GURUNAMASIVAYA108
Sunday, 22 July 2012
தெரிந்து கொள்வோம்
தெரிந்து கொள்வோம்
உலகிலேயே அதிக நீளமான தேசீய கீதம் கிரேக்க நாட்டு கீதம்தான்.
இது 128 வரிகள் கொண்டது.
உலகிலேயே மிகச்சிறிய தேசீய கீதம் ஜப்பானுடையது.
மொத்தம் நான்கே வரிகள்.ஹைக்கூகவிதை வகையைச் சேர்ந்தது.
நத்தை தன எடையைப்போல அறுபது மடங்கு எடை கொண்ட பொருளை
இழுத்துச்செல்லும் சக்தி உடையது.
இந்தியாவிற்கு சொந்தமாக 1197 தீவுகள் உள்ளன.இவற்றில் 723 தீவுகள்
அரபிக்கடலில் உள்ளன
.
பாலைவனம் இல்லாத ஒரே அரபு நாடு லெபனான்.
சிகரெட்டிலுள்ள நிகோடின் நச்சு ரத்தக் குழாயை சுருங்கச் செய்து தோலின்
திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் உணவுச்சத்து கிடைக்காமல் செய்கிறது.
எனவே சிகரெட் பிடிப்பவர்களின் தோல் மற்றவர்களைவிட பத்து ஆண்டுகளுக்கு
முன்னதாகவே சுருக்கம் விழ ஆரம்பிக்கிறது
.
கேமரா என்ற இத்தாலியச் சொல்லுக்கு இருட்டறை என்று பொருள்.
கேரம் என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு அடித்துத் தள்ளச் செய்தல் என்று பொருள்.
கிராம்பு என்பது காயோ கனியோ அல்ல;அது ஒரு மரத்தின் மொட்டு.
நமது உடலில் வேர்க்காத பகுதி நம் உதடு
இரத்தம் பாயாத பகுதி கண்ணின் கரு விழி
.
பனிக்கட்டி என்பது உறைந்த தண்ணீரின் படிகங்கள்.இந்தப் படிகங்கள்
பல முகங்களைக் கொண்டவை.இந்த முகங்கள் வெளியே உள்ள வெளிச்சத்தைப்
பிரதி பலிப்பதனால் தான் பனிக்கட்டி வெள்ளை நிறமாகத் தெரிகிறது.
நமது மூளையில் தூக்கம் வருவதற்கான அறிகுறிகள்தொடங்கியவுடனே
இருதயமானது மூச்சு விடும் வேகத்தை சற்றுக் குறைத்துக் கொள்கிறது.
இதை ஈடு செய்து மூளைக்கு அதிக இரத்தத்தை ஏற்றுவதற்கு
பிராணவாயு வேகமாகஉள்ளே இழுக்கப்பட்டு,கரியமில வாயு வெளியேறி,
இருதயம் சுருங்கி விரிந்து இரத்தம் சுத்திகரிக்கப்பட வேண்டும்.
இதற்கு வசதியாக நமது வாய் அகலத்திறந்து
காற்றினை உள்ளே இழுத்துக் கொள்கிறது.
அது தான் கொட்டாவி.
No comments:
Post a Comment
THANK YOU
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
THANK YOU