அனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த
ஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து சென்ட் பட்டனை அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும்.
மெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவுகிறது.
சென்ட்(Send) பட்டனை அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் அதற்கான அன்டூ (Undo) பட்டனை அழுத்த வேண்டும். ஏனென்றால் ஜிமெயில் 5 விநாடிகள் கழித்தே மெயிலை அனுப்பும் வேலையைத் தொடங்குகிறது. ரத்து செய்யத் தரப்படும்
இந்த நேரம் மிகவும் குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததனால், ஜிமெயில் இந்த கால அவகாசத்தினை அதிகமாக்கியுள்ளது. 30 விநாடிகள் வரை மெயில் அனுப்புவதை ரத்து செய்திடும் வசதியைத் தந்துள்ளது.
30 விநாடிகள் ஏன்? என்று நீங்கள் எண்ணினால், இதனைக் குறைத்துக் கொள்ளலாம். 5,10,20, 30 நொடிகள் என கால அவகாசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனை அமைத்திட Gmail > Settings > General > Undo Sendஎன்று சென்று மாற்றவும்.
விண்டோஸ் கீ + ஷார்ட் கட்
கீ போர்டில் இடது புறமாகக் கீழ் வரிசையில் கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் பட்டன்களுக்கிடையில் உள்ளது விண்டோஸ் லோகோ கீ. இதனை வேறு சில கீகளுடன் அழுத்துகையில் நம்மால் சில செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். விண்டோஸ் கீ மற்ற கீகளுடன் இணைக்கும்போது ஏற்படும் செயல்பாடுகள் :Win key : தனியே அழுத்துகையில் ஸ்டார்ட் மெனு தோன்றும், மறையும்.Win key + M : அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.Win key + Shift + M : மினிமைஸ் செய்த விண்டோக்கள் அனைத்தும் திறக்கப்படும்.Win key + D : திறந்திருக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் மினிமைஸ் செய்திடும். அடுத்து அழுத்துகையில் மினிமைஸ் செய்யப்பட்ட புரோகிராம்களை காட்டும்.Win key + Tab: டாஸ்க் பாரில் உள்ளவற்றை சுழற்றிக் காட்டும்.Win key + E: மை கம்ப்யூட்டர் திறக்கப்படும்Win key + F: பைல் அல்லது போல்டர் தேடப்படும்.Win key +F1: விண்டோஸ் ஹெல்ப் விண்டோ கிடைக்கும்.Win key+L : விண்டோஸ் கீ போர்டு லாக் ஆகும்.Win key+ BREAK: சிஸ்டம் புராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.Win key + R : Start menu வில் கிடைக்கும் Run box
Win key + F : Start menu வில் கிடைக்கும் Find window
Win key + E : Explorer தொகுப்பு திறக்கப்படும்.Win key + Pause/Break : System Properties திறக்கப்படும்.
Win key + F : Start menu வில் கிடைக்கும் Find window
Win key + E : Explorer தொகுப்பு திறக்கப்படும்.Win key + Pause/Break : System Properties திறக்கப்படும்.
No comments:
Post a Comment
THANK YOU