அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார் என்று தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். ’கிறிஸ்தபர் கொலம்பஸ்’ என்று பதில் வரும். சிலர் அவரை மாவீரன் கொலம்பஸ் என்று புகழாரம் சூட்டுவார்கள். சிலர் மனிதர்களில் மாணிக்கம் என்றும் பரிவாரம் கட்டுவார்கள். சிலர் இமயத்தின் சிகரத்தில்வைத்து ஏற்றி வைப்பார்கள். இன்னும் சிலர் அமெரிக்காவைத் தேடி வந்த இமயவர்மன் என்றும் பாலாபிஷேகம் செய்வார்கள்.
ஆனால், நிஜ வாழ்க்கையில் அவர் மனுக்குலத்தின் மனதில் நிலைத்து நிற்கும் தகுதியை இழந்து விட்டார். அதுதான் உண்மையான உண்மை. பள்ளி வரலாற்றுப் புத்தகங்களைப் புரட்டிப் பாருங்கள். கொலம்பஸ் என்பவர் உலகின் உன்னதமான கண்டுபிடிப்பாளராகச் சித்தரிக்கப் படுகிறார். கல்லூரி நூலகங்களில் தேடிப் பாருங்கள். புதிய உலகைக் கண்டுபிடித்த ஓர் அவதாரப் புருஷனாகச் சிறப்புச் செய்யப் படுகிறார். உண்மைதான்.
தூக்கில் தொங்கும் அரவாக் பெண்கள் |
அவருடைய மறுபக்கத்தைக் கொஞ்சம் திருப்பிப் பார்த்தால் மூச்சு அடைத்து பேச்சு நின்று போகும். அந்த அளவிற்கு திடுக்கிடும் அலி பாபா கதைகள் மூட்டை மூட்டையாகக் இருக்கின்றன. அவற்றைக் கட்டிக் கொண்டு ஓடும் கொலம்பஸ் எனும் தனிமனிதர், மனித நீரோட்டத்தில் மூழ்கடிக்கப் படுகிறார். அந்தக் கதைகள் இதிகாச இடிச்சுவர்களாகவும் மாறிப் போகின்றன.
அரவாக் மக்கள் |
கொலம்பஸ், ஒரு பாவப்பட்ட ஜென்மமாகத் தெரிகின்றார். கொலம்பஸ் ஒரு பரிதாபப் பிறவியாகவும் மங்கிப் போகிறார். உண்மையிலேயே அவரை இட்லருக்கு ஜோடியாக சேர்க்கலாம். அல்லது அடுத்த வாரிசாக இடி அமினைக் கூட்டு சேர்க்கலாம். தப்பே இல்லை.
(சான்று:http://kathmanduk2.wordpress.com/2007/10/09/in-1492-columbus-sailed-the-ocean-blue/)
(சான்று:http://kathmanduk2.wordpress.com/2007/10/09/in-1492-columbus-sailed-the-ocean-blue/)
ஏன் தெரியுமா? அவர் செய்த பாவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. உலகத்தின் படு மோசமான சித்ரவதைகளுக்கும் ஒரே ஓர் ஓட்டுச் சாவடியாக வாழ்ந்து திகழ்ந்தவர் தான் இந்தக் கொலம்பஸ். இப்படி சொன்னால் நீங்கள் என்னை நம்புவீர்களா என்று தெரியவில்லை. நம்புவதும் நம்பாததும் ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், நான் சொல்லப் போகும் இந்த உண்மைகள் சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது.
ஆக, எல்லாருக்கும் தெரிய வைப்பதே நல்லது. கோகினூர் வைரத்திற்கும் கோலார் தங்கத்திற்கும் வித்தியாசம் இருப்பது தெரியும் அல்லவா. அதே போல கொலம்பஸின் உண்மையான அகத்திற்கும் புறத்திற்கும் இடையே நிலவும் வித்தியாசம் தெரிய வேண்டும் அல்லவா?
