இணையம் மூலம் எளிதாக ரத்ததானம் செய்ய/பெற
JULY 26, 2012
ரத்த தானம் என்பது இப்போது அடிக்கடி அவசியமாகிற ஒன்று. இணையத்தில் நிறைய ரத்த தானம் குறித்த தளங்கள் இருப்பினும். நிறைய நண்பர்கள் பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றில் ரத்தம் தேவை என்று கேட்பார்கள். ஆனால் அதன் மூலம் மட்டும் நமக்கு உதவி கிடைப்பது இல்லை. இணையத்தில் எப்படி எளிதாக இதை செய்வது என்று பார்ப்போம். அத்தோடு வலைப்பதிவர்கள் எப்படி இது குறித்த Gadget- ஐ தங்கள் தளங்களில் வைப்பது என்றும் பார்ப்போம்.
இங்கே உள்ள தளங்கள் எல்லாவற்றிலும் ரத்த தர விரும்புவோர் Register செய்து கொள்ளலாம்.
இந்த தளம் நகர வாரியாக ரத்தம் பெறுவோர் கொடுப்போர் தகவல்களை கொண்டிருக்கும். உங்களுக்கு ரத்தம் தேவைப்பட்டால் குறிப்பிட்ட பிரிவை தெரிவு செய்து உங்கள் நகரத்தில் இருக்கும் நண்பர்களை தேடலாம். பின்னர் அவர்களின் போன் நம்பர் மூலம் அவர்களை தொடர்பு கொள்ள இயலும்.
இதை வலைப்பூவில் Gadget ஆகவும் வைக்க முடியும். Get BloodHelpers Search / Blood Request Widget
கிட்டத்தட்ட இருபதாயிரம் நண்பர்களுடன் இயங்கும் இந்த தளம் மிக எளிதான வழிகளை கொண்டுள்ளது. உங்களுக்கு ரத்தம் தேவை என்றால் இவர்களை தொலைபேசி மூலமோ அல்லது, SMS அனுப்பியோ தொடர்பு கொள்ள முடியும். அதற்கு உங்கள் ஏரியாவின் Pin Code மற்றும் STD Code தெறித்து இருக்க வேண்டும். அவ்வளவே.
முதல் தளத்தை போலவே மிக எளிதாக் தளத்தின் முகப்பிலேயே நீங்கள் ரத்த தானம் தருவோரை தேட முடியும். ரத்தம் தேவை என்றால் போஸ்ட் செய்யவும் இயலும்.
தளத்தின் முகப்பிலேயே யாருக்கு, எங்கே ரத்தம் தேவை. என்ன காரணம் போன்றவற்றை சொல்லி விடுகிறார்கள். இதே போல ரத்தம் தேவைப் படுவோர் போஸ்ட் செய்யலாம். உடனடி தேவை என்றால் ரத்தம் தருபவர்களை தொடர்பு கொள்ளவும் முடியும்.
மற்ற சில தளங்கள்:
- Indian Blood Donors
- Bharat Blood Bank
- Blood Donors India
- Blood Bank India
- Indian Blood Bank-Under the management of IBBS
- Blood Donors Club
- Share Blood
இதை போல இணையத்தில் நிறைய தளங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் கமெண்ட்டில் சொல்லலாம்.
Read more: http://www.karpom.com/2012/07/Need-Blood-Donors-in-india.html#ixzz21kHaNq5G
No comments:
Post a Comment
THANK YOU