Sunday, 1 September 2013

உங்கள் நண்பர்களை SMS மூலம் ஏமாற்ற வேண்டுமா?



இது கல்வி நோக்கத்திற்காக மாத்திரம் இங்கு சொல்லித்தருகிறேன்.இதை வைத்து பல குற்றச்செயல்களை செய்ய முடிந்தாலும்.அதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் நம்பரை வைத்து , உங்களுக்கே தெரியாமல் பலருக்கு SMS அனுப்ப முடியும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? உங்களை விடுங்கள் ஏன் ஜனாதிபதி என்ற பெயரில் கூட SMS அனுப்பலாம்.
உங்கள் Mobile இல் இருந்து உங்கள் நண்பருடைய Mobile இற்கு SMS அனுப்பினால்,.உங்கள் நண்பர் இலகுவாக அதை புரிந்து கொள்வார், அதாவது அந்த SMS உங்களிடம் இருந்துதான் வந்தது என்று.

அவர் இலகுவாக உங்களை அடையாளம் கண்டமைக்கு காரணம் அந்த SMS இல் உங்கள் Mobile No உம் கூடவே சென்றமைதான் காரணம் (Sender ID your Mobile No)

Mobile No இனை மறைத்து SMS அனுப்புவது எப்படி என்று முதலில் சொல்கிறேன்.இதற்கு நல்ல உதாரணம் சொல்லப்போனால் ஜனாதிபதியிடம் இருந்து உங்களுக்கு புதுவருட வாழத்து செய்தி வரும் அல்லவா? அதற்கு உங்களால் Reply பன்ன  முடியுமா? அந்த SMS எந்த நம்பரில் இருந்து வந்தது என்று உங்களால் கண்டுபிக்க முடியுமா? இல்லை தானே? இன்னும் உதாரணம் சொல்லப்போனால் Airtel இல் இருந்து (Dialog, Mobitel) வரும் SMS இனையும்  குறிப்பிடலாம்.

இதனை நமது Mobile இல் வைத்து செய்ய முடியாது, இதை இணையத்தில் தான் அதிக செலவு செய்து செய்ய முடியும்.இருந்தாலும் இலவசமாக (25 SMS) இந்த சேவையை வழங்கும் ஒரு இணையதளத்தை இன்று உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.

01.இங்கு சென்று நீங்கள் ஒரு கணக்கு திறந்து கொள்ளுங்கள்

02.நீங்கள் பதிவு செய்த Mobile No இற்கு அவர்கள் Password இனை அனுப்பி வைத்து இருப்பார்கள்.உங்கள் Username இனையும் Password இனையும் வைத்து அந்த தளத்தில் உள்நுழைந்த கொள்ளுங்கள்.

03.Send SMS to Number
04.Send SMS To : நீங்கள் SMS இனை யாருக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அவருடைய Mobile Noஇனை Country Code உடன் கொடுக்கவும்.


05.Sender ID From : யாருடைய பெயரில் இருந்து நீங்கள் SMSஅனுப்ப நினைக்கிறீர்களோ அவருடைய பெயர் அல்லது Mobile No இனை அந்த இடத்தில் கொடுக்கவும்.


06.Message : இதில் விரும்பிய செய்தியை டைப் செய்யவும்.


07.பிறகு Send SMS என்ற பட்டனை க்ளிக் செய்தால் சாரி.அவருக்கு அந்த SMS உடனே கிடைத்து விடும்.




மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்.தயவு செய்து இதனை தவராக பயன்படுத்த வேண்டாம்
Share This

Thursday, 8 August 2013

ரிச்சர்ட் ட்ரெவிதிக் : இரயில் வண்டி உருவான வரலாறு

ADD ADD ADD ADD ADD
பிந்திய செய்திகள்...

சிங்கப்பூரின் பொது போக்குவரவு முறை உலகத்தரம் வாய்ந்தது. அதற்கு முக்கிய காரணம் நம்மில் பெரும்பாலோர் சொகுசாக பயணம் செய்து பழகிவிட்ட MRT (Mass Rapid Transit) எனப்படும் பெருவிரைவு இரயில்கள். நாம் பயணிக்கும் அந்த இரயில்கள் மின் சக்தியினால் இயங்குகின்றன. பல பரிணாம வளர்ச்சிக்குப் பிறகுதான் இரயில்கள் இந்த நிலையை எட்டியிருக்கின்றன. முதன் முதலில் உலகுக்குக் கிடைத்த இரயில் வண்டி எப்படி இருந்தது தெரியுமா?
சிங்கப்பூரின் பொது போக்குவரவு முறை உலகத்தரம் வாய்ந்தது. அதற்கு முக்கிய காரணம் நம்மில் பெரும்பாலோர் சொகுசாக பயணம் செய்து பழகிவிட்ட MRT (Mass Rapid Transit) எனப்படும் பெருவிரைவு இரயில்கள். நாம் பயணிக்கும் அந்த இரயில்கள் மின் சக்தியினால் இயங்குகின்றன. பல பரிணாம வளர்ச்சிக்குப் பிறகுதான் இரயில்கள் இந்த நிலையை எட்டியிருக்கின்றன. முதன் முதலில் உலகுக்குக் கிடைத்த இரயில் வண்டி எப்படி இருந்தது தெரியுமா?
மிகப்பெரிய சத்தத்துடன் கோபமாக பெருமூச்சு விடும் ராட்சஷனைப்போல் இருந்தது காரணம் அந்த இரயில் வண்டி நீராவியால் இயங்கியது. 1700-களின் இறுதியில் ‘ஜேம்ஸ் வாட்’ என்ற வரலாற்று நாயகர் ஸ்டீம் என்ஜின் (‘Steam Engine’) எனப்படும் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். ‘Industrial Revolution’ எனப்படும் தொழிற்புரட்சிக்கு ஆணி வேராக இருந்த அதே நீராவி இயந்திரத்தை அடிப்படையாக கொண்டு ஓடும் இரயில் வண்டியை 1804-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அந்த கண்டுபிடிப்புதான் உலகம் முழுவதும் நெடுந்தூரத் தரைப்பயணத்திற்கு அடிப்படையை வகுத்து தந்திருக்கிறது. தரைப்போக்குவரவு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிற்கும் அந்த வரலாற்று நாயகர் (Richerd Trevithick) ரிச்சர்ட் ட்ரெவிதிக்.
இங்கிலாந்தின் ‘Cornwall’ என்ற பகுதியில் 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் பிறந்தார் ரிச்சர்ட் ட்ரெவிதிக். அவருடைய தந்தை வெள்ளிய சுரங்கம் ஒன்றின் நிர்வாகியாக இருந்தார் அதனால் ட்ரெவிதிக்கும் சுரங்கத்தொழிலுக்கும் இயற்கையாகவே ஒரு பிணைப்பு ஏற்பட்டது. சிறுவயது முதலே ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளை செய்து புகழ் பெற வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது.
அதனால் எப்போதும் ஏதாவது இயந்திரங்களை வடிவமைப்பதிலும் அதன் நுணுக்கங்களை அறிந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டினார். அதன் காரணமாக அவர் பள்ளிப்படிப்பில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. எப்படியோ படிப்பை முடித்து ஒரு சுரங்க பொறியாளராக தேர்ச்சி பெற்றார். அந்தக்காலத்தில் சுரங்கங்களில் அடிக்கடி தண்ணீர் தேங்கி விடும். அதனால் சுரங்கப்பணிகள் முடங்கிப்போகும் அப்படி தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற நீராவி இயந்திரங்கள்தான் பயன்பட்டன.
நீராவி இயந்திரங்களின் செயல்பாட்டை ட்ரெவிதிக் நன்கு அறிந்திருந்ததால் எந்த சுரங்கத்தில் நீராவி இயந்திரங்கள் பழுதானாலும் அவற்றை சரி செய்ய அவர்தான் அழைக்கப்படுவார். அவற்றை பழுதுப்பார்ப்பதோடு நின்று விடவில்லை ட்ரெவிதிக்கின் ஆர்வம், குறைந்த அழுத்தமுடைய அந்த நீராவி இயந்திரங்களிள் சில முன்னேற்றங்களை செய்து சுரங்கங்களில் அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதே அவரது அன்றாட எண்ணமாக இருந்தது.
முதலில் உச்ச அழுத்தமுடையதாக நீராவி இயந்திரத்தை மாற்றி அமைத்தார். பின்னர் அதனை எங்கு வேண்டுமானாலும் தூக்கி செல்லும் அளவுக்கு வடிவமைத்தார். அப்போதுதான் தானாகவே நகர்ந்து செல்லும் ஒரு நீராவி இயந்திரத்தை உருவாக்கினால் என்ன? என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. அப்படிபட்ட ஒரு கருவியை உருவாக்கிவிட வேண்டும் என்று கனவு காணத்தொடங்கினார். அந்தக்கனவை பதினெட்டாம் நூற்றாண்டு மக்களிடம் அவர் சொல்லியிருந்தால் மற்ற சாதனையாளர்களுக்கு கிடைத்தது போன்ற பரிகாசம்தான் அவருக்கும் கிடைத்திருக்கும்.
தனது கனவை நனவாக்க அயராது உழைத்து 1801-ஆம் ஆண்டு நகரும் நீராவி இயந்திரத்தை அவர் உருவாக்கினார். Cornwall வீதிகளில் அதனை ஓட்டியும் பார்த்தார். ஆனால் எதிர்பாராவிதமாக ஏதோ கோளாற்றினால் அந்த இயந்திரம் தீப்பிடித்து எரிந்து போனது. அதனால் வீதியில் ஓடிய அந்த முதல் நீராவி இயந்திரம் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு எந்த சான்றும் இல்லாமல் போனது.
சோதனைகள் வரும்போது சோர்ந்து போவோருக்கு வாழ்க்கையும், வானமும் வசப்பட்டதில்லையே! வரலாற்றில் நிலைத்து நிற்க விரும்பியதால் ட்ரெவிதிக்கும் அந்த முதல் தோல்வியால் சோர்ந்து போய் விடவில்லை. இரண்டே ஆண்டுகளில் இன்னொரு நீராவி இயந்திரத்தை உருவாக்கினார். அது இயங்கும் முறையை தன நண்பர்களுக்கு காண்பித்தபோது அது விளையாட்டு பொம்மை என்று கூறினார்கள். ஆனால் அது பொம்மை அல்ல உண்மையான ரயில் வண்டி என்பதை நிரூபிக்க அதனை வீதியில் ஓட்டிக்காட்டினார் ட்ரெவிதிக்.
‘குக்’ ‘குக்’… என்று பேரிரைச்சலுடன் பெருமூச்சு விட்டபடி ஓடிய அந்த வண்டியைப் பார்த்து பயந்துபோன மக்கள் ‘Puffing Devil’ அதாவது பெருமூச்சு விடும் பேய் என்று அலறியபடி ஓடி ஒளிந்ததாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ட்ரெவிதிக் உருவாக்கிய அந்த நீராவி இயந்திர இரயில் மணிக்கு எட்டு முதல் ஒன்பது மணி வேகத்தில் ஓடியது. இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ட்ரெவிதிக்கின் அந்த புதிய கண்டுபிடிப்பைக்கண்டு தங்கள் பிழைப்பில் மண் விழப்போகிறது என்று கோபம் அடைந்தனர் குதிரை வண்டிக்காரர்கள்.
ஏனெனில் அப்போதெல்லாம் தரைப்பயணத்திற்கு குதிரை வண்டியைத்தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது. ட்ரெவிதிக்கின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்கூட குதிரை வண்டிக்காரர்கள் திட்டம் தீட்டினர். ஆனால் தனது முயற்சியை தொய்வின்றி தொடர்ந்த ட்ரெவிதிக் 1804-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் நாள் South Wales-ல் நீராவி இயந்திரத்தால் பொருட்களையும், பயணிகளையும் இழுத்து செல்ல முடியும் என்பதை நிரூபித்துக்காட்டினார்.
70 பயணிகளையும் 10 டன் எடையுள்ள இரும்பையும் ஒன்பது மைல் தூரத்திற்கு இழுத்து சென்றது அந்த இரயில் வண்டி. ஆனால் இன்று போல் அப்போது தண்டவாளங்கள் கிடையாது என்பதால் இரும்புத்தகடு நிரப்பிய பாதையில்தான் அந்த இரயில் வண்டி ஓடியது. இரயில் வண்டியின் கணம் தாங்காமல் அந்த தகட்டுப்பாதை பழுதானது. எனவே அது அதிக செலவு பிடிக்கும் ஒரு சமாச்சாரம் என்று எண்ணி எந்த தொழிலபதிரும் இரயில் கட்டமைப்பில் முதலீடு செய்ய முன்வரவில்லை.
அதனால் வெறுப்படைந்த ட்ரெவிதிக் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவரது கண்டுபிடிப்புகளைப்பற்றி நன்கு அறிந்திருந்த தென் அமெரிக்கா அவரை இருகரம் கூப்பி வரவேற்றது. 1816-ஆம் ஆண்டு Peru-விற்கு சென்ற ட்ரெவிதிக் அங்குள்ள சுரங்கங்களுக்கு நீராவி இயந்திரங்கள் அமைத்துக் கொடுத்தார். சுரங்கங்கள் நல்ல லாபம் ஈட்டத்தொடங்கின.
1826-ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் வெடித்ததால் அவர் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. பின்னர் அமேரிக்கா முழுவதும் பயணம் செய்தார். இருந்தாலும் தனது கனவை நனவாக்க முடியாமல் மீண்டும் இங்கிலாந்து திரும்பினார் ட்ரெவிதிக் அப்போது தான் கண்டுபிடித்த நீராவி இரயில் சில முன்னேற்றங்களுடன் புழக்கத்திற்கு வந்திருப்பதை கண்டு மகிழ்ந்தார்.
எனினும் தன்னுடைய முயற்சியின் விளைவாகத்தான் இரயில் வண்டி உருவானது என்பதால் தனக்கு உதவிப்பணம் தருமாறு அவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வேலை இல்லாமல் சிரமபட்ட ட்ரெவிதிக்குக்கு தனது நிறுவனத்திலேயே வேலை கொடுக்க முன் வந்தார் ஒருவர். அவர் ட்ரெவிதிக் கண்டுபிடித்த நீராவி இயந்திரத்தின் அடிப்படையில் புதிய இயந்திரத்தை வடிவமைத்து பிரபலமான இரயில் வண்டியை உருவாக்கியவர். எனவே நன்றி உணர்வுடன் அவர் ட்ரெவிதிக்குக்கு அந்த வேலையை தர முன் வந்தார்.
முதலில் சம்மதித்தாலும் பின்னர் அங்கு வேலை செய்ய மறுத்து விட்டார் ட்ரெவிதிக். வறுமையிலும், வேதனையிலும் வாடிய அவர் 1833-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் தனது 62-ஆவது வயதில் காலமானார். அவர் வாழ்ந்தபோது கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் அவருக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். பிரிட்டிஷ் நாடாளுமன்றமும் அவருக்குரிய மரியாதையை வழங்காமல் போயிருக்கலாம். மனிதன் தவறு செய்தாலும் வரலாறு தவறு செய்வதில்லை.
எனவேதான் ட்ரெவிதிக்கை ‘இரயில் வண்டியின் முன்னோடி’ என்று இன்றும் அது நினைவில் வைத்து போற்றுகிறது. இப்போது நாம் சொகுசாக பயணம் செய்யும் பெருவிரைவு இரயில்கள் ட்ரெவிதிக் கண்டுபிடித்த நீராவி இரயிலின் வழித்தோன்றல்தான் என்று நன்றியோடு நினைத்துப் பார்த்தாலே அந்த வரலாற்று நாயகருக்கு நாம் மரியாதை செய்தவர்களாவோம்.
இன்று உலகம் முழுவதும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் இரயில்கள் எல்லாமே ட்ரெவிதிக் விட்டு சென்றுள்ள நினைவு சின்னங்களே. தரைப்போக்குவரவு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிற்க ட்ரெவிதிக் என்ற வரலாற்று நாயகருக்கு உதவிய பண்புகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடும் உழைப்பு, மனுகுலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயரிய எண்ணம்.

மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம்


அமெரிக்காவைச் சேர்ந்தவர் விஞ்ஞானி டக்லஸ் எங்கெல்பர்ட்(88). 1925-ம் ஆண்டு போர்ட்லாண்டில் பிறந்தார்.

Friday, 26 July 2013

தேசியக் கொடி பிறந்த வரலாறு!

தேசியக் கொடி பிறந்த வரலாறு!
History of Indian National Flag
ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக விளங்குவது அந்த நாட்டின் தேசியக் கொடியாகும். அனேகமாக ஒவ்வொரு நாடுமே, அது பிறப்பதற்கு முன்பே தேசியக் கொடியை உருவாக்கியிருக்கும். அதேபோலத்தான் இந்தியாவும் தனது தேசியக் கொடியை சுதந்திரமடைவதற்கு முன்பே உருவாக்கியது. பல்வேறு உருவங்களில் வலம் வந்த நமது தேசியக் கொடி 1947ம் ஆண்டு ஜூலை மாதம் தற்போதைய வடிவத்தை அடைந்தது. சுதந்திரம் கிடைக்க ஒரு மாதத்திற்கு முன்புதான் நமது தேசியக் கொடி தற்போதைய வடிவத்தை எட்டியது.

தேசியக் கொடிதான் ஒவ்வொரு நாட்டுக் குடிமகனுக்கும் உயிர் மூச்சாகும். கொடிக்காக உயிர் துறந்த குமரன்கள் பலரைக் கண்ட நாடு நமது இந்தியா.

தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யா:

இந்தியாவின் தேசியக் கொடியை உருவாக்கி வடிவமைத்தவர் பிங்கலி வெங்கய்யா. ஆந்திராவைச் சேர்ந்தவர். தற்போதைய தேசியக் கொடிக்கு 1947ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி அப்போது உருவாக்கப்பட்டிருந்த நியமனச் சபையில் அங்கீகாரம் தரப்பட்டது. இதுதான் இந்தியாவின் தேசியக் கொடி என்று முடிவெடுக்கப்பட்டது அந்த நாளில்தான்.

மூன்று வண்ணங்களைக் கொண்டதாக கொடி இருந்ததால் இதற்கு மூவர்ணக் கொடி என்றும் பெயர் வந்தது. மேலே காவி நிறமும், நடுவில் வெண்மையும், கீழே பச்சை நிறமும் கொண்டதே இந்தியாவின் தேசியக் கொடி. நடுவில் அசோக சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. இந்த அசோக சக்கரம் கடல் நீல நிறத்தில் இருக்கும்.

முதல் கொடி பிறந்தது 1906ல்:

முதல் முதலில் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது 1906ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம்தேதி. கல்கத்தாவின் கிரீன் பார்க்கில் அந்தக் கொடியை ஏற்றினர். அந்தக் கொடி சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலான படுக்கை வச பட்டைகளுடன் கூடியதாக இருந்தது. இதுதான் முதல் கொடியாகும்.

அடுத்து 1907ம் ஆண்டு பாரீஸில் மேடம் காமா 2வது தேசியக் கொடியை ஏற்றினார். முதல் கொடியைப் போலவே கிட்டத்தட்ட இது இருந்தது. இருப்பினும் தாமரையும், சப்தரிஷிகளைக் குறிக்கும் வகையில் ஏழு நட்சத்திரங்களும் கொடியில் இடம் பெற்றிருந்தன. இந்தக் கொடி பெர்லினில் நடந்த சோசலிச மாநாட்டின்போது காட்சிக்கு வைக்கப்பட்டது.

அடுத்து 1917ம் ஆண்டு ஹோம்ரூல் இயக்கம் நடந்தபோது, டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், லோகமான்ய பாலகங்காதர திலகரும் இணைந்து ஒரு கொடியை ஏற்றினர். இதில் ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பச்சை நிற படுக்கை வச கோடுகளும் இடம் பெற்றிருந்தன. மேலும் ஏழு நட்சத்திரங்களும் இடம் பெற்றிருந்தன. கொடியின் இடதுபுற மூலையில் இங்கிலாந்தின் யூனியன் ஜாக்கும், வலது புறம் வெள்ளை நிற பிறையும், நட்சத்திரமும் இடம் பெற்றிருந்தன.

1921ல் இரு வண்ணக் கொடி:

1921ம் ஆண்டு பெஸ்வாடா (இப்போதைய விஜயவாடா) என்ற இடத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தின்போது ஆந்திர இளைஞர் ஒருவர் ஒரு கொடியை உருவாக்கி அதை காந்தியிடம் கொடுத்தார். அதில் இந்துக்களையும், முஸ்லீம்களையும் குறிக்கும் வகையில் கொடியில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் இடம் பெற்றிருந்தது. அதைப் பார்த்த காந்தி, கொடியில் வெள்ளை நிறத்தை சேர்க்க ஆலோசனை கூறினார். மேலும், சுழலும் சக்கரத்தை இணைக்குமாறும் அவர் ஆலோசனை கூறினார்.

31ல் பிறந்தது மூவண்ணக் கொடி:

1931ம் ஆண்டு நமது தேசியக் கொடியின் வரலாற்றில் முக்கியமான ஆண்டாகும். அந்த ஆண்டில்தான் மூவண்ணக் கொடியை நமது தேசியக் கொடியாக ஏற்கலாம் என்ற அங்கீகாரம் கொடுக்கப்பட்ட ஆண்டாகும். இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றினர். அந்தக் கொடியே தற்போதைய கொடியின் முன்னோடியாகும். காவி, வெண்மை மற்றும் பச்சை நிறத்துடன் கூடிய அந்தக் கொடியில் காந்தியின் ஆலோசனையை ஏற்று சுழலும் சக்கரமும் இணைக்கப்பட்டிருந்தது (அசோக சக்கரம் இல்லை).

1947ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி நடந்த நியமனச் சபையின் கூட்டத்தில் தற்போதைய சுதந்திரக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. சுழலும் சக்கரத்திற்குப் பதில் அசோக சக்கரம் இணைக்கப்பட்டு கொடி தற்போதைய வடிவத்தை அடைந்தது.

பலம்-அமைதி-வளர்ச்சி:

தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள மூவண்ணத்திற்கும் ஒரு தத்துவம் உண்டு. காவி நிறம் பலத்தையும், தைரியத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது. நடுவில் உள்ள வெண்மை நிறம், உண்மை மற்றும் அமைதியை காட்டுகிறது. பச்சை நிறம், வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாய செழிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

நடுவில் இடம் பெற்றுள்ள அசோக சக்கரம், வாழ்க்கை சுழற்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

எங்கும் ஏற்றி மகிழலாம்:

2002ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வரை தேசியக் கொடியை இஷ்டப்பட்ட இடத்தில் ஏற்ற முடியாது என்று கட்டுப்பாடு தடை இருந்தது. ஆனால் அந்த ஆண்டு குடியரசு தினம் முதல் பொதுமக்கள் எங்கு வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்றி மகிழலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த குடியரசு தினத்தன்று மக்கள் தங்களது வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் கொடியேற்றி மகிழ்ந்தனர்.

தேசியக் கொடியை ஏற்றுவதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. தேசியக் கொடிக்கு எந்த வகையிலும் அவதூறு, அவமதிப்பு ஏற்படாத வகையில் கையாள வேண்டும், கொடியேற்ற வேண்டும்.

மத நோக்கத்திற்கான காரியங்களில் தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது. சட்டை உள்ளிட்ட துணிகளில் தேசியக் கொடியை அச்சிடக் கூடாது. சூரிய உதயத்தின்போது கொடியை ஏற்றி, சூரிய அஸ்தமனத்தின்போது இறக்கி விட வேண்டும்.

கொடி கிழிந்த நிலையிலோ அலலது கசங்கிய நிலையிலோ அல்லது நிறம் மங்கிய நிலையிலோ ஏற்றப்படக் கூடாது. தரையைத் தொடும் வகையிலோ அல்லது தண்ணீரில் மிதக்கும் நிலையிலோ கொடியை பறக்க விடக் கூடாது.

தேசியக் கொடி பறக்கும் போது அதற்கு மேல் வேறு எந்தக் கொடி அல்லது துணி பறக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொடி மீது மாலை உள்ளிட்ட வேறு எந்தப் பொருளும் இடம் பெறக் கூடாது.

இந்திய மக்களின் இறையாண்மை, சுதந்திரம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் தேசியச் சின்னமே நமது தேசியக் கொடி. நமது தேசியப் பெருமையின் அடையாளம் தேசியக் கொடி. கம்பீரமாக பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடிக்கு வீர வணக்கம் செலுத்தி நாம் பெற்ற சுதந்திரத்தை கெளரவிப்போம்.

தேசிய கொடியை வடிவமைத்த பெண்



இன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதிவு. 
நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக... 1947 ஜூலை 17 அன்று  பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..!
வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரியா தியாப்ஜி
ஐடியா தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி. 
( பலரும்  தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல... அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..! )

இந்த பத்ருதீன் தியாப்ஜிதான்... இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்களில் முக்கியமான முதல் ஐவரில் ஒருவரின் பேரன்..!
அந்த ஐவரில் மீதி நான்கு பேரை பள்ளி வரலாற்றில் படித்து இருப்பீர்கள். ஆலன் அக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பன், ஒமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி ஆகிய நால்வரை அடுத்த பெயர்தான்... முல்லா தியாப் அலியின் மகன் பாரிஸ்டர்.பத்ருதீன் தியாப்ஜி..! (காலம் : 1844 – 1906)
சர். ஆலன் அக்டேவியன் ஹியூம்,  சர்.வில்லியம் வெட்டர்பன் போன்ற ஆங்கிலேயர்களால், மெத்தப்படித்த இந்தியர்களை அழைத்து, 1885 இல், INC துவக்கப்பட்டது. நோக்கம், பிரிட்டிஷ் அரசுடன் எந்த பிரச்சினை ஆனாலும் சுமுக பேச்சுவார்த்தைக்காக வேண்டி. அதன் முதல் தலைவர்...W.C.பானர்ஜி. 
1886 இல், இ.தே.கா.-இன் இரண்டாம் தலைவர்,  பாரிஸ்டர். D. நவ்ரோஜி.