பணம், புகழ், செல்வாக்கிற்காகப் பல ஆயிரம் சாமான்ய மனிதர்களை வெட்டிச் சாய்த்தவர்தான் இந்தக் கொலம்பஸ். அந்தச் சமாதிகளில் கன்னிப் பெண்களைக் கட்டி வைத்து காமக் களியாட்டம் போட்டவர் தான் இந்தக் கொலம்பஸ். உடல்பசிக்கு சின்னஞ்சிறு சிறுமிகளைக் கிழித்துப் போட்டு தாண்டவம் ஆடியவர்தான் இந்தக் கொலம்பஸ்.
(கீழ்க்காணும் இணையத் தளத்தில் ஹாயித்தி நாட்டு மக்களை எப்படி விலங்கிட்டு அடிமைகள் ஆக்கினார்; இளம் பெண்களை நூற்றுக்கணக்கில் பிடித்துக் கொண்டு போய் ஐரோப்பாவில் விற்று காசு பார்த்தார் எனும் விவரங்கள் உள்ளன. இவருடைய காம சேட்டைகளுக்கு அளவே இல்லை. அவற்றை நான் இங்கே எழுதவில்லை.
(சான்று: http://www.4tamilmedia.com/special/republish/1392-2011-10-13-07-16-01)
(சான்று: http://www.4tamilmedia.com/special/republish/1392-2011-10-13-07-16-01)
கொலம்பஸின் படத்தைப் பாருங்கள். பால் வடியும் முகம் என்று சொல்வார்களே அதே முகம். அந்தப் பால்முகத்தின் மறுபக்கத்தைத் திருப்பிப் போடுகிறேன். படியுங்கள். படித்து விட்டு கொலம்பஸ் கொன்று குவித்த அந்த வெள்ளந்தி மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துங்கள். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் இறுதிக் கடனாக அமையட்டும்.
யார் இந்த கொலம்பஸ் Christopher Columbus? இத்தாலியின் ஜெனோவா என்ற ஊரில் 1451-இல் பிறந்தவர். இவர் ஒரு கடல் பயணி. ஒரு வணிகர். 1492-இல் அட்லாண்டிக் மாக்கடலைக் கடந்து கரிபிய தீவுகளுக்கு வந்த முதல் ஐரோப்பியர். இதுவும் தவறு தான். ஏனென்றால் அங்கே ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆக, அந்த நாடுகளை வெளியுலகத்திற்கு விளம்பரம் செய்த பெருமையை மட்டும் இவருக்கு கொடுக்கலாம்.
பதின்நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சீனர்கள், ஜப்பானியர்கள், ஆசிய நாட்டவர்கள் பெர்ரிங் நீரிணை வழியாக அமெரிக்காவில் நுழைந்து கொடி கட்டி விட்டனர். அவர்களின் கலப்புதான் இப்போதைய அமெரிக்கச் சிவப்பு இந்தியர்கள். 1002-இல் வைக்கிங் இனத்தைச் சேர்ந்த லெய்ப் எரிக்சன் (Leif Erikson) என்பவர் கனடாவில் தடம் பதித்தார். 1424-இல் அர்மாண்டோ கோர்ட்டசா (Armando Cortesao) எனும் போர்த்துகீசியர் அமெரிக்காவின் வரைபடத்தை வரைந்து காட்டினார்.
அதன் பின்னர் அமெரிகோ வெஸ்புசி (Amerigo Vespucci) எனும் இத்தாலியர், தென் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இவருடைய அமெரிகோ எனும் பெயரால் தான் அமெரிக்காவிற்கு பெயரே கிடைத்தது. இவர்களுக்குப் பின்னால் 1492-இல் போனவர் தான் நம்முடைய கதாநாயகன் கொலம்பஸ்.
(சான்று:http://www.associatedcontent.com/article/2277079/who_discovered_america_not_christopher.html?cat=37)
(சான்று:http://www.associatedcontent.com/article/2277079/who_discovered_america_not_christopher.html?cat=37)
இந்தியாவைக் கண்டுபிடிக்கப் போகிறேன் என்று தயிர் சாதம் கட்டிக் கொண்டு கிளம்பிப் போனவர் கொலம்பஸ். ஆனால், அவர் இந்தியாவைக் கண்டுபிடிக்கவில்லை. மேற்கு இந்தியத் தீவுக் கூட்டத்தில் உள்ள பஹாமாஸ் தீவில் தரை தட்டினார். அதன் பின்னர், அடுக்கடுக்காக பல அமெரிக்க நிலப்பகுதிகளில் கால் பதித்தார். அவற்றை எல்லாம் ஸ்பெயின் நாட்டின் சொத்துகளாகப் பிரகடனம் செய்தார்.
