Saturday, 16 February 2013

அறத்தின் உரு தைரியம் வார்த்தை இயலாமை லட்சியம் சுதந்திரம்

அலெக்சாண்டர் ஒரு கடல் கொள்ளைக் காரனை பிடித்து விசாரிக்கிறார்.,''எந்த தைரியத்தில் நீ கடலில் கொள்ளை அடித்தாய்?''
கொள்ளையன் சொன்னான்,''நாடு பிடிக்கத் தங்களுக்கு எந்த தைரியம் காரணமோ ,அதே தைரியம் தான்.''
 சுதந்திரம்
 ஒருவன் தெருவில் நடந்து செல்லும் பொது தன்னுடைய கைத்தடியை அநாயாசமாக சுழற்றிக் கொண்டேயிருந்தான். தெருவில் வந்து கொண்டிருந்த பாதசாரி ஒருவர் அதை ஆட்சேபித்தார். ''என் கைத்தடியை என் இஷ்டம் போல் சுழற்ற எனக்கு சுதந்திரம் இல்லையா?என முதல் ஆள் கேட்டான்.பாதசாரி சொன்னான்,''உனக்கு சுதந்திரம் இல்லை என்று யார் சொன்னது?ஆனால் ஒன்றை மட்டும் நீ மறந்து விடக் கூடாது.என்னுடைய மூக்கு எங்கே ஆரம்பிக்கின்றதோ அந்த இடத்தில் உன் சுதந்திரத்தின் எல்லைக் கோடுமுடிகிறது என்பதை மறந்து விடாதே.''
---தத்துவ விமரிசகர் சி.இ எம் .ஜோட்
 லட்சியம்
 மழை பெய்து ஓடி வரும் தண்ணீர் பாறையின் மீது மோதி மோதித் தேங்கி நின்று தவிப்பதில்லை.மோதுகிறது. பின் இடுக்குக் கிடைத்த வழியே தன பாதையை வகுத்துக் கொண்டு பேராறாகச்செல்கிறது.லட்சியத்தை அடைய முயல வேண்டுமே ஒழிய பாறைகளை எதிர்த்துக்கொண்டு பாதி வழியில் நிற்பது பரிதாபத்திற்கு உரியது.
-----டாக்டர் உதயமூர்த்தி

 இயலாமை
ஒரு ஆண் சிங்கம் ,ஒரு மானை விரட்டிச் சென்றது.மான் வேகமாக ஓடித் தப்பித்து விட்டது. பெண் சிங்கம் ஆண் சிங்கத்தின் இயலாமை குறித்து கேலி செய்தது.
ஆண் சிங்கம் சொன்னது,''நான் இரைக்காக ஓடினேன்.ஆனால் மான் உயிருக்காக ஓடியது.''
 வார்த்தை
 ஒரு கவனக் குறைவான வார்த்தை ,சர்ச்சையில் முடியும்.
ஒரு கடுமையான வார்த்தை ,வாழ்க்கையை முறிக்கும்.
ஒரு கசப்பான வார்த்தை ,வெறுப்பை வளர்க்கும்.
ஒரு கொடுமையான வார்த்தை,துடித்துச் சாகடிக்கும்.
ஒரு இனிமையான வார்த்தை,நல வாழ்வைக் கொடுக்கும்.
ஒரு சந்தோசமான வார்த்தை,ஒளியைக் கொடுக்கும்.
ஒரு நேரமறிந்து கூறும் வார்த்தை,கடுமையைத் தணிக்கும்.
ஒரு அன்பான வார்த்தை பாசத்தை வளர்க்கும்.
 அறத்தின் உரு
 மற்றவர்களது இரகசியங்களைத தெரிந்து கொள்வதில் செவிடனாக இரு.
பிறன் மனைவியைப் பார்க்கும் பொது குருடனாக இரு.
கோள் சொல்லும் விசயத்தில் ஊமையாக இரு.
அப்படி இருப்பவனுக்கு நல வழிப் பாடம் போதிக்க வேண்டியதில்லை.
அவனே அறத்தின் உருவமாவான்.
----நாலடியார்.

No comments:

Post a Comment

THANK YOU