அடுத்த வருடம், 1887 இல் மூன்றாம் தலைவரானவர்தான் பாரிஸ்டர். பத்ருதீன் தியாப்ஜி. 
இவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய பாரிஸ்டர். (1867)
பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய சீஃப் ஜஸ்டிஸ். (1902)
இவரின் மகன்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் முஸ்லிம் பொறியாளர்.
இவரின் மகளோ முதலில் வெளிநாடு சென்று படித்து வந்த டாக்டர். 
இவரின் பேரன்தான்.... நாம் முதலில் பார்த்தவர்... அவரின் பெயரும் தாத்தாவின் பெயரேதான்..! பத்ருதீன் தியாப்ஜி..!
பிப்ரவரி - 20, 1947 : ஆளும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு விட்டுவிடப் போவதாக இங்கிலாந்து பிரதமர் கிளிமென்ட் அட்லீ அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.
ஜூன் 3, 1947 : வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், பாகிஸ்தான் - இந்தியா என்று இரு நாடுகளாக பிரிப்பது பற்றிய தனது திட்டத்தை காங்கிரஸ் & முஸ்லிம் லீக் கட்சிகளிடம் சொல்கிறார். ஆகஸ்ட் 15 ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும் குறித்து தெரிவிக்கிறார்.
அத்துடன், வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், இந்தியா & பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டின் கொடிகளிலும், தங்கள் பிரிட்டிஷ் நாட்டின் சின்னமான யூனியன் ஜாக்கை (நீள பின்புலத்தில் சிகப்பு வெள்ளையில், ஒரு பெருக்கல் குறி மீது ஒரு கூட்டல் குறி)  தத்தம் கொடியின் மூலையில், பத்தில் ஒரு பங்கு அளவில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். ( ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கொடிகளில் தற்போது உள்ளது போல...! )
இதனால், கடுப்பாகிப்போன இருவரும், தங்களுக்கான தனித்துவ கொடி வடிவமைப்பில் முழுமூச்சாக இறங்குகின்றனர். முக்கியமாக அந்த பிரிட்டிஷ் கொடியின்  'யூனியன் ஜாக்' இருக்கவே கூடாது என்று முடிவெடுத்தவர்களாக..!
ஜூன் 23 1947 : கொடி வடிவமைக்க ஒரு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்படுகிறது. ( Ad-hoc Committee; Dr. Rajendra Prasad (Chairman), Abul Kalam Azad, C. Rajagopalachari, Sarojini Naidu, K. M. Pannikkar, K. M. Munshi, B. R. Ambedkar, S. N. Gupta, Frank Anthony and Sardar Ujjal Singh)
முன்னர், 1916 இல் பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்ட, சுதந்திரம் வாங்க போராடிய "இந்திய  தேசிய காங்கிரஸ் கொடியே நம் நாட்டின் தேசிய கொடி" என்ற வாதம் வலுப்பெறுகிறது..! 

மேலே  உள்ள இந்திய அரசின் தபால் தலையில் இவர் வடிமைத்த கொடி எவை எவை என்று மிகவும் தெளிவாகவே உள்ளது..!கவனியுங்கள் சாகோஸ்..!
இந்நிலையில், மும்பையில் இருந்து டெல்லிக்கு ஆர்.எஸ்.எஸ். இன் சாவர்கர், முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்படி ஒரு அவரசர தந்தி அடிக்கிறார். அதில், கொடி முழுக்க காவி நிறம் இருக்க வேண்டும் என்றும்(?!) இராட்டை இடம்பெறவே கூடாது என்றும்(?) வேறு எந்த சின்னமும் இருக்கலாம்(!) என்றும் கூறி..!
வேறு சிலர், புலிச்சின்னம் உள்ள நேதாஜி ஏற்றிய கொடிதான் வேண்டும் என்கின்றனர். இப்படியாக ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டு இருக்க, அனைத்து கருத்துக்களையும் அமைதியாக கேட்டு வைக்கிறது அட்ஹாக் கமிட்டி.
இப்போதுதான், முதல் பத்தியில் நாம் பார்த்த பத்ருதீன் தியாப்ஜி, சீனில் என்ட்ரி ஆகிறார்..! அவர், கமிட்டி தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத்தை சந்தித்து, அவரின் தேசிய கொடியின் மாதிரியை சொல்கிறார். தலைவருக்கு இது பிடித்து விடவே, அதற்கு காந்திஜியின் ஒப்புதலையும் பெற்று வருமாறு அனுப்பி வைக்கிகிறார். காந்திஜியிடம், ராட்டைக்கு பதில் அசோக சக்கரம் மாற்றப்படுவதற்கு காரணத்தை இப்படி சொல்கிறார், பத்ருதீன் தியாப்ஜி.
அதாவது, "கிடைமட்டமான சம அளவு மூவர்ணம் கொண்ட இந்திய தேசிய கொடியின் இருபக்கத்தில் இருந்து அதை பார்த்தாலும், இடம் வலம் மாறாமல் கொடி அதே போலவே தெரியவேண்டும். இதற்கு அசோக சக்கரம்தான் சரியாக வரும். இந்திய தேசிய கொடியின் 'இராட்டை' சரியாக வராது" என்றார்..! 
கூர்ந்து கேட்டுவிட்டு இதனை, ஏற்றுக்கொண்ட காந்திஜி, அவரையே உடனே ஒரு 'மாதிரி கொடி' தயார் செய்து கொண்டு வந்து காட்டுமாறு கூறுகிறார்.
மூன்று அளவு நீளமும், இரண்டு அளவு அகலமும் கொண்ட காதி கைத்தறி துணி ஒன்றை வாங்கிக்கொண்டு போய், தனது மனைவி ஸுரியாவிடம் தருகிறார். அவர் ஒரு கைதேர்த்த வண்ணத்தூரிகையாளர்.
கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அந்த அம்மையார், சிகப்பு+மஞ்சள் கலந்து காவி மேலேயும், கரும்பச்சையை கீழேயும், நடுவில் வெள்ளையில் கரு நீல வண்ணத்தில் 24 கால்கள் கொண்ட அசோக சக்கரமும் மிக எழிலாக வரைந்து தருகிறார்.
தியாப்ஜி அதை கொண்டு போய் காந்திஜியிடம் காண்பிக்க, அதற்கு காந்திஜி இன்முகத்துடன் ஒப்புதல் தந்து அட்ஹாக் கமிட்டிக்கு அனுப்ப, அந்த 'கொடி வடிவமைப்பு கமிட்டி' அதையே சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியாக அறிவிக்கிறது... ஜூலை 17, 1947 அன்று அதிகாரபூர்வமாக..!
உலக மகளிர் தினத்தில் மட்டுமின்றி, இந்திய தேசிய கொடி பறந்து கொண்டிருக்கும் 365 தினங்களிலும் தேசிய கொடியை வடிவமைத்த அப்பெண்மணிக்கு, கோடி கரங்கள் தடுத்து மறைத்தாலும் வரலாற்றில் தக்க  இடம் நிச்சயமாக உண்டு..!
ஆதார ஆவணங்கள்
Who designed National Flag : Mrs. Badruddin Tyabji
http://www.flagfoundationofindia.in/tiranga-quiz.html  (official site for national flag)
http://muslims4india.com/contribution/freedom/national-flag.html (The wheel of truth, by Mr.K.Natwar Singh)

Wednesday, 24 July 2013

gk tn

* தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அறிஞர் அண்ணா.


* தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய அணைக்கட்டு மேட்டூர் அணைக்கட்டு.


* தமிழகத்தில் உள்ள மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா.


* தமிழகத்தில் 1526-ம் ஆண்டு நாயக்கர் ஆட்சி உதயமானது.




பால் மனிதர் !!!


* சியாச்சின் மலையில் உள்ள போர் தளத்திற்குச் சென்ற முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.


* இந்தியாவின் பால் மனிதர் என்று அழைக்கப்படுபவர் அமுல் நிறுவனத் தலைவர் குரியன். நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்க இவர் நடவடிக்கை எடுத்தார்.


* குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி லட்சுமி ஷைகல்.


* பனிச் சிறுத்தைகள் இமயமலை பிரதேசத்தில் வசிக்கின்றது.


* கங்காரு ஒரே தாவலில் 30 அடிகள் தூரம் வரை தாண்டும்.







எலும்புக் கூடில்லா விலங்கு !!!


* மிக விரைவாக குட்டிகளை ஈனும் பாலூட்டி சுண்டெலி.


* போலார் கரடி ஆர்க்டிக் பிரதேசத்தில் வசிக்கின்றது.


* யாக் என்ற வகை எருது காணப்படும் நாடு திபெத்.


* எலும்புக் கூடில்லா விலங்கு ஜெல்லி மீன்கள்.


* கடல் சிங்கங்கள் அண்டார்டிகா கடல் பிரதேசத்தில் அதிகளவில் கானப்படுகின்றன.



 உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை !!!


* இமயத்தின் ஒரு சிகரம் நங்க பர்வதம். இதன் உயரம் 8,126 மீட்டர் .


* உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீட்டர்.


* இந்தியாவில் மிகவும் நீளமான சாலை கிரான்ட் டிரங்க் ரோடு.


* இந்தியாவில் உள்ள மிகவும் உயரமான அணைக்கட்டு பக்ராநங்கல். உயரம் 226 மீட்டர்.


* எல்லோரா குகைக் கோயில் ஒளரங்காபாத் அருகே அமைந்துள்ளது.


* உலகின் மிகப் பெரிய தேவாலயம் ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.

photos different

எனது அன்புத் தம்பி இலயராஜா அவர்களிடம் இருந்து  பின் வரும் கடிதமும் புகைப்படமும் வந்தது.




இந்த புகைப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு கீழ்க்கண்ட வரிகளை படிக்கவும்.












நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனில் , கறுப்பு உருவங்கள் ஒட்டகங்களின் நிழல்தான் ; அவற்றை ஒட்டிய கோடு போன்ற (வெள்ளை) வடிவங்கள்தான் நிஜ ஒட்டகங்கள். இந்தப் படம் ஒட்டகங்களுக்கு நேர்மேலாக இருந்து சூரிய அஸ்தமனத்தின் போது எடுக்கப்பட்டது.





தொடர்ந்து உலக அளவிலான விருதுகளை வென்றுவரும் George Steinmetz என்ற கலைஞன் எடுத்த படம்தான் இது. ஆப்பிரிக்கக் காடுகள் , பாலைவனங்கள் , அன்டார்டிக் பனிப்பிரதேசங்கள் போன்ற இன்னும் முழுதாக கண்டறியப்படாத இயற்கையின் மர்மங்களை புகைப்படங்களில் பதிவு செய்து வருபவர். இவரைப் பற்றிய விவரங்கள் மற்றும் இன்னும் உங்களை வியப்பில் ஆழ்த்தத பல அதிசய உண்மை நிகழ்வுகளுடன் விரைவில் ...........
                                    

கணினி computer


இப்போது நாம் பார்க்கும் கணினியின் தொடக்கம் சார்லஸ் பாபேஜ் (1791-1871) என்பவரால் உருவாக்கப்பட்டது. கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை அவர் உருவாக்கினார்.

 கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும். அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணினியை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டிருக்கிறது. இப்போது இருப்பது போல வசதிகள், மானிட்டர், கீபோர்ட் எதுவும் இல்லாத, புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயல்பட்ட முதல் கணினியில் எடை ஆயிரம் கிலோ.
அந்தக் கணினியில் வேகமும், விவேகமும் மிகவும் குறைவு. தற்போதைய சாதாரண கணினிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணினியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம் என்றால் நினைத்துப் பாருங்கள்.


அவருடன் இணைந்து பணியாற்றியவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் என்பவரின் மகளான 'அகஸ்டா அடா கிங் ' என்பவர்

உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் “அடா பைரன் லவ்லேஸ்” (1816-1852).

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள் இவர். மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.
தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.
தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார், அடா. பாபேஜ் “அனலிட்டிக்கல் என்ஜின்” வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார். அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார்.


கணினிகள் மூலம் இசையமைக்க முடியும் என முன்னறிந்து கூறினார் அடா. கணினித்துறையில் நீங்காத இடம் பெற்றுள்ள இவர், தன்னுடைய 36 வயதில் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.

அவர் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1980 இல் கணினி நிரல் மொழி (Programme language) ஒன்றுக்கு அடா (ADA) என்று பெயர் சூட்டியது.

பல வருடங்களுக்கு முன்னால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும் . இந்த சாதனை அதிகரப்பூர்வமாக 1948ம் ஆண்டு ஜூன் 21ம் தியதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .

இந்த முதல் கணினி நிரூபித்த வினாடியே உலகில் மாபெரும் தொழில் நுட்ப, அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான முளை விட்ட வினாடி எனலாம். அந்த வினாடியைப் போல உன்னதமான நிமிடம் என் வாழ்வில் வந்ததில்லை என அதைக் கண்டுபிடித்த பேராசிரியர் பிரடி வில்லியம்ஸ் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

1948 இல் டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதுவரை இருந்து வந்த வெற்றிடக் குழலுக்கு (Vacuum tube) விடை தரப்பட்டது; இதன் விளைவாக இரண்டாம் தலைமுறைக் கணினிகள் புழக்கத்திற்கு வந்தன.
1958 இல் ஒருங்கிணைச் சுற்றமைப்பு (Integerated cirucuit – IC) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் தலைமுறைக் கணினிகள் வந்தன. இதனால் ஒரு சாதாரணச் சில்லைப் (Chip) பயன்படுத்தி பல கணினிப் பகுதிகளை இணைக்க முடிந்தது. ஒரு இயக்க அமைப்பினைப் (Operating system) பயன்படுத்தி பல நிரல்களை (Programmes) இயக்கும் வாய்ப்பும் உண்டாயிற்று. மேலும் நான்காம் தலைமுறைக் கணினி உருவாவதற்கும் வழி ஏற்பட்டது.

1971 இல் இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த 4004 சில்லுவில் மையச் செயலகம் (Central Processing Unit – CPU), நினைவகம் (Memory), உள்ளீடு/வெளியீட்டுக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன. ஃ 1981 இல் IBM நிறுவனம் தனியாள் கணினியை (Personal Computer – PC) அறிமுகப்படுத்தியது.

 1983 இல் தனியாள் கணினியை அவ்வாண்டின் சிறந்த மனிதனாக 'டைம்ஸ் ' இதழ் தேர்ந்தெடுத்தது.


பரம் 10000 என்னும் கணினி இந்தியாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மீக்கணினியாகும் (Super computer).

தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள மொத்தக் கணினிகளின் எண்ணிக்கை உலகின் மற்ற எல்லா நாடுகளிலுள்ள கணினிகளின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாகும்.


அந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் மூளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக் கூடும்.


பேபி – என பெயரிட்டழைத்து இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்திய டாம் கில்பர்ன், அடா பைரன் லவ்லேஸ் , சார்லஸ் பாபேஜ் , மற்றும் பிரட்டி வில்லியம்ஸ் இவர்களில் யாருமே இன்று உயிருடன் இல்லை எனினும் அவர்களுடைய பெயர் வரலாற்றில் அழிக்கப்படாத நிலையில் அழுத்தமாக எழுதப்பட்டு விட்டது என்பது மட்டும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை .

லெனின் lenin

“மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற்

கடைக்கண் வைத்தா எங்கேஆகா

வென் றெழந்து பார்யுகப் புரட்சி;

கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்

வாகான தோள்புடைத்தார் வானமார்

பேய்களெல்லாம் வருந்தக் கண்ணீர்

போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்;

வைத்தீர் புதுமை காணீர்!”

என்று பாரதியார் ‘புதிய ரஷ்யா” என்ற தலைப்பில் எழுதிய கவிதையில் குறிப்பிடுகிறார்.இது ரஷ்யாவில் நடந்த புரட்சியைத் தலைமை ஏற்று நடத்தியவர் லெனின். உலகிலுள்ள முற்போக்குச் சிந்தனையாளர்கள் அனைவரும் இவரை தோழர் லெனின் என்று இன்னும் அழைத்து வருகின்றனர்.




இவரது இயற்பெயர் ‘விளதிமீர் இல்யிச் உல்யானவ்.’
இல்யா நிகலாயெவிச் - மரீயா அலெக்சாந்த திரவனா பிளாக் தம்பதிக்கு, வால்கா நதிக்கரையில் உள்ள ஸிம் பீர்ஸ்க் என்ற நகரத்தில் 1870 ஏப்ரல் 10 - ல் லெனின் பிறந்தார்.



லெனினுக்கு அலெக்ஸாந்தர், திமீத்ரிய் என்ற சகோரதரர்களும், ஆன்னா, மரீயா, ஓல்கா என்ற சகோதரிகளும் இருந்தனர்.
பெற்றோர் தெய்வ நம்பிக்கையிலும், மதச் சடங்குகளிலும் ஈடுபாடு உடையவர்கள். அதனால், ஞாயிற்று கிழமைகளில் குடும்பம் முழுவதும் மாதா கோவிலுக்குச் செல்வது வழக்கம்.


அலெக்ஸாந்தருக்கு மத நம்பிக்கைகளில் பற்று இருந்ததில்லை. சுயமாக சிந்திக்கவும் முடிவெடுக்கவும் லெனினுக்கு வாய்ப்பு ஏற்பட்ட போது, அண்ணன் வழியில் செயல்பட விரும்பினார். அதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மாதா கோவிலுக்குச் செல்கின்றபோது, லெனினும் அவரது அண்ணனும் கோயிலுக்குச் செல்ல மறுத்தனர்.
பெற்றோர்கள் தந்தை ஆசிரியராகவும், பள்ளி மேற்பார்வையாளராகவும் பணியாற்றினார். தாயாரும் ஆசிரியராகப் பணியாற்றினார். அதனால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர் தனிக்கவனம் செலுத்தினர்.



விளையாட்டு, படிப்பு, எதிலும் புதுமையை விரும்புதல் ஆகியவற்றல் லெனின் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் திகழ்ந்தான்.
பள்ளியில் படிக்கின்ற பொழுதே இலத்தீன், கிரேக்க மொழிகளில் லெனின் தேர்ச்சி மிக்க மாணவராகத் திகழ்ந்தார். மற்றவர்களுக்கு இந்த மொழிகளில் பாடம் நடத்தும் அளவுக்கு அவர் திறமை பெற்றிருந்தார்.
பீட்டர்ஸ் பர்க் பல்கலைக்கழகத்தில் அலெக்ஸாந்தர் படத்துக் கொண்டிருபோது முற்போக்கு ரஷ்ய வாலிபர்களோடும், தீவிரவாத இயக்க மாணவர்களோடும் தொடர்பு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 21.



ஜார் மன்னனைக் கொல்வதன் மூலமே ரஷ்ய மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அலெக்ஸாந்தர் மிகவும் உறுதியாக இருந்தார். அதற்கான ரகசியச் செயல்களிலும் ஈடுபட்டார்.
இந்தக் காலகட்டத்தில் லெனினுடைய தந்தை மறைந்தார். மிகப் பெரிய குடும்பத்தை வழிநடத்ததிச் சென்ற அதன் தலைவர் திடீரென மறைந்தது குடும்பத்தை அதிர்ச்சியில் தள்ளியது. இந்தத் துயரிலிருந்து அந்தக் குடும்பம் விடுபடுவதற்குள் 1887 மார்ச் 1 - ஆம் தேதி ஜார் மன்னனின் காவல் துறையினரால் அலெக்ஸாண்டர் கைது செய்யப்பட்டார்.


குடும்பத் தலைவர் மரணம்; குடும்பத்தின் மூத்த மகன் சிறையில், அதனால் லெனின் குடும்பம் வேதனையில் சிக்கியது.
1887, மே 8-ம் தேதி அதிகாலையில் ஷூஸெல் ப்ர்க் கோட்டையில் மன்னரின் அதிகாரிகளால் அலெக்ஸாண்டர் தூக்கிலிடப்பட்டார்.


சிறுவயது முதல் அண்ணனோடு பழகிய சம்பவங்களும் தமக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கெல்லாம் அவர் சொன்ன விளக்கங்களுக்கும், மத வெறுப்பும், மக்கள் சிறப்பாக வாழ வேண்டுமென்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் லெனினைச் சிந்திக்க வைத்தன.

உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் லெனின் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார் அதற்குரிய தங்கப் பதக்கத்தைக் கொடுப்பதற்கு பள்ளி நிர்வாகம் தயங்கியது. தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு மன்னரைக் கொலை செய்ய முயன்ற ஒருவரின் தம்பிக்கு தங்கப்பதக்கம் கொடுக்கலாமா? அதன்மூலம் மன்னரின் கோபத்திற்கு உள்ளாக நேரிடுமா? அண்ணனைப் போன்று லெனினுக்கும் தீவிரவாத இயக்கத்தில் தொடர்பு இருக்குமா? போன்ற கேள்விகள் எழுந்ததால் பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் லெனினுக்குத் தங்கப் பதக்கம் கொடுப்பதைத் தள்ளிப் போட்டனர். இறுதியில் வேறு வழியின்றி லெனினுக்குத் தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது.


கஸான் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டம்படிக்க லெனின் விரும்பினார். ஆனால் லெனினுடைய அண்ணனைப் பற்றியும், அவருடைய மரணத்தைப் பற்றியும் அறிந்திருந்த பல்கலைக்கழக நிர்வாகம் லெனினைச் சேர்த்துக்கொள்வதில் தயக்கம் காட்டியது.
இறுதியில் லெனின் படித்த உயர்நிலைப்பள்ளியில் லெனினைப் பற்றி விசாரித்து அறிந்த பின்பே பல்கலைக் கழகத்தில் சேர்த்தனர்.


பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடங்கிய லெனின் அங்குள்ள முற்போக்கு சிந்தனையுள்ள மாணவர்களுடன் இணைந்தார். அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கெல்லாம் லெனின் சென்றார்.

நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக் கழக மாணவர்கள் போராடத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் லெனின் கலந்து கொண்டார். அதனால் லெனினையும் மற்ற மாணவர்களையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன் பின் பல்கலைகழகம் லெனினை வெளியேற்றியது.

ஒரு கதவு அடைத்தால் மறு கதவு திறக்கும். எழுந்தவர் பணித்தில்லை என்பதற்கு மறு இலக்கணமாக லெனின் வாழ்ந்து காட்டினார். தனியாகப் பயின்று 1891-ல் சட்டப் படிப்பில் லெனின் தேர்ச்சி பெற்றார்.

ஜெர்மனியில் தோன்றி காரல் மார்க்ஸ் என்ற பேரறிஞர் எழுதிய மூலதனம் என்ற நூலை லெனின் படித்தார். இந்த நூல் லெனினைத் தொழிலாளர்களுக்குப் பாடுபடத் தூண்டியது.


லெனின் பீட்டர்ஸ்பர்க்கில் வாழ்ந்த போது, அங்குள்ள பஞ்சாலைத் தொழிலாளர்களோடு பழகினார். அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்காக வழி காட்டினார் காரல் மார்க்கஸின் கருத்துக்களையெல்லாம் அவர்களிடத்தில் பரப்பினார். இதை அறிந்த ஜார் மன்னன் லெனினைக் கைது செய்து, மூன்று ஆண்டு சிறைத் தண்டனை கொடுத்து சைபீரியாவிற்கு அனுப்பினான்.


பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த மாலை நேரப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த குருப்ஸ்காயா என்ற பெண்மணி கம்யூனிஸ இயக்கம் ஒன்றில் உறுப்பினராகவும் இருந்தார். அதனால் குருப்ஸ்காயாவும் ஜார் மன்னனின் கோபத்திற்கு ஆளானார். அதன் விளைவாக குருப்ஸ்காயாவும் சிறையில் அடைக்கப்பட்டார்.


லெனினுடைய மேதமை குருப்ஸ்காயாலையும்; குருப்ஸ்காயாவின் பொதுவாழ்வுச் செயல்கள் லெனினையும் ஈர்த்தன. அந்த ஈர்ப்பு காதலாக மலர்ந்தது. அந்தக் காதல் 1898 ஜூலை 10 அன்று திருமணத்தில் முடிந்தது.


தண்டனை முடிந்ததும், லெனின் ஜெர்மனிக்குச் சென்றார். அங்கிருந்து ஒரு பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிக்கையில் ரஷ்ய மன்னனின் கொடுங்கோன்மை பற்றியும் ரஷ்யத் தொழிலாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் எழுதிக் குவித்தார். அது ரஷ்யத் தொழிலாளர்களுக்கு வழிகாட்டின.


அதன் பின் ரஷ்யா வந்த லெனில் 1905 - ல் நடத்திய புரட்சி தோல்வியைத் தழுவியது.


மீண்டும் மன்னராட்சி லெனினையும், தொழிற்சங்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் ஒடுக்கியது.

அடித்த பந்து திரும்புவது போன்று ஜார் மன்னின் கொடூரச் செயல்கள் எல்லாம் அவனையே சூழ்ந்தது.


1917 பிப்ரவரியில் மீண்டும் லெனின் தலைமையில் மாபெரும் புரடசி வெடித்தது. ஜார் மன்னனும் அவனது கூலிப்படைகளும் தோல்வியைத் தழுவினர். ஆனால் குழப்ப நிலைமையே நீடித்தது. அதனால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இடைக்கால சர்க்கார் ஒன்று அமைக்கபட்டது. அந்த இடைக்கால சர்க்காரில்,1. இளவரசன் லாவவ் -மிகப்பெரிய நிலப்பிரபுவான இவன் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றான்.


2. மிலியூகோவ் - பிற்போக்காளர்களின் கட்சியான காடெட் என்ற கடசியின் தலைவனான இவன் வெளி விவகார ம்திரியாக நியமிக்கப்பட்டான்.


3. குச்சோவ் - மிதவாதக் கட்சியின் தலைவனான இவன் இராணுவ மந்திரியானான்.


