Tuesday, 3 July 2012

விளாடிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin, ரஷ்ய மொழி: Влади́мир Ильи́ч Ле́нин Sound கேளுங்கள் , ஏப்ரல் 22 [யூ.நா. ஏப்ரல் 10] 1870 – ஜனவரி 21, 1924), ஒரு ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார் 2

உள்நாட்டுப் போரும் வெளிநாட்டுத் தலையீடும்

லெனின் உரையாற்றுகிறார்.
இரசியாவில் நாடு தழுவிய கிளர்ச்சிகள் ஏற்பட்டன. பல‌ வகையான அரசியல் இயக்கங்களும் அவற்றின் ஆதரவாளர்களும் ஆயுதங்களை எடுத்துப் போராடினர். சிலர் சோவியத் அரசுக்கு ஆதரவாகவும் வேறுசிலர் அவ்வரசை வீழ்த்தும் நோக்கிலும் போரில் ஈடுபட்டிருந்தனர். எனினும் முக்கியமான இரண்டு பிரிவுகள் கம்யூனிஸ்டுகளின் செம்படைகளூம், மரபுவாதிகளான வெண்படைகளும் ஆகும். அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளும் சோவியத்துக்கு எதிராக வெண்படைகளுக்கு ஆதரவு நல்கினர். இரசியப் புரட்சியால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் போன்று ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகள் பயந்து நடுங்கினர். அவர்கள் தங்களுடைய நாடுகளில் ஏழைகளைக் கடுமையாகச் சுரண்டினார்கள். சோவியத் யூனியனைப் பார்த்துத் தங்கள் நாட்டு மக்களும் புரட்சி செய்வார்கள் என்று பயந்தனர். இப்படிப்பட்ட சூழலில் சோவியத் யூனியனே, இவர்கள் இந்தியா போன்ற நாடுகளை அடிமையாக (காலனி) வைத்துக் கொள்ளையடித்ததை எதிர்த்தது. ஆகவே அதை ஒழித்துக் கட்ட முடிவு செய்தனர்.எதிரிகளின் படைகள் சோவியத் யூனியனை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டன. தலைநகரத்தை நோக்கி வேகமாக முன்னேறின. பிடிபட்ட இடங்களில் எல்லாம் அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டன. ஏழை உழவர்களும், தொழிலாளர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டது. குழந்தைகள் கூட ஈவு இரக்கமின்றி சுடப்பட்டனர். உழவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவை பழைய பண்ணையார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே போல் தொழிற்சாலைகளில் முதலாளிகளின் சுரண்டல் மீண்டும் தொடங்கியது.விரைவில் தலைநகரைக் கைப்பற்றி லெனினைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினர், எதிரிகள். அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்தியங்களும் இரசியாவைப் பங்கு போட்டுக் கொள்வதைப் பற்றி வெளிப்படையாகப் பேரங்கள் நடத்திக் கொண்டு இருந்தன. உலகின் முதல் சோசலிச நாடு அழிந்து விடுமோ என்ற அச்சம் உலக மக்களைக் கவ்விக்கொண்டது.இந்த அபாயகரமான சூழலில் லெனின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சோசலிச தாய்நாடு ஆபத்தில் இருக்கிறது. தொழிலாளர்களே, விவசாயிகளே நாட்டைப் பாதுகாக்கப் படையில் சேருங்கள்.எதிரிகள் வெற்றி பெற்றால் சோசலிசப் புரட்சி அளித்திருந்த உரிமைகள் அனைத்தும் பறிபோகும் என்று இரசிய உழைக்கும் மக்கள் புரிந்துக் கொண்டனர். அவர்கள் மீண்டும் பழையபடி வறுமையில் வாட விரும்பவில்லை. தங்களின் விடுதலையைப் பாதுகாக்க உழைக்கும் மக்களின் படையில் சேர்ந்தனர். அது செம்படை என்று அழைக்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் படையில் சேர்ந்தனர்.