Showing posts with label new story. Show all posts
Showing posts with label new story. Show all posts

Friday, 25 July 2014

குருகீதை-TIGERGURU

நூல்களைப் பொறுத்தவரை குருவுக்கு முக்கிய இடம் உண்டு. குருகீதை என்றே ஒரு நூல் இருக்கிறது. குருவில்லா வித்தை பாழ் குருவருள் இன்றேல் திருவருள் இல்லை என்றெல்லாம் தமிழ் வாக்குகள் முழங்குகின்றன. இதோ ஒரு குருவின் கதை! கோதாவரி ஆற்றங்கரையில் வேததர்மா என்ற குரு, ஆஸ்ரமம் அமைத்து, வேதம் கற்பித்து வந்தார். ஒருநாள், அவர் தன் சீடர்களிடம், சீடர்களே! நான் அனுபவிக்க வேண்டிய பாவம், கொஞ்சம் இருக்கிறது. காசிக்குப் போய் அதை தீர்க்கப் போகிறேன். எனக்குப் பணிவிடை செய்ய, யார் வருகிறீர்கள்? எனக் கேட்டார். சாந்தீபகன் எனும் சீடன் எழுந்தான். நான் கண்பார்வையற்ற குஷ்டரோகியாக அங்கிருப்பேன். உன்னால் பணிவிடை செய்ய முடியுமா? எனக் கேட்டார். முடியும் என்று சீடன் உறுதி கூறினான். இருவரும் காசியை அடைந்தனர்.  அங்கு குரு, கண்பார்வையற்ற குஷ்டரோகியாக மாறினார். அவருக்கு உடம்பு துடைத்து விடுவது, வீடுகளில் பிச்சையேற்று உணவளிப்பது போன்ற பணிவிடைகளைச் சீடன் செய்தான். காசியிலேயே இருந்தும், ஒருநாள் கூட அவனால் விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. குருவைக் கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது. நாளுக்கு நாள், குருவுக்கு வியாதி தீவிரம் அடைந்ததோடு, கோபமும் வந்தது. சீடன் கொடுக்கும் உணவு சரியில்லை என்று துõக்கி எறிவது, கத்துவது, அடிப்பது என அவனைத் துன்புறுத்தி வந்தார்.

ஆனாலும், சீடன் அதைப் பொருட்படுத்தாமல், அவர் திட்டுவதை பொறுமையுடன் ஏற்றான். ஒருநாள், அவன் எதிர்பாராதவிதமாக, அவனது, குருபக்தியை மெச்சி காசி விஸ்வநாதரே தரிசனம் அளித்து விட்டார். விரும்பிய வரம் கேள், என்றார்.  சீடன் குருநாதரிடம் நடந்ததைத் தெரிவித்து, குருவே! உங்கள் உடல் நலம் பெற வரம் கேட்கட்டுமா? என்றான்.  இதைக் கேட்ட குரு, எனக்கு பணிவிடை செய்ய உனக்கு கஷ்டமாக இருக்கிறதா? நான் நலம் பெற்று விட்டால் என் பாவம் தீராது. அடுத்த பிறவியிலும் அதை அனுபவிக்க வேண்டும், என கோபித்தார்.  சீடன் போய், வரம் ஏதும் வேண்டாம் என மறுக்க சிவன் மறைந்தார். இதன்பின் விஷ்ணுவும் தோன்றி,குருசேவை மூலம் எனக்கே தொண்டு செய்து விட்டாய். விரும்பிய வரம் கேள்! என்றார். சீடன்,எனக்கு குரு பக்தி திடமாக இருக்க அருள்புரியுங்கள் என்று கேட்க,அப்படியே ஆகட்டும்! என்று சொல்லி மறைந்தார். இதையறிந்த குருநாதர் மகிழ்ச்சியுடன், சீடனே! உன்னைப் போல் ஒருவனை உலகம் இதுவரை கண்டதில்லை. சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்வாய், என வாழ்த்தினார். வியாதி நீங்கி ஆரோக்கிய தேகத்தோடு விளங்கினார்.  ஆன்ம லாபமும், அமைதியும் வேண்டுமென்றால், குரு சேவை செய்து தெய்வ அருளைப் பெறலாம். 


--GURU

சும்மா இருக்கீங்களா!? பிளீஸ் இதை கொஞ்சம் படிச்சு பாருங்களேன்...,


சும்மா இருந்தா இந்த பதிவை கொஞ்சம் படிச்சு பாருங்களேன். பிளீஸ்....,












































என்னங்க செய்யுறது!? எனக்கு இப்படிதான் friendன்ற பேருல இருக்குற enemy ஒருத்தி மெயில் அனுப்பினா. ஓப்பன் பண்ணி பார்த்து நொந்து போயிட்டேன். என் கஷ்டத்தையெல்லாம் உங்ககிட்டதானே நான் ஷேர் பண்ணிக்குவேன்.  அதான், இதையும் ஷேர் பண்ணிக்கிட்டேன்.
        

                                                 
 ஏன்தான் இந்த பிளாக்குக்கு வந்தோமோன்னு நீங்க சுவத்துல முட்டிக்குறது தெரியுது. நான் என்னத்தை பண்ணட்டும்? எனக்கு எப்பவுமே கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி.  கல், அருவாளெல்லாம் எடுக்க வேண்டாம். எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். வந்த கோவத்தை அடக்கிக்கிட்டுபோயிட்டு அடுத்த பதிவுக்கு வாங்க. அது போதும். 

Monday, 22 July 2013

கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது

.. நீங்கள் கிரெடிட் கார்டு வாங்க நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் விண்ணப்பிக்கும் போது இந்த விஷயங்களை ஞாபகத்தில் வையுங்கள்.. 1. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நீங்களே நிரப்புங்கள். தேவையான போது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத் தொடர்ந்து, கிரெடிட் கார்டுக்காக தனியே ஒரு பைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பான பில்கள் உள்பட அனைத்து கடிதத் தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள். 2. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ளதையும், கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறை கையேட்டையும் பொறுமையாக, முழுமையாகப் படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெறத் தயங்காதீர்கள். 3. புதிய கிரெடிட் கார்டு வாங் கும் போது முடிந்தவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். அதற்காக கூடுதலாக மிகக் குறைந்த தொகைதான் வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக் கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை ஓரளவாவது தடுக்கும். 4. கிரெடிட் கார்டு தொலைந்து போனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் தனியே வைத்திருக்க மறக்காதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள்.
கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டதாக தோன்றினால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்யுங்கள். அப் போது பதிவெண் ஏதாவது வழங்கப்பட்டால், அதையும் குறிப்பிட்டு, எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள்.