4. தெரெஷென்கோ - மிகப் பெரிய ஆலை முதலாளியான இவன், தொழில் வர்த்தக மந்திரியாகத் தேர்வு செய்யப்பட்டான்.


5. கானோவோலால் - இவனும் மிகப் பெரிய ஆலை முதலாளிதான். இவனுக்கு நிதிமந்திரி பொறுப்பு கொடுக்கப்பட்டது.


6. செரன்ஸ்கீய - மென்ஷ்வீங்குகளின் தலைவனான இவன், சட்ட மந்திரியாகத் தேர்வு செய்யப்பட்டான்.


ஜார் மன்னனையும், அவனுடைய அடிவருடிகளாகச் செயல்பட்ட நிலமுதலாளிகள், தொழில் அதிபர்கள் ஆகியோரையும் வீழ்த்துவதற்காகத்தான் லெனின் புரட்சியை நடத்தினார். ஆனால் ஜார் மன்னன் ஒழிந்தாலும், அவனுடைய அடிவருடிகள் அழிக்கப்படவில்லை என்பதை இடைக்கால அமைச்சரவையின் நியமனம் நிரூபணம் செய்தது. அதனால் இந்த இடைக்கால அரசையும் வீழ்த்த வேண்டும் என்று லெனின் மக்களிடம் முழங்கினார்.


அதிகாரத்தைக்கொண்டு லெனினை வீழ்த்திவிட இடைக்கால அரசு திட்டமிட்டது.


இரண்டு தரப்பினருக்கும் இடையில் வலுவான கருத்துப் போர்கள் நடந்தன.


லெனினை சிறைப்பிடிக்க இடைக்கால அரசு முயன்றது. ரஷ்யாவிலிருந்து தப்பிச் சென்ற லெனின் வெளிநாட்டிலிருந்து ரஷ்யத் தொழிலாளர்களை மீண்டும் ஒரு புரட்சிக்குத் தயார்படுத்தினார்.
தொழிலாளர் வர்க்கமும், பொதுமக்களும் லெனின் தலைமையில் அணி திரண்டனர்.


1917 நவம்பர் 7-ல் லெனின் தலமையில் புறப்பட்ட புரட்சிப்படை இடைக்கால அரசை நீங்கி சோவியத் குடியரசை அமைத்தது.
லெனின் தலைமையில் பதினைந்து பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டது. அந்த அமைச்சரைவையில் இருந்த அமைச்சர்கள் கமிசார் என்று அழைக்கபட்டனர். லெனின் தலைமையில் உருவான அமைச்சரவைப் பட்டியல்;


1.லெனின் - அமைச்சரவைத் தலைவர்
2. ரிக்கால் - உள்நாட்டு அமைச்சர்
3. மில்யூதின் - விவசாய அமைச்சர்
4. ஷல்யாப் நிக்கோவ் - தொழிலாளர் அமைச்சர்.
5. மூவல் கொண்ட ஒரு குழுவிடம் இராணுவமும் கடற்படையும் ஒப்படைக்கப்பட்டது.
6. நோகின் - தொழில் அமைச்சர்
7. லூர்னார்ஸ்கி - கல்வி அமைச்சர்
8. ஸ்தெப்பனால் - நிதி அமைச்சர்.
9. தீராஸ்கீப் - வெளி விவாகார அமைச்சர்.
10. லோமாவ் - சட்ட அமைச்சர்
11. தியோடாவிச் - உணவு அமைச்சர்.
12 அவிலோல் - தொலைத்தொடர்பு அமைச்சர்.
13. ஸ்டாலின் - தேசிய இனங்களின் அமைச்சர்
உலகத்தில் முதன் முதலாக புரட்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் லெனின்.

மாணவர்கள் மீதும், அவர்கள் வளர்ச்சியின் மீதும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் லெனின்.

“Read, Read, Read and Read” என்று மாணவர்களுக்குச் சொன்னார் லெனின்.
இந்த வாசகங்களை அன்று லெனின் மாணவர்களுக்காகச் சொல்லி இருந்தாலும், உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் சொல்லப்பட்டதாகவே தோன்றுகிறது.

இத்துணை சிறப்புக்களுக்குச் சொந்தக்காரரான லெனின், 1918 ஆகஸ்ட் 30 அன்று ஒரு தொழிலாளர் கூட்டத்தில் பேசிவிட்டு, தனது காரில் ஏறப்போனார். அப்போது காருக்கு அருகில் இரண்டடி தூரத்தில் நின்று கொண்டிருந்த பானிகாப்ளான் என்பவன் மூன்று முறை துப்பாகியால் லெனினைச் சுட்டான்.

சின்னஞ்சிறு காயங்களுடன் லெனின் தப்பினார்.

இருப்பினும் 1924- ஜனவரி 21 அன்று லெனின் மறைந்தார்.
லெனின் மறைந்தாலும், புதுமை விரும்பிகளின் நெஞ்சங்களில், இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