உக்கிரமான போர் தொடங்கியது. செம்படையை விட எதிரிகளிடம் பெரிய படை இருந்தது. நவீனமான ஆயுதங்கள் இருந்தன. ஏகாதிபத்தியங்கள் போரில் வெற்றி பெறப் பணத்தை வாரி இறைத்தன. எதிரிகள் டாங்குகள், பெரிய பீரங்கிகள், ஏவுகணைகள், இயந்திரத் துப்பாக்கிகள், போர்விமானங்கள், போர்க்கப்பல்கள் ஆகியவற்றைக் கொண்டு தாக்கினர். செம்படையிடமோ பழங்காலத்து துப்பாக்கிகளும் கத்திகளும் தான் இருந்தன. ஆனால் அவர்கள் மன உறுதியுடனும், வீரத்துடனும் போரிட்டனர். அந்த மன உறுதியை மக்களுக்கு ஊட்டியவர் லெனின். செம்படையினர் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் போரிட்டனர் எதிராளிகளிடம் இத்தகைய ஒழுங்கமைவு காணப்படவில்லை இதனால், லியொன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் போரிட்ட செம்படையினர் 1920 ஆம் ஆண்டு எதிராளிகளைத் தோற்கடித்து வெற்றிபெற்றனர். எனினும் ஆங்காங்கே சிறுசிறு குழப்பங்கள் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடந்துவந்தன. வெளிநாட்டுத் தூண்டுதல்களுடன் நடந்த இந்த உள்நாட்டுப் போரில் இரு பகுதியினருமே முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்குக் கொடுமைகளில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. கும்பல் கும்பலாக மக்கள் கொலை செய்யப்பட்டனர். போர்களுக்கு இடையே பஞ்சங்கள், தொற்றுநோய்கள் என்பவற்றினாலும் இலட்சக்கணக்கான மக்கள் இறந்துபோயினர்.
வெண்படைகளுக்கும் அதன் வெளிநாட்டு, உள்நாட்டுக் கூட்டாளிகளுக்கும் எதிரான‌ போரில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, 1919ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கம்யூனிசப் புரட்சியை மேற்குநாடுகளுக்கும் பரவலாக்க லெனின் விரும்பினார். இதற்காக வன்முறையைப் பயன்படுத்துவதற்கும் அவர் தயாராக இருந்தார். புதிதாக விடுதலைபெற்ற இரண்டாவது போலிஷ் குடியரசு, 18 ஆம் நூற்றாண்டில் போலந்துப் பிரிவினைக்குப் பின்னர் ரஷ்யாவுடன் இணக்கப்பட்ட போலந்தின் கிழக்குப் பகுதிகளை வசப்படுத்திக்கொள்ளத் தொடங்கியது. அது இப் பகுதிகளில் போல்ஷெவிக்குகளுடன் சண்டைகளில் ஈடுபட்டது. இது போலந்து-சோவியத் போருக்கு வித்திட்டது. ஜேர்மனியில் ஏற்பட்ட புரட்சி, மேற்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்தைப் பரப்புவதற்காக சரியான வேளை அதுவே என எண்ணத்தூண்டியது. சோவியத்தையும், ஜேர்மனியிலுள்ள கம்யூனிச ஆதரவாளர்களையும் இணைப்பதற்கும் அதன் மூலம் ஐரோப்பாவின் மேற்குப் பகுதிகளில் கம்யூனிசத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும் பாலமாகப் போலந்தை லெனின் கணித்திருந்தார். எனினும், சோவியத்-போலந்துப்போரில் தோல்வியடைந்ததனால் சோவியத்தின் இந்தத் திட்டம் பயனற்றுப் போயிற்று.
லெனின் ஏகாதிபத்தியத்தின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தார். 1917 ஆம் ஆண்டில், தேசிய சிறுபான்மை இனங்களுக்கும், அடக்கப்பட்ட நாட்டினங்களுக்குமான நிபந்தனை எதுவுமற்ற பிரிந்துபோகும் உரிமையை அறிவித்தார். எனினும் உள்நாட்டுப் போரை அடக்கியபின், புதிதாக விடுதலை பெற்ற ஆர்மீனியா, ஜார்ஜியா, அசர்பைஜான் ஆகிய நாடுகளை படைப்பலத்தைப் பயன்படுத்தி, சோவியத்துடன் இணைத்துக் கொண்டார். இவ்வாறு இணைத்துக்கொண்டது, அந் நாடுகளை முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கே என அவர் வாதிட்டார்.