கவிஞர் வாலி கவிதைகள்


கவிஞர் வாலி திருச்சி வானொலி நிலையத்தில் பணி புரிந்துக் கொண்டிருந்தபோது ஒரு கவிதை
எழுதினாராம்.
===
தன் தலையைச்
சீவியவனுக்கே !
தண்ணீர் தருகிறது
இளநீர் !!
-
—————————————-
மரம் பேசுவது போலான கவிஞர் வாலியின் கவிதையிது:
- நம்மைக் கொண்டு எத்தனை
சிலுவைகள் செய்கிறார்கள்..
ஆனால் அவர்களுக்குள் ஒரு
இயேசுவைப் படைக்க முடிய வில்லையே!

-

- கவிஞர் வாலி

கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள் குரு




1. பொருட்படுத்தாதீர்கள்.
உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்.
ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கை தான். எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்.
தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்.
பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

Saturday, 20 July 2013

குரு வின் பார்வையில் தாஜ்மஹால்

தாஜ்மஹால்

மடையன்!
ஒரு சமாதிக்கு இவ்வளவு செலவா?
என்றென்னைச் சிறைவைத்த அன்புமகன்!
அவனுக்குத் தெரியுமா?
எனதுயிரின் துயர்?

உலகோரென் காதல் உணர்ந்திடவா
பலகாலமிதைக் கட்டி மெருகூட்டினேன்?
இல்லையில்லை!
அவள்நினைவு பாகாய் உருக்கிடவே
துவண்டுபோ யழியாச் சின்னம் வைத்தேன்.

என்னுயிரைக் கொண்டவள் போனாள்
அன்னவளுயிர் கொண்டிவன் வாழ்கிறேன்.

அவள் மனமோ பாலினும் பளிங்கினும் 
பாண்டிய முத்தினும் சங்கினும் வெளுப்பு!
அவள் அன்புடன் நீரோடையை மாமணியை
அன்றலர் மலரை வைக்க லாமொப்பு!

காதற் பைத்தியம் பிடித்தே பிதற்றுகிறான்
பித்தனிவனென்று வையகம் சொல்லுமாயின்
மெத்த மகிழ்வு கொள்வேன் நித்தமு
ம‌த்தகுதி எனக்கிருக் கட்டுமென்று!

வெறுங்கற் கோட்டையென்று எண்ணி விடாதீர்
நொறுங்கிய என்மனக் கோட்டையின் படிமமிது!

குரு காத்திருப்பதின் காரணம்




என்தரையெங்கும் சிதறி வழியும்
எழுத்துக்களைப் பொறுக்கிப் பொருத்தி
எதுகை மோனையில் சிக்கிடாத‌
புதுக்கவி புனையும் ஆசையில்
பொருளேது மற்றதாய்ச் சிலவரிகள் ...
கவிதையென‌ எழுதிவிட நினைக்கிறேன்

எதையெதை எழுதினும் ஏதேதோ
கவிதையின் கருவாய் உருவெடுத்து
முன்வந்து நின்று தொலைத்தது!

என்னிலையைச் சொல்ல‌ நினைத்தால்
உலகெங்கும் உவமைக்கா பஞ்சம்?
இங்கெங்கும் இல்லாத உவமையைத்
தேடித் திரிகின்றேன் கொஞ்சம்!

ஒன்றுமற்றதா யொன்றைத் தேடுகையில்
மௌனமும் கூடப் பொருள்கொண்டு
அப்படியொன்று மில்லையெனக் காட்டியது!
விடவில்லை நானும்!

ஒன்றைத் தெரிந்து கொண்டேன்!
அறியாமை யிலிருந்து அறிவுக்கு
இருப்பது ஒருவழிப் பாதையென!
இருப்பதும் ஒரேவழி தானென்று
அப்புறம் தெளிந்தேன்!

வந்த காரியம் மறந்துபோய்
அறிவுப் பாதையின் முடிவு
எதுவென்று காண முயன்றேன்...

முடிவிலா அப்பாதையில்
அறிவின் தொடர்ச்சி அறியாமை
அறியாமையின் தொடர்ச்சி அறிவென‌
மாறிமாறி வந்து கொண்டேயிருக்க...
அடுத்த அறியாமை வரட்டும் என்றே
காத்திருக்கின்றேன்....

காத்திருக்கின்றேன்

Wednesday, 8 May 2013

தன்னம்பிக்கை கவிதைகள்

நான் ஒன்றும் வசதியானவன் அல்ல ..
மாற்று உடையின்றி மாறி மாறி ...
ஒரே உடையை மாறி மாறி ...
போடும் வசதியான குடும்பம் ...
கிழிந்த காட்சட்டையை ...
ஒழித்து ஒழித்து போட்டவன் நான் ...
என் அருமை தோழிகள் முன்னே வரும் போது ..
கிழிந்த பின்புறத்தை மறைக்க ...
ஸ்ரைல் மன்னன் போல் ...
சுவரோடு நிற்பேன் ...
கிழிந்தது என் ஆடைகளே அன்றி ..
தன்னம்பிக்கையல்ல ...!

அம்மாவுக்கு பொய் சொன்னதை தவிர ...
வீட்டு வேலைசெய்யாத போது ஆசிரியருக்கு ...
பொய் சொன்னதை தவிர ...!!!
நண்பர்களுக்கு காதலை மறைத்ததை தவிர ..
காதலிக்கு இடையிடையே ...
பொய் சொன்னதை தவிர ...!!!
நான் யாருக்குமே பொய் சொல்லேலங்க...
உண்மையா என்னை நம்புங்க ...
இப்படித்தான் அரிச்சந்திரனாக வாழுகிறேன் ..!!!!!

நீ சொல்லாவிட்டால் என்ன ...?
நான் அருகில் வரும் போது ஓடி ஒழிக்கிறாய் ..
கூட்டமாய் வரும் போது ஆட்கழுக்குள் மறைகிறாய்
தூரத்தில் நின்று திரும்பிப்பார்க்கிறாய் ....
முன்பைவிட இப்போது தனியாய் வருகிறாய் ..
அடிக்கடி இப்போ திரும்பி பார்க்கிறாய் ..
நீ என்ன செய்தாலும் நான் உன்னை ...
விரும்புகிறேன் என்று சொல்லமாட்டேன் ..!!!
இன்னும் இன்னும் தவிக்க
வேண்டும் நீயும் நானும்..!!!

