குற்றம்:-காந்தியை கொச்சி படுத்தவேண்டும் என்ற நினைப்பில் இந்த பதிப்பு எழுதப்படவில்லை; பதிப்பின் நீளம் கொஞ்சம் அதிகம்தான்..பொறுமையாக இருந்து வாசித்து பாருங்களேன்..!தமிழ் சினிமாவில் வரும் “மாஸ்” திரைப்படங்கள் எப்படி இருக்கும்..?
ஹீரோ இளமையில் அதிபுத்திசாலியாக இருப்பார்.அம்மா சென்டிமென்ட் இருக்கும்.தன் வழியில் சிவனே என்று வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இருக்கும்.சிறுவயதில் காதல்,டுயட் பாடல்களும் இருக்கும்.இவற்றுக்கு இடையில் ஹீரோவை வலிய வந்து வம்புக்கு இழுப்பான் வில்லன்; அதன் பின்பு முட்டியை மடக்கி கைகளை உயர்த்தும் ஹீரோவிடம்,வரிசையாக வந்து அடிவாங்கிச் சென்வார்கள் வில்லனின் ஆட்கள்.கடைசியில் பிரதான வில்லனை அடித்தோ, அறிவுரை சொல்லியோ திருத்துவார் ஹீரோ..அப்ப அப்ப இடையிடையே ‘பஞ்சு’ வசனங்களும் இருக்கும்..
ஹீரோ இளமையில் அதிபுத்திசாலியாக இருப்பார்.அம்மா சென்டிமென்ட் இருக்கும்.தன் வழியில் சிவனே என்று வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இருக்கும்.சிறுவயதில் காதல்,டுயட் பாடல்களும் இருக்கும்.இவற்றுக்கு இடையில் ஹீரோவை வலிய வந்து வம்புக்கு இழுப்பான் வில்லன்; அதன் பின்பு முட்டியை மடக்கி கைகளை உயர்த்தும் ஹீரோவிடம்,வரிசையாக வந்து அடிவாங்கிச் சென்வார்கள் வில்லனின் ஆட்கள்.கடைசியில் பிரதான வில்லனை அடித்தோ, அறிவுரை சொல்லியோ திருத்துவார் ஹீரோ..அப்ப அப்ப இடையிடையே ‘பஞ்சு’ வசனங்களும் இருக்கும்..
ஏழு வயதில் காந்தி…
(எப்படியோ கத்தி இல்லை..அது கூட இல்லையா என்பது சந்தேகம் தான்) 1915ல் இந்தியாவுக்கு வந்த காந்தியிடம் நூற்றைம்பது வருட விடுதலைப் போராட்டத்தின் ஒட்டுமொத்த ராயல்டியும் தரப்பட்டது எப்படி? சரி அதைத்தான் விடுங்க; விடுதலை அவர் பேசி வாங்கித் தந்ததாகவே வைத்துக்கொள்வோம். அதற்காக அவரைத் தேசத்தந்தை என்றோ அல்லது தேச சித்தப்பா என்றோ அழைப்பது சரி(தேசத்தந்தை என்று அழைப்பதில் கூட இப்போது ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கின்றது).”மகாத்மா” எனும் அடைமொழி ஏன் காந்தி பெயரோடு எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கிறது(எப்போது ஒட்டிக்கொள்ளப்படுகின்றது)?
“மாஸ்” திரைப்படத்தின் கதைக்களத்தினை சற்றொப்ப ஒத்ததாகவே காந்தியின் வரலாறு இருப்பதனை நீங்கள் கவனிக்கலாம்.
(காந்தியின் பக்தர்கள் கொஞ்சம் அவ(நி)தானிக்கவும்..) இவர் பெற்றோருக்கு கட்டுப்பட்ட பிள்ளை, நன்றாக படிப்பவர், லண்டனுக்கு படிக்க போகும்போது மதுவையோ, மாதுவையோ தொட மாட்டேன் என சத்தியங்கள் செய்தார்.தென்னாபிரிக்காவில் இவர் வக்கீல் வேலை பார்த்துகொண்டிருக்கும்போது வெள்ளையன் ஒருவனால் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.இறுதியில் மக்களை திரட்டி போராடினார்.இந்தியாவுக்கு கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் சுதந்திரம் வாங்கித்தந்தார்.