லெனினைக் கொல்ல முயற்சி

லெனின் உயிருடன் இருக்கும் வரை சோவியத் யூனியனைப் போரில் வீழ்த்த முடியாது என்பதை எதிரிகள் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் கூலிப்படைகள் தலைநகருக்குள் ஊடுருவின. பல முன்னணி கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.ஒருநாள் லெனின் தொழிலாளர் கூட்டம் ஒன்றில் பேசி முடித்த பின் அரங்கத்தை விட்டு வெளியேறி வந்தார். அப்போது அவர்மீது துப்பாக்கியால் சுட்டனர். மூன்று குண்டுகள் லெனினுடைய உடலைத் துளைத்தன. சுட்டவனை மக்கள் வளைத்துப் பிடித்தனர். ஆனால், லெனினுடைய நிலைதான் மிகவும் மோசமாக இருந்தது. கழுத்தில் இருந்தும், நெஞ்சில் இருந்தும் ஏராளமான இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் பதறிப் போனார்கள். லெனின் பதற்றப்படாமல் தானே நடந்து சென்று வண்டியில் உட்கார்ந்தார். அவருடைய உடல் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகிக் கொண்டு இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அறுவை சிகிச்சை செய்வது அவசியம். ஆனால் அறுவையின் போது உயிர் போய்விடக்கூடிய ஆபத்துக் குறித்து மருத்துவர்கள் பயந்தார்கள். உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த லெனின் மருத்துவர்களுக்கு தைரியம் கூறினார். அறுவை சிகிச்சை நன்கு முடிந்தது. இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. ஒரு குண்டு உள்ளேயே தங்கிவிட்டது. தங்கள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திய சோசலித்தை வீழ்த்தவே லெனின் சுடப்பட்டார் என்ற உண்மை மக்களுக்குப் புரிந்தது. லெனின் மீதான தாக்குதலுக்கு பழி வாங்க மக்கள் சபதம் ஏற்றனர். சோசலிசத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தான் எதிரிகளைப் பழிவாங்க முடியும். ஒரு வருடத்தில் உற்பத்தி செய்ய வேண்டிய பொருட்களை ஆறு மாதத்தில் உற்பத்தி செய்யப் போவதாக தொழிலாளர்கள் உறுதி பூண்டனர். எட்டு மணி நேர வேலை நேரத்திற்கு பிறகு மேலும் நான்கு மணி நேரம் இலவசமாக, சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர்.
எதிரிப் படைகளை முறியடிக்கச் செம்படை உறுதி பூண்டது. மேலும் அதிக வீரத்துடன் போரிட்டது. லெனின் சுடப்பட்ட அடுத்த நாள் அவருடைய சொந்த ஊரான சிம்பிர்ஸ்க் நகரம் மீட்கப்பட்டது. செம்படையின் வெற்றி தொடங்கியது.

பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்

போரினால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. தலைநகரில் உணவு தானியம் மிக அரிதாகவே கிடைத்தது. உணவுப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க லெனின் அமைச்சரவையைக் கூட்டினார். அந்தக் கூட்டம் நடந்து கொண்டு இருந்த போதே உணவுத்துறை அமைச்சர் மயங்கி விழுந்தார். காரணம் அவர் கடந்த எட்டு நாட்களாக ஒரு வாய் உணவு கூட அருந்தவில்லை. தன் கட்டுப்பாட்டில் இருந்த உணவை குழந்தைகள், நோயாளிகள், பெண்கள், முதியவர் ஆகியோருக்கு வழங்கினார். நாட்டு மக்கள் வயிறார சாப்பிடும் போதுதான் தானும் வயிறாரச் சாப்பிடப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டார். சோசலிச சோவியத் யூனியனில் மந்திரிகள் அப்படித்தான் இருந்தனர்.அந்தத் தோழர் மட்டும் அல்ல லெனினும் பலநாள் பட்டினி தான். ஆனாலும் அவர் சோர்ந்து போகவில்லை. சோசலிசத்தைப் பாதுகாக்க இரவு பகலாக உழைத்தார். அவர் இராணுவத்தை வழி நடத்த வேண்டியிருந்தது. உணவுப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியிருந்தது. கல்வி, தொழில் வளர்ச்சிக்கான திட்டம் இடுதலை நிறைவேற்ற வேண்டியிருந்தது. பொதுவுடைமைச் சமுதாயத்தை நோக்கி நாட்டை வழி நடத்த வேண்டியிருந்தது. உள்ளுக்குள் இருந்து சதி செய்த சதிகாரங்களை களையெடக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் தோன்றின. அனைத்தையும் லெனினே முன்னின்று தீர்க்க வேண்டியிருந்தது.தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் லெனினைத் தேடி வந்தனர். உழைக்கும் மக்களின் மன்றமான சோவியத்தை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி நடத்துவது என்று அவரிடம் கேட்டு அறிந்தனர். அவர் ஒரு நாளைக்கு இருபத்திரண்டு மணி நேரம் உழைத்தார். இந்தக் கடினமான உழைப்பினாலும், உணவுப் பற்றாக்குறையாலும் லெனினுடைய உடல்நிலை மோசமடைந்தது.