இந்த மனிதர் அப்படியே இந்தியாவிற்கு வந்து இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்தக் காலக் கட்டத்தில் பாமினி பேரரசு இந்தியாவை ஆட்சி செய்து வந்தது. மலாக்காவைப் பரமேஸ்வரனின் சந்ததியினர் ஆட்சி செய்து வந்தனர். 1497-இல் தான் வாஸ்கோட காமா இந்தியாவிற்கு வந்தார்.
புது இடங்கள், புது மனிதர்கள், புது வாழ்க்கை முறைகள். புதுப் பூர்வீகங்கள். வெளுத்ததை எல்லாம் பால் என்று நினைத்த பூர்வீக வெள்ளந்திகள்; மண்ணின் மைந்தர்கள். அவர்களை அப்பாவித் தனமான பிள்ளைப் பூச்சிகள் என்று சொன்னால் சரியாக இருக்கும். கபடு சூது தெரியாத சமாதானப் பிரியர்கள். அவர்களை அரவாக் என்று அழைக்கிறார்கள்.
அந்த அரவாக்ஸ் பூர்வீக மக்களில் பல ஆயிரம் பேரை கொலம்பஸ் அடிமைகளாக்கினார்.http://www.blackstudies.ucsb.edu/antillians/arawaks.html
அவரை எதிர்த்துப் போராட்டம் செய்தவர்களை அடியோடு அழித்துச் சமாதி கட்டினார். அவர்கள் வைத்திருந்த தங்கம், முத்துப் பவளங்கள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்தார்.
இவை எல்லாம் முடிந்த பிறகுதான் தன்னோடு வந்த நூற்றுக்கணக்கான வேலையாட்களுக்குப் பரிசுகள் கொடுப்பதில் ஆர்வம் காட்டினார். யாருடைய மனைவி, யாருடைய மகள் என்று ஒரு கணக்கு வழக்கு இல்லை. ஒரு கிராமத்திற்குள் போக வேண்டியது. ஆண்களை எல்லாம் இழுத்து வந்து ஒரு கூடாரத்திற்குள் கட்டிப் போடுவது.
பெண்களைச் சுற்றி வளைத்து வரிசையாக நிற்க வைப்பது. எந்த வேலைக்காரனுக்கு எந்தப் பெண் வேண்டுமோ அவளை ‘இந்தா எடுத்துக்கோ’என்று தூக்கிப் போடுவது. அப்படித்தான் கொலம்பஸின் அன்பளிப்பு அபிஷேகம் நடந்தது.
(சான்று:http://www.associatedcontent.com/article/234894/christopher_columbus_hero_or_villain.html?cat=37)
இப்படித்தான் கொலம்பஸ் பல ஆயிரம் அரவாக்ஸ் இனத்துப் பெண்களைக் கத்தி முனையில் சின்னா பின்னமாக்கினார். பல ஆயிரம் கன்னிப் பெண்களைத் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்களாக ஆக்கினார். பல ஆயிரம் சின்னச் சின்னச் சிறுமிகளைச் சுருட்டிப் போட்ட சுண்டெலிகளாக மாற்றினார்.
தப்பி ஓடிய பெண்கள், வணங்காமல் இணங்காமல் போன பெண்கள், குற்றுயிரும் குலை உயிருமாய்க் கிடந்த மிச்சம் மீதிப் பெண்களை என்ன செய்தார் தெரியுமா? தன்னுடன் கொண்ட வந்த நாய்களுக்கு தீனியாகப் போட்டார். அந்தப் பெண்களின் ஓலமும் ஒப்பாரியும் அடங்கிப் போகும் வரை நாய்கள் கடித்துக் குதறின.http://thanksalotobama.com/thanksobblog/?p=1445
அண்மையில் கிடைக்கப் பெற்ற வரலாற்றுச் சான்றுகள் இந்த உண்மைகளைச் சொல்கின்றன. உண்மையான கொலம்பஸின் வரலாற்றைத் தெரிந்து கொண்டவர்கள் இப்போது கொலம்பஸ் எனும் பெயரைக் கேட்டதும் முகம் சுழிக்கிறார்கள். இப்படிப் பட்ட ஓர் அரக்கனா என்று அதிர்ச்சியும் அடைகின்றனர்.