கன்பூசியஸ்

சாக்ரடீஸ் போலவே கன்பூசியஸ் இளைஞர்களிடம் போதனை செய்திருக்கிறார், கல்விநிலையத்தை உருவாக்கி அங்கே சமகாலப் பிரச்சனைகள் குறித்த வாதபிரதிவாதங்களை நிகழ்த்தியிருக்கிறார், அதிகாரத்துடன் மோதி தனது கருத்துகளில் உறுதியாக நின்றிருக்கிறார்.
கன்பூசியஸ்க்குப் பன்முகங்களிருக்கின்றன, அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி, போர்வீரன், இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர், சீனமரபினை வளர்த்து எடுத்தவர், அரிய தத்துவ ஞானி, இப்படி அவரது ஆளுமை பன்முகப்பட்டது,  வாழ்வியல் அனுபவங்களில் இருந்து உருவான ஞானத்தைக் கொண்டே அவர் தனது அறக்கருத்துகளை உருவாக்கியிருக்கிறார், கன்பூசியஸின் சிந்தனைகளை மாபெரும் கற்றல் என்று கூறுகிறார்கள்,
கன்பூசியஸின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கையில் சாணக்கியரின் வாழ்க்கை மனதில் வந்து போகின்றது, அர்த்தசாஸ்திரத்திற்கும் கன்பூசியஸ் சிந்தனைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் காணப்ப்படுகின்றன,
கி.மு. 551. சீனாவில் ஷாண்டோங் மாநிலத்தில் உள்ள குபூ நகரில் கன்பூசியஸ் பிறந்தார். அவரது உண்மையான பெயர் கொங் சியூ. கொங் என்பது குடும்பப் பெயர். இவரை மாஸ்டர் கொங் என்றே அழைத்தார்கள்.
கன்பூசியஸின் தந்தை 70வது வயதில் ஒரு நடனக்காரியை மறுமணம் செய்து கொண்டார், அவர்களது மூத்த மகனாகப் பிறந்தவர் தான் கன்பூசியஸ். அவருக்கு நான்கு வயதானபோது தந்தை காலமானார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது, பசியின் கொடுமையை சிறுவயதிலே அனுபவித்த காரணத்தால் தனது அறக்கருத்துகளில் பசியைப் போக்குதலை முக்கியமான அறமாக முன்வைத்தார் கன்பூசியஸ்
கன்பூசியஸ் பிறந்த லூ மாநிலம் பண்பாட்டு சிறப்புமிக்க ஒன்றாகும், ஆனால் அங்கே அதிகார போட்டி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது, அதற்குக் காரணம் மூன்று செல்வச்செழிப்பு மிக்க குடும்பங்கள், அவர்கள் ஒருவருக்கொருவர் ஆட்சியை பிடிப்பதற்காக சண்டையிட்டுக் கொண்டனர், அண்டை மாநிலமான க்யூ இதனை தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது
கன்பூசியஸ் வாழ்ந்த காலத்தில் தொடர்ந்த உள்நாட்டுப்போர்கள், மற்றும் வறுமை காரணமாக சீன தேசம் சிதறுண்டு கிடந்தது, இது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருந்தது, வலிமையான ஒற்றை மைய அரசு என்ற கோட்பாடு அப்போது வரை சாத்தியமாகவில்லை,
மிதமிஞ்சிய லஞ்சம், ஊழல், வேசைகளின் களியாட்டம், எதிர்பாராத போர் என்று லூ மாநிலம் தத்தளித்துக கொண்டிருந்த சூழலில் அதிகாரப்போட்டியில் அதிகம் பாதிக்கபட்டது அறிவார்ந்த குடும்பங்களே, இவர்கள் பிறப்பில் உயர்குடியாக இருந்த போதும் போதுமான செல்வம் இல்லாத காரணத்தால் கூலிவிவசாயிகளைப் போலவே நடத்தப்பட்டார்கள், கன்பூசியஸின் குடும்பமும் அத்தகையதே.
சிறுவயதில் இசையிலும் விளையாட்டிலும் கன்பூசியஸ் அதிக ஆர்வம் கொண்டிருந்தார், மீன்பிடித்தல், மற்றும வில்வித்தை இரண்டும் அவரது முக்கிய ஆர்வமாக இருந்தன,
அந்த காலங்களில் புத்தகங்கள் அச்சுவடிவம் பெறவில்லை, ஒலைச்சுவடிகளில் உள்ள கவிதைகளை, நீதிநூல்களைத் தேடித்தேடி படித்திருக்கிறார், கல்வியின் முக்கியத்துவம் குறித்து இவரளவு பேசியவர் எவருமில்லை,  இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகள் வாழக்கை அதிகமாகக் கிடைத்தால்  மரபுக் கவிதைகள் முழுவதையும் ஆழமாகப் பயின்று கொள்வேன் என்று ஆதங்கப்படுகிறார் கன்பூசியஸ்
ஒரு முறை கன்பூசியஸ் தனது பயணத்தின் போது கிராமப்புற இசை ஒன்றினைக் கேட்டு மயங்கி அந்த கிராமத்திலே மூன்று மாத காலம் தங்கிவிட்டார், கிராமப்புற இசையில் உள்ள துள்ளலான தாளம், இனிமை போல வேறு எதிலும் இசையின் உச்சநிலை வெளிப்படுவதில்லை, அது மனதைக் கொந்தளிக்கச் செய்கிறது எனறு கன்பூசியஸ் குறிப்பிடுகிறார்
முந்தைய காலங்களில் அறிஞர்கள் தன்னை மேம்படுத்திக் கொள்ள கற்றார்கள், ஆய்வு செய்தார்கள், இந்தக் காலங்களிலோ மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்பதற்காகவே ஆய்வுகள், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபடுகின்றன, அடுத்தவரின் பாராட்டிற்காக அறிஞராக இருப்பது அவமானத்திற்குரியது என்று கன்பூசியஸ் குறிப்பிடுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சுட்டிக்காட்டப்பட்ட உண்மை இன்றளவும் மாறிவிடவில்லை
தமது 20-ஆவது வயதில் கன்பூசியஸ் திருமணம் செய்து கொண்டார். அவரது திருமண வாழ்க்கை இனிமையானதாக அமையவில்லை ஆரம்ப காலங்களில் அரசாங்க உணவுப்பொருள் கிடங்கை பராமரிக்கும் அதிகாரியாக பணியாற்றினார், அந்த நாட்களில், உணவைப் பகிர்ந்து அளிப்பது தான் சிறந்த நிர்வாகத்தின் ஆதாரப்புள்ளி என்பதை தனது புதிய நடைமுறைகளின் வழியே சாதித்துக் காட்டினார்
வறுமையைப் போக்கிக் கொள்ள பொய், சூது, களவு இல்லாத ஏதாவது ஒரு நல்ல வேலை கிடைத்தால் போதும், உடனடியாக ஏற்றுக் கொள்வேன் என்று கன்பூசியஸ் தனது வேலையில்லாத நாட்களை பற்றிய குறிப்பு ஒன்றில் கூறுகிறார்,
இப்படி வேலைக்காக அலைந்து திரிந்த அவர் சின்னஞ்சிறு அரசாங்கவேலைகளை செய்து அதில் தனது கடுமையான பணியின் சிறப்பு காரணமாக பதவி உயர்வினை அடையத்துவங்கினார்
எது உங்களின் உயர்விற்கான முக்கிய காரணம் என்ற கேள்விக்கு கன்பூசியஸ் வாழ்வியல் அனுபவங்களே என்னை மேலோங்க செய்தன, ஆனால் அனுபவம் பெற்ற அத்தனை பேரும் வாழ்வில் உயர்ந்துவிடுவதில்லை, வாழ்க்கை அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்பவனே உயர்நிலையை அடைகிறான், அதற்கு அறிவை விருத்தி செய்து கொள்வதும், கடின உழைப்பும், தெளிந்த சிந்தனையும், தூய வாக்கும் அவசியமானது என்கிறார்
ஒரு அரசாங்கம் சிறப்பாக செயல்படத் தேவையான நிர்வாகக் கொள்கைகளை அவர் உருவாக்கித் தந்தார். கல்வியே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு என்று நம்பிய கன்பூசியஸ் அரசாங்கத்தின் துணையோடு பெரிய கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.
தனது  ஐம்பதாவது  வயதில் நீதிபதியாக பதவி உயர்ந்தார். அதன்பின்பு லூ மாநிலத்தின் முதல்வரானார். அவர் ஆட்சியில் குற்றச் செயல்கள்  ஒடுக்கபட்டன, மக்களுக்கு நலன் பயக்கும் பல்வேறு  சமூக சீர்திருத்தங்களை கன்பூசியஸ் நடைமுறைப்படுத்தினார்
இவரது ஆட்சியின் சிறப்பை கண்டு அண்டை மாநில அரசுகள் அவருக்கு எதிராக சதி செய்தன, அதன் காரணமாக தொடர்ந்த இடையூகளை சந்தித்து வந்த கன்பூசியஸ் முடிவில் அரசியலை விட்டு ஒதுங்கி ஊர் ஊராக சுற்றியலைந்து தனது அறக்கருத்துகளை பரப்பி வந்தார், . தனது 72 வது வயதில் கன்பூசியஸ் மரணம் அடைந்தார். இவரது தத்துவங்களை அரச நியதியாக ஏற்றுக் கொண்ட மாமன்னர் அதன்படியே சீனமக்கள் நடக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்
சீனாவின் முதல் தத்துவப் பேராசான் கன்பூசியஸே, இவரது Analects எனப்படும் அறக்கருத்துகளை வாசிக்கையில் சீன சமூகத்தின் அன்றைய நிலையும் அரசின் தெளிவற்ற செயல்பாடுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது
ஒரு மனிதன் எவ்வளவு குதிரைகளை வைத்திருக்கிறான் என்பதை வைத்தே அந்த காலத்தில் அவனது செல்வாக்கு மதிப்பிடப்பட்டிருக்கிறது,  நாற்பது குதிரைகளின் உரிமையாளனே என்று கன்பூசியஸ் ஒருவனை அழைக்கும் போது அவன் எவ்வளவு வசதியானவன் என்பதைப்புரிந்து கொள்ள முடிகிறது
உள்நாட்டு போர் முற்றிய சூழல் என்பதால் கன்பூசியஸ் விசுவாசம் மற்றும் கடமை பற்றி அதிகம் பேசியிருக்கிறார், ஒருவன் தனது எஜமானுக்காக எவ்வளவு விசுவாசமாக இருப்பது என்ற கேள்வி பலமுறை அவர் முன் கேட்டப்பட்டிருக்கிறது, கன்பூசியஸ் மதம் சாராத ஒழுக்கமுறை ஒன்றினை அறிமுகப்படுத்துகிறார், இது எளிய மனிதன் தன் வாழ்வின் தவறுகளைத் தானே திருத்திக் கொள்ள வழிவகை செய்வதாகும்
மனிதன் இயல்பிலே தவறினை நோக்கி வசீகரப்படுகின்றவன், அவனை நல்வழிபடுத்த தொடர்ந்த நடவடிக்கைகள் தேவை, அதில் சிலவற்றை சமூகம் மேற்கோள்ளும், பெரும்பான்மை மாற்றங்களை தனிநபரே மேற்கொள்ள வேண்டும், நன்மையை ஏற்றுக் கொண்டு அதன் நெறிகளுக்கு ஏற்ப வாழ்வது என்பது ஒரு தொடர் போராட்டம் என்பதை கன்பூசியஸ் வலியுறுத்துகிறார்
பஞ்சம் பசி பட்டினி என்று அடித்தட்டு மக்கள் வறுமையில் வாழ்க்கையில் அவர்களை ஆள்பவர்கள் மேலும் மேலும் வரிகளை போட்டு, கடுமையான வேலைகளை செய்ய வைத்து மக்களை வதைக்க கூடாது. சிறந்த நிர்வாகம் என்பது மக்கள் பிரச்சனையை சரியாக கையாண்டு உடனடியாக தீர்த்து வைப்பதில் தானிருக்கிறது, எல்லா அரசியல் பிரச்சனைகளுக்கும் தாய் பசி தான் என்கிறார் கன்பூசியஸ்.
ஒரு வில்லாளி அம்பை எய்கிறான், அது இலக்கைத் தாக்கவில்லை என்றால் அவன் தனது அம்பை குற்றம் சொல்வதில்லை, தவறு தன்னுடையது என்று ஒத்துக் கொள்கிறான், அரசும் அதன் நலத்திட்டங்கள் உரியவருக்குச் சென்று அடையவில்லை என்றால் தனது குற்றத்தைத் தானே ஒத்துக் கொள்ள வேண்டும், மாறாக தவறு மக்களுடையது என்றால் அது மோசமான நிர்வாகம் செய்கிற அரசாங்கமாக கருதப்படும் என்கிறார் கன்பூசியஸ்
நீதிநூல்கள் எதை வாசிக்கையிலும் அது தனிமனிதனை எப்படிக் கருதுகிறது, தனிமனிதனின் இருப்பிற்கான ஆதாரங்களாக எதை முன்வைக்கிறது, தனிமனிதன் மேற்கொள்ள வேண்டிய அறங்கள், கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள், பின்பற்றவேண்டிய நெறிகள் எவை என்பதையும், அதே நேரம் அரசின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் எந்த அறத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையே வரையறை செய்கின்றன ,
அந்த வகையில் திருக்குறளும் கன்பூசியஸின் சிந்தனைகளும் மிக நெருக்கமானவை, வள்ளுவர் கூறுகின்ற அதே கருத்துகளை தான் கன்பூசியஸ தானும் எடுத்துக் கூறுகிறார்
Order  எனப்படும் சமூகவகைப்பாடு எப்படி உருவாக்கபடுகிறது, அதன் உள்கட்டுமானம் எந்த அறத்தை முதன்மைப்படுத்துகிறது, சமூகத்தின் உள்வெளி தளங்கள் எவ்வாறு பிளவுபடுகின்றன என்பதை கன்பூசியஸ் தெளிவாக ஆராய்கிறார்,  Polarity  எனப்படும் முரண் இயக்கதை கவனப்படுத்தி புதியதொரு தர்க்கவியலை கன்பூசியஸ் உருவாக்கியிருக்கிறார்.
Knowing  என்ற சொல் தத்துவப் பாடத்தில் மிக முக்கியமான ஒன்று, அதை எளிதாக வரையறுத்துவிட முடியாது, உள்வாங்கும் முறைகளின் தொகுப்பு என்று வேண்டுமானால் சொல்லாம், இந்த அறிதலின் பல்வேறு நிலைகளை, அதன் பின்னுள்ள சமூக்காரணிகளை கன்பூசியஸ் தீர்க்கமாகச் சுட்டிக்காட்டுவதை அவரது நீதிநூல்களை வாசிக்கையில் அறிந்து கொள்ள முடிகிறது
தவறு செய்தவர்களாக ஒதுக்கபட்ட குற்றவாளிகள், வேசைகள், திருடர்களை தேடிச்சென்று சந்தித்து அவர்களுடன் வாழ்க்கையின் நோக்கம் குறித்து விரிவாக உரையாற்றியிருக்கிறார் கன்பூசியஸ், நான்ஷி என்ற அழகான இளம்பெண்ணை தேடிச்சென்று அவளுடன் தங்கி போதனைகள் செய்திருக்கிறார் கன்பூசியஸ், இதை ஒரு குற்றமாக அவரது சீடர்களில் சிலரே சொல்லிய போது தான் மனிதர்களை அவர்களின் செயல்களைக் கொண்டு பேதம் பார்ப்பதில்லை, மனித இயல்பை அறிவதே எனது வேலை என்கிறார் கன்பூசியஸ்
தொடர்பயணத்தின் போது இவரை கொல்வதற்கான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன, ஒரு தாக்குதலில் இவரது சீடர் யென் யூ இறந்து போயிருக்கிறார், கிறுக்குதனம் பிடித்த முட்டாள் என்று இவரை பல மாநிலங்களில் உள்ளே வரவிடாமல் துரத்தியிருக்கிறார்கள், அதே நேரம் உள்நாட்டுக் கலகங்களை கட்டுபடுத்த விரும்பிய ஆட்சியாளர்கள் இவரை அழைத்து உரிய ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்கள்
தனது மகனின் எதிர்பாரத மரணம், நண்பர்களின் சாவு, தான் நேசித்த ஆட்சியாளர்கள் அதிகாரப்போட்டியில் படுகொலை செய்யப்பட்டது என்று தனது முதிய வயதில் தொடர்ந்த வேதனையில் வீழ்த்த கன்பூசியஸ் சில மாதங்கள் யாருடனும் ஒருவார்த்தை கூட பேசாமல் மௌனமாக வாழ்ந்திருக்கிறார், சீனாவில் இன்று கன்பூசியஸ் ஒரு கடவுளை போல வழிபடப்படுகிறார். இவரது நீதிநூல் சீனாவின் தேசிய அடையாளமாக கருதப்படுகிறது
கன்பூசியஸின் வாழ்க்கை வரலாற்ற படமாக்க போகிறார்கள் என்றதுமே சீனர்களிடம் பெரிய எழுச்சி உருவானது, முன்னதாக கன்பூசியஸ் வாழ்க்கைவரலாறு ஆவணப்படமாகவும், தொலைக்காட்சித் தொடராகவும், கறுப்பு வெள்ளை, மற்றும் கலர்படமாகவும் வெளியாகி உள்ள போதும் இன்றுள்ள சினிமா தொழில்நுட்பத்தை கொண்டு மிக சிறப்பான ஒரு படத்தை உருவாக்கப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு சீனமக்களிடம் இருந்தது, ஆனால் படம் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை,
வெற்றிகரமான குங்பூ படங்களில் நடித்த Chow Yun-fat கன்பூசியஸாக நடித்திருக்கிறார், போர்கலை படங்களில் தொடர்ந்து நடித்தவர் என்பதால் சௌ யுன் பேட்டின் உடல் இறுக்கமானதாகவே இருக்கிறது, அவரிடம் ஞானியின் உடல்மொழியைக் காணமுடியவில்லை,
படத்தின் துவக்கத்தில் வயதான கன்பூசியஸ் தனது கடந்த காலத்தினை நினைவுபடுத்திப் பார்க்கத் துவங்குகிறார், தனது சொந்த மாநிலமான லியூ பகுதியின் மேயர் பதவியில் இருந்து மந்திரி பதவிக்கு உயர்த்தபடுகிறார் கன்பூசியஸ்,
அப்போது ஒரு அடிமைச் சிறுவனை அவனது எஜமானன் இறந்து போன காரணத்தால் உயிருடன் புதைக்க முற்படுகிறார்கள், அது தான் அன்றைய மரபு, இந்தக் கொடூரத்தை கண்ட கன்பூசியஸ் மனம் கொதித்து சிறுவனைக் காப்பாற்றுகிறார், இது ஒரு தவறான செயல் என்று கன்பூசியஸ் குற்றம் சாட்டப்படுகிறார், ஆனால் அவர் தனது மனிதாபிமானம் மிக்க செயலை நியாயம் என்கிறார், இந்த பிரச்சனை புகையத் துவங்குகிறது
கன்பூசியஸ் சீனா முழுவதும் சுற்றியலைகிறார், அவர் தான் கன்பூசியஸ் என்று அறியாதபடி எளிய மனிதனைப்போல மக்களுடன் ஒன்று கலந்து வாழ்கிறார், நீதிக்கருத்துகளை முன்வைத்து உரையாற்றுவதுடன் பழமையான சீனமரபு இலக்கியங்களுக்கு உரை எழுதி அவற்றை பதிப்பிக்க முயற்சிக்கிறார் என்று அவரது முதுமையான நாட்களை படம் விவரிக்கிறது
வணிக நோக்கத்திற்காக படத்தில் நான்ஷியுடன் கன்பூசியஸிற்கு ஏற்படுகின்ற காதலும், ஏக்கமும், தவிப்பும் கவர்ச்சியாக காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றன
கன்பூசியஸின் வாழ்க்கை குறித்த பிபிசியின் டாகுமெண்டரிப் படம் இதைவிடவும் சிறப்பானது, அவதார் படத்துடன் போட்டியிடுவதற்காக பெரிய பொருட்செலவில் உருவாக்கபட்ட கன்பூசியஸ் வெறும் அலங்காரத் தோரணமாகவே வெளியாகியுள்ளது
கன்பூசியஸை பற்றி அறிந்து கொள்ள வாசிக்கபட வேண்டிய நூல் The Analects of Confucius, இது அவரது அறக்கருத்துகளின் தொகைநூல், அதில் எனக்கு பிடித்தமானதொரு மேற்கோள் இருக்கிறது
To study and not think is a waste. To think and not study is a danger
••••

Monday, 22 July 2013

கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது

.. நீங்கள் கிரெடிட் கார்டு வாங்க நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் விண்ணப்பிக்கும் போது இந்த விஷயங்களை ஞாபகத்தில் வையுங்கள்.. 1. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நீங்களே நிரப்புங்கள். தேவையான போது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத் தொடர்ந்து, கிரெடிட் கார்டுக்காக தனியே ஒரு பைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பான பில்கள் உள்பட அனைத்து கடிதத் தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள். 2. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ளதையும், கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறை கையேட்டையும் பொறுமையாக, முழுமையாகப் படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெறத் தயங்காதீர்கள். 3. புதிய கிரெடிட் கார்டு வாங் கும் போது முடிந்தவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். அதற்காக கூடுதலாக மிகக் குறைந்த தொகைதான் வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக் கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை ஓரளவாவது தடுக்கும். 4. கிரெடிட் கார்டு தொலைந்து போனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் தனியே வைத்திருக்க மறக்காதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள்.
கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டதாக தோன்றினால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்யுங்கள். அப் போது பதிவெண் ஏதாவது வழங்கப்பட்டால், அதையும் குறிப்பிட்டு, எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள்.