இந்தியன்

இந்தியன் என்று அறிவிக்கிறது !
தேசம்.
இந்து என்று அடையாளப்படுத்துகிறது !
மதம்.
மொழி!
தமிழனாய் பார்க்கிறது.
இப்படி..,
சாதி,
ஊர்,
தெரு,
குடும்பம்
என தொடங்கி முகநூல் முடிய
அறிவித்த படியே கடக்கின்றனர்.
அவரவர் விரும்புவதை.
ஏனோ?
எல்லோரும் உணர மறுக்கிறார்கள்.
நான்
மனிதனாக இருக்கவேண்டிய
அவசியத்தை!.

Saturday, 6 April 2013

ஆயிரத்தோரு அராபிய இரவுகள்

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளியாகி ஐம்பது வருடங்களுக்கும் மேலாகிறது. இன்றைக்கும் அந்த திரைப்படத்தின் சுவாரஸ்யம் குறையவேயில்லை. கோடை விடுமுறையின் போது சிறார்களுடன்  மீண்டும் ஒரு முறை பார்த்தேன்.

ஆரவாரத்துடன் அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற ஆர்வத்துடன் படத்தை பார்த்தார்கள். படம் முடிந்த போது அலிபாபாவின் சாசகங்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்து போயிருந்தன. 


அன்று மாலையில் சிறுவர்கள் விளையாடும் போது ஒரு கதவை பிடித்து கொண்டு அண்டா ஹா ஹசம். அபு ஹா குகூம் திறந்திடு சீசேம் என்று அலிபாபாவில் திருடர்கள் குகையை திறக்கும் மந்திரச்சொல்லை சொல்லி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

 நானும் இந்த படம் பார்த்த வயதில் இப்படி தான் விளையாடிக் கொண்டிருந்தேன். இன்றைக்கும் அந்த சொற்கள் மந்திர குகையின் வாசலை திறந்துவிடும் என்ற நம்பிக்கை அப்படியே மனதில் பதிந்து போயிருக்கிறது.

உலகின் மிகப்பழமையான கதைத்தொகுதி ஆயிரத்தோரு அராபிய இரவுகள். சாவின் முன்னால் அமர்ந்தபடியே ஷரசாத் ஒவ்வொரு நாளும் ஒரு கதை சொல்வாள். ஆயிரத்தோரு இரவுகள் அவள் சொன்ன கதைகள் கேட்டு அவளை உயிருடன் விட்டுவிடுவான் அவளது கணவன்.

இந்த கதைகளின் வழியே அரபு தேசத்தின் பழமையும் தொன்மையும் மிகை கற்பனையும் பாக்தாத் நகரின் மீதான புனைவுகளும் ஒன்று சேர்ந்து வெளிப்படுகின்றன.

ஆயிரத்தோரு இரவுக்கதைகளை வாசிக்கையில் இந்திய கதை மரபின் தொடர்ச்சியை காண முடிகிறது. குறிப்பாக திருடர்களை பற்றிய கதைகள் இந்தியாவில் அதிகம். நாட்டார் கதை மரபில் திருடர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. திருடர்கள் வெறும் சாகசகாரர்கள் மட்டுமில்லை. அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்கள். அதிகாரத்திற்கு எதிரானவர்கள்.

தமிழ் கதைகளில் வரும் திருடர்கள் மன்னர் காவலை மீறி அரண்மனையில் திருடுவதை தான் பெரிதாக நினைக்கிறார்கள். சில நேரங்களில் அரசனையே மயக்கி கட்டி திருடி வந்துவிடுகிறார்கள். திருடனை அரசன் பிடிக்க முடிவதேயில்லை. பலநேரம் திருடன் திருடப்போன இடத்தில் விதவிதமான சாப்பிடுகிறான். தூங்குகிறான். காதலிக்கிறான். என்றால் திருடன் நம் எல்லோருக்குள்ளும் உள்ள ஒரு அம்சமே.

அராபிய இரவுக்கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் தான் சிந்துபாத். பலமுறை சிந்துபாத்தின் கடற்பயண சாகசங்கள் படமாக்கபட்டிருக்கின்றன. தமிழில் இது தனித்து படமாக்கபடவில்லை.

அலிபாபா கதை பாக்தாத் நகரில் நடக்கிறது. அராபிய கதைமரபில் இது ஒரு இடைசெருகல் கதை என்றும் அறியப்படுகிறது. 

அராபிய கதையில் வரும் அலிபாபா ஒரு நாள் திருடர்கள்  தாங்கள் திருடிய பொருட்களை புதைத்து வைத்துள்ள குகையை காண்கிறான். அங்கே திறந்திடு சீசேம். என்றால் கதவு திறக்கும். மூடிடு சீசேம் என்றால் கதவு மூடிவிடும் என்பதை அறிந்து கொள்கிறான்.

திருடர்களுக்கு தெரியாமல் பொருட்களை திருடி வந்துவிடுகிறான்

அலிபாபா திருடிய தங்கத்தை நிறுத்து பார்க்க தனது அண்ணியிடம் இருந்து ஒரு தராசை வாங்கி வருகிறான். அவளோ அந்த தராசில் கொஞ்சம் அரக்கை ஒட்டி வைத்து அலிபாபா எதை நிறுத்தான் என்று கண்டுபிடிக்கிறாள். இதை அறிந்த அலிபாபாவின் அண்ணன் காசிம் தானும் திருடர் குகைக்கு போய் புதையல் எடுக்க விரும்பி மாட்டிக் கொள்கிறான்.

அவனை திருடர்கள் கொன்றுவிடுகிறார்கள். கொன்ற உடலை யாரும் அறியாமல் எடுத்து வந்து தைத்து உடலை மறைத்துவிடுகிறான் அலிபாபா. செத்துபோன உடல் காணாமல் போகவே இந்த திருட்டில் இன்னொருவனுக்கும் பங்கிருக்கிறது என்று நம்பிய திருடர்கள்  அலிபாபாவை தேட துவங்குகிறார்கள்.

இதிலிருந்து தந்திரமாக தப்பிக்கிறான் அலிபாபா. முடிவில் எண்ணை வணிகர் போல வந்த திருடர் தலைவன் அலிபாபா  அடிமை காதலியை கண்டுபிடிக்கிறான். அவளை பிடித்து வைக்கவே  அவளை மீட்க சென்ற அலிபாபா திருடனோடு சண்டையிட்டு தனது அடிமை காதலியை மீட்டு அவள் மூலம் திருடர்களை ஏமாற்றி மலையில் இருந்து தள்ளிவிடுகிறான் . 

இந்த கதை சற்று உருமாற்றங்களுடன் பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. எம்.ஜி.ஆர் தமிழிலும் என்டி ஆர் தெலுங்கிலும் ஹிந்தியில் தர்மேந்திராவும் அலிபாபாவாக நடித்திருக்கிறார்கள்

அது தவிர வீடியோ விளையாட்டாகவும் காமிக்ஸ் புத்தகமாகவும், குழந்தைகள் சினிமாவாகவும் ஹாலிவுட்டிலும் ஜப்பானிலும் வெளியாகி உள்ளது.

