Monday, 4 February 2013

எக்ஸெல் குறிப்புக்கள்!!!



எக்ஸெல் – எழுத்துவகையை நிலையாக மாற்ற: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் அப்போது உள்ள எழுத்துவகை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்லது உங்களுக்குப் பிடித்த வகையினை நீங்கள் மாறாததாக அமைத்திட எண்ணலாம். அல்லது ஆங்கிலம் அல்லாமல் தமிழ் எழுத்துக்களில் அடங்கிய தகவல்கள் கொண்ட பைலை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தலாம். அப்போது ஒவ்வொரு முறையும் பாண்ட் விண்டோ சென்று தமிழ் எழுத்தினை செட் செய்வது சிக்கலாக இருக்கலாம்.
26
இதற்கு ஒரே வழி நீங்கள் விரும்பும் எழுத்து வகையினை நிலைத்த எழுத்தாக அமைப்பதுதான். இதனை செட் செய்திடக் கீழ்க்காணும்படி அமைத்திடுங்கள்.
1. “Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “General” என்னும் டேபில் கிளிக் செய்திடவும்.
3. இப்போது கிடைக்கும் விண்டோவில் “Standard font” என்பதற்கு நேர் எதிராக பாண்ட் மற்றும் சைஸ் விண்டோ இருக்கும். இதில் நீங்கள் விரும்பும் எழுத்துவகையினைத் தேர்ந்தெடுத்து மற்றும் அதற்கான அளவினையும் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்து விண்டோக் களை மூடவும். இனி எப்போது எக்ஸெல் ஒர்க் ஷீட்டைத் திறந்தாலும் காலி இடத்தில் இந்த பாண்ட் தான் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்கும்.
எக்ஸெல் : வரிசைகளைத் தேர்ந்தெடுக்க எக்ஸெல் தொகுப்பில் நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைகளை (Column, Row) முழுமையாகத் தேர்ந்தெடுக்க அந்த வரிசையில் கர்சரை வைத்து கீழாகவோ அல்லது பக்க வாட்டிலோ கர்சரை இழுத்து ஹைலைட் செய்கிறீர்கள் அல்லவா? இந்த இழுபறி வேலையை இரண்டு கீகள் எளிதாக்குகின்றன. எந்த நெட்டுவரிசையினை (இணிடூதட்ண) ஹைலைட் செய்திட வேண்டுமோ அல்லது தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதில் உள்ள செல்கள் ஒன்றில் கர்சரை வைத்துப் பின் கண்ட்ரோல் கீயுடன் ஸ்பேஸ் பாரினை Ctrl + Spacebar அழுத்தவும். இப்போது அனைத்து செல்களும் தேர்ந்தெடுக்கப்படும். இதே போல படுக்கை வரிசையில் ஹைலைட் செய்திட Shift + Spacebar அழுத்தவும்.
அதிக ஒர்க் ஷீட்டுடன் எக்ஸெல் திறக்க:எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றினைத் திறக்கையில் அது மூன்று ஒர்க் ஷீட்கள் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும். பலர் இதுவே போதும் என்று பயன்படுத்துவார்கள். சிலர் ஒரு ஒர்க்ஷீட்டிலேயே தங்கள் பணியை முடித்துக் கொள்வார்கள். சிலருக்கு அதிக எண்ணிக்கையில் ஒர்க் ஷீட் தேவையாய் இருக்கும். இன்ஸெர்ட் மெனு சென்று ஒர்க் ஷீட் எண்ணிக்கையை ஒவ்வொரு முறையும் கூட்டிக் கொள்வார்கள். இதற்குப் பதிலாக அதிக எண்ணிக்கையில் ஒர்க் ஷீட்களுடன் ஒர்க் புக் திறக்கும்படி அமைத்திடலாம். இதற்கு Tools மெனு சென்று அதில் Options பிரிவில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில் General என்னும் டேபினைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவினைப் பார்க்கவும்.
இதில் இரண்டாவது பிரிவில் முதலாவதாக Sheets in New Workbook என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் 3 என்ற எண் இருக்கும். இதன் மீது கர்சரைக் கொண்டு சென்று உங்களுக்குத் தேவையான ஒர்க் ஷீட் எண்ணிக்கை எண்ணை டைப் செய்து ஓகே கிளிக் செய்திடலாம். அல்லது அருகே உள்ள சிறிய அம்புக் குறிகளை மேல் கீழாக அழுத்தி எண்ணிக்கையை அதிகப் படுத்தலாம்; அல்லது குறைக் கலாம். செய்து முடித்தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி எத்தனை ஒர்க் ஷீட் வேண்டு மென்று செட் செய்தீர்களோ அத்தனை ஒர்க் ஷீட்களுடன் புதிய ஒர்க் புக் திறக்கப்படும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், புதிய ஒர்க் புக் தான் இந்த மாற்றங்களோடு கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தி வைத்திருக்கும் ஒர்க் புக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படாது.
செல்களை நகர்த்த: எக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றை நகர்த்துவது மிக எளிது. அப்படியே இழுத்துச் சென்று விடும் வசதி இங்கு தரப்பட்டுள்ளது. எந்த செல்லை அப்படியே அதன் மதிப்புடன் மாற்றி இன்னொரு இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த செல்லின் பார்டரில் எங்காவது கிளிக் செய்திடவும். இதில் அந்த செல்லின் கீழாக வலது மூலையில் கிடைக்கும் Fill Handlez தவிர்க்கவும். கிளிக் செய்த பின் மவுஸின் இடது பக்கத்தை அழுத்தியவாறே செல்லை இழுத்துச் செல்லவும். இவ்வாறு இழுத்துச் செல்கையில் பாய்ண்ட்டர் எந்த செல்லின் மீது செல்கிறதோ அந்த செல்லின் முகவரி, எந்த ரோ மற்றும் காலம் என்ற தகவல், சிறிய செய்தியாக மிதக்கும் பெட்டியில் காட்டப்படும். ஒர்க் ஷீட் முழுவதும் கூட நீங்கள் இதனை இழுத்துச் செல்லலாம். பின் எங்கு இதனை அமைக்க வேண்டுமோ அந்த செல் இடம் கிடைத்தவுடன் மவுஸை விட்டுவிட்டால் புதிய இடத்தில் செல் அமைந்துவிடும்.

No comments:

Post a Comment

THANK YOU