மக்களின் மகத்தான தலைவர் லெனின்

லெனின் பட்டினி கிடப்பது கிராமங்களில் இருந்த மக்களுக்கு தெரிய வந்தது. அதேநேரத்தில் அவருடைய பிறந்த நாளும் நெருங்கியது. லெனினுக்கு உழவர்கள் பரிசளிக்கத் தங்களால் இயன்ற உணவுப் பொருட்களைத் திரட்டினார்கள். ஆனால் தலைநகர் எதிரிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. உழவர்களின் பிரதிநிதிகள் காட்டு வழியே நடந்தனர். எதிரியின் வளையத்தை தந்திரமாக உடைத்துக் கொண்டு தலைநகரை அடைந்தனர்.
ஏராளமான உணவுப் பொருட்கள் அவர் வீட்டின் முன் குவிந்தன. லெனின் உழவர்களுக்கு நன்றி சொன்னார். ஆனால் உணவுப் பொருட்களைத் தொடவில்லை. பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு அவற்றை வழங்கும்படி உத்தரவிட்டார். தான் எப்போதும் சாப்பிடுவதும் போல கால் வயிறு கூட நிரம்பாத அளவுக்கு உப்புச்சப்பற்ற கஞ்சி குடித்தார்.லெனினுக்கு பரிசாக வந்த உணவுப் பொருட்கள் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காத்தன‌. அனைத்தையும் விட குழந்தைகளின் நலனே முக்கியமானது என்ற லெனின் அடிக்கடி கூறுவார் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சி செய்ததும், அதைப் பாதுகாக்க போர் செய்வதும், எதிர்காலத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழவேண்டும் என்பதற்காகத்தான் என்பதை அடிக்கடி நினைவுபடுத்துவார். கடும் பஞ்சத்திலும் போருக்கும் நடுவே ஆயிரக்கணக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டன. குழந்தைகள் அறிவாளிகளாக வளர்க்கப்பட்டனர். கல்விமுறை ஜனநாயகப்படுத்தப்பட்டது. மனப்பாடக் கல்வி ஒழிந்தது. மாணவர்களின் திறன்களை வளர்க்கும் கல்வி மலர்ந்தது. வளமான வருங்காலத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. கடின காலம் மெதுவாக அகலத் தொடங்கியது. விவசாய உற்பத்தியும், தொழில் உற்பத்தியும் பெருகியது. இதே நேரத்தில் போர் முனையில் இருந்து வெற்றிச் செய்திகள் குவியத் தொடங்கின உழைக்கும் மக்கள் காட்டிய வீரத்தின் முன் எதிரிகள் கூலிப்படை தோற்று ஓடியது. 21 நாடுகளின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் பிரான்சும் தோற்றன.ஆனால், இந்த வெற்றி சாதாரணமாக கிடைக்கவில்லை. நான்கு வருடங்கள் போர் நடந்தது. முப்பது லட்சம் செம்படை வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.