 சுஜாதா வசனத்தில் ஆங்கில அனிமேஷேன் படமாக மீடியா ட்ரீம்ஸ் உருவாக்கியுள்ளது

எம்.ஜி. ஆர் நடித்த அலிபாபா 1956ல் வெளியானது.  மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. டி. ஆர் சுந்தரம் இயக்கம். தமிழின் முதல் கலர்படம் இதுவே. திருச்செங்கோடு ராமலிங்க சுந்தரம் என்பது தான் டி. ஆர் சுந்தரத்தின் பெயர்.

வசதியான நூற்பாலைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த அவர் இங்கிலாந்திற்கு சென்று டெக்ஸ்டைல் தொழிற்நுட்பம் படித்து வந்தவர். எஸ்எஸ் வேலாயுதம் பிள்ளையுடன் இணைந்து இவர் சேலத்தில்  ஏஞ்சல் பிக்சர்ஸ் என்ற விநியோக நிறுவனத்தை துவக்கினார்.

அதில் கிடைத்த பணத்தில் கல்கத்தா சென்று இரண்டு படங்களை தயாரித்தார்கள். அந்த லாபத்தில் சேலத்தில் மார்டன் தியேட்டர்ஸ் உருவாக்கபட்டது. சதி அகல்யா இவர்களது முதல்படம் இவரது படப்பிடிப்பு அரங்கில் 250 பேர் முழுநேர ஊழியர்களாக வேலைபார்த்தனர்.

அலிபாபா அவரது பிரம்மாண்டமான தயாரிப்பு . இந்த படத்தில் நடனமாடுகின்ற பெண்களில் ஒருத்தியாக ஹிந்தி சினிமாவின் தாரகை வஹிதா ரஹ்மான் ஆடியிருக்கிறார். வஹிதா ஹிந்தி சினிமாவில் அங்கீகாரம் பெறாத காலமது.

எம்.ஜி. ஆருக்காக அராபியக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப்ப்பட்டன. முதல் மாற்றம் அராபிய கதையில் வரும் அலிபாபா இளைஞன் இல்லை. அவனுக்கு திருமணமாகி  மகன் இருக்கிறான். அவனது அடிமை தான் மர்ஜீயனா. இப்படி தமிழுக்கு ஏற்ப மாற்றம் செய்திருக்கிறார்கள்

எது அலிபாபா படத்தை இன்றும் சுவாரஸ்யமானதாக்குகிறது. முதலில் திருடர்கள் உலகம். அவர்கள் ஒரு குகையில் வசிப்பது. நாற்பது பேர் ஒன்று சேர்ந்து திருட செல்வது. அந்த குகையின் உள்ளே கையால் சுற்றும் இயந்திரம். அதை இயக்கும் மனிதர்கள். திருடர் தலைவனின் அண்டாஹாஹசம் என்ற அடிதொண்டை குரல்.

அடுத்தது வறுமையில் உள்ள ஒருவனுக்கு புதையல் கிடைப்பது போன்று எதிர்பாராமல் பணம் கிடைப்பது. அல்லது திருடர்களிடம் திருடுவது. அதை கண்டு பொறமை படுகின்றவன். அதில் மாட்டிக் கொண்டு உயிர்விடுவது.

இந்த படத்தில் தங்கவேலு செருப்பு தைக்கும் தொழிலாளியாக நடித்திருக்கிறார். அவர் தன் கையில் பச்சை குத்திக் கொண்ட பெண் உருவத்துடன் பேசிக் கொண்டேயிருப்பார். ஒரு முறை அவரை இறந்த மனிதன் உடலை பச்சை குத்த அழைத்து போவார்கள். அந்தக் காட்சி இன்றைக்கும் நம்மை மறந்து சிரிக்க வைக்கிறது

திருடர்கள் அலிபாபாவை கண்டுபிடிக்க அவன் வீட்டின் வெளியே சங்கேத குறியிடுகிறார்கள். அதை அறிந்த அவன் பலவீடுகளிலும் சங்கேத குறியீடுகிறான். அதுபோல மரபீப்பாக்களில் ஒளிந்து கொண்டு திருடர்களை அருவியில் தள்ளிவிடுவது என்று திரைக்கதை அமைப்பில் பல சுவாரஸ்யங்களை இந்த படத்தில் காணமுடிகிறது

உடைகள், ஒப்பனைகள் நகரவீதிகள் யாவும் பாக்தாத்தின் அராபிய கலாச்சாரம் என்ற போதும் அதை தமிழ்மக்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை. காரணம் கதை செல்லும் வேகம். மற்றும் பாடல்கள் ,

மாசிலா உண்மை காதலே ஏ,எம்,ராஜா. பானுமதியின் பாடல் இன்றைக்கும் மெய்மறக்க செய்கிறது

இந்த படம் இன்றைக்கும் ரசிக்கபடுவதற்குமுக்கிய காரணம் நம் மனதில் இது போன்ற திருடர்களை பற்றிய சாகசக்கதைகள் பால்யத்தில் கேட்டு ஆழமாக புதைந்து போயிருக்கிறது. மற்றது  கதை சொல்லும் முறை. உலகின் எல்லா கலாச்சாரத்திலும் கதை சொல்லல் முக்கிய அறிதல் முறையாகவே உள்ளது .

இப்படி நமக்கு வெளியில் உள்ள ஒரு கலாச்சாரத்தின் கதையை நாம் உருமாற்றி தமிழில் நாவலாகவோ, படமாகவோ செய்வது மிகவும் குறைவு. அதனாலே இன்றைக்கும் அலிபாபா படம் முக்கியமானதாகவே இருக்கிறது

விளையாடி விளையாடி சிறார்கள் தங்களை திருடர்களாக நினைக்கிறார்கள். வீட்டின் கதவுகள் குகையாகின்றன. சிறார்களில் ஒருவன் கூட தன்னை அலிபாபா என்று சொல்லிக்கொள்ளவேயில்லை. அலிபாபாவை விடவும் திருடன் தான் அவர்களை வசீகரம் செய்கிறான்.

அலிபாபா போல நூறு நூறு கதைகள் ஆயிரத்தோரு அராபிய இரவுகளில் உள்ளது. கதையில்லை என்று அலுத்துக்  கொள்ளும் வெகுஜன சினிமா இந்த கதைகளஞ்சியங்களை மறந்து பல வருசமாகி விட்டது.

கவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில


q09
தெரிந்ததைச் சொல்வதற்குப் புஸ்தகமா, தெரியாததை அறிவதற்குப் புஸ்தகமா? இரண்டிற்கும்தான். முதலாவது இலக்கியம்; இரண்டாவது சாஸ்திரம். முதல் கலை; இரண்டாவது ஸயன்ஸ். முதல் உணர்ச்சி நூல்; இரண்டாவது அறிவு நூல்.
ஒரு ஸி.வி.ராமன், ஜகதீச சந்திரவசு, ஒரு மார்க்கோனி, ஒரு எடிஸன், ஒரு கார்ல் மார்க்ஸ், ஒரு கீத் பிறக்காவிட்டால் நாகரிக வளர்ச்சிக்கு சாதனம் இருக்காது.
ஒரு பாரதி, ஒரு கம்பன், ஒரு தாகூர், ஒரு வால்ட் விட்மன் பிறக்கா விட்டால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படாது; வாழ்க்கை ரஸிக்காது. வெறும் வெட்டவெளியாய், காரண காரியங்களால் பிணைக்கப் பட்ட ஒரு இருதயமற்ற கட்டுக்கோப்பாக இருக்கும்.
தெய்வத்தைப் படைப்பது கவிஞன்; தெய்வத்தை அறிவது ஸயன்டிஸ்ட்.
    *********
“உண்மையே இலக்கியத்தின் ரகசியம்”
    *********
கவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவியாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு, ஆனால் அவற்றின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கி விடாது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவ சக்தி. அது கவிஞனது உள்மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொருத்துத்தான் இருக்கிறது.
    *********
நான் எப்பொழுதும் ராமலிங்க சுவாமியைச் சாப்பாட்டு சாமி என்று சொல்லுவது வழக்கம். கடவுள் என்றால் எத்தனை டஜன் மாம்பழங்கள் என்று சொல்லிவிடுவார் போலிருக்கிறது. அவர் திருவாசகத்தை அனுபவித்த அருமையைப் பாருங்கள்.
“வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!”
    *********
மாணிக்கவாசகர், சடகோபாழ்வார் பதிகங்கள் சமயத்தை ஸ்தாபிப்பதற்கான எண்னத்திலிருந்து உதித்தவை என்று எண்ணுவதைப் போல் தவறு கிடையாது. அகண்ட அறிவில் வாழ்க்கை ரகசியங்களில், அவர்கள் மனம் லயித்தது. அந்த லயிப்பின் முடிவே அவர்களுடைய கவிதை. அது பிற்காலத்தவர்களால் பிரசாரத்திற்காக எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கலாம். அதனால் அதைப் பிரசாரத்திற்காகப் பிறந்தது என்று கூறி விட முடியாது.
    *********
இன்று உள்ள நிலைமையில் தமிழ்ப்பாட்டு சீர் பெற வேண்டுமெனில் அதாவது இன்று பாட்டு எழுத வேண்டுமெனில், பாஷையின் வளத்தை அறிந்து அதை சாகசமாக உதறித் தள்ளவும், ஏற்றுப் பயன்படுத்தவும் தகுதி வாய்ந்த பயிற்சியும், உணர்ச்சியின் வேகத்தை அனுபவித்து அறிய அறிவிக்கக் கூடியவர்களாலேயே முடியும். இன்று அப்படிப் பட்டவர்கள் யாருமே கிடையாது என்பது என் கட்சி. இனி வருங்காலத்தில் வரட்சியா, வளமா என்பது இன்றைய நிலையில் ஊகிக்க முடியாத விஷயம். ஒன்றை, பாரதியை வைத்துக் கொண்டு உடுக்கடித்துக் காலந்தள்ளியது நமக்குப் பெருமை தரும் காரியம் அல்ல. ஆனால் கடையில் ‘பிஸ்கோத்து’ வாங்குவது போலவோ, கவர்மென்ட் அதிகாரம் செய்வது போலவோ, கவிராயருக்கு ‘ஆர்டர்’ கொடுக்க முடியாது. அவன் பிறப்பது பாஷையின் அதிருஷ்டம். அவனுக்கு உபயோகமாகும் பாஷையை மலினப்படுத்தாமலிருப்பது நமது கடமை.
    *********
உண்மைக் கவிதைக்கு உரைகல் செவி. கம்பன் சொல்லுகிறான் “செவி நுகர் கவிகள்” என்று.கவிதையின் உயர்வைக் காதில் போட்டுப் பார்க்க வேண்டும்.கவிஞன் தனது உள்ளத்து எழுந்த ஒரு அனுபவத்தைச் சப்த நயங்களினால்தான் உணர்த்த முடியும்………
கவிதையில், சரியான வார்த்தைகள் சரியான இடத்தில் அமைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்துக் கோர்ப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் கொண்டு கொட்டுகிறது.
    *********
கலை ஒரு பொய்; அதிலும் மகத்தான பொய். அதாவது மனிதனின் கனவுகளும் உலகத்தின் தோற்றங்களும் எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய். இந்தக் கலை என்ற நடைமுறைப் பொய்தான் சிருஷ்டி ரகசியம் என்ற மகத்தான மெய்யை உணர்த்தக் கூடிய திறன் படைத்தது……
தத்துவ சாஸ்திரிக்கு ஒரு கண்ணீர்த்துளி, ஒரு சொட்டு ஜலமும், சில உப்புகளும் என்றுதான் தெரியும். அந்தக் கண்ணீரின் ரகசியத்தை, அதன் சரித்திரத்தை அவன் அறிவானா? அது கலைஞனுக்குத்தான் முடியும்……கவிஞன் பக்தனாக இருப்பதில் ஆச்சயமில்லை. ஆனால், கவிஞன் பக்தனாக இல்லாமலிருப்பதிலும் அதிசயமில்லை. அவன் சிருஷ்டி அகண்ட சிருஷ்டியுடன் போட்டி போடுகிறது. அதில் பிறக்கும் குதூகலந்தான் கலை இன்பம்.
    *********
கவி என்கிற பகுதியைக் கவனிக்கும் பொழுது சங்கீதத்துடன் இணைந்தது என்பது எப்பொழுதும் நினைவில் இருக்கவேண்டும். சங்கீதத்திற்கு ஒரு வடிவத்தை அர்த்தத்தைக் கொடுப்பது பாட்டு. பாட்டும், சுருதியும் கலந்த கூட்டுறவுதான் பண். பாட்டின் ஜீவநாடி, உணர்ச்சி, அழகு, வாய்மை. அதுதான் கவி.
    *********
கவிதை தமிழில் இருக்கலாம். ஆனால் கவிதையைப் பற்றிய ஆராய்ச்சி தமிழில் கிடையாது. தமிழில் செய்யுளியலைப் பற்றி ஆராய்ச்சி இருந்திருக்கிறது. அதாவது கவிதையின் வடிவத்தை (Form) பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள். கவிதைக்குத் தமிழ் யாப்பிலக்கணத்தைப் போல் இயற்கையான அமைப்பு வேறு கிடையாதென்றே கூறி விடலாம்.ஆனால் கவிதை என்றால் என்ன என்று தமிழர்கள் ஆராயவே இல்லை.
    *********
கவிதை மனிதனின் அழகுணர்ச்சியையும், உணர்ச்சிப் பான்மையையும் சாந்தி செய்வது.
    *********
கடவுள் கனவு கண்டார், இந்தப் பிரபஞ்சம் பிறந்தது. கவிஞன் கனவு கண்டான்; இலக்கியம் பிறந்தது. இதிலே ‘பத்து தலை ராவணன் உலகில் இல்லையே; கவிஞன் பொய்யன்தானே’ என்று கவிதையிலே சரித்திரத்தையும், பொருளாதாரத்தையும், ஒழுக்கத்தையும் தேடிக் கொண்டிருக்கும் பெரியார்கள் கவிஞனை அறியவில்லை; அறிய முடியாது. சிருஷ்டியின் ரகசியத்தைச் சற்று அறிந்தவர்கள் கவிஞனைத் தராசில் போட்டுப் பார்ப்பவர்கள் அல்ல. கவிஞனது சக்தியை அனுபவிப்பவர்கள்.
சிருஷ்டி கர்த்தா ஒரு பெரிய கலைஞன். அவனுடைய ஆனந்தக் கனவுதான் இந்தப் பிரபஞ்சம். அதன் ரகஸியம்,, தத்துவம் வேறு. அது இன்பத்தின் விளைவு. அவனுடைய அம்சத்தின் சிறு துளிதான் கவிஞன். அவன்தான் இரண்டாவது பிரம்மா. கண்கூடாகக் காணக் கூடிய பிரம்மா.
    *********
கவிஞன் சமயத்தை அதன் உயிர் நாடியை வெகு எளிதில் அறிந்துவிடுகிறான்.
    *********
தமிழ் மறு மலர்ச்சியின் (Prometheus) பிரமாத்தியூஸ், நமது அசட்டுக் கலையுணர்ச்சிக்கு பலியான பாரதியார், அவரும் பாவங்களை எழுப்ப முடியவில்லையானால் பழைய நாகரிகச் சின்னங்களையணிந்து கொண்டு உலவி வரும் நமது மடாதிபதிகளைப் போல் தமிழும் ஒரு ‘அனக்ரானிஸமாகவே’ (Anachronism) காலவித்தியாசத்தின் குருபமாகவே இருக்க முடியும்.
    *********
புதுமைப்பித்தன் படைப்புகள் நூலிலிருந்து                       குரு

