|
எண் | பொது அறிவு வினா | விடை |
1. | நம்முடலில் காது, மூக்கு, தொண்டை இவற்றை இவற்றையிணைத்து காற்றழுத்தம் நிலைபெற உதவும் குழாய்கள் எவை | எஸ்டேஷியன் குழாய்கள் |
2. | மசி நிரப்பி எழுதக் கூடிய பேனாவைக் கண்டுபிடித்தவர் யார் | திரு வாட்டர்மேன் |
3. | தாவரங்களுக்கும் உயிருண்டு என்றறிந்தவர் யார் | டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸ் |
4. | சர்க்கோஃபேகஸ் என்பது என்ன | கல்லாலான சவப் பெட்டி |
5. | மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை | இருபத்தாறு |
6. | செவிப்பறையின் ஆங்கில/அறிவியற் பெயரெது | டிம்பேனிக் மெம்பரேன் |
7. | செல்பேசியில் GSM, CDMA, GPRS விரிவாக்கம் என்ன | GSM - க்ளோபல் சிஸ்டம் ஃபார் மொபைல் கம்யூனிகேஷன். CDMA - கோட் டிவிஷன் மல்டிப்பிள் அக்ஸஸ். GPRS - ஜெனரல் பேக்கட் ரேடியோ சர்வீஸ். |
8. | கங்காரு - மீன்கள் - பறவைகள் கூட்டத்தை எப்படியழைக்கிறார்கள் | முறையே மாப் (mob) - ஸ்கூல்(school) - ஃப்ளாக்(flock) |
9. | உலகின் மிகச் சிறிய உயிரினம் எது | நுண்ணுயிரி (அ) வைரஸ் |
10. | கிருமிகளை அழிப்பது ஆண்டிபயாட்டிக்(அ)நோயெதிர்ப்பு மருந்து - நுண்ணுயிரிகளை எதிர்ப்பது | முன்தடுப்பு மருந்து (அ) வாக்ஸின் |
11. | பொட்டாசிய, சோடியத் தனிமங்களை கண்டறிந்தவர் | சர். ஹம்ஃப்ரே டேவி |
12. | நாயினம் - பூனையினம் - அறிவியற் பொதுப் பெயரெது | முறையே கேனைன், ஃபெலின் |
13. | கணினியைக் கண்டறிந்தவர் யார் | சார்லஸ் பேபேஜ் |
14. | தொலைபேசியைக் கண்டறிந்தவர் யார் | கிரஹாம் பெல் |
15. | வானொலியைக் கண்டறிந்தவர் யார் | மார்க்கோனி |
16. | மிதிவண்டியைக் கண்டறிந்தவர் யார் | மேக்மில்லன் |
17. | புகைவண்டியைக் கண்டறிந்தவர் யார் | ஜார்ஜ் ஸ்டீவன்சன் |
18. | நீராவிசக்தியைக் கண்டறிந்தவர் யார் | ஜேம்ஸ் வாட் |
19. | தமிழில் இன்றிருக்கும் மிகப் பழமையான நூலெது | தொல்காப்பியம் |
20. | பூமியில் கண்டங்கள் நகர்கின்றன என்று முதலில்சொன்னவர் | வேகெனர் |
21. | மனித உடலில் இலியம் எங்கிருக்கிறது | இடுப்பு (அ) இடுப்பெலும்பில் |
22. | 2004ம் ஆண்டு வேதியல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் | வேதியல்(chemistry): இஸ்ரேல் நாட்டின்; (அ).திரு ஆரோன் க்ளேஷனொவெர் (ஆ).திரு அவ்ரம் ஹெர்ஷ்க்கோ (இ).திரு இர்வின் ரோஸ், அமெரிக்கா |
23. | 2004ம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் | இயற்பியல்(Physics): அமெரிக்க நாட்டின்; (அ).திரு எச். டேவிட் பொலிட்ஸர் (ஆ).திரு ஃப்ராங்க் வில்ச்செக் (இ).திரு டேவிட் ஜே. க்ராஸ் |
24. | 2004ம் ஆண்டு மருத்துவ நோபல் பரிசு வென்றவர்கள் யார் | மருத்துவம்(Medicine): அமெரிக்க நாட்டின்; (அ).திரு ரிச்சர்ட் அக்ஸல் (ஆ).திருமதி லிண்டா பக் |