லெனினும் சிவப்பு வன்முறையும்

அக்டோபர் 1917 போல்ஷவிக்கு புரட்சி பிறகு, கம்யூனிஸுடு எதிர்ப்பாளர்கள் `வெள்ளை இயக்கம்` என அழைக்கப் படும் இயக்கத்தில் செயல்பட்டனர். 1918ல், `வெள்ளை இயக்கத்தினர்` புதிதாக ஆக்கப்பட்ட ரஷ்ய சோசோகு க்கு எதிராகா ரஷ்ய உள்நாட்டு போரை துவங்கினர். அது பலரை கைது செய்து, சுட்டது. அதனால், அது `வெள்ளை வன்முறை` என அழைக்கப் பட்டது. சிவப்பு வன்முறை வெள்ளை வன்முறைக்கு பதிலாக ஆரம்பிக்கப் பட்டதாக கம்யூனிஸ்டுகள் சொன்னர்கள். லெனின் மேல் கொலை முயற்சியை அடுத்து, ஸ்டாலின் கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பகிரங்க, பாரிய வன்முறையை ஆரம்பிக்க வேண்டும் என கோரினார்.. மற்ற போல்ஷெவிக்குகளும் அதற்கு உடன்பட்டு, 1917ல் லெனின் ரகசிய போலீஸ் சேகாவின் தலைவராக நியமித்த ஃபீலிக்ஸ் டிசெர்சின்ஸ்கியை , `சிவப்பு வன்முறை`யை தொடங்குமாறு கேட்டுக் கொண்டனர்; அது கம்யூனிஸ்டு பத்திரைகையில் செப்டம்பர் 1, 1918ல் வெளியிடப்பட்டது.[1] . சில வரலாற்று ஆய்வுகள்படி, துப்பாக்கி ரவை அடியினால் படுத்திருந்த லெனின் .[2], “ரகசியமகவும், துரிதத்துடனும், சிவப்பு வன்முறையை தயார் செய்ய வேண்டியுள்ள்ளது” என ஆணை இட்டாராம். ரிசர்டு பைப்ஸ் என ஆய்வாளர் படி லெனின் 11 ஆகஸ்து 1918 அன்று வன்முறையை தொடங்க உத்தரவிட்டார். அது `லெனினின் தூக்கு ஆணை` என அறியப் படுகிறது.[3].
சேகா ஈவிறக்கம் இன்றி மற்றவர்களை கொன்றது என்று வரலாறு ஆசிரியர் ராபர்ட் கெலேட்லி தனது நூல் “லெனின், ஸ்டாலின்,ஹிட்லர்” இல் கூறியுள்ளார்[4]. சந்தேகிக்கப்பட்ட நபர்கள் தீவிர சித்திரவதை, கம்படி, சுடப்படுதல், உடல் ஊனமாக்குதல் இவற்றை எதிபார்க்கலாம். சிலர் சுட்டு தள்ளப் பட்டனர்".[5], மற்றவ்ரக்ள் நீரில் மூழ்கப்பட்டனர், குளிரில் உறையப்பட்டனர், அல்லது கத்தில்யால் வெட்டப்பட்டனர்,மேலும் கொல்லப்பட்டவர்கள் தங்கள் சாவுகுழிகளை தாங்களே தோண்ட வேண்டியிருந்தது.பல சரிதிர ஆய்வாளர்கள் சிவப்பு அட்டுழியங்களை பற்றி படித்து ஆவணம் செய்துள்ளனர். .[6][7][8][9]
சோவியத் அரசால் பிரசுரிக்கப் பட்ட ஒரு சுட்டு தள்ளல் புள்ளி விவரம், சேகாவினால் கொடுக்கப்பட்டது. அது ரஷ்ய சோசோகு பகுதியில் 1918-20 காலத்திற்கு மொத்தம் 12,,733 எனவும், அதில் 3082 பேர் கலத்தில் பங்கு எடுத்தனர், 2024 எதிர்-புரட்சி அமைப்புகளில் அங்கம் வகித்தனர் என்றும், 643 ரௌடிகள் என்றும், 455 புரட்சிக்கு ஊக்கு கொடுத்தனர் என்றும், 206 ஊழல் காரர்கள் எனவும், 102 உளவினர் என்வும், 102 பேர் ராணுவத்தை கைதுறந்தவர் எனவும் சுடப்பட்ட்னர்[10]. இந்த புள்ளி விவரங்கள் உண்மைக்கு மிகக் குறைவான மதிப்பீடு என நம்பம் படுகிரது. ஏனெனில் இது போர் பகுதிகளான கிரைமியாவையும், யுக்ரெயினையும் அடக்க