Friday, 29 March 2013

அயோத்தி ராமன் அழுகிறான் - கவிப் பேரரசு வைரமுத்து


அயோத்தி ராமன் அழுகிறான்.....

இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை

விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்

அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை

கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன

போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்

தன்னம்பிக்கைக் கவிதை


நம்பிக்கையுடன்
மரங்கள் காற்றைச்
சுத்தம் செய்கின்றன
நம்பிக்கை மனசை
சுத்தம் செய்கிறது

கர்வம் வை
கிராம்; கணக்கில்!

நம்பிக்கை வை
கிலோ கணக்கில்!

நகம்கூட
நாளுக்கு
.001 அங்குலம்
வளர்கின்றது

நாம்?

தீயின் திறப்புவிழா உன் புன்னகை


ஃஉன் ஆணவத்தை


விட அழகானது
உன்னிடம் எதுவும்
இல்லை

ஃ நீயும் நானும்
சேர்ந்தால்  - அது
இயல் இசை நாடகம்
அல்ல
இதழ் இசை நாடகம்

ஃ காற்றும் காதலும்
சன்னல் வழி வருகிறது
கதவுவழி சென்று விடுகிறது

ஃ இளமைப் படகே!
உன்னால் கவிழ்ந்த
நதி நான்

ஃ முடிந்தால் வந்து
பார்த்து விட்டுப் போ
இறந்து கிடக்கும்
என் அமைதியை

ஃ கிளைகளை மூடும்
அவசரத்தில் கனிகளை
இலேசாய் தெரியவிட்ட
அப்பாவி மரம் நீ

ஃ முன் அறிவிப்பில்லாத
யுத்தங்களை  - உன்
முந்தானைகள்  செய்கின்றன

ஃ நீ உலக அதிசயம்
அல்ல உலக ரகசியம்

ஃ நீ பல்கலைக் கழகம்
அல்ல கள்கலைக்கழகம்

ஃ காய்சல் அடிக்கிறது
ஒரு டீஷ்பூன் வெட்கம்
தா

ஃ உன் நெற்றியில்
முத்தங்களைப் பயிரிட்டேன்
கன்னங்கள் வெட்கத்தை
அறுவடை செய்கின்றன

ஃ மரத்தில் வைத்தே
சுவைக்கும் பழவகைகள்
உன்னிடம் மட்டுமே உண்டு

ஃ எப்படியாவது
இன்று இரவு
கண்டுபிடித்து விட வேண்டும்
வெட்கம் உன் உடம்பில்
ஆரம்பிக்கும் இடத்தை

ஃ இலேசான
இதயங்களில் தான்
கனமான காதல்
தோன்றுகிறது

ஃ தராசுத் தட்டில் - என்
ஆயிரம் இரவுக்
கண்ணீரை வைத்தேன் - நீ
மறு தட்டில்
ஒரே ஒரு புன்னகையை
வைத்தாய் சமம்

ஃ சொர்கத்தை ரசிக்கும்
திருட்டு வழி
உன் படுக்கை அறை
ஜன்னல்

ஃ நஞ்சும் காதலும்
தலைக்கு ஏறிவிட்டால்
இறங்காது

ஃ ஒரு பெண்ணின்
இடையின் சுற்றளவும்
ஆணின் கைநீளமும்
ஒன்று

ஃ ஆள் கொல்லி மிருகங்கள்
காட்டில் திரிகின்றன
உயிர் கொல்லி மிருகங்கள்
தாவணியில் திரிகின்றன

ஃஇரட்டை ஜடை
துப்பாக்கியே  - உன்
தோட்டாக்கள் என்ன
மல்லிகை மொட்டுகளா?