25. | 2004ம் ஆண்டு இலக்கிய நோபல் பரிசு வென்றவர்கள் யார் | இலக்கியம்(Literature): (அ).திருமதி எல்ஃப்ரைட் ஜெலினெக், ஆஸ்திரியா |
26. | 2004ம் ஆண்டு பொருளாதார நோபல் பரிசு வென்றவர்கள் யார் | பொருளாதாரம்(economics): அமெரிக்க நாட்டின்; (அ).ஃப்ளின் இ. கெய்ட்லாண்ட். (ஆ).எட்வர்டு சி. ப்ரஸ்காட். |
27. | சூரியனுக்கடுத்தபடி சூரியக் குடும்பத்திற்கு மிக அருகிலுள்ள விண்மீன் எது | அல்ஃபா செண்டாரி |
28. | மிகவும் ஒளிர்கின்ற விண்மீன் எது | சிரியஸ் (நாய் விண்மீன்) |
29. | சாதாரணமாக வெறுங் கண்ணுக்குப் புலப்படும் விண்மீன்கள் எத்தனை | சுமார் 5700 |
30. | மிகப் பெரிய வால்விண்மீன் எது | ஹோம்ஸ் |
31. | ஒரு ஒளியாண்டு என்பதென்ன | 9.46 இலட்சங் கோடி கிலோமீட்டர்கள் |
32. | பல்ஸார் என்பது என்ன | அதிவேகமாக சுழலும் நியுட்ரான் விண்மீன்கள் |
33. | குவாஸர் என்பது என்ன | நூதனமான வானொலி விண்மீன்கூட்டம் (mysterious radio galaxies mistaken for star) |
34. | தொலைநோக்காடியை கண்டறிந்தவர் யார் | ஹான்ஸ் லிப்பர்சே (கலிலியோ மேம்படுத்தினார்) |
35. | வானொலி தொலைநோக்காடி கண்டறிந்தவர் யார் | கார்ல் ஜேன்ஸ்கி (கோர்ட்டே ரெப்பர் மேம்படுத்தினார்) |
36. | இராசிக் (zodioc)குறியீடுகளை அளித்தவர் யார் | பாபிலோனியர்கள் |
37. | முதல் விண்வெளி வீரர் யார் | யூரி காகாரின் - வோஸ்டாக் 1-12.4.1961 |
38. | முதல் விண்வெளி வீராங்கனை யார் | வாலண்டீனா டெரெஸ்கோவா வோஸ்டாக்6 - 16th june, 1963 |
39. | இந்திய விண்வெளியியலில் தந்தை யார் | ஆரிய பட்டா |
40. | முதல் இந்திய செயற்கைக்கோள் எது | ஆரியபட்டா - 19.4.1975 இரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டது. |
41. | ஒரு விண்வெளியாண்டு என்பது என்ன | பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப் பாதை -2500 இலட்சம் ஆண்டுகள் |
42. | அரோரா என்பது என்ன | துருவ வெளிகளில் எப்போதாவது தோன்றும் நூதனமான ஒளிர்வு |
43. | காணப்படும் துருவ ஒளிர்வுகள் எவை | (அ).அரோரா போரிலிஸ் - வட துருவம் (ஆ).அரோரா அஸ்ட்ராலிஸ் - தென் துருவம் |
44. | வான் ஆலன் பெல்ட் என்பது என்ன | லோனோஸ்பியரிலுள்ள ஓஸோன் படலம் |
45. | எரிமீன் என்பதென்ன? (meteor) | விண்வெளியில் மிதந்து வரும் விண்கற்கள்/ சிறு திண்மைப் பகுதிகள் பூமியின் வளிவட்டத்தில் நுழைகையில் உராய்வினால் எரிந்தழியும் ஒளிர்வே! |
46. | விண்கற்கள் என்பவை என்ன? (meteorite) | மேலே சொன்னபடி முழுதும் எரியாமல் மிஞ்சி வந்து தரையில் விழும் சிறு திண்மைப் பகுதிகள் |
47. | சூரிய குடும்பத்தில் குறைந்த எடைகொண்டதும், வளிமண்டலமில்லாததுமான கோள் எது | புதன் |
48. | சூரிய குடும்பத்தில் எதிர்மறையாகவும் ஏறக்குறைய வட்டப் பாதையிலும் சுழலும் கோள் எது | வீனஸ் |
