வசந்தமோகன் vasanthmoga@gmail.com
கே: நான் தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்து ஒரு மரச் சாமான்கள் தயாரிக்கும் கம்பெனியில் தொழிலாளராக வேலைக்குச் சேர்ந்தேன். என்னுடைய திறமையைப் பார்த்த சீன முதலாளி எனக்கு கணக்கர் வேலையைக் கொடுத்தார். நான் ஒரு பட்டதாரி. என் கம்பெனியில் இருந்து சாமான்களை வாங்கிய மற்ற கம்பெனிகளுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பி பணத்தைக் கட்ட சொல்ல நினைவூட்டுவது என் பொறுப்பு.
கே: நான் தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்து ஒரு மரச் சாமான்கள் தயாரிக்கும் கம்பெனியில் தொழிலாளராக வேலைக்குச் சேர்ந்தேன். என்னுடைய திறமையைப் பார்த்த சீன முதலாளி எனக்கு கணக்கர் வேலையைக் கொடுத்தார். நான் ஒரு பட்டதாரி. என் கம்பெனியில் இருந்து சாமான்களை வாங்கிய மற்ற கம்பெனிகளுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பி பணத்தைக் கட்ட சொல்ல நினைவூட்டுவது என் பொறுப்பு.
நான் மின்னஞ்சல்களை அனுப்பிய பிறகும் ‘இல்லை’ என்று சொல்லி என் முதலாளியிடம் சொல்கிறார்கள். அதனால், நான் என் வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்று என் முதலாளி நினைக்கிறார். என்னை வேலையில் இருந்து நிறுத்துவதற்கு சிலர் திட்டம் போட்டு சதி வேலை செய்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது.
நான் ஒரு தமிழன். அதுவும் இந்தியாவில் இருந்து வந்தவன். கிராணி வேலை செய்வது சில சீனர்களுக்கு பிடிக்கவில்லை. எப்படியாவது என்னை வேலையில் இருந்து நிறுத்திவிட வேண்டும் என்றே தொல்லை கொடுக்கிறார்கள். நான் அனுப்பிய மின்னஞ்சல்கள் அவ்ர்களிடம் போய்ச் சேர்ந்துவிட்டது என்று எப்படி என் முதலாளியிடம் நிரூபிப்பது? நான் ஜிமெயில் பயன்படுத்துகிறேன்.
ப: மேய்கிற மாட்டை நசுக்குகிற மாடு கதை தெரியும் தானே. தானும் மேயாது. மேய்கிற மாட்டையும் மேயவிடாது. அந்த மாதிரி சில சோறு தின்கிற மாடுகளும் நம்மோடு இருக்கத்தான் செய்கின்றன. நீங்கள் நல்லா இருப்பது சில மாடுகளுக்குப் பிடிக்கவில்லை. கவலையை விடுங்கள். அவற்றைப் பெரிது படுத்த வேண்டாம்.
மின்னஞ்சல்கள் அனுப்பியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று தப்பு தாளம் வாசிக்கிறார்கள் என்றால் அங்கே ஏதோ திருகுதாளம் நடக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு ஒரு வழி இருக்கிறது. Track all your sent emails in Gmailஎனும் ஒரு சின்ன நிரலி இருக்கிறது. http://www.techshortly.com/2012/04/track-all-your-sent-emails-in-gmail.html எனும் இணையத் தளத்திற்குப் போய் அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்து, அதை உங்கள் கணினியில் பதித்துக் கொள்ளுங்கள்.
அடுத்த முறை மின்னஞ்சல் அனுப்பும் போது Track எனும் பொத்தானைச் சொடுக்கி விடுங்கள். அவர் அங்கே மின்னஞ்சலைத் திறந்ததும், இங்கே உங்களுக்கு பச்சை விளக்கு எரியும். மின்னஞ்சலைத் திறந்து படித்துவிட்டு ‘நான் உன் மெயிலை பார்க்கவே இல்ல... படிக்கவே இல்லை’ என்றால்... அந்த பச்சியிடம் கொஞ்சம் பிச்சியே பழகுங்கள்.
பணத்திற்காக சொந்த இரத்த பாசத்தையே விலை பேசுகின்ற உலகத்தில் வாழ்கிறீர்கள் ஐயா வசந்தமோகன். அதுவும் நாடு விட்டு நாடு வந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு உதவி செய்ய வேண்டியது எங்களுடைய கடமை. பண உதவியைத் தவிர வேறு உதவி கேளுங்கள். செய்யத் தயாராக இருக்கிறேன்.
கே:இணையக்கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியா எத்தனை மொழிகளில் வெளிவருகிறது. எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள்? அதில் யார் எந்தக் கட்டுரையை எழுதியது என்று எப்படி கண்டுபிடிப்பது?
அவர்களில் சிறப்பாகப் பங்களித்து வரும் சிலரைப் பற்றிய விவரங்களைhttp://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பங்களிப்பாளர்_அறிமுகம்/ எனும் தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அவர்களில் ஒருவர் மலேயசித் தமிழர். அவர் யார் என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
யார் எந்தக் கட்டுரையை எழுதியது என்று கண்டுபிடிக்க வழி இருக்கிறது. எடுத்துக்காட்டாக ’புடு சிறைச்சாலை’ என்று தட்டச்சு செய்தால் புடு சிறைச்சாலை பற்றிய கட்டுரையின் பக்கத்திற்கு போகும். அங்கே ‘வரலாற்றைக் காட்டவும்’ என்பதைச் சொடுக்குங்கள். அதில் யார், எப்போது எழுதியது என்பது தெரிந்துவிடும்.
No comments:
Post a Comment
THANK YOU