ஃ உடம்பை மறைக்க
உடை கண்டு
பிடித்தவனை விட
எதை எதை
மறைக்க வேண்டும்
என்று கண்டவனே
ரசனாவாதி

மூச்சு முட்ட கவிதை தின்றுவிட்டு படுத்துப் புரண்டு கொண்டிருக்கும் பல்கலைக்கழகம் நீ


இந்த மார்புக் கச்சையை 
கண்டு பிடித்த மாமனிதன்
ஆணாகவே இருக்க வேண்டும்
ஏனென்றால் - அலைகளைக் 

கட்டிப் போடும் அவசியம்
கடலுக்குத் தெரியாது


 
 நீ போனபிறகும்
கேட்டுக் கொண்டே
இருக்கிறது 

அந்த இடத்தில்  - உன்
கொலுசுச் சத்தம்

உறக்கத்தைத் தேடி

கடிதம் போட்டேன்
"ஆள் இல்லை" என்று
செய்தி வந்தது

பூட்டிப் பூட்டி

வைத்தாலும்
தொலைந்துதான் போகும் 

காற்றும் காதலும்

உலகில் 

பொய்களை எல்லாம் 
ஒன்றாகச் சேர்த்த போது 
ஒரு பெண்ணின் 
புன்னகை கிடைத்தது
ஏமாற்றங்களை எல்லாம் 

ஒன்றாய் சேர்த்த போது 
ஒரு ஆணின் 
கண்ணீர் கிடைத்தது

சுவடுகள் இல்லாமல்

நடந்து போகிறது
காற்றும் என் காதலும்

மண்ணைப்
பிசைந்தால் 
பாண்டம்
மனசைப் பிசைந்தால்
காதல்

நிழல் தேடாதே உன் நிழலில் ஒரு ஊரையே நிற்கவை !

முட்களில் மோதிக்
கிழியாதவனுக்குப்
பூக்களைத் தடவும்
தகுதி கிடையாது !

மகிழ்ச்சியாய்ச் சிரி

கவலைகளைப் பிய்த்துக்
காற்று மண்டலத்திற்கு
அப்பால் வீசு !

எதைக் கண்டும்

பிரமிக்காதே
பிரமிப்பைப்போல் ஒரு
பின்னடைவே கிடையாது !

தோல்வி என்பது

சிந்திக்கத் தெரியாதவனின்
சித்தாந்தம் !

நிலாவைத் தொட்டது

மூன்று தோல்விகளுக்குப்
பிறகுதான் !

நீ எழுந்தால் ஒரு

எட்டு வந்து பார்க்காதவன்
நீ விழுந்தால் விழுந்து
விழுந்து விசாரிப்பான் கவனி !

இளைஞனே

இரைப்பையையும்
நம்பிக்கையையும்
காலியாக விடாதே !

நடக்குமா என்ற

கேள்வி-
உன் நம்பிக்கைக் கோபுரத்தின்
அத்திவாரத்தில்
விழுந்த கடப்பாறை !

உலகை உலுக்கி உலுக்கி

எடுத்தவனெல்லாம்
துவக்கத்தில் ஒரு
தூசுப்படலமாக இருந்தவன்தான் !

Thursday, 14 March 2013

தெரிந்தோ தெரியாமலோ இருக்கும் அறிய தகவல்கள்..

உலக முழுவதிலும் பொதுவான பெயர் முஹம்மது.

"Motorized Pedaling" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் MOPED. (பைக்)

"Popular Music" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் POP

"Omni Bus" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் BUS (இதற்கு அர்த்தம் அனைவரும் (Everybody))


"Forty Night (Two Weeks)" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் Fort Night

"WithDrawing Room" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் Drawing Room. இதற்கு அர்த்தம் இரவு சாப்பாட்டை முடித்து கொண்டு வெளியேறுவது. கால போக்கில் with என்ற வார்த்தை மறைந்து விட்டது.

"NEWS" இதன் விரிவாக்கம் ஒவ்வொரு எழுத்தும் நான்கு திசையை குறிக்கும்.
N-North,E-East,W-West,S-South.

"General Purpose Vechicle (GP)" இதன் சுருக்கம் தான் நாம் அழைக்கும் JEEP. கால போக்கில் GP என்கிற வார்த்தை JEEP என்றாகிவிட்டது.இது இரண்டாம் உலக போரின் (1939-1945) போது கண்டுபிடிக்கபட்டது.

"Coca-Cola" வின் உண்மையான நிறம் பச்சை.

எல்லா கண்டங்களின் (Continent)பெயர்கள் ஆரம்பிக்கும் அதே எழுத்திலே தான் முடியும். (AntarticA,AfricA,AsiA....)

நம் உடலில் பலமான தசை (Strongest Muscle) நாக்கு.

"Typewritter" இது தான் கம்ப்யூட்டர் கீபோர்டில் ஒரே வரிசையில் அடிக்க கூடிய நீளமான வார்த்தை.

பெண்கள் ஆண்களை விட இருமடங்கு கண்களை சிமுட்டுவார்கள்.

உங்களால் உங்கள் மூச்சை நிறுத்தி உங்களையே மாய்த்து கொள்ள முடியாது.

உங்கள் கையின் முட்டியை உங்களால் நக்க முடியாது.

தும்மும் போது "அல்ஹம்துலில்லாஹ்(அணைத்து புகழும் அல்லாவுக்கே)" என்று சொல்லுவதற்கு காரணம்.தும்மும் போது நம் இதயம் ஓரு நொடி நின்று விடும்.

தும்மும் போது உங்களால் கண்களை திறக்க முடியாது.

பன்றிகளால் வானத்தை பார்க்க முடியாது.

"Sixth Sick Sheik's Sixth Sheep's Sick" இது தான் ஆங்கிலத்தில் மிகவும் கடினமான நாக்கு அதிகம் பரல கூடிய வார்த்தை (Toughest Tongue Twister).

முதலை தன் நாக்கை வெளியில் நீட்டவே நீட்டாது.

நத்தை மூன்று வருடம் வரை தொடர்ந்து தூங்க கூடியது.

எல்லா பனி கரடிகளும் இடது கை பழக்கம் உடையவை.

வண்ணத்திபூச்சி காலால் தான் ருசி அறியும்.

விலங்குகளில் யானையால் மட்டுமே எதையும் தாண்ட முடியாது.

சராசரியாக உலகத்தில் சிலந்திக்கு பயப்படும் மக்கள் தன்னோடைய மரணத்துக்கு பயப்படவில்லை.

இடது கையால் மட்டுமே கீபோர்டில் அடிக்க கூடிய பெரிய வார்த்தை Stewardesses.

மின்சார நாற்காலியை (Electric Chair) கண்டுபிடித்தவர் ஓரு பல் மருத்துவர்.

