என்னுடைய நண்பர்கள், நான் எதைப் பேசினாலும் குதர்க்கமாகவே பேசுகிறார்கள். அவர்களுடைய நன்மைக்குப் பேசினாலும் கூட என்னைப் புரிந்து கொள்ளாமல் அப்படியே பேசுகிறார்கள். இதனால் மனம் புண்படுகிறது. மனதிற்குள் கொதிப்படைகிறேன். இதற்கு என்ன தீர்வு?
(என் செந்தில், ஈரோடு)
இதற்கு ஐந்து வகையான வழிமுறைகளைப் பார்ப்போம்.
முதலாவது, மற்றவர்கள் செய்கிற தவறுக்குப் புண்பட்டு, மனவேதனைப்பட்டு தன்னை நொந்து கொள்ளுதல். இது பரிதாபமானது.
இரண்டாவது, “சவாலுக்கு சவால்” முறையில் பேசுதல். இதற்கு ஒரு நல்ல உதாரணம். லண்டன் பார்லிமெண்டில் பிரதமர் சர்ச்சிலிடம் ஒருபெண் உறுப்பினர் ஆத்திரத்தோடு சொன்னார்.
“நீங்க என் மட்டும் என் கணவராக இருந்தால் நான் விஷம் கொடுத்து உங்களை கொன்றிருப்பேன்” என்றார். அதற்கு உடனே சர்ச்சில், “அம்மணி, நீ எனக்கு மனைவியாக வந்திருந்தால், நானே விஷம் குடித்திருப்பேன்” என்றார்.
இதுபோன்ற சவால்களைப் பட்டிமன்றத்தில் ரசிக்காலாமே தவிர, நடைமுறை வாழ்கையில் நல்லுறவுக்கு உதவாது.
மூன்றாவது “பழிவாங்குதல்” இதுபோன்ற மனிதர்களை தகுந்த சமயம் பார்த்து அழியட்டும் என பழிதீர்த்தல், ஆனால் இதன் விளைவும் “பழிக்குப் பழியாக” முடியும்.
நான்காவது, மற்றவர்கள் நம்மை புண்படுத்துவதாக திட்டமிட்டால் என்ன? நாம் ஏன் பாதிப்படைய வேண்டும்? என்ற எண்ணத்துடன் மனதில் உறுதியாக இருந்து அதை ஒதுக்குவது. இது உத்தமமான வழி.
ஐந்தாவது அவரை மனயியல் ரீதியாக அறிந்து, அவருக்கு தேவையானதை செய்து, உங்களை மறுப்பதற்கு இல்லாமல் நண்பனாக்கிவிடுவது. இது சாணக்கிய வழி. புத்திசாலித்தனமாக திறமையுடன் செய்தால் இதுவே உன்னதமான
No comments:
Post a Comment
THANK YOU