ஹீரோ தென்னாபிரிக்காவில் வக்கீல் வேலை செய்யும் போது…
ஜாலியன் வாலாபாக்கில் பயன்படுத்தப்பட்டது துப்பாக்கிகள் என்பதால் மேற்சொன்ன வாக்கியம் பாதி உண்மை என்றே கொள்வோம்.(எப்படியோ கத்தி இல்லை..அது கூட இல்லையா என்பது சந்தேகம் தான்) 1915ல் இந்தியாவுக்கு வந்த காந்தியிடம் நூற்றைம்பது வருட விடுதலைப் போராட்டத்தின் ஒட்டுமொத்த ராயல்டியும் தரப்பட்டது எப்படி? சரி அதைத்தான் விடுங்க; விடுதலை அவர் பேசி வாங்கித் தந்ததாகவே வைத்துக்கொள்வோம். அதற்காக அவரைத் தேசத்தந்தை என்றோ அல்லது தேச சித்தப்பா என்றோ அழைப்பது சரி(தேசத்தந்தை என்று அழைப்பதில் கூட இப்போது ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கின்றது).”மகாத்மா” எனும் அடைமொழி ஏன் காந்தி பெயரோடு எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கிறது(எப்போது ஒட்டிக்கொள்ளப்படுகின்றது)?
மறு பேச்சுக்கே இடம் இல்லாமல், மிகவும் சூழ்ச்சிகரமாக மூன்று தலைமுறை மக்கள் காந்தியை “மகாத்மா” என்று ஏற்றுக்கொள்ள பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.அவரது வாழ்வின் சில நேர்மறையான அம்சங்கள் மட்டும் மக்கள் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டு அவரை மகாத்மாவாகவே வைத்திருக்கும் வேலை இன்றளவும் தொடர்கிறது.காந்தி போற்றப்பட வேண்டியவராகவும், பின்பற்றப்படவேண்டியவராகவும் நூற்றாண்டுகாலமாக பிரசாரம் செய்யப்படுகிறார்..இன்னமும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்..?இந்திய சமகால அரசியல்வாதிகளில் தொடங்கி அவ்வப்போது வந்துபோகும் அண்ணா ஹசாரே, அப்துல் கலாம் போன்ற காமெடி டிராக் நபர்களையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள காந்தியைத் தெரிந்துகொள்வது அவசியம். அவர் பயன்படுத்திய இல்லை இல்லை அவருக்காகப் பயன்படுத்தப்பட்ட நுட்பங்கள் இன்றுவரை பயன்பாட்டில் இருக்கின்றன.
இந்தியாவில் ‘மாகாத்மா’ காந்தி என்னும் அத்தியாயம் 1915ல் தொடங்குகிறது. ‘சத்யாகிரகம்’ எனும் தொழில்நுட்பத்துக்கான தந்திரத்துடந்தான் அவர் இந்தியாவுக்கு வந்தார். சரியாக ஆறு ஆண்டுகள் கழித்து 1921ல் அவர் அகில இந்திய காங்கிரசுக்கு தலைவராகிறார். பெரிய அளவில் ஊடக வலுவில்லாத அந்தக் காலத்தில், வெறும் ஆறாண்டுக்காலத்தில், காந்தியால் முப்பதுகோடி மக்கள்தொகை கொண்ட ஒரு தேசத்தின் தலைவராக முடிந்ததன் விளைவுதான், திடீரென ஒருநாள் இரவில் அண்ணா ஹசாரேவினால் ஊழல் ஒழிப்புப் போராளியாக உருமாறமுடிகிறது.