வில்லை[11]. அப்பிர்தேசங்களில் ஜெனெரல் ரேங்கல் எனப்படும் கலகக் காரரின் கலகம் தடைவிதி செய்யப் பட்ட பிறகு 50,000 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்[12]. சில சரித்திர முனைவர்கள் கணக்குப் படி 1917-22 காலகட்டத்தில் 280,000 பேர் சேகாவினால் கொல்லப் பட்டனர், அதில் பாதி திடீல் சுட்டுக் கொல்லப்பட்டனர், மறு பாதி கலகம் அடக்கும் போது கொல்லப் பட்டனர்[13] .[14] . பேரா.ரும்மல் லெனினை 40 லட்சம் அகால மரணங்களுக்கு பொறுப்பாளி ஆக்குகிறார்[15] . கம்யூனிசத்தின் கருப்பு நூல் படி[16] , மே 1919` 16,000 ஜார் காலத்திய கடோர்கா என அழைக்கப் படும் பணி முகாம்களில் இருந்தனர். அது செப்டம்பர் 1921ல் 70000 ஆயிற்று. இந்த முகாம்களின் மிக மோசமான நிலைகளினால் இறப்பு வீதம் அதிகமக இருந்தது, அங்கு பல படுகொலைகள் செய்யப்பட்டன[17] . சில சமயம், மொத்த முகாம் வாசிகளும் சுட்டு கொல்லப்பட்டனர், ஏனெனில் அப்பொது `வெள்ளை படையினர் அப்பகுதியில் வெற்றி பெறுவர் என வாய்ப்பு இருந்தது[18][19] .
பேரா.ஒர்லாண்டோ பியுக்படி லெனின் பொதுவாக பயங்கர அடக்கு முறைகளை புரட்சிக்கு எதிர்ப்பு கொடுப்பவர்கள் மீது தொடுக்க ஆவலாயிருந்தார்.[20] ; மேலும் பிராலடேரியன் தேசம் - அதாவது தொழிலாளர் தேசம் என்பது முதலாளித்துவவாதிகள் மீது பாரிய வன்முறையை செலுத்துவதாகும் என்பதில் உறுதியாக இருந்தார்.. காமனேவ், புகாரின் போன்ற தலைவர்கள் செகாவின் மிகை வன்முறையை அடக்க முயன்ரபோது, லெனின் சேகாவிற்கு ஆதரவு கொடுத்தார்[21] . 1921ல், லெனின் தலைமையில் இருந்த அரசு கூட்டம், சேகாவின் மரண தண்டனை வரைகளை அதிகமாக்கியது[22] .
பேரா.ரிசர்டு பைப்ஸ்படு லெனின் பயங்கர வன்முறை அடக்கு முரைகளை ஆதரித்தவர். ஷூயா எனும் நகரில் சில மத குருக்கள் கலகம் செய்தனர், அதனால் மார்ச் 19, 1922 மடலில் , லெனின் அரசு ஆணைப்படி தேவாலயங்களின் உடைமைகளை தராத மதகுருக்கள் மீது பயங்கரமான அட்டுழியங்களை திட்டமிட்டார். ”நம் எலா மத பூசாரிகள் எதிர்ப்புகளையும் ஆணித்தரமாக அடித்தொழித்து, அதை அவர்கள் பல சதாப்தங்களுக்கு மறக்கக் கூடாது. இன்னும் அதிக எண்ணிக்கையில் மதகுருக்க்ளையும், பூர்ஷ்வாக்களையும் மரணத்திற்கு அனுப்புவதே மேல்”[23] . அதனால் அந் நகரில் 2691 பூசாரியர், 1962 துறவிகள், 3447 பெண் பூசாரிகள் லெனின் ஆனைக்கு நேரடியாக சுட்டுக் கொல்லப் பட்டனர்[24][25]. 1980ல் கொர்பச்சாவின் “ஜனாதிபதியின் அரசியல் அடக்கு முறைகளில் பலியானவர்களின் நினைவு கமிடி’ தலைவர் அலெக்சாண்டர் யாகாவ்லேவ், படி 1918ல் மட்டுமே 3000 சுட்டுக்கொல்லப் பட்டனர். அவர்படி “லெனின் சர்வதேச நீதிகள்படி மானுடத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்தவர் என குற்ற, சாட்டப் படலாம்`.[26][27]