49. | சூரிய குடும்பத்தின் சிவந்தநிற கோளும் அதன் துணைக் கோள்களும் யாவை | செவ்வாய் - ஃபோபோஸ், டெய்மோஸ் |
50. | சூரிய குடும்பத்தின் பிற எட்டுகோள்களின் எடைபோல இரு மடங்கு எடை கொண்டதும், மிகப் பெரியதுமான கோள் எது | வியாழன் |
51. | சூரிய குடும்பத்தில் இரண்டாவது மிகப்பெரியதும், தன்னைச்சுற்றி வளையங்கள் கொண்டதுமான கோள் எது | சனி |
52. | சூரிய குடும்பத்தில் சனிக்கு அடுத்தபடி வளையங்கள் கொண்டதும், சூரியனைச் சுற்ற 84.21 பூமியாண்டுகள் எடுத்துக் கொள்ளும் கோள் எது | யுரேனஸ் |
53. | சூரிய குடும்பத்தில் சூரியனைச் சுற்ற 164.79பூமியாண்டு எடுத்துக் கொள்ளும்கோள் எது | நெப்டியூன் |
54. | சூரிய குடும்பத்தில் மிகச்சிறியதும், கடைசியாக கண்டுபிடிக்கப் பட்டதுமான கோள் எது | புளூட்டோ |
55. | புவியின் இயற்கை துணைக்கோளான நிலவில் முதலில் கால் பதித்தவர் யார் | நீல் ஆர்ம்ஸ்ட்ராங் |
56. | கிருமியைக் கண்டறிந்தவர் யார் | ஆண்டன் வான் லீயு வென்ஹோக் - 1676 |
57. | மனிதனின் அறிவியற் பெயரென்ன | ஹோமோ சாப்பியன் |
58. | செஃபலோபோட் என்றழைக்கப் படும் ஒடுடலிகள் எவை | ஆக்டோபஸ்/ஸ்குவிட் |
59. | நீண்டகாலம்/குறைந்தகாலம் வாழும் பூச்சிகள் எவை | (அ).மே ஈ - 4/5 மணி (ஆ).அரசிக் கரையான் - 15/20 ஆண்டுகள் |
60. | லெபிடோப்பெட்ரா என்றால் என்ன | செதிள்களால் மூடிய இறகுடயவை - வண்ணத்துபூச்சிகள் |
61. | கடும் நஞ்சுள்ள பல்லியின ஊர்வன எது | கிலா மான்ஸ்டர் |
62. | உலகில் நீண்ட நாள் வாழும் உயிரினம் எது | கலபாகோஸில் வாழும் நில ஆமைகள் - இருநூற்றம்பது (அ) முன்னூறு ஆண்டுகள் |
63. | உடலின் குருதியோட்டத்தைக் கண்டறிந்தவர் யார் | வில்லியம் ஹார்வே - இங்கிலாந்து - ஆயிரத்து அறுநூற்று இருபத்து எட்டாமாண்டு |
64. | மருத்துவரின் ஸ்டெத்தொஸ்கோப் கண்டறிந்தவர் யார் | ரெனே லெனாக் - பிரான்ஸ் - ஆயிரத்து எண்ணூற்று பத்தொன்பதாம் ஆண்டு |
65. | தபால்தலைகளில் நாட்டின் பெயரை பயன்படுத்தாத நாடு எது | இங்கிலாந்து |
66. | உலகின் மிகச்சிறிய நாடு எது | போப் ஆண்டவர் வசிப்பிடமான வாடிக்கன் நகரம் |
67. | இன்றைய புதிய விண்வெளிக் கண்டுபிடிப்பு என்ன | மேலும் எட்டு கோள்கள் சூரியனை சுற்றுவதை 16.10.2001அன்று கண்டறியப் பட்டது |
68. | மிக அதிகமான துணைக்கோள்கள் கொண்ட சூரியக் குடும்பக் கோள் எது | வியாழன் - முப்பத்தொன்பது துணைக் கோள்கள் |
69. | முதல் தொலைக் காட்சியை கண்டறிந்தவர் யார் | ஜான் லாஜிக் பேயர்ட் - இங்கிலாந்து - 1926 |
70. | முதல் இந்திய தொலைக் காட்சி ஒளிபரப்பானது எப்போது | 15ம் தேதி செப்டம்பர், 1959 |
71. | மோனாலிசா, லாஸ்ட் சப்பர் படங்களை வரைந்தவர் யார் | லியானார்டோ டாவின்சி |