‘சத்யாகிரகம்’ என்பது வெள்ளையன் உதைவாங்காமல் நாட்டை ஆள உருவாக்கப்பட்ட போராட்டமுறை மட்டுமல்ல. பிரிட்டிஷ் அரசுக்கெதிராக வீரத்துடன் போராட முன்வந்தவர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி, அவர்களைச் சொந்த மக்களிடமிருந்து அன்னியப்படுத்தும் நோக்கமும் அதற்கு இருந்தது. அதுமட்டும் இல்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக நியத்தில் போராட்டத்தில் இறங்குவோரின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலும் இது தொடக்கமானது.காந்தியின் ஜால்ராக்களில் ஒன்றான அன்றைய ஆனந்தவிகடன் 1929 மே இதழில், பகத்சிங் பாராளுமன்றக் கட்டடத்தின் மீது குண்டு வீசியதைக் கண்டிக்கும் தலையங்கத்தைப் பாருங்கள்:
“இரண்டு இளைஞர்கள் திடீரென எழுந்து இரண்டு அசல் வெடிகுண்டுகளை எறிந்துவிட்டு, கைத்துப்பாக்கிகளால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்களாம். இந்த இளைஞர்கள் இருவருக்கும் முழுமூடச் சிகாமணிகள்’ என்றபட்டத்தை விகடன் அளிக்க விரும்புகின்றான். முதலாவதாக, மகாத்மாவின் சத்தியாக்கிரகப் பீரங்கியினால் தகர்க்க முடியாத அதிகார வர்க்கத்தை வெங்காய வெடியினாலும்,ஓட்டைத் துப்பாக்கியாலும் பயமுறுத்த அவர்கள் எண்ணியது மூடத்தனம்…”
காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் தெரிவு செய்யப்பட்டபோது, ‘பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என்னுடைய தோல்வி’ என பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தார் காந்தி. காந்தி ஆதரவாளர்கள் வரிசையாக ராஜினாமா செய்ய, சுபாஷ் வெறுத்துப் போய் பதவியை உதறினார்(மானஸ்தன் ஐயா நம்ம ஆளு). பகத்சிங் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனை குறித்து காந்தியின் ஆலோசனையைக் கேட்டு இர்வின் பிரபுவின் செயலாளர் கடிதம் எழுதுகிறார். அதற்கு காந்தியின் விசுவாசி பட்டாபி சீதாராமையா எழுதிய பதில் இதுதான்:
“Ganthi himself definitely stated to the Viceroy that, if the boys should be hanged, they had better be hanged before the Congress, than after.” (அதாவது அப்போது நடைபெற இருந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்னரேயே இந்த இளைஞர்களைத் தூக்கிலிடலாம் என்று காந்தியார் ஒப்புதல் வழங்கியுள்ளார்..
The History of Indian National Congress
இவ்விரு சம்பவங்களும் சொல்லும் கருத்து இதுதான். எந்த ஜனநாயக பண்புகளும் இல்லாத, தனக்கு நிகரான வேறு தலைவர்கள் உருவாவதையோ அல்லது தனக்கு இணையாக வேறொரு நபர் புகழ் பெறுவதையோகூட விரும்பாத தலைவராக இருந்திருக்கிறார் காந்தி. (அப்போது காந்தி அளவுக்கு புகழ் பெற்றிருந்தார் பகத்சிங் எனக் குறிப்பிடுகிறார் காங்கிரசின் அதிகாரபூர்வ வரலாற்றாசிரியர் பட்டாபி சீதாராமையா- The History of Indian National Congress நூலின் முதலாவது பாகத்தில்..)
காந்தியின் சமத்துவ சிந்தனையும் பாசாங்குகள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. இறுதி நாள்வரை அவர் இந்து மதத்தின் பிற்போக்குத்தனங்களைப் பற்றிக் கொண்டவராகவே இருந்தார். அம்பேத்கரை தலித் மக்களின் தலைவராக அங்கீகரிக்க முடியாது என வெளிப்படையாகவே அறிவித்தவர் காந்தி. தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தரும் சட்டம் கொண்டுவருவதில் லண்டன் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரை வெல்ல முடியாத காந்தி, தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தரக்கூடாது என்பதற்காக, எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். தலித் மக்களின் விடுதலைக்கான அவரது முயற்சி, காந்தியைக் கொல்ல அவர் காட்டும் பிடிவாதமாக காங்கிரஸ்காரர்களால் திரிக்கப்பட்டது. காந்தி எனும் ஒற்றை நபருக்காக ஒட்டுமொத்த தலித் மக்களின் உரிமைகளையும் விட்டுத்தர வேண்டிய நிலைக்கு ஆளானார் அம்பேத்கர்.(தனது சொந்த கருத்துக்களுக்காக, விருப்பத்துக்காக மக்களின் நலன்களை அடகுவைக்கும் தலைவர்களை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடிகின்றது..)
தலித் மக்கள் ஏனைய உயர்சாதி மக்களை சார்ந்திருக்கும்படியாகவும் ஏழைகள் பணக்காரர்களை சார்ந்திருக்கும்படியாகவும் உள்ள சமூகத்தைத்தான் அவர் விரும்பினார். அவர் வலியுறுத்தியது சாதிகளுக்குள் இணக்கம் இருக்கவேண்டும் என்பதுதான், சாதி ஒழிப்பல்ல…(சாதி ஒழியவேண்டும் என காந்தி சொல்லவில்லை- ராஜாஜி..)
