Sunday, 10 June 2012

ஒரு ஜாதகத்தை தெளிவாக ஆராயும் போது குறிப்பிட்ட ஜாதகருக்கு இன்ன வயதில் இன்ன நோய் வரும் என்பதை அறிந்து கொள்ளள முடியும்

Raavanan
ஒரு ஜாதகத்தை தெளிவாக ஆராயும் போது குறிப்பிட்ட ஜாதகருக்கு இன்ன வயதில் இன்ன நோய் வரும் என்பதை அறிந்து கொள்ளள முடியும் எனும் போது அவனது குணாதிசையத்தை கணிக்க முடியாதா என்ன? கணக்கு போடுவதில் நிபுணத்துவமும் வாக்கு பலிதமும் இருந்தால் அனைத்து விஷயங்களையும் தெளிவாகவே ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ளலாம் ஜோதிட பலன்கள் தவறுவது கணக்கு போடுவதில் செய்யும் தவறே தவிர வேறு ஒன்றுமில்லை
ஆண் பெண் யாராக இருந்தாலும் அவர்கள் ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரன்களும் இணைந்து இருந்தாலும் ஒன்றுக்கொன்று பார்வை இருந்தாலும் அவர்களுக்கு காம உணர்வு மிக அதிகமாகவே இருக்கும் அதே போல சுக்கிரன் சந்திரன் இவற்றோடு புதனும் சேர்க்கை பெற்றால் உடலுறவை பலரோடு வைத்து கொள்வார்கள்
கள்ள காதல் உறவு வைக்கும் பலரின் ஜாதகத்தை பார்த்தால் சுக்கிரன் சந்திரன் ராகு ஆகிய மூன்று கிரகங்களும் சேர்க்கை பெற்று இருக்கும் அதே போல காம கொடூரன் என்று அழைக்கப்படும் மனிதர்களுக்கு சுக்கிரன் சந்திரன் புதன் ராகு ஆகிய நான்கு கிரகங்களும் சேர்க்கை பெற்று இருப்பதை அறியலாம்
காமம் என்பது இறைவன் படைப்பில் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக கொடுக்கப்பட்ட ஒரு உணர்வு என்றாலும் அது அத்துமீறி அளவுக்கு அதிகமாக செல்லும் போது சமூதாய சீர்கேடாகவும் தர்ம வழிக்கு விரோதமாகவும் அமைந்து விடுகிறது. ஒருவனிடம் ஆயிரம் நல்ல இயல்புகள் இருக்கலாம் ஆனால் அவற்றையும் மீறி காம உணர்வு அதிகமாக இருந்தால் அவன் முற்றிலும் நிலைகுலைந்து விடுவான் இதற்கு சரியான உதாரணமாக ராவணனை காட்டலாம்
ராவணன் சிறந்த யுத்த தந்திரி, இசை மேதை, வேத விற்பன்னன் ஆனாலும் காமுகன் வரம்பு மீறிய அவனது காம உணர்வு அவனிடமிருந்த நல்ல இயல்புகள் அனைத்தையும் மறைத்து விட்டது. குழி தோண்டி புதைத்து விட்டது. எனவே உயிர்களுக்கு இயல்பான உணர்வு தான் காமம் என்றாலும் அதிலும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கண்டிப்பாக வேண்டும். அது இல்லாதவர்கள் அழிந்து போவார்கள்
நான் மேலை சொன்ன கிரக சேர்க்கை பெற்றவர்கள் தங்களது மனதை அடக்கி காம விகார எண்ணங்களை கட்டுபடுத்தி வாழ்ந்தார்கள் என்றால் வாழ்வில் அனைத்து துறையிலும் வெற்றி பெறலாம் சாதனை படைக்கலாம் மாறாக காமம் இழுத்த இழுப்புக்கு ஆட்படுவார்கலேயானால் மரண குழியில் அல்ல அல்ல நரக குழியில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். இது நிச்சயம்

No comments:

Post a Comment

THANK YOU