நான் யார் வீரனா என்னை கேட்டால் நான் கோழை இல்லை

தான் பெரிய வீரனென்று தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச் செல்வான் ஒருவன் — அவன்தான்
நாடகத்தை ஆட வைக்கும் இறைவன்.
> கண்ணதாசன்.
————————————————————————–
பொண்டாட்டியை அடிப்பவன் அவளுக்கு மூன்று நாட்கள்
ஓய்வுகொடுத்துத் தானும் மூன்று நாள்
பட்டினியாயிருப்பான்!
————————————————————————–
அண்டை வீட்டாருக்கு காற்று வராதபடி உங்கள் சுவரை
அவர்கள் அனுமதியில்லாமல் உயரமாக எழுப்பாதீர்கள்
>நபிகள் நாயகம் (ஸல்)
————————————————————————-
தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை
உண்டாக்காது!
———————————————————————–
உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன்
மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்!
—————————————————————————-
அறிவே தந்தை, மனநிறைவே தாய்.
உண்மையே உடன் பிறந்த சகோதரன் என ஏற்றுக்கொண்ட
எவரும் எவருக்காகவும் அஞ்சாமல் வெற்றி பெறுவர்
>சீக்கியப் பழமொழி

1. புத்திசாலி ,பெண்களிடம் ”நீ பேசாமல் இருக்கும் போதுதான் அழகாக இருக்கிறாய்”என்பான்
2. குடிப்பதை நிறுத்த
கல்யாணத்திற்கு முன் – சோகமாக இருக்கும் போது குடி
கல்யாணத்திற்கு பின் – சந்தோசமாக இருக்கும் போது குடி
3. நண்பர்களை நேசி அவர்கள் சகோதரிகளை அல்ல….. சகோதரியை நேசி அவர்கள் நண்பர்களை அல்ல…
4. எல்லா மனிதனையும் தவறு செய்யும் போது வாழ்த்துவது கல்யாணத்தின் போதுதான்

கவிஞர் வாலி கவிதைகள்


கவிஞர் வாலி திருச்சி வானொலி நிலையத்தில் பணி புரிந்துக் கொண்டிருந்தபோது ஒரு கவிதை
எழுதினாராம்.
===
தன் தலையைச்
சீவியவனுக்கே !
தண்ணீர் தருகிறது
இளநீர் !!
-
—————————————-
மரம் பேசுவது போலான கவிஞர் வாலியின் கவிதையிது:
- நம்மைக் கொண்டு எத்தனை
சிலுவைகள் செய்கிறார்கள்..
ஆனால் அவர்களுக்குள் ஒரு
இயேசுவைப் படைக்க முடிய வில்லையே!

-

- கவிஞர் வாலி

கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள் குரு




1. பொருட்படுத்தாதீர்கள்.
உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்.
ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கை தான். எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்.
தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்.
பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

கண்ணன் vs ராதா but குரு..?????

ஒருநாள் ராதா துவாரகை நகருக்கு வந்தாள். ருக்மணி ராதாவை வரவேற்று பாலும் தேனும் கொடுத்தாள். இருவரும் கண்ணனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்னர் ராதா சென்று விட்டாள்.
அன்றிரவு கண்ணனுக்குப் பள்ளியறையில் ருக்மணி பாதபூஜை செய்தாள். அவன் பாதங்களில் சிறு கொப்புளங்கள் இருந்தன. இதைக் கண்ட ருக்மணி, கொப்புளங்கள் உண்டான காரணத்தைக் கேட்டாள்.
இன்று பகலில் ராதாவுக்குக் கொடுத்த பால் சூடாக இருந்தது. அதை பருகினாள். “”அவள் தன் இதயத்தில் பூஜிக்கும் என் பாதங்களில் பாலின்சூடு பட்டு இக்கொப்புளங்கள் உண்டாயின” என்றான் கண்ணன். ராதா பால் சூடாக இருந்ததாகச் சொல்லவில்லையே என்றாள் ருக்மணி. நீ பிரியமாகக் கொடுத்ததால் ராதா குடித்து விட்டாள். ஆனால், அவள் கொண்ட அன்பினால் நெஞ்சிலே குடியிருக்கும் என் பாதங்களில் சூடுபட்டு விட்டது.
உண்மையறிந்த ருக்மணி, “”உன் பாதங்கள் கோமளமானவை. அதைவிடக் கோமளமானது ராதையின் நெஞ்சம். என்னே! ராதாவின் பிரேமை!”என்று ருக்மணி வியந்தாள். சூடான பதார்த்தத்தை உண்பதில்லை என்பது காதலர் இலக்கணம். என்ன செய்வாள் ராதை! கொடுப்பவள் ருக்மணியாயிற்றே என்று பாலைக் குடித்து விட்டாள். ராதா தன் மீது கொண்டிருந்த ஈடு இணையற்ற அன்பை இதன் மூலம் கண்ணன் வெளிப்படுத்தினான்

எம். எஸ். சுப்புலட்சுமி (1916 - 2004) அஞ்சலி:


அடக்கம் அமரருள் உய்க்கும்
வாஸந்தி
அவர் ஓர் அசாதாரணக் கலைஞர் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. அவரது வாழ்வும் அசாதாரணமானது. “அவரைக் கலைவாணியின் ஸ்வரூபமாகப் பார்க்கிறேன். அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்ததை எனது பாக்கியமாகக் கருதுகிறேன்” என்று நெகிழ்ந்து சொன்னார் மாண்டலின் ஸ்ரீனிவாசன்.
நான் இசைக் கலைஞர் அல்ல. ரசிகை மட்டுமே. அண்மையில் அமரரான எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றின நினைவு வரும்போதெல்லாம் எனக்கும் அப்படித்தான் நெகிழ்ச்சி ஏற்படுகிறது.
கேட்பவரை உருகவைத்து, ஆன்மீக எல்லைக்கு அழைத்துச் சென்ற அவரது இசை தெய்வீகத்தன்மை கொண்டது எனப் பலர் பாராட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை அவர் பாடும்போதும் அவர் புதிய எல்லைகளைத் தொடுவதுபோலத் தோன்றும். தொலைந்துபோயிருந்த தமது ஆன்மாக்களை மீட்டெடுத்த பரவசம் கேட்பவரை ஆட்கொள்ளும். “அன்பே உருவான பாட்டி மேடையில் அமர்ந்ததும் ஒரு கடவுளாக மாறிப்போவது எனக்குப் பல முறை அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது” என்று அவருடைய பேத்தி கௌரி ராமநாராயணன் சொல்வார். அத்தன்மை சாமான்யர்களுக்கு வரக்கூடியதல்ல. எம்.எஸ்ஸுக்கு சங்கீதம் மட்டுமல்ல, வாழ்வும் ஒரு வேள்வியாகப் போனதாலேயே அந்த அற்புதம் நிகழ்ந்ததாகத் தோன்றுகிறது.
இசைக் கலைஞர்களையும் அவருடன் நெருங்கிப் பழகியவர்களையும் ஆகர்ஷித்தது அவரது உன்னத கலைத் திறன் மட்டுமல்ல. திறமைமிக்க கலைஞர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள் நம்மிடையே. ஆனால் எம். எஸ். என்னும் நபர் ஒப்பற்றவராக இருப்பதற்கு அன்பின் அடையாளமாக, பண்பின் இருப்பிடமாக, அடக்கத்தின் உறைவிடமாக வாழ்ந்த அவரது இயல்பே காரணம். அவரைப் பலமுறை நான் சந்தித்திருந்தாலும் பத்திரிகையாளர் என்னும் முறையில் இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பிற்காக அவரை இரண்டு மூன்று முறை பேட்டி காணச் சந்தித்து அளவளாவியதில் ஒரு மகா மனுஷியைச் சிறிதளவு அறியும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு சந்திப்பும் ஒரு ஆன்மீக அனுபவம்.
ஒவ்வொரு சந்திப்பின்போதும், பாரத ரத்னா விருது வாங்கிய பிறகும், “நா பாடுவேன்னே நினைக்கல்லே” என்பார் அடக்கமாக, உன்னத சங்கீதத்திற்கு இலக்கணம் எழுதப் பிறந்தவர் அவர் என்கிற பிரக்ஞை அற்றவராய். மதுரை சங்கீத உலகத்தில் பிரபலமான வீணைக் கலைஞர் சண்முக வடிவுக்கு செப். 16, 1916இல் பிறந்தார். சங்கீதம் மட்டுமே ஆஸ்தியாகக் கொண்ட சூழல். வீட்டில் தம்புரா ஒலி ரீங்கரித்துக்கொண்டே இருக்கும். குஞ்சம்மா என்ற சிறுமி சுப்புலட்சுமியின் உள் மனசு, விளையாடும்போதும் வீட்டில் வளையவரும்போதும் உறங்கும்போதும்கூட சதா சர்வ காலமும் இசையை முனகியபடி அந்த சுருதியுடன் லயித்து நிற்கும். கண்விழித்ததுமே இசைப் பயிற்சி. பயிற்சிக்குக் கால வரையறை கிடையாது. ஆறாம் வகுப்பில் பள்ளியில் படிக்கும்போது மூர்க்கமாக வாத்தியார் அடித்ததில் மயக்கம் போட்டு விழுந்த தனது அருமைக் குஞ்சம்மாவின் படிப்பிற்குச் சண்முக வடிவு முற்றுப்புள்ளி வைத்தார்.
குஞ்சம்மாவுக்குத் தான் பாடகியாகப்போவோம் என்கிற நினைப்பும் இல்லை; கனவும் இல்லை. அம்மா வீணை வாசித்தாலும், பெண்கள் “வெளியிலே பாடற துங்கறது எல்லாம் அப்போது கிடையாது.” அப்பா சுப்பிரமணி அய்யர் ஓர் இசைப் பிரியர். ராம நவமி உற்சவங்கள் கொண்டாடுவார். பெரிய வித்வான்கள் வந்து பாடுவதைக் கேட்கும் போது பிரமிப்பாக இருக்கும். அம்மாதான் முதல் குரு. அவருடன் சேர்ந்து 12 வயதில் மேடையேறிப் பாடியதுமே இசை வானில் ஒரு நட்சத்திரம் உதயமானதை இசை உலகம் இனம்கண்டது. பெண் பாடகர்கள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், 18 வயது சுப்புலட்சுமி சென்னை மியூசிக் அகாதமியில் பாடிச் சரித்திரம் படைத்தார்.
ஆனால் பாடகி ஆக வேண்டும் என்ற ஆர்வமோ ஆசையோ ஏற்படவில்லை. உண்மையில் பீதி ஏற்பட்டது. கலை உலகில் இருந்த ‘புரவலர்களின்’ ஆதிக்கப் பிடியில் நொறுங்கிவிடுவோம் என்று அச்சமேற்பட்டது. “கல்யாணம் பண்ணிண்டு நல்லபடியா இருந்தா போறும்” என்கிற பரிதவிப்பு இருந்தது.
அது ‘மத்திய வகுப்பு மனோபாவம்’ அல்ல. அவர் பிறந்த சமூகத்தில் இருந்த அன்றைய குரூர யதார்த்தத்தின் விளைவு. அவருடைய நல்ல காலம் டி.சதாசிவம் என்னும் காந்தியவாதியை, ரசிகரை, சந்தித்தார். சதாசிவத்தின் இரண்டாம் மனைவியாக, அவரது மகள்கள் ராதாவுக்கும் விஜயாவிற்கும் தாயாக இருக்க மனப்பூர்வமாகச் சம்மதித்த போது, ஒரு நல்ல குடும்பத் தலைவியாக இருந்தால் போதும் என்னும் எண்ணம் மட்டுமே இருந்தது. கணவர் பாட அனுமதித்திருக்காவிட்டாலும் வருத்தப்பட்டிருக்கமாட்டேன். இந்த வாழ்க்கையே போறும்னு நினைச்சிருப்பேன்.
ரசிகர்கள் செய்த அதிருஷ்டம், சதாசிவம் வேறு விதமாக நினைத்தார். குஞ்சம்மா குடத்துக் குத்துவிளக்கில்லை என்று உணர்ந்தார். அவர் சொன்னதாலேயே சுப்புலட்சுமி பாட ஆரம்பித்தார். அவர் சொன்னதாலேயே சாவித்ரி படத்தில் நாரதராக நடித்தார். அதில் சன்மானமாய்க் கிடைத்த ரூபாய் 50,000 கல்கி பத்திரிகை ஆரம்பிக்க உதவியது. கல்கத்தாவில் ஷூட்டிங் நடந்தபோது பிரபல வட இந்தியப் பாடகர்களான ஸய்கல், ஸன்யால், கே. ஸி. டே, இந்து பாலா, கானன் தேவி போன்ற கலைஞர்களின் பரிச்சயம் ஏற்பட்டது. பிறகு சதாசிவமே தயாரித்த மீரா படமும் அதன் ஹிந்தி வடிவமும் தேசிய அங்கீகாரம் கொடுத்தன. அதைப் பார்த்த சரோஜினி நாயிடு “மீராவாகவே ஆகிவிட்டார் சுப்பு லட்சுமி” என்றார். படத்தின் கடைசிக் காட்சியில் மீராவின் ஆன்மா கண்ணனின் சன்னிதியில் சங்கமித்தபோது சுப்புலட்சுமி உணர்ச்சிவசப்பட்டு மயங்கி விழுந்தார்.
மீராவுக்குக் கண்ணன் காட்டிய வழி. எம்.கூஎஸ். ஸுக்குக் கணவர் காட்டிய வழி. ராக சஞ்சாரங்களின் நெளிவு சுளிவுகளைவிட, தாளங்களின் காலப் பிரமாணக் கணக்குகளைவிட - இவற்றில் அவருக்கு அபார தேர்ச்சி இருந்தும் - பக்தி வெளிப்பாடுதான் முக்கியம் என்று சொன்னவர் சதாசிவம். இதனாலேயே விமர்சனங்கள் எழுந்தன. சங்கீத விதூஷகி என்று புகழப்படுபவர் கர்நாடக இசை மேடையைப் பஜனை மேடையாக்கிவிடுவது சங்கீதத்தின் துரதிருஷ்டம் என்னும் குற்றச்சாட்டுகள் கிளம்பின. ஆனால் குஞ்சம்மாவுக்குக் கணவர் சொல்லே வேத வாக்கு. அதை மீற வேண்டும் என்னும் எண்ணம்கூடத் தோன்றாது. பாடல்களின் மொழி தெரிந்தாலே அதன் பக்தி பாவத்தை வெளிப்படுத்துவது சாத்தியம் என்று மொழிப் பயிற்சி கிடைத்தது. மீரா பஜனையும் தும்ரியையும் பாடுவதற்கு நாராயண்ராவ் வியாசிடமும் சித்தேஷ்வரியிடமும் ஹிந்துஸ்தானி சங்கீதம் பயின்றார். திலிப் குமார் ராயிடம் வங்காளி பஜன்களையும் சாந்தா கோஷிடம் ரவீந்திர சங்கீத்தையும் கற்றார். “நீ அர்த்தம் உணர்ந்து பாடினா ஜனங்க உன் பக்கம் வருவா” என்றார் சதாசிவம். வந்தார்கள். திரள் திரளாக. கன்யாகுமரியிலிருந்து தில்லிவரை. கல்கத்தாவிலிருந்து மும்பைவரை. அவர் ‘சம்போ மஹாதேவா’ என்று பாடியபோது நாஸ்திகர்களும் நெகிழ்ந்தார்கள். ‘குறை ஒன்றுமில்லை’ என்று உருகி உருகிப் பாடுகையில் சாமான்யர்களும் கரைந்தார்கள்.
பாராட்டுகளும் விருதுகளும் அருளாய்ச் சுரந்தன. இந்த அனாயாசத்துக்குப் பின்னால் கடும் உழைப்பு இருந்தது. மகாப் பெரிய தொண்டு இருந்தது. 80 வயதுவரை 3 மணி நேரத்துக்குக் குறையாமல் சாதகம். கச்சேரி என்றால் ஓய்வே இல்லாத பயிற்சி. அப்படியும் ஒவ்வொரு முறை மேடை ஏறும்போதும் பயமேற்படும். “நல்லபடியாப் பாடணுமேன்னு.” தன்னம்பிக்கை இல்லாததால் அல்ல. ஆடியன்ஸை ஏமாற்றிவிடக் கூடாதே என்னும் பொறுப்புணர்ச்சியால். அதனாலேயே அவருக்குக் கிடைத்த கணக்கிலடங்கா விருதுகளும் பட்டங்களும் இறகுகளாய் அவரது தோளில் அமர்ந்தன. 1954 இல் பத்ம பூஷண்; 74இல் மகஸேஸே; 75இல் பத்ம விபூஷண்; 89இல் ஸ்பிரிட் ஆஃப் தி ஃப்ரீடம் விருது; 90இல் இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது. 1988இல் பாரத ரத்னா விருது அவருக்குக் கிடைத்தபோது, ‘இது கர்நாடக இசைக்குக் கிடைத்த கௌரவம்’ என்று மகிழ்ந்தார் வயலின் வித்வான் டி. என். கிருஷ்ணன்.
விருது அறிவிக்கப்பட்ட மறு நாள் காலை வாழ்த்துச் சொல்ல, பத்திரிக்கைக்கு பேட்டி காண நான் அவர் வீட்டிற்கு விரைந்தேன். கோட்டூர்புரத்தின் அந்த எளிய வீட்டின் சிறிய வரவேற்பறையின் சுவர்கள் அருள் பெற்றவை. ஐம்பதாண்டு இந்தியச் சுதந்திரத்தின் உன்னதத் தருணங்களைப் பறைசாற்றுபவை. அப்போது புதிய பெருமை சேர்ந்த அடக்கத்துடன் மௌனம் காத்தன. ஓரமாக சோபாவில் அவர் அமர்ந்திருந்தார். பாரதம் ஈன்ற ரத்தினங்களின் மாணிக்கம் - தபஸ்வியைப்போல - தன் தலையில் வீற்றிருந்த மகுடத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல். வயது ஏற ஏற அவரது முகப் பொலிவு கூடுவது எப்படி, 81 வயதில் நம்ப முடியாத இனிமையும் இளமையும் குரலில் இருப்பது எப்படி என்று நான் திகைக்கையில், தொலைபேசி ஒலித்த வண்ணம் இருந்தது. உறவினர்கள், நண்பர்கள், இசை உலகத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தார்கள். ஒவ்வொரு வாழ்த்துக்கும் நெகிழ்ந்து போனார். ‘பெரிய கௌரவம்தான் இது. ஆனா அவர் இல்லையே என்கிற குறைதான். ‘56 வருஷங்கள் தோழனாக, ஆசானாக, வழிகாட்டியாக, மாணிக்கத்தைக் கட்டிக் காக்கும் ராஜநாகம் போல இருந்த கணவர் சதாசிவம் இறந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. அந்த மகத்தான விருதைத் தனக்குக் கிடைத்த பெருமையாக மட்டும் ஏற்க அவர் மனசு கூச்சப்பட்டது தெரிந்தது.
மகாத்மா காந்தி அவரது ஆத்மார்த்த ரசிகர். 1941இல் சுப்புலட்சுமி கணவருடன் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்ற போது அது ஒரு அந்திப்போது. லாந்தர் விளக்கின் வெளிச்சத்தில் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது. அதன் இறுதியில் இளம் சுப்புலட்சுமியைப் பாடச் சொல்லிக் கேட்ட காந்தி சொக்கிப்போனார். “அவளது குரல் மிக இனிமை. பிரார்த்தனை கீதம் பாடும்போது தன்னை இழந்து பாடுகிறாள்” என்றார். 1947இல் தனது பிறந்த நாளன்று மீராவின் பஜனைப் பாட்டான ஹரி தும ஹரோவை சுப்புலட்சுமி பாடிக் கேட்க வேண்டும் என்னும் ஆசை வந்துவிட்டது அவருக்கு. சுசேதா கிருபளானி மூலம் சேதி அனுப்பினார்.
சுப்புலட்சுமிக்கு அந்தப் பாட்டே வராது. வேறு யாரையாவது பாடச் சொல்லுங்கள் என்று சதாசிவம் பதில் அனுப்பினார். “எனக்கு வேறு யாரும் பாடுவதைவிட சுப்புலட்சுமி பாட்டைப் பேசினால்கூடப் போதும்” என்றார் காந்தி விடாப்பிடியாக. ஓர் இரவுப் போதில் பாட்டைக் கற்று அப்பியாசம் பண்ணிப் பதிவுசெய்து, ஒலி நாடா விமானத்தில் தில்லிக்கு அனுப்பப்பட்டது. “ஹரி, நீதான் மக்களின் துயரத்தைக் களைய வேண்டும்” என்று மனத்தை நெக்குருகச் செய்த அந்த குரலைக் கேட்டு அனுபவித்த அந்த நாள் காந்தி உயிருடன் இருந்த அவரது கடைசிப் பிறந்த நாளாயிற்று.
“உங்களை மிகவும் வேதனைப்படுத்தும் விஷயம் என்ன?” என்று ஒரு முறை எம். எஸ். ஸைக் கேட்டேன். “வெளியில் செல்லும்போது இன்னமும் கண்ணில்படுகிற ஏழ்மை” என்றார் உடனடியாக. “சுதந்திரம் வந்து இத்தனை வருஷமாச்சு. ஏன் இன்னும் நம்மாலெ இந்த ஏழ்மையைக் களைய முடியல்லேன்னு ரொம்ப வேதனையா இருக்கு. என்னாலெ என்ன செய்ய முடியும்? நமக்குக் கீழ வேலை செய்யறவாளுக்கு சாப்பாடு போடலாம்; பெனிபிஃட் கச்சேரி செய்யலாம்.” இந்த வேதனையே, சங்கீதத்தில் கிடைத்த கோடிக்கணக்கான வருமானத்தையெல்லாம் தருமத்துக்குக் கொடுத்துவிட வேண்டும் என்னும் கொள்கைக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். கல்கி கார்டன்ஸில் மிக அமோகமாக வாழ்ந்த நாள்கள் உண்டு. பிறகு பணக் கஷ்டம் ஏற்பட்டு வாடகை வீட்டில் இருந்த நாளும் உண்டு. அத்தனை சம்பாதித்தும் தேவையான அளவு போதும் என்னும் நினைப்பால், கடைசியில் அவரிடம் இருந்தது ஒரு சிறிய வீடு மட்டுமே.
ஒரு முறை ‘உங்களது இலக்கு என்ன?’ என்று கேட்டபோது ‘பரிபூரணத்தை எட்டுவது’ என்றார். அவரே அதுவாக ஆன அற்புதம்தான் அவரது சரித்திரம். இருந்தும், 21ஆம் நூற்றாண்டுப் பெண்ணான எனக்கு அவரது பதி விசுவாசமும் கேள்வி எழுப்பாத பணிவும் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. சதாசிவத்தைத் திருமணம் செய்து கொண்டபோது இசைவானில் ஒரு பிரகாசமான தாரகையாக அடையாளம் காணப்பட்டிருந்தவர். அப்படியும் கணவர் பாட அனுமதித்த பிறகே பாட முன்வந்ததாகச் சொன்னார். பாடத் தடை விதித்திருந்தாலும் தமக்குக் குறை இருந்திருக்காது என்றார். என்னால் நம்ப முடியவில்லை. ‘குறை ஒன்றுமில்லை’ என்று பாடிக் கண்ணில் நீரை வரவழைத்த அந்தப் பெண்மணிக்கு உண்மையிலேயே குறை ஒன்றும் இருந்திருக்காதா? வருத்தமிருக்கவில்லையா? கோபப்பட்டதில்லையா? இல்லை என்றபோது நம்பத்தான் முடியவில்லை. ஏதுமறியாச் சாதுப் பெண் அல்ல அவர். அவரது பேச்சில் அறிவுச் சுடர் தெறித்தது; உலக விவரம் தெரிந்திருந்தது; நாகரிகத்தின் உருவமாக இருந்தார்.
“பெண்ணியம், பெண்ணுரிமை இவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டேன். “நா படிக்காதவ. என்ன சொல்றதுன்னு தெரியல்லே” என்றார். “பெண் பிரச்னைகள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியா இருக்கும். பொதுவான தீர்வு சொல்ல முடியாது. அவரவர்களுடைய பிரச்னை அவரவர்களுக்குத்தான் புரியும். அவர்களேதான் விவேகத்தோடு தீர்த்துக்கணும்.”
அவர் எப்படித் தமதைத் தீர்த்துக்கொண்டார் என்று நான் கேட்கவில்லை. தமக்குள் பேசுபவர்போலச் சொன்னார். “பொறுமை வேணும். கொஞ்சம் விட்டுக் கொடுத்தா புருஷா தன்னாலெ வருவா.”
மெல்லிய வெளிச்சம் கிடைத்தது போலிருந்தது. அது அவருடைய உத்தி. தனது இலக்கை அடைய அந்த உத்தியே சிறந்தது என்று புரிந்துகொண்ட விவேகம். அல்லது ஞானம்.
ஒரு முறை சந்திப்புக்கு பின் வெளியில் அமர்ந்திருந்த சதாசிவத்திடம் கேட்டேன்.
“சுப்புலக்ஷ்மியின் தனிப்பட்ட சிறப்பு என்ன என்னும் நினைக்கிறீர்கள்?”
“அவளுடைய அடக்கம்” என்றார்