அது வேலைக்காரனுக்கும் முதலாளிக்குமான இணக்கம். அது வேலைக்காரன் அடிமையாக இருக்கும் வரைதான் சாத்தியம். பணம் பணக்காரர்களிடம்தான் இருக்கவேண்டும், ஏழைகளுக்கு அவர்கள் புரவலர்களாக இருப்பார்கள் எனும் காந்தியின் சொற்றொடர் ஒன்றே போதும், அவர்களது செல்வந்தர்கள் மீதான பாசத்தைக் காட்ட தனிப்பட்ட நபராகவும் அவரது வாழ்வு கடுமையாக விமர்சிக்கத்தக்கதே. மெடலைன் சிலேட் மற்றும் சரளாதேவி சவுதாராணி (ரபீந்திரநாத் தாகூரின் உறவுக்கார பெண்) என்ற இரண்டு பெண்களுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது. சரளாதேவியை அவர் மணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தார். அந்த உறவு உடல் அளவிலானதல்ல, மன அளவிலானது என்றார் காந்தி. இந்த முடிவு ராஜாஜி, காந்தியின் மகன் தேவதாஸ் ஆகியோரால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
சரளாதேவியுடனான நெருக்கம் காந்தி அவரது பஞ்சாப் வீட்டில் தங்கியிருந்தபோது உருவானது. அப்போது சரளாதேவியின் கணவர் ரவுலட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம்புங்கள், தன் தந்தையின் சாவுக்குப்பிறகு பிரம்மச்சர்யத்தை போதித்த காந்தி மையல்கொண்டது ஒரு மணமான பெண் மீது.
ஒருநாள் தூக்கத்தில் அவருக்கு விந்து வெளியேறியதால் அவரது பிரம்மச்சர்யத்தைப் பரிசோதிக்க எடுத்த முடிவு அநாகரிகமானது. பதினெட்டு வயதான அவரது பேத்தி மனுவுடன் ஓரிரவு ஆடையில்லாமல் படுக்கையில் இருப்பதன் வாயிலாக தனது பிரம்மச்சர்யத்தை அவர் பரிசோதித்தார்.(ஆள் கில்லாடிதான்) காந்தி தன்னுடன் ஆசிரமத்தில் இருந்த பெண்களை உடலுறவு இல்லாமல் வாழும்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தினார். ஆசிரமப் பெண்கள் சிலருடன் அவர் நெருக்கமாக இருந்தது அவரது தொண்டர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
மோகன்தாஸ் காந்திக்கு ஒருவித நரம்பு நோய் இருந்தது. மிகவும் அழுத்தம் அதிகமான கட்டங்களில் காந்தியின் உடல் தாங்கமுடியாமல் நடுங்க ஆரம்பிக்கும். அப்போது அவர் யாரையாவது அணைத்தவாறு படுத்திருப்பார். இவ்வாறு அவர் அணைத்துக்கொண்டு படுத்தது ஆஸ்ரமத்தில் இருந்த பெண்களில் ஒரு சிலரை. ஆனால் இது வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும். கஸ்தூர்பாவும் அதே ஆஸ்ரமத்தில்தான் அப்போது இருந்தார். (“I am taking service from the girls” என்று காந்தி பலமுறை இதைப்பற்றிக் கடிதங்களில் குறிப்பிடுகிறார்.) - “மோகன்தாஸ்” புத்தகத்தில் ராஜ்மோகன் காந்தி.
மேற்கூறிய செய்திகள் வாயிலாக நான் காந்தியைப் பெண் பித்தர் எனச் சொல்ல வருவதாக எண்ண வேண்டாம். அவரது திருமணத்து வெளியேயான உறவுகள் என்பது அவரது தனிப்பட்ட விடயம் என்பதில் எனக்கு விமர்சனம் இல்லை. ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக, தன்னைப் பின்பற்றிய, தன்னுடனிருந்த பெண்களை, ஒரு கருவிபோல மட்டும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நிச்சயம் விமர்சனம் செய்யப்படவேண்டியதே. பிரம்மச்சர்யத்தை சோதித்துத் தன்னை நிரூபித்தார், சரி, அதில் பயன்படுத்தப்பட்ட மனுவின் கதி?