72. | உலகின் மிகப் பெரிய விலங்கினம் எது | நீலத் திமிங்கிலம் - சுமார் முப்பது அடி நீளமும், 6500 கி.கி எடையுங் கொண்டது |
73. | புதுமை ஒவியர் பாப்லோ பிகாஸோவின் நாடு எது | ஸ்பெயின் |
74. | தான் செவிடான பின்னும் இசை இயற்றியவர் யார் | லுட்விக் வான் பீத்தோவன் |
75. | மேல்நாட்டு இசையில் அல்டோ, காண்ட்ரால்டோ என்பவை யாவை | அல்டோ - ஆணின் உயர் குரல் காண்ட்ரால்டோ - பெண்ணின் உயர் குரல் |
76. | இசைக்கு முன்னிடம் கொடுத்த மறை எது | சாம மறை |
77. | வீரர்களின் செயலை சொல்லும் பல கவிஞர்கள் யாத்த 400 தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு எது | புறநானூறு |
78. | இந்திய நாட்டுப்பண் இயற்றியவர் யார் | இரவீந்திரநாத் தாகூர் |
79. | இந்திய நாட்டுப்பாடல் இயற்றியவர் யார் | பங்கிம் சந்திர சாட்டர்ஜி |
80. | இந்திய நாட்டுப்பாடலை மொழியாக்கம் செய்தவர் யார் | திரு அரவிந்தர் |
81. | இந்திய நாட்டுவிலங்கு எது | வேங்கை |
82. | இந்திய நாட்டுப்பறவை எது | மயில் |
83. | இந்திய நாட்டுமலர் எது | தாமரை |
84. | தந்திமுறை கண்டறிந்தவர் யார் | சாமுவல் மோர்ஸ் - 1837. |
85. | இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் யார் | ராக்கேஷ் ஷர்மா |
86. | இந்தியாவிலேயே தயாரித்து ஏவப்பட்ட முதல் செயற்கைக் கோள் எது | இன்சாட்-2A |
87. | உலகின் நான்கு மாகடல்களில் மிகப் பெரியது எது | பசிபிக் மாகடல் - ஒரு இலட்சத்து அறுபத்தைந்தாயிரத்து முன்னூற்று எண்பத்து நான்கு ச.கி |
88. | எபிசெண்டர் என்றால் என்ன | பூகம்பத்தின் தோற்றுவாய் |
89. | உலகின் மிகப் பெரிய உப்புநீர் ஏரி எது | ஈகாஸ்பியன் கடல் - இரஷ்யா / இரான் - 393,898 ச.கி |
90. | உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரி எது | சுப்பீரியர் - அமெரிக்கா/கனடா - 32,103 ச.கி |
91. | உலகின் மிக உயரமான அருவி எது | ஏஞ்சல் - வெனிசுவேலா - 3212 அடி |
92. | உலகின் மிக நீளமான நதி எது | அமேசான் - தென்னமெரிக்கா - 6750 கி.மீ |
93. | உலகின் மிக உயரமான மலைச்சிகரம் எது | எவரெஸ்ட் - நேபாளம் - 8848 மீட்டர்கள் |
94. | உலகின் மிகப் பெரிய பாலைநிலம் எது | சகாரா - வட ஆப்பிரிக்கா - 8400000 ச.கி |
95. | உலகின் மிகப் பெரிய நிலப்பகுதி எது | ஆசியா - 44387000 ச.கி |
96. | ஈராக்கின் முன்னாள் பெயர் என்ன | மெசோபோட்டாமியா |
97. | டாஸ்மேனியாவைக் கண்டறிந்தவர் யார் | அபெல் டாஸ்மேன் - 1642 |
98. | கிருமிகள் தாவர வகையைச் சார்ந்தவையெனக் கண்டறிந்தவர் யார் | கார்ல் வில்ஹெம் வோன் நிகோல் - 1857 |
99. | தாவர செல்லைக் கண்டறிந்தவர் யார் | ஷெலெய்டென், ராபர்ட் ஹூக் - 1665 |
100. | உலகின் மிக உயரமான மரம் எது | இராட்சச செக்கோயா - அமெரிக்கா - 83 மீட்டர்(275 feet) |
No comments:
Post a Comment
THANK YOU