மனிதனின் இதயம் 30 அடி வரை ரத்தத்தை பீய்து அடிக்க கூடிய சக்தியை பெற்றது.

HeadPhone அணிந்து ஓரு மணி நேரம் பாட்டு கேட்டால் சாதரணமாக காதுக்குள் பரவ கூடிய கிருமியை விட 700 மடங்கு அதிகம் கிருமி பரவுகிறது.

தீ பெட்டிக்கு முன்பே சிகரட் லைட்டர் கண்டுபிடிக்க பட்டுவிட்டது.

லிப்ஸ்டிக் (Lipstick) அனைத்திலும் மீன் செதில் இருக்கும்.

கைரேகை போல ஒவ்வொரு மனிதனின் நாக்கின் ரேகையும் வித்தாயசபடும்.

'எல்லோரும் நல்லவரே' u and me both





ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.அதைக் கொத்தித் தின்ன விரும்பியது.அதை பார்த்த புழு அசையாமல் இருந்தது...புழுவின் இந்த செய்கை புறாவிற்கு வியப்பைத் தந்தது...'நான் உன்னை தின்ன வருவது தெரிந்ததும்..அசையாமல்..என்னிடம் பயம் இல்லாமல் இருக்கிறாயே..எப்படி' என்றது புறா.

'என் மனதிற்குள் ...நீ என்னை துன்புறுத்தமாட்டாய் என்றே தோன்றுகிறது'என்றது புழு.

'என் மனதில் உள்ளது உனக்கு எப்படித் தெரியும்'என புறாக் கேட்டது.

'உன்னைப் பார்த்ததும்..உன்னை என் தோழனாக நினைத்து விட்டேன்..நண்பனுக்கு ஆபத்து வந்தால் காப்பவன் நண்பன் அல்லவா..உயிர் காப்பான் தோழன் ஆயிற்றே..சரி..உனக்கு ஒன்று சொல்கிறேன்..வேடன் ஒருவன் வலைவீசி உன்னைப் பிடித்தால் உனக்கு வருத்தம் ஏற்படாதா ...? அதே போன்று தானே..நீ என்னைத் தின்றால் நானும் வருத்த மடைவேன்.

அது போலவே..அந்த வேடன் உன்னை விடுவித்தால்..நீ எவ்வளவு சந்தோஷம் அடைவாய்...நீயும் என்னை விட்டு விட்டால் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்..அதுதானே நட்பின் இலக்கணம் என்றது.

புறா...புழுவின் பேச்சுத் திறமையை பாராட்டி விட்டு புழுவை விட்டுச் சென்றது.

நல்ல குணம் கொண்ட புறா போன்றவர்கள் ஒருவருக்குக் கெடுதல் செய்யும்போது ..எடுத்துச் சொன்னால் தன்னைத் திருத்திக்கொள்வார்கள்.

நன்மைக்கு நன்மையே நடக்கும்;



ஒரு நாள் கந்தன் தந்தையுடன் மலைகள் இருந்த பகுதி ஒன்றில் நடந்து சென்றுக் கொண்டிருந்தான்.அப்போது கால் தடுக்கி விழ நேரிட்டது...வலியால் 'ஆ'எனக் குரல் கொடுத்தான்..

'ஆ' என எதிரொலியும் கேட்டது...

கந்தனுக்கு ஒரே ஆச்சரியம்..

'யார் நீ 'என்றான்.

பதிலுக்கு 'யார் நீ' என்று கேட்டது...

'உன்னை பாராட்டுகிறேன்; என்றான்.

அதுவும் அப்படியே கூறிற்று.

அப்பாவிடம் கந்தன்..'அப்பா..என்னது இது;என்றான்.

அவன் அப்பா சொன்னார்..'கந்தா..இதன் பெயர் எதிரொலி' ஆகும். உண்மையில் நாம் என்ன சொல்கிறோமோ..அதையே இது திரும்பச்சொல்லும்.

நீ இப்போது..'நீ சொல்கிறபடி செய்கிறேன்' என்று சொல் என்றார்..

கந்தனும் ..அப்படியே சொல்ல..திரும்ப எதிரொலியும் 'நீ சொல்கிறபடி செய்கிறேன் 'என்றது.

கந்தா...இதிலிருந்து தெரிந்து கொள்..நல்லதோ..தீமையோ எது நாம் செய்தாலும் அதுவே நமக்குத் திரும்ப நடக்கும்.

இதைத்தான் இந்த எதிரொலி உணர்த்துகிறது.

ஆகவே எப்போதும் நாம் அனைவருக்கும் நல்லதே செய்ய வேண்டும்

ஏழை தனக்கு செய்த உதவி

செய் நன்றி மறவாமை (நீதிக்கதை)




ஒரு கிராமத்தில் குரங்கொன்று இருந்தது.

ஒரு நாள் அது மரத்தில் ஒடி விளையாடியபோது,உச்சாணிக் கொம்பில் இருந்து தவறி விழுந்து படு காயமடைந்தது.
அதனால் எழுந்து நடக்க முடியவில்லை.உணவு தேடவும் வழியில்லை.மரத்தின் அடியிலே  படுத்துக் கிடந்தது.

அம்மரத்தின் அருகில் ஒரு சிறு குடிசையில் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவன் அந்தக் குரங்கைப்பார்த்து மனம் வருந்தி அதை தன் குடிசைக்கு எடுத்து சென்று அடிபட்ட காலுக்கு மருந்திட்டு, உண்ண  உணவும் கொடுத்தான்.

நாளடைவில் குரங்கு குணமானது.அப்போதுதான் அந்த குடிசையை நன்கு பார்த்தது. குடிசையின் உச்சியில் ஒரு பெரிய ஓட்டை இருந்தது.அதன் வழியே வெய்யிலும்,மழை என்றால் மழை நீரும் குடிசைக்குள் விழுவது தெரிந்தது.

குரங்கு உடனே வெளியே வந்து,மரத்தில் ஏறி,இலைகளையும் சிறு கிளைகளையும் எடுத்து வந்து,குடிசையின் உச்சிக்கு சென்று ஓட்டையை அடைத்தது,

இப்போது குடிசையில் ஓட்டையும் இல்லை,வெய்யிலோ,அல்லது மழையின் பாதிப்போ இல்லை.

அந்த ஏழை தனக்கு செய்த உதவியை குரங்கு எண்ணி,தன்னால் முடிந்த பிரதியுபகாரத்தை செய்தது பாராட்டுக்குரியது.

நாமும் நமக்கு யாரேனும் சிறு உதவி செய்தாலும் அதை மறக்காமல் பெரிதாக எண்ணி ,நம்மால் முடிந்த நல்ல காரியங்களை
உதவியவர்களுக்கு செய்ய வேண்டும்