அமெரிக்காவில் கொலம்பஸ் எனும் சொல் ஒரு பாவகரமான சொல் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. அங்கே கொலம்பஸ் தினம் கொண்டாடப்படுவதில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எதிர்ப்புப் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கொலம்பஸின் கொடுமைகளுக்கு, கொடூரங்களுக்கு எல்லாம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. அமெரிக்கர்கள் காலம் தாழ்ந்து இப்போது ஆதங்கப் படுகிறாகள்.
கொலம்பஸ் தானே கைப்பட எழுதி வைத்த தினக் குறிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டு இருக்கின்றன.
கொலம்பஸின் ஆட்களில் ஒருவரான ’பார்த்தலோமே லாஸ் காஸாஸ்’(Bartolome De Las Casas) என்பவர் கொலம்பஸ் செய்த கொடுமைகளைப் பார்த்து மனம் நொந்து போய் எழுதிய குறிப்புகளும் வந்து கொண்டு இருக்கின்றன. அவற்றில் அமெரிக்கப் பூர்வீக மக்களை இனவழிப்பு செய்த கொடூரங்கள் விலாவாரியாக எழுதப்பட்டு உள்ளன.
1492 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-இல் கொலம்பஸ் பஹாமாஸ் தீவுகளில் காலடி எடுத்து வைத்தார். அப்போது அங்கே அரவாக்ஸ் இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அந்த மக்கள் சமாதான விரும்பிகள் என்று அந்த மக்களைப் பற்றி கொலம்பஸ் தன்னுடைய தினக்குறிப்பில் இப்படி எழுதி இருக்கிறார்.http://www.associatedcontent.com/article/234894/christopher_columbus_hero_or_villain.html?cat=37
"அரவாக்ஸ் மக்கள் தம்மிடம் இருப்பதை எல்லாம் எல்லோருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். கேட்பதை எல்லாம் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கிறார்கள்."
"அரவாக்ஸ் மக்களிடம் எந்தவித ஆயுதங்களும் இல்லை. அவர்களுடைய சமூகத்தில் குற்றவாளிகள் யாரும் இல்லை. கைதிகள் என்று யாரும் இல்லை. அங்கே சிறைகள் இல்லை. எங்களுடைய கப்பலான சாந்தா மரியா கரை தட்டிய போது கப்பலில் இருந்தவர்களையும் கப்பலில் இருந்த பொருட்களையும் மீட்க அரவாக்ஸ் மக்கள் உதவி செய்தனர். கப்பலில் இருந்த எந்த ஒரு பொருளையும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை..."
இப்படி மற்றவர்களுக்கு உதவி செய்யும் பரந்த மனப்பானமை கொண்ட நேர்மையான அரவாக்ஸ் மக்களுக்கு கொலம்பஸ் செய்த கைமாறு என்ன தெரியுமா?
அந்த மக்களை அப்படியே அடிமைகளாக்கினார். அங்கு இருந்த தங்கச் சுரங்கங்களில் அவர்களைக் கட்டாய வேலை வாங்கினார். மகிழ்ச்சியாக வாழ்ந்த அரவாக்ஸ் மக்கள் மனம் ஒடிந்து போனார்கள். அவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். ஒரு கட்டத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் கூட்டுத் தற்கொலையும் செய்து கொண்டனர்.
அரவாக்ஸ் பெண்களைக் கொலம்பஸின் வேலையாட்கள் பாலியல் அடிமைகளாக ஆட்டிப் படைத்தனர். கொலம்பஸ் இவ்வாறு எழுதியுள்ளார்: "இளம் பெண்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் வேலையாட்கள் 9 , 10 வயது சிறுமிகளைத் தேடிச் சென்றார்கள்..."
