு உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு, அன்றைய அலுவலை ஒத்திப்போட்டுவிட்டு கவலையில் ஆழ்ந்து விடுவேன்!
நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராத துன்பத்தில் மாட்டிக்கொண்டால்…?
அ. முதல்ஆளாக ஓடிப்போய் அவருக்கு உதவி செய்வேன்..!
ஆ. அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன தேவைப்படுகிறது என்பதைக் கேட்டறிந்து உதவி செய்வேன்!
இ. உதவி செய்ய எனக்குத் தெரிந்த இன்னொரு நண்பரை அனுப்பி வைப்பேன்..!
உங்களது வாழ்க்கை எப்படி செல்கிறது?
அ. எனக்கு உண்மையான நண்பர்கள் அதிகம். அதனால் வாழ்க்கை ஆனந்தமாய் கழிகிறது..!
ஆ. ஏதோ இருக்கிறேன். நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அங்கங்கே தனித்தனியாக இருக்கிறார்கள். எனக்கு ஏற்படும் கஷ்டநஷ்டத்தை கண்டுகொள்ள ஆளில்லை.
இ. இது என்ன வாழ்க்கை. ஒரு சந்தோஷமும் இல்லை. வாழ்க்கையே வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது!
ஒரு குழுவை வழிநடத்தும் தலைவராக உங்களை தேர்வு செய்தால்…?
அ. உடனடியாக ஒத்துக்கொள்வேன்!
ஆ. நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கேட்டறிவேன். அதன்பிறகு தலைமை தாங்குவது பற்றி முடிவு செய்வேன்.
இ. நான் என்ன செய்வது என்று அறியாமல் தவிப்பேன். தலைமை தாங்க யோசிப்பேன்!
உங்கள் பஸ் பயணம் திடீரென்று ரத்தாகிறது, தனியார் பஸ் நிறுவனம் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. என்ன செய்வீர்கள்…?
அ. கம்பெனி மேலாளரை சந்தித்து, இழப்பீடு தர வற்புறுத்துவேன்.
ஆ. என் கோரிக்கையை அமைதியாகத் திரும்பத் திரும்ப எடுத்துரைப்பேன்!
இ. திரும்ப திரும்ப கேட்பதால் பயனில்லையென்று கருதி, இன்னொரு பஸ்சில் ஏறி வீட்டிற்கு போய்விடுவேன்.
உங்கள் பதில்களில் `அ’ விடைகள் அதிகமாக இருந்தால் நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்தான். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு! எப்படிப்பட்ட சூழ்நிலையையும் உங்களுக்குச் சாதகமாக்கி நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
அதிக கேள்விகளுக்கு விடை ஆ-வை தேர்வு செய்திருந்தால் நீங்கள் எதுவும் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவீர்கள். சிறிது சஞ்சலங்கள் தோன்றினாலும் சூழ்நிலையை சமாளிக்கும் வல்லமை உங்களிடம் இருக்கும்.
பதில் `இ’ உங்கள் விடைகளில் மிகுந்திருந்தால் நீங்கள் நம்பிக்கை குறைவானவர். உங்கள் வாழ்வியல் முறைகளை சீர்திருத்துவதோடு மன தைரியத்துடன் செயல்படத் தொடங்குங்கள்.