இத்தகைய முரண்பாடான அரசியல் மற்றும் சொந்த வாழ்வைக் கொண்டிருந்த காந்தி ஏன் இன்றளவும் அப்பழுக்கற்றவராகக் காட்டப்படுகிறார்? இந்தக் கேள்வியை எழுப்பவே மேலேயுள்ள தகவல்களைத் தர வேண்டிய அவசியம் உருவாகிறது. அவரது கதை ஏதோ ராமாயணம் அல்லது திருத்தொண்டர் புராணம் போலவோ, வெறும் பஜனையாகவோ பாடப்பட்டால் நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை. மாறாக, அவர் தேசத்தின் முகமாகக் காட்டப்படுவது வேறு பல காரணங்களுக்காக.
விடுதலைக்கு முன்பாக சத்தியாகிரகம் எப்படி ஆங்கிலேயனுக்குத் தேவைப்பட்டதோ இப்போதும் அது நவீன அதிகார வர்க்கத்துக்கும் தேவைப்படுகிறது. காந்தியை ஆதர்ச தலைவனாகத் தொடர்ந்து முன்னிறுத்துவதன் மூலம்தான், அனேக மக்கள்திரள் போராட்டங்களைத் தீவிரவாதமாகச் சித்திரிக்க முடியும். சமீபத்தில் கூடங்குளம் போராட்டம் பற்றி சுப்பிரமணியம் சாமி சொன்ன ஒரு விமர்சனம்- “அது நக்சலைட்டுக்கள் நடத்தும் போராட்டம்.” (டைம்ஸ் நவ் டிவியில்.) ஆக ஒரு போராட்டம் நடத்தப்படும் காரணிதான் அதனை சாத்வீகப் போராட்டமா அல்லது தீவிரவாதமா என அதிகாரவர்கத்தை முடிவெடுக்க வைக்கிறது. காந்தி எனும் பிம்பத்தை உயிருடன் வைத்திருப்பது இந்த கபடத்தனத்தைச் சுலபமாக்குகிறது.
ராகுல் காந்தியின் ஒரு கோடி ரூபாய் ஏழைவீட்டுச் சப்பாத்திக்கான யோசனை எம்.கே.காந்தியிடமிருந்து பெறப்பட்டதுதான். அவர்தான் பிர்லா கட்டிக்கொடுத்த மாளிகைகளில் தங்கிக்கொண்டு இந்தியாவின் கடைக்கோடி ஏழைகளைப்போல உடுத்திக்கொண்டிருந்தவர். காரணமேதும் தெரியாமல் காந்தி மகாத்மா என அடைமொழியிட்டு அழைக்கப்பட்டதன் விளைவுதான் தளபதி, அஞ்சாநெஞ்சன், புரட்சித்தலைவி என அடைமொழிகள் பொருத்தமில்லாத நபர்களை அலங்கரிக்கின்றன.
மதத்தை அரசியலுடன் கலந்தது மற்றும் பஜனையைப் போராட்டமாக்கியது என அவர் இந்திய அரசியலுக்கு இரண்டு மோசமான முன்னுதாரணங்களைத் தந்திருக்கிறார். இந்து வைணவரான காந்தி தன் ராம பக்தியைத் தன்னுடன் மட்டும் வைத்துக்கொள்ளாமல் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்தார். பாரதீய ஜனதா பிற்பாடு இந்த அடிப்படைவாதத்தில் ஏராளமான ரத்தத்தைக் கலந்து வளர்ச்சியடைந்தது.
காந்தி சாத்வீகத்தை மக்கள் போராட்டத்தில் மட்டும்தான் வலியுறுத்தினார். இயல்பில் அவர் ஒரு சர்வாதிகாரியாகவே இருந்திருக்கிறார். பம்பாய் கப்பற்படையினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒடுக்க தனது தொண்டர்களை அனுப்பியது காங்கிரஸ் கட்சி. அதன் தோல்விக்குப் பிறகு காந்தி சொன்னது:
அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டைக் காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காண்பதற்கு நான் 125 ஆண்டுகள் வாழவிரும்பவில்லை. மாறாகத் தீயிலிட்டு என்னை அழித்துக் கொள்வேன்”
(: ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946.)
(: ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946.)
