Saturday, 28 July 2012

தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியில் உள்ள BOSS Linux - ல் நெருப்பு நரி (Mozilla Firefox) இணைய உலாவியினை நிறுவுதல்



தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினியில் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் (BOSS Linux) இயங்குதளங்கள் இரட்டை நிறுவலாக நிறுவப்பட்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

BOSS Linux - ல் இருப்பியல்பாக Iceweasel இணைய உலாவி கொடுப்பட்டுள்ளது. இது Mozilla Firefox இணைய உலாவியிலிருந்து வார்க்கப்பட்டது எனினும், பயன்படுத்துவதற்கு அவ்வளவு நன்றாக இல்லை.

ஆகையால் Mozilla Firefox -னை நிறுவினால் நன்றாக இருக்குமே என்று Synaptic - ல் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.  ஆகையால் தரவிறக்கம் செய்து நிறுவுவதுதான் ஒரே வழி அதை எப்படி தரவிறக்கம் செய்து நிறுவுவது என்று பார்போம்.

முதலில் லினக்ஸிற்கான Mozilla Firefox -னை இந்த முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்யவும். தரவிறக்க சுட்டி இங்கே.

கொடுக்கப்பட்டுள்ள படங்களின் மீது சொடுக்கி பெரிதுப் படுத்தி பார்த்தீர்களேயானால் தெளிவாக புரியும்.

தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்பு சுருக்கப்பட்ட கோப்பாக இருக்கும் அதாவது .tar  Archive ஆக இருக்கும். ஆகையால் சுருக்கப்பட்ட கோப்பினை Extract செய்ய வேண்டும்.

அதற்கு தரவிறக்கம் ஆகியிருக்கும் அந்த சுருக்கப்பட்ட கோப்பின் மீது வைத்து Right Click செய்ய வேண்டும் அதில் Extract Here எனும் தேர்வினை Click செய்யவும். இப்பொழுது கோப்பு firefox எனும் பெயருடன் Extract ஆகியிருக்கும்.

முக்கியமான குறிப்பு : Extract ஆகியிருக்கும்  இந்த firefox அடைவினுள் இருக்கும் firefox அல்லது  firefox-bin  எனும் கோப்பினை இயக்கியும் Mozilla Firefox உலாவியினைப் பயன்படுத்தலாம்.
படம் - 1


 படம் - 2

Extract ஆன firefox Folder னை Copy செய்து Home Folder க்குள் Paste   செய்யவும்.

 படம் - 3

அடுத்து Mozilla Firefox -னை Applications->Internet Menu வில் சேர்க்க வேண்டுமல்லவா அதற்கு Menu Panel - ல் System->Preferences->Main Menu வைக் Click செய்யவும்.

 படம் - 4

Click செய்தவுடன் கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள தெரிவுகளில் Internet என்பதை தேர்வு செய்து New Item Button -னை Click செய்யவும், New Item விண்டோவில் 

Name       = Mozilla Firefox

Commant = Mozilla Firefox Internet Browser என்றும் கொடுக்கவும் இதெல்லாம் Optional தான்.

முக்கியமானது Command என்பதற்கான உள்ளீடு.  Command  என்பதற்கு நேரெதிராக உள்ள Browse பட்டனை Click செய்யவும்.

கிடைக்கும் சாளத்தில் Home -> firefox அடைவுகளை Click செய்து அதனுள் இருக்கும் firefox எனும் கோப்பினை Click செய்து Open Button -னை அழுத்தி, Ok Button  ஐயும் அழுத்தவும். (நீங்கள் Extract ஆன firefox அடைவினை எங்கு வைத்திருக்கிறீர்களோ அங்கு செல்லவும்).


படம் - 5


 படம் - 6

Main Menu சாரளத்தை மூடிவிட்டு Applications->Internet->Mozilla Firefox னை Click செய்து Mozilla Firefox இணைய உலாவியினை பயன்படுத்தி மகிழலாம்.

குறிப்பு:
Mozilla Firefox உலாவியினை திறப்பதற்கு முன்பு Iceweasel உலாவியினை  Close செய்துவிடவும்.  ஒன்றுக்கு மேற்ப்பட்ட சாளரங்கள் திறக்கப்பட்டு இருந்தால் அவை அனைத்தையும் மூடி விடவும்.

இல்லையென்றால் Firefox is already running என்ற செய்தி காண்பிக்கப்படும்.

படம் - 7


படம் - 8 - மொசில்லா நெருப்புநரி உலாவியில் என்னுடைய வலைப்பூ

No comments:

Post a Comment

THANK YOU