செப்டம்பர் 1918, சிவப்பு வன்முறை போது 25 முன்னாள் ஜாரின் மந்திரிகள், உயர் அதிகாரிகள், மற்றும் 765 `வெள்ளை காப்பாளர்` என சொல்லப் பட்டவரக்ள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் மரண ஆணையை லெனினே கையெழுத்திட்டார். டைம் மாகசீன் கட்டுரை படி லெனின் வாரிசுகள் ஸ்டாலின், மாவோ, ஹிட்லர், போல்-போட் ஆவர்]][28].
உள்நாட்டு போர் போது, அட்டூழியங்கள் இரு தரப்பினராலும் செய்யப் பட்டன[29] . சிலர் `வெள்ளை வன்முறை` `சிவப்பு வன்முறை` அளவு இருந்தனர் என்கிறனர்[2] . ஆனால் பல சரித்திர ஆசிரியர்கள் இரு அட்டுழியங்களும் ஒரே அளவல்ல[30] ; `வெள்ளை வன்முறை` தனிப்பட்ட ராணுவ தளபதிகளால் செய்யப் பட்டது, மேலும் அவை சொந்த பழி தீர்ப்புகளீனால் ஏற்பட்டவை[31]; ஆனால் `சிகப்பு வன்முறை` அரசின் கொள்கை - அதை எல்லா அரசு ராணுவ தளபதிகளும் நிறைவேற்ற கடமை பட்டவர்கள்[32] . லெனின் தன் ராணுவ தளபதிகளுக்கு அனுப்பிய தந்திகளில், ஈவு, இரக்கமற்ற அட்டூழயங்களை செய்ய்மாறு தூண்டினார். அவர் தந்திகள் வன்முறை, நாடு பிரஷ்டம், சுட்டு கொலை இவற்றை கேட்டு தேவை ஆக்கின உதாரணமாக ஆகஸ்து 9, 1918 அன்று நிழ்னி-நோவ்கோராட் நகரத்தில் இருந்த தன் தளபதிக்கு அனுப்பிய தந்தியில் “நீ, மார்கின், முதலியவர்கள் கூட்டு செர்ந்து பொது பயங்கர வாதத்தை அனுஷ்டித்து, நூற்றுக் கணக்கான வேசிகளை சுட வேண்டும் அல்லது நாடு கடத்த வேண்டும், ஏனெனில் அவர்கள் பல ராணுவ வீரர்களை குடி போதைக்கு உள்ளாக்கி விட்டர்கள். நேரத்தை விரயமக்க வேண்டாம்.... ..........இப்பொழுதே செய்வோம், பொது தேடல்கள், ஆயுதங்களை ஒளித்து வைப்பதற்கு சூடுகொலை, மென்ஷவிக்குகளை நாடு கடத்துதல்[33] .”. சிலர் லெனினை பிரெஞ்சு புரட்சி பயங்கரவாதி ரோப்ஸ்பியருக்கு ஒப்பிட்டனர்]]."[34]