அவர் நடத்த விரும்பிய அரசு வெள்ளையன் நடத்திய ஆட்சியை ஒத்ததாகவே இருந்திருக்க முடியும். இரண்டாம் உலகப் போரில் இந்தியர்கள் பங்கேற்பதை அவர் தயக்கமில்லாமல் விரும்பினார், வெள்ளையனைப் போலவே. பெஷாவரில் நடைபெற்ற எழுச்சிமிக்க மக்கள் போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு தன் படைகளை அனுப்பியது. சொந்த மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வீரர்கள் மறுத்தார்கள். அதனைக் கண்டித்து காந்தி சொன்ன வாசகங்கள்:
“இராணுவ சிப்பாயாக வேலைக்கு சேர்ந்த பிறகு இராணுவ அதிகாரி யாரை சுட்டுக் கொல்லச் சொன்னாலும் சுடவேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அவன் கீழ்ப்படிய மறுத்த பெருங்குற்றத்தைச் செய்தவன் ஆவான். அப்படி சுட்டுக் கொல்லச் சொன்ன பிறகும் அதைச் செய்ய மறுக்குமாறு நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும்போது இதே அதிகாரிகளையும் சிப்பாய்களையும் பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். இப்பொழுது நான் அவர்களை அவ்வாறு சுட மறுக்குமாறு கற்பித்தால் பின்னர் நான் அவர்களை சுடச் சொல்லும்போதும் இவர்கள் இதே போல கீழ்ப்படிய மறுக்க நேரிடும் என அஞ்சுகிறேன்.’’
பிடிவாதம், எதேச்சதிகாரம், மத அடிப்படைவாதம், ஜனநாயக விரோதம் என நம் சமகால அரசியல்வாதிகளில் எல்லா அடாவடிகளையும் அப்போதே கொண்டிருந்தவராக இருந்திருக்கிறார் காந்தி. எத்தனை உதைத்தாலும் வாங்கிக்கொள் என அவர் மக்களுக்கு மட்டும் அறிவுரை சொன்னதால்தான் இன்றுவரை அவரை அதிகாரவர்க்கம் கொண்டாடுகிறது.
எனக்கு வண்ணதாசனைப் பிடிக்கும் என்பது மாதிரியான நிலைப்பாட்டை நாம் காந்தியின் மீது வைக்க முடியாது. காந்தியை ஏற்றுக்கொள்ளும்போதே நீங்கள் பகத்சிங்கை நிராகரிக்கிறீர்கள், கட்டபொம்மனின் தியாகத்தைக் குறைத்து மதிப்பிடும் மனோநிலைக்கு ஆளாகிறீர்கள். பாஸ்கோவுக்கு ஆதரவாக, பழங்குடிகளுக்கு எதிராகத் தரகு வேலை பார்க்கும் மன்மோகன் கும்பலும் தான் காந்திய வழியிலான அரசை நடத்துவதாக கருதிக்கொள்ளலாம், அதற்காக அவர் எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்ள அவசியமிருக்காது.
நிறைவாக, காந்தியைக் கொண்டாடாதீர்கள் எனக் கேட்பதற்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை. கொண்டாடும் முன்பு அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்ளவே எழுதப்படுகிறது. காந்தியின் நோக்கங்கள் உயர்வானவை, நடைமுறைப்படுத்துவதில் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என நீங்கள் வாதிட்டால் அதற்கு காந்தியின் வார்த்தைகளிலேயே பதில் இருக்கிறது.(காந்தி என்பது அவத்தார் படத்தினை விட சித்தரிக்கப்பட்ட செலவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட பெயர் என்பது மட்டும் வெளிச்சம்..)
“முடிவைவிட முறையே முக்கியம்!” (சௌரி சௌரா சம்பவத்துக்காக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது காந்தி உதிர்த்த வாசகம்…)
வில்லவன்..டா . . .
காந்தி நியமாகவே மகாத்மா என்றால் ஏன் அந்த புத்தகத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்க வேண்டும்…?
அமெரிக்க எழுத்தாளர், ஜோசப் லெலிவெல்ட் எழுதிய, “கிரேட் சோல், மகாத்மா காந்தி அண்ட் ஹிஸ் ஸ்ட்ரக்ல் வித் இண்டியா” (Great Soul- Mahatma Gandhi and His Struggle with India) என்ற புதிய வாழ்க்கை சரிதப் புத்தகம், இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் காந்தியை ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் இனவெறியர் என்று காட்டும் வகையில் சில கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதாக,சில பத்திரிகைகளில் வெளிவந்த மதிப்புரைகள் இந்த சர்ச்சையைத் தூண்டியிருக்கின்றன.இந்தியாவில், காந்தி பிறந்த மாநிலமான, குஜராத் அரசு, இந்த புத்தகத்தைத் தடை செய்திருக்கிறது. இந்தியாவின் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியும்,இந்தப் புத்தகம் தேசிய அளவில் தடை செய்யப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஆனால், மகாத்மா காந்தி பற்றிய ஜோசப் லெலிவெல்ட்டின் புத்தகம் இன்னும் இந்தியாவில் பிரசுரமாகவில்லை,விற்பனைக்கு வரவில்லை.
