நூற்றி பத்து கோடிக்கும் மேற்பட்டவர்களை சுமந்திருக்கும் இந்தியநாட்டை ஆளத் துடிப்பவர்கள் ஏராளம். எல்லாரும் இந்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, ஏழை எளிய மக்களை வாழவைக்க நாங்கள் நாடாளப் போகிறோம் என்று சொல்லி தங்கள் வாழ்க்கை வளப்படுத்தியவர்கள் தாம்அதிகம்.
அதிகாரப்பூர்வமாக அரசு செலவு செய்வது மட்டும் மொத்தம் எம்.பிகளுக்கு சுமார் 855 கோடிகள். எப்படி?தொகுதிக்கான மாதச் செலவு : 10 ஆயிரம்
அலுவலச் செலவு : 14 ஆயிரம்
பயணச் சலுகை : கி.மீட்டருக்கு எட்டு ரூபாய்
படி : 500 ரூபாய் (நாடளுமன்றம் இயங்கும் போது)
இது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ரயிலில் ஏ.சி. முதல் வகுப்பில் பயணம் இலவசம்.
மேலும் விமானத்தில் வருடத்திற்கு 40 தடவை (பிஸ்னஸ் கிளாஸ்)வர்த்தப் பிரிவில் பயணம் இலவசம். உடன் மனைவி அல்லது உதவியாளரை அழைத்துச் செல்லலாம்.
மக்களவை உறுப்பினர் தங்கு விடுதி இலவசம்
50000 யூனிட் வரை மாதம் மின் கட்டணம் இலவசம்
170000 கால்கள் வரை தொலைபேசி கட்டணம் இல்லை
இப்படி ஏராளமான சலுகைகள் அதிகாரப்பூர்வமாக கிடைக்கிறது.
இதுவல்லாமல் வேற வழிகளில் கிடைக்கும் பணம்தான் அதிகம். ஒரு சாதரண எம்.பி. ஐந்து வருடத்தில் மட்டும் சுமார் 25 கோடிவரை சம்பாதித்துவிடுவார் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்த கோடிகளுக்குத்தான் வெட்கம், மானம் என்று எல்லாவற்றை விற்றுவிற்று தேர்தல் களத்தில் இறங்கிறார்கள். சமுதாயத்திற்கு போராடும் அமைப்புகள் என்ற சொல்பவர்கள் கூட கொள்ûகை குழிதோண்டி புûத்துவிட்டு ஏன் தேர்தல் களத்தில் குதிக்கிறார்கள் தெரியுமா? இந்த கோடிகளுக்குத்தான்.
அதனால்தான் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். ஒரு சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர், என்னை நீங்கள் எம்.பி.ஆக தேர்வு செய்தால் இந்தியர்கள் முறைகேடாக சுவிஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணத்தை எடுத்து இந்தியாவின் கடனை அடைத்து ஏழைகளுக்கு வழங்குவேன் என்று பேசுகிறார். இதை சுயேட்சையாக போட்டியிடும் இவர் மக்களைவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் முடியுமா?தனிநபர் செய்யும் காரியமா? இது? எதைப் பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்றெல்லாம் யோசிக்காமல் ஓட்டுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.
இதைப் போன்று இலங்கையில் தனிஈழத்தை கொண்டு வருவேன்.முல்லை பெரியாறு பிரச்சனையை தீர்த்து வைப்பேன்,விலைவாசியை குறைப்பேன், ஏழைக்கு ஒரு வீடு வழங்குவேன் என்றெல்லாம் அள்ளிவீசும் வேட்பாளர், அவர்கள் வெற்றிப்பெற்றாலும் இதை செய்ய முடியுமா? என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நான்கு,ஐந்து தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் அந்த நான்கு தொகுதிகளிலும் வெற்றிபெற்றாலும் இடஒதுக்கீடை கொண்டு வந்துவிடமுடியுமா?விலைவாசியை குறைத்துவிட முடியுமா?முஸ்லிம்களின் துயரத்தை துடைத்துவிட முடியுமா? ஒரு சட்டத்தை கொண்டு வர மக்களவையில் பாதிக்குமேல் உள்ளவர்களின் ஆதரவு வேண்டாமா? சட்டத்திருத்தம் கொண்டுவர மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டாமா? இதையெல்லாம் சிந்திக்காமல் ஒரு அரசு செய்ய முடியும் காரியத்தை ஒரு நபர்,இரண்டுநபர்கள் நாங்கள் செய்து முடிப்போம் என்று வாக்கு கேட்பது மக்களை முட்டாளாக்கும்
No comments:
Post a Comment
THANK YOU