லெனினின் இறுதிக் காலம்

போருக்கு பிறகு நாட்டைச் சீர்படுத்தும் முயற்சி தொடங்கியது சோசலிசத்தைத் துணையாகக் கொண்டு இதற்கான திட்டத்தை லெனின் தீட்டினார். நாடு முழுவதும் தொழிற்சாலைகள் தோன்றின. புதிய நகரங்கள் எழுந்தன. உற்பத்தி பல மடங்கு பெருகியது. நிலைமை சீராகத் தொடங்கியது இந்த நேரத்தில் லெனின் கடுமையாக நோய் வாய்ப்பட்டார் படுத்த படுக்கை ஆனார். ஓய்வறியாத உழைப்பே இதற்கு காரணம். அவர் எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது, வேலை செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால் அவரால் அப்படி இருக்க முடியவில்லை. தான் இதுவரை செய்த வேலையை இனி யார் செய்வார் எனக் கவலைப்படத் தொடங்கினார். ஆனால் அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. லெனினுடைய நெருங்கிய தோழரான ஸ்டாலின் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். லெனினுடைய திட்டங்களை முறையாக அமல்படுத்தினார். லெனினைப் போலவே உழைக்கும் மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்தார். விரைவிலேயே உலகின் முதல் வளர்ச்சி அடைந்த நாடாக சோவியத் யூனியனை மாற்றினார். ஸ்டாலினுடைய வேலைகள் லெனினுக்கு மன நிம்மதியைக் கொடுத்தன. ஆனால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமானது. கை, கால்கள் செயலிழந்து விட்டன. ஒவ்வொரு உறுப்பாக வேலை செய்வதை நிறுத்தியது. அவருடைய உடல்நிலை சீரடையும் என்று மக்கள் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் லெனின் மரணம் அடைந்தார். அவருடைய உடல் முதல் முறையாக ஓய்வு கொண்டது. இறுதியாக அவரது உடலைக் காண பல இலட்சம் மக்கள் திரண்டனர். உலக நாடுகளின் தொழிலாளர்களும் ஏராளமாக வந்தனர்.சோவியத் மக்கள் ஒரு முடிவு எடுத்தனர். உலகின் முதன் முதலாக உழைக்கும் மக்களின் அரசை ஏற்படுத்திய லெனினது உடலை அழியவிடக்கூடாது. சோவியத் அறிவியலாளர்கள் ஒன்றுகூடி விவாதித்தனர். வேதிப்பொருட்களின் உதவியுடன் ஒரு கண்ணாடிப் பேழையில் அவரது உடலைப் பாதுகாக்க முடிவு செய்தனர். நீண்ட நாட்களாக பாதுகாக்கப்பட்டு வந்த அவரது உடல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அகற்றப்பட்டது. எனினும் உலக வரலாற்றில் லெனினது பெயர் நிலைத்து நிற்கும்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Red Terror".
  2. 2.0 2.1 Christopher Read (2005) Lenin: A Revolutionary Life: 250
  3. Christopher Andrew and Vasili Mitrokhin (2000). The Mitrokhin Archive: The KGB in Europe and the West. Gardners Books. ISBN 0-14-028487-7, page 34.
  4. Barry Ray. FSU professor's 'Lenin, Stalin, and Hitler' sheds new light on three of the 20th century's bloodiest rulers. Florida State University
  5. Evan Mawdsley (2008). The Russian Civil War. Birlinn, Edinburgh: 264
  6. Serge Petrovich Melgunov, Red Terror in Russia, Hyperion Pr (1975), ISBN 0-88355-187-X. See also: The Record of the Red Terror
  7. Lincoln, W. Bruce. Red Victory: A History of the Russian Civil War. Da Capo Press, 1999. pp. 383-385 ISBN 0-306-80909-5
  8. Leggett, George (1987). The Cheka: Lenin’s Political Police. Oxford University Press. pp. pp. 197–198. ISBN 0198228627.
  9. Figes, Orlando (1998). A People’s Tragedy: The Russian Revolution: 1891–1924. Penguin. pp. p.646. ISBN 0-14-024364-X.
  10. Ronald Clark (1988) Lenin: The Man Behind the Mask: 356
  11. Leggett, George (1987). The Cheka: Lenin’s Political Police. Oxford University Press. pp. p. 464. ISBN 0198228627.
  12. Gellately, Robert (2007). Lenin, Stalin, and Hitler: The Age of Social Catastrophe. Knopf. pp. p. 72. ISBN 1400040051.
  13. Leggett, George (1987). The Cheka: Lenin’s Political Police. Oxford University Press. pp. pp. 466–467. ISBN 0198228627.
  14. Figes, Orlando (1997). A People’s Tragedy: The Russian Revolution 1891–1924. Penguin Books. pp. p. 649. ISBN 0198228627.
  15. Rummel, R.J. (1994) Death by Government. Transaction Publishers. ISBN 1-56000-927-6 pg 8. See also: This Century's Bloodiest Dictators
  16. Black Book of Communism, p. 80
  17. Gellately, Robert (2007). Lenin, Stalin, and Hitler: The Age of Social Catastrophe. Knopf. pp. 58–59. ISBN 1400040051.
  18. Gellately, Robert (2007). Lenin, Stalin, and Hitler: The Age of Social Catastrophe. Knopf. pp. 59. ISBN 1400040051.
  19. Figes, Orlando (1998). A People’s Tragedy: The Russian Revolution: 1891–1924. Penguin. pp. 647. ISBN 0-14-024364-X.
  20. Figes, Orlando (1998). A People’s Tragedy: The Russian Revolution: 1891–1924. Penguin. pp. pp. 524–525. ISBN 0-14-024364-X.
  21. Figes, Orlando (1998). A People’s Tragedy: The Russian Revolution: 1891–1924. Penguin. pp. p. 649. ISBN 0-14-024364-X.
  22. Volkogonov, Dimitri. Lenin – A New Biography. New York: Free Press. pp. 238. ISBN 0-02-933435-7.
  23. Pipes, Richard (1996). The Unknown Lenin: From the Secret Archive. Yale University Press. pp. pp. 152–154. ISBN 0-300-06919-7.
  24. Figes, Orlando (27 October 1996). "Censored by His Own Regime". The New York Times.
  25. Courtois, Stephane (1999). The Black Book of Communism: Crimes, Terror, Repression. Harvard University Press. pp. p. 126. ISBN 0674076087.
  26. Alexander Nikolaevich Yakovlev. A Century of Violence in Soviet Russia. Yale University Press, 2002. ISBN 0-300-08760-8 pg 156
  27. Alexander Nikolaevich Yakovlev. A Century of Violence in Soviet Russia. Yale University Press, 2002. ISBN 0-300-08760-8 pg 15
  28. Gellately, Robert (2007). Lenin, Stalin, and Hitler: The Age of Social Catastrophe. Knopf. pp. p. 57. ISBN 1400040051.
  29. "Twentieth Century Atlas – Death Tolls".
  30. Stalin and His Hangmen: The Tyrant and Those Who Killed for Him by Donald Rayfield, pg 84
  31. Black Book of Communism, p. 82
  32. Robert Conquest (1990) The Great Terror - A Reassessment: 251
  33. Alexander Nikolaevich Yakovlev. A Century of Violence in Soviet Russia. Yale University Press, 2002. ISBN 0-300-08760-8 pg 21
  34. Volkogonov, Dimitri. Lenin – A New Biography. New York: Free Press. pp. 343. ISBN 0-02-933435-7.

No comments:

Post a Comment

THANK YOU