ஆனால் பத்திரிகைகள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பிரசுரங்களில் வெளியான இந்த புத்தகம் குறித்த மதிப்புரைகளை மறு பிரசுரம் செய்துள்ளன.காந்திக்கும், ஜெர்மானிய கட்டிடக்கலைஞரும், உடற்பயிற்சி செய்வதில் விருப்பம் உள்ளவருமான ஒருவருக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவைஇந்த புத்தகத்தின் சில பகுதிகள் கோடிட்டுக் காட்டியிருந்தன.
இந்த ஜெர்மானியர் ஓரின உறவை கடைப்பிடித்தவராக இருந்திருக்கலாம் அல்லது இல்லாமலும் இருந்திருக்கலாம்.
காந்தி ஆப்ரிக்கர்களைப் பற்றி இனத்துவேஷமான சில கருத்துக்களைக் கூறினார் என்றும் இந்த புத்தகம் கூறுவதாக இந்த பத்திரிகை மதிப்புரைகள் கூறுகின்றன.இவை எல்லாம், காந்தி பிறந்த மாநிலத்துக்காரர்களுக்கு தாங்கமுடியாதவைகளாகிவிட்டன.
இந்த புதிய வாழ்க்கைச் சரிதம் விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதிக்க புதன்கிழமை குஜராத் மாநில சட்டப்பேரவை ஒரு மனதாக வாக்களித்தது.
கம்ஒன் காந்தி…
மத்திய சட்டத்துறை அமைச்சர், இந்தப் புத்தகத்தை, அடிப்படையற்ற, உணர்ச்சிகளைக் கிளப்பும் நிந்தனை, ஒரு தேசத்தலைவரை இழிவுபடுத்தும் புத்தகம் என்று வர்ணித்து, மத்திய அரசும் இதே போன்ற தடையை விதிக்கவேண்டும் என்று கூறினார்.ஆனால் , நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், புலிட்சர் விருது பெற்றவருமான, ஜோசப் லெலிவெல்ட், காந்தியை, இருபால் உறவுக்காரர் என்றோ அல்லது இனவெறியர் என்றோ தான் எந்த இடத்திலும் வர்ணிக்கவில்லை என்றார்.
மேலு, தன்னை ஒரு ஜனநாயக நாடாகக் கூறிக்கொள்ளும் ஒரு நாடு, ஒரு புத்தகத்தை அந்த நாட்டில் எவரும் படிப்பதற்கு முன்னமேயே தடை செய்வதுஅவமானகரமானது என்றும் அவர் கூறினார்.
“தடை ஜனநாயக விரோதமானது”
காந்தி குறித்த இந்தப் புத்தகத்தின் மீது குஜராத் அரசு விதித்துள்ள தடையும், இந்திய அமைச்சரின் கருத்துக்களும், தேசப்பிதா என்று கருதப்படும் காந்தி மற்றும் அவரைப்போன்ற தலைவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாகப் பார்க்கப்படவேண்டும் என்ற மனோபாவத்தைக் காட்டுகிறதா என்று , அமைதி மற்றும் அஹிம்சைக்கான சர்வதேச காந்தி கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்தவரும், மதுரைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான, டாக்டர் எஸ்.ஜெயப்பிரகாசம் அவர்களைக் கேட்டபோது, தேசத்தலைவர்களை இதிகாச புருஷர்களாகப் பார்க்கும் மனோபாவம், சர்வாதிகார மனப்பாங்கையே காட்டுகிறது. இது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்றார்.
இந்தியாவில் ஜனநாயகம் என்பது இன்னும் பல நிலைகளில் வளரவேண்டியிருப்பதாகக் குறிப்பிட்ட ஜெயப்பிரகாசம், குடும்பம், குழு, தனிநபர் என்ற பல நிலைகளில் நாம் மக்களாட்சிப் பண்போடுதான் நடந்துகொள்கிறோமா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம் என்றார்.
இந்த மாதிரி ஒரு புத்தகத்தைத் தடை செய்வது என்பது ஜனநாயகப் பண்புக்கு விரோதமாகவே கருதப்படும் என்றார் அவர்.