(சான்று:http://www.associatedcontent.com/article/31981/leif_erikson_the_real_european_discoverer.html?cat=37)
அரவாக்ஸ் மக்களை அடிமைகளாக்கிய பிறகு அவர்கள் இறக்கும் வரையில் வேலை வேலை என்று அவர்களுடைய இரத்தம் பிழிந்து வேலை வாங்கப் பட்டனர். ஓர் அடிமை ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் எடுத்துக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்குத் தண்டனையாக இரு கைகளையும் வெட்டினார்கள்.
அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த அரவாக்ஸ் தொழிலாளிகளின் மூக்கு, காதுகள் அறுக்கப் பட்டன. அடிமை விலங்கை உடைத்துக் கொண்டு தப்பியோடியவர்கள் பிடிபட்டால் உயிரோடு கொளுத்தப் பட்டனர்.
கொலம்பஸ் தனது இரண்டாவது பயணத்தில் வேட்டை நாய்களை கொண்டு வந்தான். தப்பியோடும் அடிமைகள் மீது நாய்களை அவிழ்த்து விடுவார்கள். வேட்டையாடும் நாய்கள் அவர்களைக் கடித்துக் குதறி, கை வேறு, கால் வேறாகப் பிய்த்து விடும். அது மட்டும் இல்லை. கொலம்பஸின் வேலைக்காரர்கள் தங்களுடைய நாய்களுக்கு மாமிச உணவு தீர்ந்து விட்டால்,அரவாக்ஸ் இனக் குழந்தைகளை வெட்டித் தீனி போட்டார்கள்! என்னே கொடுமை.
ஒரே நாளில் கொலம்பஸ் ஆட்கள் 3000 பேரின் தலைகளை வெட்டி வீசி இருக்கிறார்கள். 3000 பெண்களைப் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர்.
வரலாற்று ஆய்வாளர்கள் இப்படி எழுதி உள்ளனர்.“In 1492, the population on the island of Hispaniola probably numbered above 3 million. Within 20 years of Spanish arrival, it was reduced to only 60,000. Within 50 years, not a single original native inhabitant could be found.”
வரலாற்று ஆய்வாளர்கள் இப்படி எழுதி உள்ளனர்.“In 1492, the population on the island of Hispaniola probably numbered above 3 million. Within 20 years of Spanish arrival, it was reduced to only 60,000. Within 50 years, not a single original native inhabitant could be found.”
1492- இல் முப்பது இலட்சம் அரவாக் மக்கள் இருந்தனர். ஸ்பெனியர்கள் வந்த 20 ஆண்டுகளில் அந்தத் தொகை 60,000 ஆகக் குறைந்தது. 50 ஆண்டுகளில் ஒரே ஓர் அரவாக்ஸ் மனிதர் கூட இல்லை.
ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த கொலம்பஸையும் அவனுடைய ஆட்களையும், அரவாக்ஸ் மக்கள் இனிய முகத்துடன் வரவேற்றார்கள். முகம் சுழிக்காமல் விருந்தோம்பல் செய்தார்கள். இருந்ததை எல்லாம் கொடுத்தார்கள். அப்பேர்ப்பட்ட அந்த வெள்ளந்தி மக்களுக்கு கொலம்பஸ் செய்த நன்றிக்கடன் என்ன என்று பார்த்தீர்களா.
இவை வரலாற்று ஏடுகளில் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டிய வரலாற்றுப் புதினங்கள் தானே. மலரும் பூமியில் மலர்ந்து மணம் பரப்ப வேண்டிய மக்கள் மலர்ந்தும் மலராத பாவி மலர்களாகப் போய் விட்டனர். அவர்கள் காலத்தால் மறக்க முடியாத சொப்பனச் சீமான்கள். அவை காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டுகள்.
இலங்கையில் ஓர் இனம் அழிவதற்கு காரணமாக இருந்தது மகிந்தா என்கின்ற மனிதம் கெட்டுப் போன ஒரு பேய். அமெரிக்க மண்ணில் அரவாக்ஸ் என்கிற இனம் அழிவதற்கு காரணமாக இருந்தது கொலம்பஸ் என்கின்ற ஒரு நன்றி கெட்ட பேய். அந்த வெள்ளந்தி மக்களுக்காக ஒரு மௌன அஞ்சலி. அதில் சில மௌன ராகங்கள்!
No comments:
Post a Comment
THANK YOU