காந்தியின் பெயரை சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்துவதாக இதைக் கருதலாம் என்று கூறிய அவர், ஒரு புத்தகத்தை மக்கள் படித்து விட்டு அதோடு உடன்படலாம் அல்லது நிராகரிக்கலாம், ஆனால் அதைத் தடை செய்வது ஒரு தீர்வாகிவிடாது என்றார்.
மகாத்மா காந்தியின் வாழ்க்கையை முழுமையாகப் படித்தால்தான் அவர் ஒரு சாதாரண ஆத்மாதான், அவர் பல விஷயங்களில் வெற்றி பெற்றார், சிலவற்றில் தோல்வி கண்டார் என்பதை உணர்ந்து கொண்டு, வெற்றி தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தால்தான், அவரது வாழ்க்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்றார் ஜெயப்பிரகாசம்.ஒரு புத்தகம் வரும் முன்னரே அதற்கு தடை விதிப்பது மிகப்பிற்போக்குத்தனமானது.வெறும் பத்திரிக்கை விமர்சனம் பார்த்து
யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல..புத்தகம் புழுகு மூட்டையாக, காந்தி மீது அவதூறு பரப்புவதாகத் தெரிந்தால் பின் தடை போடுவதுடன்,அதைஎழுதியவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாமே…
(இதை விட்டு விட்டு ஏன் புத்தகத்தையே தடை செய்ய வேண்டும்..ஒன்றுமே இல்லாத விடயத்துக்கு ஏன் இவளவு கொந்தளிக்கவேண்டும்..உள்ளுக்குள் ஏதோ இருக்கின்றது என்று மட்டும் தெளிவாக விளங்குகின்றது..)
கவுண்டமணி & செந்தில் அன்கோ..:- அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பா…
காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார்?
மத்திய அரசை திணற வைத்த சிறுமி;
சோக்காய் கேட்டம்மா..கேள்வி…
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசாங்கம்.அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்ல.யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள்..! கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போதும் மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது? என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா..(சோக்காய் கேட்டம்மா..கேள்வி…)பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை.(மத்திய அரசாங்கத்துக்கே தெரியாதாம் பாவம் ஆசியர்…விடும்மா விடு..பாவம்) பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார் . அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. .இணையத்தில் கூட பார்த்து உள்ளார்(கூகுல் லயே இல்லையாம்..) யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார் .
இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.
ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
இதிலிருந்து ஒன்று தெரிகிறது. எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகாமல் மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற தோற்றத்தை இந்திய அரசு செய்ததோ , அதே போல் காந்திக்கு அதிகாரப் பூர்வமாக தேசத்தின் தந்தை என்ற பட்டதை யாரும் வழங்க வில்லை என்பதும் தெளிவாகிறது.காங்கிரஸ் அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற முத்திரையை குத்தி அதை மக்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளனர் என்பதும் புலனாகின்றது. (சிறுத்தை சிக்கி…)
இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.
ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
இதிலிருந்து ஒன்று தெரிகிறது. எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகாமல் மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற தோற்றத்தை இந்திய அரசு செய்ததோ , அதே போல் காந்திக்கு அதிகாரப் பூர்வமாக தேசத்தின் தந்தை என்ற பட்டதை யாரும் வழங்க வில்லை என்பதும் தெளிவாகிறது.காங்கிரஸ் அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற முத்திரையை குத்தி அதை மக்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளனர் என்பதும் புலனாகின்றது. (சிறுத்தை சிக்கி…)
இன்னமும் தோண்டி பார்த்தால் இன்னமும் நாற்றம் வரும் என்பது மட்டும் உண்மை..(எல்லாம் ஒரு பப்ளிசிட்டிதான்..என்னும் வார்த்தை காந்தி காலத்திலும் ஐக்கியமாக இருந்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை…)
காந்தியின் சொன்னதாக சொல்லப்(படும்)பட்ட கருத்துக்கள் நல்லவை..உருவாக்கப்பட்ட கருத்துகளுக்காக காந்திக்கு தேசத்தந்தை என்னும் பட்டம் கொடுப்பது நியாயமானதா?
எந்த ஜனநாயக பண்புகளும் இல்லாத, தனக்கு நிகரான வேறு தலைவர்கள் உருவாவதையோ அல்லது தனக்கு இணையாக வேறொரு நபர் புகழ் பெருவதையோகூட விரும்பாத தலைவர் காந்தி..
No comments:
Post a Comment
THANK YOU